மருத்துவம்

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன் படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்ட மான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலி யாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல, அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் நினைவாற்றல் எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் வெப்பம் தணியும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக்கழகத்தில் கறிவேப் பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழி விலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக் கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு புற்றுநோய், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன் படுத்தும் கறிவேப்பி லையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உரு வாவதை தடுப்பதாக ஆய் வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயா ளிகள் காலையில் 10 கறி வேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவைப் பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லில் பாதிப்பு ஏற்படுவதற்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு உண்டா?

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 98 சதவீதம் பேரின் பற்கள், வேர் கால்வாய் சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருந்ததாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பாதகம் ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் பற்களுக்கிடையே மறைந்து கொள்ளும். ஏனென்றால் அங்கே ரத்தவோட்டம் இருப்பதில்லை.

இரைச்சலால் எந்தளவு ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது?

தொடர்ந்த இரைச்சலால் மூளையில் கார்டிசால், அட்ரினலின் ஆகியவற்றின் அளவு கூடுகிறது. ஹார்மோன்களின் கொந்தளிப் பால் பக்கவாதம், உயர் ரத்தஅழுத்தம், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைபாடுகள் தொடங்கி மாரடைப்புவரை ஏற்படுகிறது. அதிக ஒலி மாசுள்ள சூழலில் காதடைப்பானைப் பயன்படுத்தலாம்.

கீரைகளின் மருத்துவப் பயன்கள்

கீரையில் பலவகைக் கீரைகள் உள்ளன. அவற்றில் சுமார் 20 வகைகளைத் தவிர பிற கீரை வகைகளை நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.  உங்களுக்கு நன்கு அறிமுகமான கீரைகளின் பயன்களைக் காண்போம்.

அரைக்கீரை...

இக்கீரையை உணவில் சேர்த்து வர வாயுக் கோளாறுகள், வாத வலி நீங்கும்.

இக்கீரை விதைகளை எண்ணெயிலிட்டு காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வர தலைமுடி நன்கு வளரும். தலைச்சூடு குறையும்.

இக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். காய்ச்சல், உடல் குளிர்ச்சியை இக்கீரை குணப்படுத்தும்.

இக்கீரையை அரைத்துச் சாறு எடுத்து, தேனில் கலந்து அருந்த உடல் பலத்தைக் கூட்டும். தாது பலத்தை அதிகரிக்கும்.

இக்கீரையை பிரசவமான பெண்களுக்கு உண வோடு கொடுக்க, உடல் பலவீனம் மாறும். அரைக் கீரை கூட்டு மலச்சிக்கலை நீக்கும். ஜலதோசம் மாறும்.

இக்கீரையோடு நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து சமைத்து உண்டிட குளிர் காய்ச்சல் சளி தீரும். இக்கீரை நரம்பு நோய்களைக் குணப்படுத்தும்.

இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பசியற்ற நிலையை மாற்றி பசியையூட்டும்.

இக்கீரை பித்தக் கோளாறுகளால் ஏற்படும் தலைச்சுற்று வாந்தி போன்றவற்றைக் குணப் படுத்தும்.

இக்கீரையை எவ்விதத்திலாவது உணவில் சேர்த்து வந்தால் இருதயம், மூளை வலுப்பெறும்.

இருமல், தொண்டைப் புண் இவற்றை அரைக் கீரை குணப்படுத்தும்.

உடலில் வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களை இது தடுக்கும்.

முளைக்கீரை...

முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் களும் தாதுப்பொருட்களும் உடலுக்கு போதிய அளவில் கிடைக்கும்.  குழந்தைகளுக்குத் தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வந்தால் நன்கு உயரமாக வளருவார்கள்.

முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை சரியாகும்.

சிறுவர், சிறுமியருக்கு முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது. முளைக்கீரையுடன் சிறு பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.

முளைக்கீரை சாற்றில் முந்திரி பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால், முகப் பரு, தேமல் போன் றவை மறைந்து முகப்பொலிவு உண்டாகும்.

சொறி, சிரங்கு முதலிய நோய்கள், இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்த கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது. முளைக்கீரை சாற்றில் உளுந்து ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் நீர் கடுப்பு மறையும்.

அகத்திக்கீரை...

