மருத்துவம்

திருச்சி, நவ. 27- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக நிமோனியா நாள் மற்றும் நுரையீரல் நோய்கள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் 24.11..2018 அன்று காலை 11 மணியளவில்  கல்லூரி அரங் கத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா. செந்தா மரை அவர்கள் தலைமையேற்க பெரியார் நலவாழ்வு சங்க செயலாளர் பேராசிரியர் கே. ஏ.எஸ். முகமது சபீக் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

திருச்சி எஸ்.ஆர்.எம். மருத் துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யத்தின்  உதவி பேராசிரியரும், நுரை யீரல் நோய் சிறப்பு மருத்துவரு மான E.M.PR.M.விஸ்வநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

சுவாசப் பிரச்சினைகள் பெரும்பாலும் தூசு, புகை, நுரையீரலில் நீர்கோர்த்துக் கொள்ளுதல் மற்றும் நுண் கிருமிகளால் ஏற்படுகின்றது என்றும்  நிமோனியா பாதிப்பு உள்ளவர்களுக்கு சளியுடன் கூடிய இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும் என்றும் உரையாற்றினார். மேலும் குளிர்காலங்களில் நிமோனியா பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் பெரும்பாலும் அய்ந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுகின் றனர். நிமோனியா காய்ச்சல் வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகளால்  நுரையீ ரலில் ஏற்படும் தொற்று என் றும் அதனை எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் போன்ற எளிய வகை தொழில்நுட்ப வசதி களை பயன்படுத்தி எளிதாக கண்டறியமுடியும் என்றும் உரையாற்றினார். உடலில் ஏற் படும் நோய்த்தொற்றுகளுக்கு அதிக வீரியமிக்க ஆன்டிபயா டிக் மருந்துகள் எடுத்துக்கொள் வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் நுரையீரல் பாதிப்பிற்காக மருத்துவர்களை அணுகும் போது முன்பு மேற் கொண்ட சிகிச்சைகள் மற்றும் மருத்துவக் குறிப்புக்களை கட் டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். நிமோனியா நோயினை முற்றிய நிலையில் கண் டறிந்தாலும் குணப்படுத்தக் கூடிய மருத்துவ வசதிகள் தற் போது வளர்ந்துள்ளது என்றும் இந்நோய்க்கு தடுப்பூசி போட் டுக் கொள்வது சிறந்தது என் றும் உரையாற்றினார்.

தற்பொழுது அதிகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல் குறித்த அறிகுறிகள், தேவை யான சிகிச்சை முறைகள் மற் றும் நோய் தாக்காமல்  தற்காத் துக்கொள்ள மேற்கொள்ள வேண் டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து    எடுத்துரைத்து மாண வர்களின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கமளித்தார்.  இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந் தியல் கல்லூரியின் பேராசிரி யர் முனைவர் அ.மு. இஸ்மா யில், துணை முதல்வர் முனை வர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் பெரியார் நலவாழ்வு சங்க இணைச் செய லர் திருமதி அ. ஷமீம் அவர் கள் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

வயது ஆக ஆக, வலியும் அதனால் ஏற்படும் வேதனையும் சொல்லி மாளாது. அதுவும், காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கையில் விழுவது வரை, நாள் முழுக்க கை, கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டு நம்மைச் சித்திரவதைக்கு உள்ளாக்கிவிடும். இந்த வலி தரும் பயத்தாலேயே பலரும் வெளியில் செல்வதற்குத் தயங்கி, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். முடக்கு வாதம் என்று இந்த நோய்க்குச் சரியான பெயரைத்தான் சூட்டியிருக்கிறார்கள்!

ரூமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் அல்லது முடக்கு வாதம் என்பது உடலிலுள்ள நீர்ம மூட்டுகளைப் பிரதானமாக தாக்கும் நாள்பட்ட மூட்டு நோயாகும். இந்த நோய், மூட்டுகளை மட்டுமல்லாது நுரையீரல், இதயம், கண் போன்ற உடலின் பிற உறுப்புகளையும் பாதிக்கும். பொதுவாக, 40 முதல் 50 வயது கொண்டவர்களை அதிகமாகத் தாக்கினாலும், எந்த வயதினரையும் பாதிக்கக்கூடிய நோயாகவே இது கருதப்படுகிறது. ஆண்களைவிடப் பெண்கள் மூன்று மடங்கு இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

முடக்கு வாதம் கொண்ட வர்களுக்கு மூட்டு வலி, மூட்டு வீக்கம், காலை நேர மூட்டு இறுக்கம், மூட்டுச் சீர்குலைவு மற்றும் மூட்டுச் செயல்பாடின்மை போன்ற அறிகுறிகள் காணப்படும். சிலருக்கு அன் றாட வேலைகளைச் செய்வதில் மிகுந்த சிரமமும் உடல் அயற்சியும் ஏற்படும்.

