மருத்துவம்

பல் அறுவை சிகிச்சைக்குப்பின்...

பல்லில் அறுவை சிகிச்சை முடிந்து ஓரிரண்டு நாட்களுக்கு தொடர்ந்து வலி இருக்கும். அதனால் உணவு சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். சூடான உணவை சாப்பிடுவதால் ரத்தக்கசிவு ஏற்படும். மேலும் கடினமான உணவும் வலியை அதிகரிக்கும். பல்லில் ஒட்டிக்கொள்ளக்கூடிய மற்றும் அதிகம் மெல்லக்கூடிய உணவையும் தவிர்க்க வேண்டும். அதற்குபதில் சூப், தயிர், ஜுஸ் என திரவு உணவுகளாகவோ, பாதி திட உணவுகளா கவோ உட்கொள்வது நல்லது.

காலில் தசைப்பிடிப்பா?

ரத்த அழுத்தத்திற்காக மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கும், நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்பவர்களுக்கும் நீர்ச்சத்து பற்றாக்குறை உண்டாகலாம். இதன் காரணமாக தசைப்பிடிப்பு ஏற்படக் கூடும். எனவே, அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டு அவதிப்படுகிறவர்கள் அதிகப்படியான நீர் அருந்த வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன்னால் கால்களுக்கு தளர்வு கொடுக்கும் பயிற்சிகள் அல்லது ஸ்டேஷனரி சைக்கிளிங்கும் செய்யலாம்.

காஃபி எப்போது குடிக்கலாம்?

காலையில் எழுந்தவுடன் காஃபி குடித்தால்தான் சுறுசுறுப்பாக இருக்கும் என பெரும்பாலானவர்கள் சொல்வதை பார்க்க முடியும். ஆனால், அமெரிக்க உணவியலாளரும்,  Women’s Health Body Clock Diet என்ற நூலின் ஆசிரியருமான லாராசிபுல்லோ, காலை எழுந்தவுடன் உடலில் ஸ்ட்ரெஸ்சுக்கு காரணமான கார்ட்டிசோல் நிறைந்திருக்கும்.

அப்போது காஃபி குடித்தால் முதலில் சுறுசுறுப்பைத் தந்தாலும், போகப்போக சோர்வை அதிகரித்து, ஒருவித மந்தத்தன்மையோடு நாளை தொடர்வீர்கள். அதனால் காலையில் எழுந்து 2 அல்லது 3 மணி நேரம் கழித்து காபி அருந்துவதே சிறந்தது. அதாவது காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை காபி அருந்த சிறந்த நேரம் என்கிறார்.

தலைவலிக்கும் இன்ஹேலர் பயன்படுத்தலாம்!

ஆஸ்துமா பிரச்சினைக்குப் பயன்படுத்தும் இன்ஹேலரை இப்போது ஒற்றைத் தலைவலிக்கும் பயன்படுத்தலாம் என்று ஜெர்மனை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒற்றைத் தலைவலி நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளின் அளவைக் குறைக்கவும், அந்த மருந்துகளை முற்றிலும் தடுத்து நிறுத்தவும், நாம் சுவாசிக்கிற காற்றின் கலவைகளை மாற்றுவதற்கும் உதவுகிறது என்கின்றனர். அதிகமான தலைவலி தொடங்கும் முன்பு உணர்ச்சியோ அல்லது கண் பார்வையில் தொல்லையோ ஏற்படுகிற ஒற்றைத்  தலைவலியுடைய நோயாளிகளுக்கு இந்த புதிய இன்ஹேலரைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ள தாக  ஒரு  இதழில் வெளியான ஆய்வு தெரிவிக் கிறது.

இதயம் மற்றும் நுரையீரல் அரங்கம்

இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்த விளிம்பு நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வாக உள்ளது. இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின், நோய்த் தொற்று வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதைத் தவிர்க்க தனிப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சைப்  பிரிவு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ரூ. 1 கோடி மதிப்பிலான அறுவை சிகிச்சைக் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய்க்கு கறிவேப்பிலை

கறிவேப்பிலையின் மகத்துவங்கள் நமக்கு புதிதல்ல என்றாலும் நமக்குத் தெரியாதவற்றையும்   International Journal of Pharmaceutical Sciences என்னும் மருத்துவ இதழ் ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது. 200 மில்லிகிராம் கறிவேப்பிலையிலிருந்து எடுக்கப்படும் சாறை 30 நாட்கள் வரை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வருவதால் ரத்த குளூக்கோஸ், கிளைகோசைலேடட் ஹீமோ குளோபின், யூரியா, யூரிக் அமிலம் மற்றும் கிரியாட் டினின் அளவு கணிசமாக குறைவதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். இதற்கு நீங்கள் ரொம்ப மெனக்கெட வேண்டாம்.  காலையில் வெறும் வயிற் றில் சுத்தமான 10 கறிவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வந்தாலே ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் எல்லாம் குறைவதுடன் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், அயர்ன், காப்பர் என அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.