அகத்திக்கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப் படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும்.

அகத்திக்கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், மலச்சிக்கல், காபி, டீ இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

குழம்பு வைக்கையில் தாளிதத்துடன் அகத்தியை சிறிது வதக்கி சேர்த்தால் உடல்சூடு, வாய்ப்புண், வயிற்றுப் புண் அகலும்.

 

புற்று நோய் கண்டறியும் மருத்துவ முகாம்

திருக்கானூர்பட்டி, ஜூன் 29- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஊரக வளர்ச்சிமய்யத்தின் பெரியார் புராதிட்டத்தின் கீழ் பெரியார் மருத்துவ குழுமம், திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி ஹர்சமித்ரா புற்றுநோய் மருத் துவமனையும் இணைந்து பெரியார் புராகிராமம் திருக் கானூர்பட்டி தூய மரியன்னை உயர்நிலை பள்ளியில் 24.6.2018 ஞாயிறு காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை இலவச பொது மருத்துவம் மற்றும் புற்று நோய் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

பெரியார் மணியம்மை மருத்துவமனை மருத்துவ குழுவுடன் மருத்துவ முகா மிற்கு 40க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ சேவை வழங்கினர். இந்த ஆண்டு நடைபெற்ற அய்ந்தாவது பெரிய மருத்துவ முகாம் ஆகும்.

இந்த மருத்துவ முகாம் அனைத்து பெரியார் புரா கிராமங்களிலும் தொடர்ந்து நடைபெறும். இந்த மருத்துவ முகாமில் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் என 190 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் மார்பக புற்றுநோய் கண்டறியும் சோதனையில் 40 பேர் கலந்துகொண்டு பரிசோதனை செய்துகொண்டனர்.

இந்த மருத்துவக்குழுவில் பெரியார் மருத்துவ குழுமத் தின் இயக்குநர் மருத்துவர் ஆர்.கவுதமன் மருத்துவர் எஸ்.பிறைநுதல் செல்வி, (பொருளாளர் திராவிடர் கழ கம்) மருத்துவர் வீ.பஞ்சாட் சரம் (பெரியார் மருத்துவ மனை சோழங்கநல்லூர்), மருத்துவர் சி.தியாகராஜன் (பெரியார் மருத்துவமனை திருவெறும்பூர்), மருத்துவர் ஜி.எஸ்.குமார் (கள்ளக்குறிச்சி), பி.மஞ்சுளாவாணி  (பெரியார் மருத்துவமனை திருச்சி), முனைவர் ஆர்.செந்தாமரை (முதல்வர் பெரியார் மருந்தியல் கல்லூரி), மருத்துவர் அய்.ரோகின்பானு சடாய் (திருச்சி), ஹர்சமித்ரா புற்று நோய் மருத்துவமனை பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவ, மாணவிள் பணியாளர்கள் மற்றும் ஹர்சமித்ரா மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பான மருத்துவ சேவை வழங்கினர். ஊரக வளர்ச்சி மய்ய இயக்குநர் பேராசிரியர் முனைவர் த.ஜானகி, இந்த மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற பெரும் பங்காற் றிய பங்கு தந்தை ட.பபி யான், இருதயராஜ், மார்டின் ரெக்ஸ் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் தின் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். மேலும் இந்த மருத்துவ முகா மிற்கான அனைத்து ஏற்பாடு களையும் பெரியார் புரா திட்ட ஒருங்கிணைப்பாளர் க.முருகேசன் ஒருங்கிணைத்தார்.

கண்ணில் உள்ள லென்ஸில் பிரச்சினை ஏற்பட்டால், பார்வையில் கோளாறு வரும். அப்போது அதைச் சரி செய்வ தற்காக கண்ணாடி போடச் சொல்வார்கள், கண் மருத்துவர்கள். ஆனால், ஒரு சிலர் கண்ணாடியைத் தவிர்க்க விரும்புவார்கள். அப்போது அவர்களுடைய பார்வைக் கோளாறை  சரிப்படுத்துவதற்காக வழங்கப் படும் ஒரு மாற்றுத் துணைக் கருவிதான் கான்டாக்ட் லென்ஸ்.