வலி குறைக்கும் பயிற்சிகள்

முடக்கு வாதத்தைக் குணப்படுத்துவதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், வலியைக் குறைப்பதற்கான மருந்துகள், அறுவை சிகிச்சைகள் ஆகியவை மூலமாக ஓரளவு தீர்வு பெற முடியும். அதோடு சில உடற் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

முடக்கு வாதம் கொண்டவர்களில் பெரும்பாலா னோ ருக்குக் கை விரல்கள் மற்றும் மணிக்கட்டுகளில் உள்ள மூட்டுகளில் முழுமை யான மூட்டு அசைவு கள் இல்லாமல் இறுக்கமாக இருக்கும். மேலும், எதையும் இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும் திறன் இருக்காது. இதனால், அவர்களால் பையைத் தூக்குவது, சாவி கொண்டு கதவைத் திறப்பது, பாட்டில் மூடியைத் திறப்பது, டம்ளரைப் பிடிப்பது போன்ற அன்றாட வேலைகளைச் செய்வதுகூடக் கடினமாக இருக்கும். ஆதலால், கை, மணிக்கட்டு மூட்டுகளில் இத்தகைய பிரச்சினைகளைக் கொண்டவர்கள் கண்டிப்பாகக் கைகளுக்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

இதற்காக சாரா எனும் பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. இவை, உயர்தர மருத்துவ ஆய்வு ஒன்றில், முடக்கு வாதம் கொண்ட மக்களிடையே சோதிக்கப்பட்டு, திறன் மிக்கவை எனக் கண்டறியப்பட்டவை. மேலும், இந்தப் பயிற்சிகள் கை, மணிக்கட்டு மூட்டுகளுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முடக்கு வாதம் பாதிக்கப்பட்ட கைகளைக் கொண்ட நோயாளிகளுக்கு சாரா பயிற்சிகள் பரிந்துரைப்பதை முடக்கு வாத மருத்துவர்கள் மற்றும் தெரப் பிஸ்ட்டுகள் ஆதரித்து வருகின்றனர்.

மூட்டு அசைவுகளை எளிதாக்கும் 7 பயிற்சிகள் மற்றும்  விரல்கள், உள்ளங்கை, மணிக்கட்டுகளில் உள்ள தசைகளை உறுதிப்படுத்தும் 4 பயிற்சிகள் என சாரா இரண்டு வகையான பயிற்சிகளைக் கொண்டது.   இவற்றைச் செய்வதால் மூட்டு வலியும் இறுக்கமும் குறைந்து அன்றாடச் செயல்பாட்டை அதிகரிக்க முடியும்.

நிமிர்ந்து நேராக நடப்பவர்களை விட பின் னோக்கி நடப்பவர்கள் ஞாபகத்திறனுக்கான பரிசோதனைகளில் திறம்படச் செயல்பட்டுள்ளார்கள்.

ரோகாம்ப்டன் பல்கலையைச் சேர்ந்த நிபு ணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். 114 தன்னார் வலர்களை ஒரு காணொலி பார்க்க வைத்து, அதிலி ருந்து அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. இவர் களின் காணொலியைப் பார்த்த பின் இந்தக் குழு பிரிக் கப்பட்டது. ஒரு சிலர் முன்னோக்கி நடக்க வைக்கப் பட்டனர். சிலர் பின்னோக்கி நடக்க வைக்கப்பட்டனர். சிலர் ஒரே இடத்தில் நிற்க வைக்கப்பட்டனர். பின்னர் ஒவ்வொருவரிடமும் பார்த்த காணொலி குறித்து 20 கேள்விகள் கேட்கப் பட்டன. இதில், பின்னோக்கி நடப்பவர்கள், சராசரியில் மற்றவர்களை விட கூடுதலாக இரண்டு கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னது தெரிந்தது.  அடுத்து, ஒரு பட்டியலில் இருக்கும் வார்த்தை களில் எவ்வளவு வார்த்தைகளை நினைவுகூர முடிகிறது என்பது பரிசோதிக்கப்பட்டது. இதிலும் பின்னோக்கி நடப்பவர்களே சரியான விடைகளை அதிகமாகத் தந்தனர்.  நமது நடைக்கும், ஞாபகத் திறனுக்கும் எப்படி பிணைப்பு இருக்கிறது  என நிபுணர்கள் கருதுகின்றனர்.