உடலில் சுரக்கும் பல்வேறு ஹார்மோன்கள் நம்முடைய மனநிலையையும், உடல்நிலை யையும் தீர்மானிக்கின்றன என்பதை அறிந்தி ருப்போம். அந்த வகையில் கார்ட்டிசால்

(Cortisol) என்கிற ஹார்மோனே மன அழுத்தத்தை உண்டாக்குகிறது என்பதையும் கேள்விப்பட்டிருப்போம். இதுவரை கார்ட்டி சாலின் அளவைக் கணக்கிட வழி இல்லாமல் இருந்து வந்தது. இப்போது அதற்கும் முடிவு கட்டிவிட்டார்கள் விஞ்ஞானிகள்.

ஒருவருடைய உடல்நிலை எப்படி உள்ளது என்பதை அறிவதற்குப் போதுமான தகவல்கள் அவரது ரத்தத்தில் மட்டும் இன்றி வியர்வையில்கூட இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள் மருத்துவர்கள். இதனால் தான்  நீரிழிவு முதல் பல நோய்களைக் கண்டு பிடிக்க உதவும் புதுப்புது மின்னணு உணரிகளை  (Electronic Sensor)  விஞ்ஞானிகள் தற்போது உருவாக்கி வருகின்றனர்.

இதில் கவலைகளால் ஏற்படும் மனச்சுமை நமது உடல்நலத்தைப் பெரிய அளவில் பாதிக்கிறது. மனச்சுமை அதிகம் உள்ளவர் களது ரத்தத்தில் கார்டிசால் என்ற ஹார்மோன் கூடுதலாக இருக்கும். நமது வியர்வையில் இருந்து வெளிப்படுகிற இந்த ஹார்மோனை அளக்கும் மின்னணு உணரியை ஸ்டான் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த உணரியில் உள்ள பட்டையை, ஸ்டிக்கர் போல தோலில் ஒட்டிக்கொண்டால் போதும். அது தொடர்ந்து வியர்வையில் கார்ட்டிசாலை அளந்து சொல்லும். இந்தத் தகவலை வைத்து நாள் முழுவதும் ஒருவரு டைய மனச்சுமை எந்த அளவுக்கு இருந்தது என்பதை மருத்துவர்களால் கணக்கிட முடியும். உளவியல் ஆலோசனை மற்றும் சிகிச்சையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் இந்த கண்டுபிடிப்பு.

நோயாளி தன்னைப் பற்றி முழுமையாக விளக்காவிட்டாலும் அல்லது விளக்கத் தெரியாவிட்டாலும் மருத்துவர்களும், மனநல மருத்துவர்களும் ஒரு நோயாளியை முழு வதுமாக அறிய இந்த உணரிகள் பெரிதும் உதவும் என்று பெருமையுடன் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி சார்பில் சிறுநீரகங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிறுநீரகங்களை எப்படி எல்லாம் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விளக்கிய பேராசிரியர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட துறை மருத்துவர்கள்.

இனிப்பு, புளிப்பு என அறுசுவைகளின் பிரிவுகளைச் சுவை மொட்டுக்கள் நமக்கு அறிவித்திருக்கும். அதையும் தாண்டி அந்தச் சுவைகளுக்குள் இருக்கும் பிரிவு களை உணர்ந்திருக்கிறீர்களா..? நாவூறச் செய்யும் இனிப்புச் சுவையின் பிரிவை அறிந்துகொள்ள, அதிமதுரத்தைச் சுவைத்துப் பாருங்கள். இனிப்புச் சுவையிலும் வெவ்வேறு பரிமாணங்கள் இருப்பது தெரியவரும்.

இதன் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வித்தியாசமான இனிப்புச் சுவை தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

தனது பெயரிலிலேயே இனிப்பைக் கொண் டிருக்கும் அதிமதுரம், மானிடர்களுக்காக இயற்கை உயிர்கொடுத்த மதுரப் பெட்டகம்! குரலில் சிறிதும் பிசிறு இல்லாமல், மதுரமான ஒலியை வழங்க உதவும் அதிமதுரம், பித்த, கப நோய்களுக்கான கசப்பில்லா இன்சுவை மருந்து! சீன மருத்துவத்தில் முதன்மை மருந்து எனும் அந்தஸ்து அதிமதுரத்துக்கு உண்டு!