இது கண்ணில் இருப்பதே தெரியாத அளவுக்கு மெல்லிய பிளாஸ்டிக்கினால் ஆனது. கண்ணின் வெளிப்புறத்தில் வட்ட மாக, கறுப்பாகத் தெரியும் கார்னியாவில் இதைப் பொருத்திக் கொள்வதன் மூலம் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, சிதறல் பார்வை, வெள்ளெழுத்து போன்ற பல்வேறு பார்வைக் குறை பாடுகளைச் சரிப்படுத்தி, தெளிவான பார்வையைத் தருகிறது.

இதன் தேவை என்ன?

பார்வைக் கோளாறுகளுக்கு மட்டுமன்றி, குறிப்பிட்ட சில வேலைகளில் இருப்பவர்களின் வசதி காரணமாகவும் கான்டாக்ட் லென்ஸ் தேவைப்படுவதுண்டு. உதாரணமாக ஒளிப்படக் கலைஞர்கள், மைக்ராஸ்கோப்பைக் கையாள் கிறவர்கள், விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் போன்றோருக்கு கான்டாக்ட் லென்ஸ் தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு கண் ணாடி ஏற்றுக்கொள்ளவில்லை எனும்போது, அவர்களுக்கும் இது தேவைப்படும். சில நோய்களின்போது, கண்ணாடிகளால் பார்வைக் குறைபாட்டைத் தீர்க்க இயலாது எனும் நிலையில், இதுதான் கைகொடுக்கும். இன்னும் சிலர் அழகு, புறத்தோற்ற மாற்றத்துக்காகவும் கான்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்து கின்றனர். எடுத்துக் காட்டாக நடிகர், நடிகைகள் திரைப்படக் காட்சிகளில் தோன்றும் போது இதைப் பயன்படுத்துவதுண்டு. அழகுப் போட்டி, திருமணம் போன்றவற்றுக்காகத் தற்காலிக மாகவும் சிலர் பயன் படுத்துகின்றனர். பெண்கள் தாம் அணியும் ஆடைகளுக்குப் பொருத்தமாக இருப்பதற்காக, பல வண்ணங் களில் கிடைக்கும் கான்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்துவது மேல்நாடுகளில் வழக்கம். தற்போது இந்த நாகரிகம் இந்தியாவிலும் பரவுகிறது.

வகைகள் உண்டு!

கண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்ப கான்டாக்ட் லென்ஸ்களைப் பொருத்துவது வழக்கம். இதற்கு உதவும் வகையில் பலதரப்பட்ட கான்டாக்ட் லென்ஸ்கள் உள்ளன. பார்வைக் கோளாறுகளுடன் கண்ணில் வேறு நோய்கள் ஏதேனும் இருந்தால் சிறப்புத் தேவை கான்டாக்ட் லென்ஸ்கள்  மூலம் சரிப்படுத்துவது உண்டு. யாருக்கு, எதைப் பொருத்துவது என்பதைக் கண் மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கைகள்

முதலில், கான்டாக்ட் லென்ஸ்களுக்குச் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ள, தகுதியும் திறமையும் வாய்ந்த கண் மருத்துவரிடம் கண்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண் டும்.

இவற்றை அணிவதற்கு கண்ணாடிக் கடைகளில் கண் பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடாது. கண்ணாடி அணி வதற்கான பரிசோதனைகளும், கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கான பரிசோதனைகளும் வெவ்வேறானவை. கண்ணாடி அணி வதற்கான பரிந்துரையை வைத்து கான்டாக்ட் லென்ஸ்களைத் தேர்வு செய்ய முடியாது. ஒருவருடைய தினசரி வேலை, வாழ்க்கைமுறை போன்றவற் றையும் கவனத்தில் கொண்டு, அவருக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் அவருக்குப் பொருத்தமாக இருக்கும். சிலர் பணச் செலவுக்குப் பயப்படுவதால், கான்டாக்ட் லென்ஸ்கள் வேண்டாம். ஆனால், கண்ணாடியை அவசியம் அணிய வேண்டும். இல்லாவிட்டால், கண்ணின் பவர் அதிகமாகி விடும். பிறகு, இப்போதுள்ள பவரைவிட அதிக பவரில் கண்ணாடி போட வேண்டி வரும். பவரைப் பொறுத்து கண்ணாடியின் தடிமன் கூடும். செலவும் அதிகரிக்கும். உடனே செயல்படுங்கள்.