மழைக்காலம் வந்தால் வைரஸ் காய்ச்சல்களும் தொடங்கிவிடும். டெங்கு, சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல், மலேரியா எனப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்.  மழைக் காலத்தில் வரக்கூடிய வைரஸ் காய்ச்சல்களை எப்படித் தவிர்ப்பது, குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல்கள் வராமல் பார்த்துக்கொள்வது எப்படி?

டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல்களுக்குக் கொசுதான் முதல் காரணம். கொசுக் கடி மூலம் உடலுக்குள் செல்லும் வைரஸ், 3 முதல் 7 நாட்களுக்குள் வேலை யைக் காட்டத் தொடங்கிவிடும். முன்பு கொசுக்கடியால் மலேரியா காய்ச்சல்தான் தீவிரமாக இருந்தது. இப்போது டெங்கு, சிக்குன் குனியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் அதிகம் தாக்குகின்றன.

இந்தக் காய்ச்சல்கள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சென் னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் சிவராம கண்ணனிடம் கேட்டபோது, டெங்குவும் ஒரு வகையான வைரஸ்தான். கொசுக் கடியால் வருவதுதான். கொசுவைக் கட்டுப்படுத்தினாலே அந்தக் காய்ச்சல் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். டெங்கு வால் பாதிக்கப்பட்டவரைக் கடிக்கும் கொசு மற்றவர்களைக் கடித்தால், அவர்களுக்கும் டெங்கு தொற்றிவிடும்.

வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டெங்குவைப் பரப்பும் ஏடீஸ் கொசு பகலில்தான் கடிக்கிறது. எனவே, கொசுக் கடியிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். முதியவர்கள், குழந் தைகள், நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களை வைரஸ் காய்ச்சல் எளிதில் தாக்கிவிடும். எனவே, இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. மழை, குளிர் காலத்தில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த் தாலே, எந்த வைரஸ் காய்ச்சலையும் தவிர்த்துவிடலாம் என்கிறார்.

கைகளை நன்றாகக் கழுவுங்கள்

ஒருவருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் நன்றாக இருந்தாலோ நுரையீரலில் பிரச்சினை இல்லாமல் இருந்தாலோ அவரை வைரஸ் காய்ச்சல் எளிதில் அண்டாது. அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால், ஜூரம் அதிகமா னாலோ ரத்த அழுத்தம் அதிகரித்தாலோ வியர்வை, தலைசுற்றல், பசியின்மை போன்ற பிரச்சினைகள் தெரிந்தாலோ மருத்துவரை உடனே அணுக வேண்டும். பொதுவாக குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் ஆகியோர் வைரஸ் காய்ச்சல்களுக்கு எளிதில் இலக்காகிவிடுவார்கள்.

பொதுவாக ஃப்ளு, இன்ஃப்ளூயன்சா ஆகியவற்றைத்தான் வைரஸ் காய்ச்சல் என்கிறோம். இந்தக் காய்ச்சல் சுவாச வழியில் மூக்கு முதல்  தொண்டைவரை பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. நுரையீரல் வரையிலும் பாதிப்பு நீளும். வைரஸால் பாதிக்கப்பட்டவர் இருமும்போதோ தும்மும்போதோ பக்கத்தில் மற்றவர்கள் இருந்தால் அவர்களுக்கும் காய்ச்சல் வரக்கூடும். இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் முகமூடி அணிந்துகொண்டாலோ கர்சீப்பை வைத்து மூடிக்கொண்டாலோ மற்றவருக்குப் பரவாது.