பெயர்க் காரணம்: அதிங்கம், மதுகம், அட்டி ஆகியவை இதன் வேறுபெயர்கள். இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால், அதிமதுரம், மதுகம் போன்ற பெயர்களும் உண்டு இதற்கு! இனிப்பு வேர் என்பதைக் குறிக்கும் விதமாக, லிகோரைஸ் எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு.

உணவாக: அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க் குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.

சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப் பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தைச் சிறிதளவு முயலலாம்.

மருந்தாக: அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது ஆய்வு. இரைப்பு நோயாளர்களில் சுருங்கி யிருக்கும் மூச்சுக் குழாய்த் தசைகளை விரிவடையச் செய்யும் செய்கை இதன் வேதிப்பொருளுக்கு இருக்கிறது.

செல்களின் ஆரோக்கியத்தை மேம் படுத்துவதோடு, சில வைரஸ்களின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அதிமதுரத்துக்கு இருப்பதாக ஆராய்ச்சி முன்மொழிகிறது. வலிப்பு நோய்க்கான மருந்தாக இதைப் பயன்படுத்தும் ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வீட்டு மருந்தாக: அதிமதுரம், அக்கரகாரம், சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கம் ஆகிய வற்றைப் பொடித்து நாட்டுச் சர்க்கரை, தேன்  கலந்து செய்யப்படும் அதிமதுர ரசாயனம் பருவமழைக் காலத்துக்கே உரித்தான மருந்து. கீச்கீச் எனக் குரலுடைந்து பேசுபவர்களுக்கும் கம்பீரக் குரலை விரைவில் வழங்கும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதி மதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும்.

அதிமதுரப் பால், அதிமதுரச் சூரணம் ஆகியவை சித்த மருத்துவத்தில் முக்கியமான மருந்துகள். கசப்புச் சுவைமிக்கக் கூட்டு மருந்துகளில் இனிப்பைக் கொடுக்கவும், சுவை தத்துவ அடிப்படையிலும், அதிமதுரம் சேர்க்கப்படுகிறது. கொதிக்கும் நீரில் இதன் வேரை அய்ந்து நிமிடம் ஊறவைத்து, அதில் எலுமிச்சைச் சாறு அல்லது தேன் கலந்து சுவைமிக்க பானத்தைப் பருகலாம்.

கண்ணோய் உன்மாதம் விக்கல்வலி வெண்குட்டம் எனும் அதிமதுரத்துக்குச் சொந்தமான பாடல், மன நோய்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம் எனும் குறிப்பை வழங்குகிறது. வேர் ஊறிய நீரில் வாய்க்கொப்பளிக்க, வாய்ப்புண் மறையும்.

குளிர்ச்சித்தன்மை கொண்ட அதி மதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இள நரையையும் கட்டுப்படுத்தும் என்பதை அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும் எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது.

இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும்.

சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.

எலும்பு பலமாக இருந்தால்தான் உடல்நலம் நன்றாக இருக்கும். வயது அதிகமாகும்போது எலும்புகள் பலம் குறையும். எலும்புகள் தேய்மானம் அடைகின்றன. இதனால் நடப்பதற்கு சிரமம், கூன் விழுவது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். அரைக்கீரை, முருங்கை கீரை, புளிச்சை கீரை ஆகியவை எலும்புகளை பலப்படுத்தும் மருந்துகளாக விளங்குகின்றன.  
பல்வேறு நன்மைகளை கொண்ட அரைக் கீரையில் இரும்பு சத்து, வைட்டமின் ஏ,சி சத்துக்கள், சுண்ணாம்பு சத்து மிகுந்துள்ளன. உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய நார்ச்சத்து இதில் மிகுதியாக உள்ளது. பற்கள் தொடங்கி பாதம் வரை உள்ள எலும்புகள் பலம்பெற கால்சியம் சத்து அவசியம். பாஸ்பரஸ், பொட் டாசியம், இரும்பு, வைட்டமின் ஏ, டி சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிட்டுவர எலும்புகள் பலம் பெறும். உடற்பயிற்சி செய்வதாலும் எலும்புகள் பலம் அடைகிறது. சூரிய கதிர்களில் வைட்டமின் டி சத்து உள்ளது. இது எலும்புகளுக்கு பலம் கொடுக்கும்.

Banner
Banner