பராமரிப்பது எப்படி?

கான்டாக்ட் லென்ஸ்களை அணிவதற்கும் அகற்றுவ தற்கும் சரியான வழிகளை வல்லுநரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.  அவற்றைப் பாதுகாக்கும் முறைகளையும் அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸ்களை அணியும் முன்பும், கண்களிலிருந்து அவற்றை அகற்றும் முன்பும் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸ்களுடன் வழங்கப்பட்ட திரவத்தை அதற்கான குப்பியில் ஊற்றி, அதில் கான்டாக்ட் லென்ஸ்கள் மூழ்க வைத்து, தினமும் இரண்டு முறை சுத்தப்படுத்த வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸ்களைப் பாதுகாக்கும் குப்பியை, அதைப் பாதுகாக்கும் திரவத்தால் வாரம் இரண்டு முறை சுத்தப்படுத்த வேண்டும். கான்டாக்ட் லென்ஸ்களைப் பாதுகாக்கும் குப்பியையும் அதைப் பாதுகாக்கும் திரவத்தையும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும்.

செய்யக்கூடாதவை

கான்டாக்ட் லென்ஸின் வட்ட அமைப்பில் விரலை வைத்து எடுக்கக்கூடாது.  கான்டாக்ட் லென்ஸை அணிந்துகொண்டிருக் கும்போது குளிப்பது, முகம் கழுவுவது, உறங்குவது ஆகியவற்றை மேற்கொள்ளக்கூடாது.

கான்டாக்ட் லென்ஸ்களை நேரடியாக சூரியஒளியில் வைக்கக்கூடாது. அதுபோல் குளிர்சாதனப் பெட்டியிலும் அவற்றை வைக்கக்கூடாது. கான்டாக்ட் லென்ஸ்களை அணிந்தி ருக்கும்போது, அவற்றின்மீது எவ்வித கண் சொட்டுமருந்து களையும் மருத்துவர் ஆலோசனையின்றி ஊற்றக்கூடாது.

கழுத்து வலி போக்கும் கால்சியம்

மத்திய வயதுள்ளவர்களுக்கும் அதற்கு மேல் வயதுள் ளவர் களுக்கும் கழுத்துவலி வருவதற்கு முக்கியக் காரணம், கழுத்தெலும்பு தேய்மானம். செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ் என்பது இதன் மருத்துவப் பெயர். முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு தேய்ந்துபோவது அல்லது விலகி விடுவது போன்ற காரணங்களாலும் கழுத்துவலி வருவது உண்டு.

பொதுவாக நாற்பது வயதில் இந்த ஜவ்வு தேயத் தொடங்கும். இதற்கு ஜவ்வுகளில் நீர்ச்சத்து குறைவதும், எலும்புகளில் கால்சியம் சத்து குறைவதும் முக்கியக் கார ணங்கள். இதனால், எலும்புகள் மெலிந்து, வலுவிழந்துவிடும். இவ்வாறு வலுவிழந்த எலும்புகள் வழக்கமான தசைகளின் அழுத்தம் காரணமாக, விரைவிலேயே தேய்ந்துவிடும். ஜவ்வு விலகியிருந்தால், அது கைகளுக்கு வரும் நரம்புகளை அழுத்தும். அப்போது கழுத்தில் மட்டுமல்லாமல் கைகளுக்கும் வலி பரவும். சில நேரம் வயதானவர்களுக்கு கழுத்தெலும்பில் எலும்பு முடிச்சுகள் வளரும். இதனாலும் கழுத்து வலி வரக்கூடும். இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள். அப்போது கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்தத் தவறான பழக்கம் நாளடைவில் கழுத்துவலியை ஏற்படுத்துகிறது.

குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்துவலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்து விடும். உடலுழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாதவர்களுக்குக் கழுத்துத் தசைகள் சீக்கிரத்தில் இறுகிவிடும். இதுவும் 50 வயதில் நிகழும். புகைபிடிக்கும் பழக்கம் இருந்தாலோ உடற் பருமன் இருந்தாலோ கழுத்துவலி சீக்கிரத்தில் வந்துவிடும்.