ஒரு வேளை அவர்கள் அப்படி இல்லாமல் இருந்தால், அவர்களை அணுகுபவர்கள் பாதுகாப்பாக இருப்பது நல்லது. காய்ச்சல் வந்தவர்களைத் தொட்டாலோ கைக்குலுக்கி னாலோ கையை நன்றாகக் கழுவிவிட வேண்டும். இதைப் பழக்கமாக வைத்துக் கொண்டாலே வைரஸ் காய்ச்சல் அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்கிறார் மருத்துவர் சிவராம கண்ணன்.

குளியல் மிக அவசியம்!

மழைக்காலத்தில் குழந்தைகளுக்குச் சளி பிடித்தல், இருமல், காய்ச்சல் ஆகியவை அடிக்கடி வரும். மழை பெய்யும்போது தண்ணீரில் விளையாட குழந்தைகள் ஆர்வம் காட்டுவார்கள். குழந்தைகளை இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படிக் காப்பது?

மழைத் தண்ணீரில் குழந்தைகள் விளை யாடிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு, கை, கால், முகம்  முறையாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். அப்படிக் கழுவாமல் உணவு சாப்பிட்டால், அதன் மூலம் குழந்தை களுக்கு வைரஸ் உள்ளே சென்றுவிடலாம். அதனால் வயிற்றுப்போக்கு, வைரஸ் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். மழைக் காலத்தில் டெங்குக் காய்ச்சலி லிருந்து குழந்தைகளைக் காப்பது மிகவும் முக்கியம். பள்ளியில் இருக்கும்போதோ வீட்டில் இருக்கும்போதோ கொசுக் கடிக்கு ஆளாகமல் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் மழை நீரில் விளையாடக் கூடாது எனப் பெற்றோர் அறி வுறுத்த வேண்டும். சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

1 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தை களுடைய கையையும் விரல்களையும் பெற்றோர்கள் சுத்தமாகப் பராமரிக்க வேண் டும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ரவி.

தற்போது உடல்பருமன் பிரச்சினை அபாயகரமாக அதிகரித்து வருவதால் அதுகுறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதோடு, அந்த பிரச்சினையைக் கட்டுப்படுத்தி நமது எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதிலும் குழந்தைகளின் உடல்பருமன் பெரிதும் கவலை தருவதாக இருக்கிறது.

உலகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு உடல்பருமன் விரைவாக அதிகரித்து வருகிறது. குழந்தையின் தற்போதைய மற்றும் நீண்ட கால உடல் நலம், கல்வி சாதனைகள் மற்றும் நல் வாழ்க்கையைப் பாதிக்கும் இளம் வயது உடல்பருமனுக்கு எதிரான நடவடிக்கைகள் உலக அளவில் மெதுவாகவும் நிலையற்றும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்திய மக்கள் தொகையில் 11.2 சதவிகிதம் பேர் உடல்பருமன் அல்லது அதிக எடை உள்ளவர்களாக உள்ளனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

எனவே, எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க மருத்துவர்கள் கூறும் கீழ்க்கண்ட ஆலோசனைகளைத் தீவிரமாகப் பின்பற்ற வேண்டியது அவசியம். இது குழந்தைகளிடம் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும், வாழ்க்கைமுறையையும் உருவாக்கும். இந்த ஆலோசனைகள் வயது வந்தவர்களுக்கும் சேர்த்துத்தான்.

* வறுத்த உணவைத் தவிர்த்து அதிகமாகப் பழங்களையும் காய்கறிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* நார்ச்சத்து நிறைந்த முழு தானியம், பருப்பு மற்றும் முளைகட்டிய தானியங்களை உண்ண வேண்டும்.

* காய்கறிகளைப் பொரிக்காமல் நீராவியால் வேக வைத்து பயன்படுத்துவது நல்லது.

* உணவை ஒரே நேரத்தில் அதிகமாக உண்ணாமல், சிறிய அளவில் 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை உண்ண வேண்டும்.

* தினமும் உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்.

* மின் படிகள், மின்தூக்கிகளுக்குப் பதில் படியைப் பயன்படுத்தலாம்.

* பணி இடத்தில் ஒரே மாதிரியாகத் தொடர்ந்து அமராமல், அவ்வப்போது சிறுசிறு இடைவேளைகளை எடுப்பது நல்லது.

* மெதுவாக எடையைக் குறைக்க வேண்டும். மருத்துவ காரணங்களின்றி எடை இழப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம்.

Banner
Banner