கழுத்துவலிக்கு இன்னொரு காரணம் இது: வயதாக ஆக கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் விரைவில் சோர்ந்து போகும். அப்போது கழுத்தை அந்தத் தசைகளால் தாங்கிப் பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடாகக் கழுத்துவலி வரும். அதிக சுமையைத் தலையில் தூக்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொள்வது போன்றவை இந்த மாதிரி கழுத்துவலிக்குப் பாதை போடும்.

அறிகுறிகள்

இந்த நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவதுபோல் வலிக்கும். விரல்கள்வரை வலி பரவக்கூடும். சிலருக்குக் கை, விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும்போது கழுத்துவலியுடன் தலைசுற்றலும் ஏற்படும். நடப்பதற்குச் சிரமமாக இருக்கும்.

என்ன பரிசோதனை?

கழுத்தை எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.அய். ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயைப் புரிந்துகொள்ளலாம்.

என்ன சிகிச்சை?

ஆரம்பநிலையில் உள்ள கழுத்துவலியைச் சாதாரண வலி மாத்திரைகளால் குணப்படுத்திவிடலாம். பிரச்சினை நீடிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி கழுத்தில் பட்டை அணிந்துகொள்வது, கழுத்துக்கு ட்ராக்ஷன் போட்டுக்கொள்வது, பிசியோதெரபி ஆகியவை உரிய பலன் தரும். சிலருக்குக் கழுத்தெலும்பில் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.

என்ன உணவு?

புரதம், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் மிகுந்த பால், பால் பொருட்கள், மீன், முட்டை, இறைச்சி, காய்கறி, பழங்களை உட்கொள்ள வேண்டும். கொள்ளு, சோயா பீன்ஸ், உளுந்து, பீட்ரூட், அவரை, துவரை, பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக் கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றில் கால்சியம் மிகுந்துள்ளது. இந்த உணவு வகைகளில் ஒன்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தடுப்பது எப்படி?

1. எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காரவும் நிற்கவும் நடக்கவும் பழகிக்கொள்ளுங்கள்.

2. பேருந்துகளில் பயணம் செய்யும்போது முடிந்தவரை பின் இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்வதைத் தவிருங்கள். பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்கு வதைத் தவிருங்கள். முடியாதபோது அல்லது அவசியம் ஏற்படும்போது தலையைப் பின்பக்கமாக சாய்த்துக்கொண்டு உறங்குங்கள்.

3. ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்க வேண்டாம்.

4. கணினியில் வேலை செய்கிறவர்கள் அதன் திரை, கண் பார்வைக்கு நேர்மட்டத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தலையைத் தூக்கியவாறு திரையைப் பார்க்கவேண்டும் என்றிருந்தால் கழுத்துவலி உறுதி.

5. கழுத்து அதிக நேரம் ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாகப் படிக்கும்போதும் கணினியைப் பார்க்கும்போதும் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுத்தை வேறு பக்கம் திருப்பி ஓய்வு தர வேண்டும்.

6.  தலையைக் குனிந்துகொண்டே அதிக நேரம் வேலை செய்யக் கூடாது. உதாரணம் - தையல் வேலை செய்கிறவர்கள்.

7.  மிருதுவான, சிறிய தலையணையைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு எப்படிப் படுத்துக்கொண்டால் கழுத்தும் தலையும் வசதியாக இருக்கிறதோ, அப்படிப் படுத்து உறங்குங்கள்.

 

 

 

உலக அளவில் உடல் பருமன் முக்கியப் பிரச்சினையாக இருந்து வருகிறது. முறையற்ற உணவுப் பழக்கம், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையின் விளைவாக உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஓர் எல்லையைத் தாண்டிவிட்டால் எதுவுமே பிரச் சினைதான். அபரிமிதமான உடல்பருமன் மரணத்தை ஏற்படுத்தவும் கூடும்.

அதீத உடல் பருமன் கொண்டவர்களுக்கு நவீன அறிவியல் வழங்கியிருக்கும் கொடை என பாரியாட்ரிக் அறுவைசிகிச்சையை மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். உடல் எடையைக் குறைக்கும் இந்த அறுவைசிகிச்சை மரணத்தை விளைவிக்கும் என்ற கண்ணோட்டமும் உள்ளது.

இந்த சிகிச்சை முறை 2002ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுக மானது. இந்தியாவில் முதல் பாரியாட்ரிக் அறுவைசிகிச்சையை நான் மேற்கொண்டேன். இந்த 16 ஆண்டுகளில் 1,500 பேருக்கு பாரியாட்ரிக் அறுவைசிகிச்சையை செய்திருக்கிறேன். அவர்களில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த மூன்று பேரும் அபரிமிதமான எடை, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகியிருந்தவர்கள்.

இது போன்று அரிதாக மரணங்கள் நிகழும் அதேநேரம், இந்த சிகிச்சை மூலம் நலமுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இந்தச் சிகிச்சையை பலரும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கின்றனர். உடல் பருமனாக இருப்பவர்களின் எடையைக் குறைத்து, அவர்களை அழகாக்குவதற்கான சிகிச்சை இது என்ற தவறான புரிதல் உள்ளது” என்கிறார் இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்குமார்.

ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 23.5 பி.எம்.அய். புள்ளிகள் இருப்பது சராசரி அளவு. 37.5 பி.எம்.அய். புள்ளியைத் தாண்டி இருக் கிறவர்களுக்குதான் இந்த அறுவைசிகிச்சை தேவைப்படும். நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற வேறு பிரச்சினைகளுடன் இருப்பவர்களுக்கு பி.எம்.அய். 32.5-யைத் தாண்டிவிட்டால் இந்த சிகிச்சையை மேற் கொள்ள வேண்டும்.

அதிக உடல் பருமன், நீரிழிவு, ரத்தக் கொழுப்பு, உயர் ரத்தஅழுத்தம் ஆகிய பிரச்சினைகளில் இரண்டு அல்லது மூன்று பிரச்சினைகள் இருந்தால், அது ‘மெட்டபாலிக் சிண்ட்ரோம்‘ என்று குறிப்பிடப்படுகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு ஆளாகியிருப்பவர்கள் சராசரி வாழ்நாளை விட 15 ஆண்டுகள் குறைவாகவே வாழ்வார்கள். அவர்களுக்கு பாரியாட்ரிக் அறுவைசிகிச்சை நல்ல வாய்ப்பு.

அதிக உடல் பருமன் மட்டுமே உள்ளவர்களுக்கு பாரியாட்டிக் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மற்ற பிரச்சினைகளுக்கும் சேர்த்து மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சை ‘மெட்டபாலிக் அறுவைசிகிச்சை’ எனப்படுகிறது. ‘மெட்டபாலிக் சிண்ட்ரோம்‘ பிரச்சினை கொண்டவர்களை மருந்து, மாத்திரைகள் மூலம் குணப் படுத்த முடியாது. ஏனென்றால் பக்கவிளைவாக சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலிழப்பதற்கான சாத்தியம் உண்டு.

சிறுநீரகத்தை பாதிக்கும் மைக்ரோ புரதம்!

வாழ்க்கையில் அவசரமாகக் கடந்து போய், தவறவிட்ட கணங்கள் திருப்பிக் கிடைக்காதவை மட்டுமல்ல, தீர்க்க முடியாத சிக்கல்களையும் கொண்டுவந்து சேர்க்கும். நீரிழிவு நோயும் அப்படித்தான்.

என்ன செய்துவிடப் போகிறது? என இந்நோயில் நாம் அலட்சியமாய், அறியாமையாய்த் தவறவிடும் கணங்கள், எதிர்பாராத சிக்கல்களைப் பிற்காலத்தில் கொண்டுவந்து சேர்த்துவிடும். சர்க்கரை நோயில் ஏற்படும் சிறுநீரகச் செயலிழப்பு அப்படியான சிக்கல்களில் ஒன்று!

அவசியமில்லாமலும் சரியான மருத்துவ வழிகாட்டு தலும் இன்றி, இஷ்டத்துக்கு எடுக்கும் எந்த மருந்தும் பின்னாளில் பிரச்சினையைத்தான் தரும். அது நவீனமோ மரபோ, துல்லியமாய்க் கணித்து, திறம்பட மருந்தைப் பரிந் துரைக்காதபோது இச்சிக்கலுக்கு நிச்சயம் வழிவகுக்கும்.

அலட்சியமே முதல் காரணம்

மருந்துகளில் அலட்சியம், உணவில் அலட்சியம், உடற்பயிற்சியில் அலட்சியம் என இருப்போர் இறுதியில் வந்து சேர்வது சிறுநீரக நோய்ச் சிக்கலில்தான். கிட்டத்தட்ட 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள், சில ஆண்டுகளில் சிறுநீரக நோயாளிகளாக மாறிவிடுகின்றனர். அதுவும் இந்த அளவு, தற்போது இனிப்பு தேசத்தில் எக்குத்தப்பாக அதிகரித்து வருகிறது.

புரத அளவைப் பாருங்கள்

கட்டற்ற சர்க்கரையால் பழுதாகும் சிறுநீரகம், முதலில் எவ்வித அறிகுறியையும் காட்டுவதில்லை. முழுசாய் முடங்கிப் போவதற்குச் சற்று முன்னதாகத்தான் சின்னச் சின்ன அறிகுறிகளையும் ரத்தத்தில் புரதம், உப்பு, கிரி யாட்டினின்களில் மாற்றத்தையும் காட்டத் தொடங்குகிறது. ரத்தத்தில் யூரியாவும் கிரியாட்டினின் அளவும் சரியாக உள்ளது என அலட்சியமாய் இருப்பதைவிட ஆபத்து, இந்நோயில் வேறு எதுவும் கிடையாது.

கிரியாட்டினின் நம்பகத்தன்மையை நவீனம் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது. மைக்ரோஅல்புமின் யூரியா  எனும் சிறுநீரில் வரத் தொடங்கும் நுண்ணியப் புரதக் கழிவைத்தான் இப்போது நவீன மருத்துவம் உற்றுப் பார்க்கச் சொல்கிறது.

ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும், தன் ரத்தச் சர்க்கரை அளவோடு உள்ளதா எனக் கணிக்கும் போதே, சிறுநீரில் நுண்ணியப் புரதம்  கழிகிறதா என்பதை அவ்வப்போது பார்க்கத் தவறிவிடக் கூடாது. கூடவே எஸ்டிமேஷன் ஆஃப் க்ளோமெரூலா ஃபில்ட்ரேஷன் ரேட்  எனப்படும்  என்னுமொரு மிக முக்கிய பரிசோதனையையும் பார்த்தாக வேண்டும்.

இந்த இரு சோதனைகளை எல்லா நீரிழிவு நோயினரும் அவ்வப்போது செய்து பார்த்து தம் நலத்தை, தம் சிறுநீரக நலத்தை உறுதி செய்துகொள்வது மிக மிக முக்கியம். மைக்ரோஅல்புமின் கொஞ்ச நாளில் மேக்ரோஅல்புமின்  ஆகி பின்னர் எண்ட் ஸ்டேஜ் ரீனல் டிசீஸ் எனும்  ஆவது இந்தியாவில் மிக மிக அதிகம். மேலோட்டமாக நீரிழிவுக் கென செய்யப்படும் பல பரிசோதனைகளில் சிறுநீரகத்தின் நலம் முழுதாக அறியப்படுவதில்லை.

எல்லாப் பரிசோதனைகளும் தவறு. வணிகச் சூழ்ச்சி கொண்டது என்கிற பிரசங்கம் வேறு, நீரிழிவு நோய் சார்ந்து ஆங்காங்கே பேசப்படுவதும், இப்போது கணிசமாக அதிகரித்திருப்பது இன்னும் வேதனை. மருத்துவத் துறை யிலுள்ள அறமற்ற வணிகத்தை எதிர்ப்பதாகப் புறப்பட்டு, உண்மையான அறிவியலையும் புறக்கணிக்கும் போக்கு, இந்நோயில் பல சிக்கல்களைச் சாமானியனிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.

இன்னுமொரு முக்கிய விஷயம், நீரிழிவு நோயுடன் யாருக்கு ரத்தக்கொதிப்பு அதிகம் உள்ளதோ, அவருக்கே சிறுநீரக பாதிப்பு வரும் ஆபத்து அதிகம் என்கிறது நவீன மருத்துவம். குறிப்பாக இதயம் விரிவடையும்போது வரும் ரத்த அழுத்தம், அதாவது டயாஸ்டாலிக் பிரஷர் 90-க்குள் இருக்க வேண்டும்.

உள்ளூர் உணவே நல்லது!

சிறுநீரகத்தின் அளவு ஒவ்வொரு மரபுக்கும் மாறுபடும். அதில் உள்ள மிக நுண்ணிய வடிகட்டிகள், அதாவது நெப்ரான்கள் அளவும்கூட மாறுபடும். ஆப்பிரிக்க மரபி னரின் நெப்ரான் அளவும் அமைந்தகரை மரபினரின் நெப்ரான் அளவும் நிச்சயம் ஒன்றல்ல. அதேபோல் போஷாக்காகப் பிறந்த குழந்தைக்கும், குறைப்பிரசவமாகப் பிறந்த குழந்தைக்கும் இந்த நெப்ரான்களின் அளவில் வேறுபாடு உண்டு. எனவே, நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரகம் கெடாமலிருக்க பீட்சா, பிரெஞ்சு ஃபிரைஸ் போன்ற வெளிநாட்டு உணவு வகைகளைச் சாப்பிடாமல், ஏன் உள்ளூர் உணவு அவசியம் என்பதற்கான காரணத்தையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உள்ளூர் மெஸ்ஸின் சாம்பாரில் உள்ள பாசிப்பயறுப் புரதத்துக்கும் அல்லது அயிரை மீன் குழம்புப் புரத்துக்கும், கலிஃபோர்னியா சந்தையில் புழங்கும் சால்மன் மீனின் புரதத்துக்கும் விலங்குப் புரதத்துக்கும் நிறையவே வித்தி யாசம் உண்டு.  சாப்பிடும் பெரும்புரத உணவின் கழிவை, இயல் பிலேயே அளவில் கூடிய அவர்கள் சிறுநீரக நெப்ரான்கள் அழகாக வெளி யேற்றிவிடுவதுபோல் நம் நெப்ரான்களால் முடிவதில்லை.

இயல்பிலேயே அளவில் குறைந்த நம் சிறுநீரக நெப் ரான்கள், இச்செயலில் விழிபிதுங்கி விக்கி அடைத்துக் கொள்ளும். மொத்தத்தில் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தினால் மட்டும் போதாது. சிறுநீரகத்தையும் மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

எப்போதும் வேண்டாம் கிழங்கு!

ஃபிங்கர் ஃப்ரைஸ்! உலகெங்கும் உருளைக் கிழங்கை நீளவாக்கில் செவ்வகத்துண்டுகளாக வெட்டி, பொரித்து விற்பனை செய்யப்படும் ஒரு பில்லியன் டாலர் நொறுக் குத்தீனி. சிப்ஸ் அதன் ஒண்ணுவிட்ட தம்பி. உலகில் கணிசமானோரின் உடல் எடையைக் கூட்டி, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு போன்ற நோய் களில் தள்ளியதில் இந்த இரண்டுக்கு பெரும்பங்கு உண்டு.

ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் மற்றும் உருளை சிப்ஸ் கம்பெனிகளுக்குத் தர என்றே தனியாக, நீள வாக்கில் பருத்து வளரும் இயல்புடைய வீரிய ஒட்டுரக உருளை உருவாக்கப்பட்டது. நெடுங்காலம் முன்பு நம் பசியாற்ற, தென் அமெரிக்காவில் உள்ள பெரூ நாட்டில் உருவான உருளைக்கும், இந்த கம்பெனி படைக்கும் இப்போ தைய உருளைக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. நீள நீள துண்டுகளால், பொக்கே போல் அவை அலங் கரிக்க, மற்ற நாடுகளில் ரஸ்ஸெட் பர்பேங்க் அண்ட் மாரிஸ் பைப்பர்  வகை உருளைதான் வேண்டுமாம்.

இந்தியாவில் நல்ல பருத்த உருளைக்கென ஜோதி, சந்திரமுகி, அட்லாண்டா போன்ற வீரிய பருத்த ரகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை களெல்லாம் அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் படைத் தவை. தான் விரும்பும் பெரிய வடிவில் அவை விளைந்து தள்ள, பயன்படுத்தப்படும் உர ரசாயனங் களும் பூச்சிக் கொல்லிகளும் ஏராளம். இவற்றின் கூறுகள், விளை மண்ணிலும், விளைவிப்பவன் உடலிலும் ஏற்படுத்தும், நலவாழ்வின் முறிவில் ஏற்படும் ஒலிதான், நாம் அதை மொறுக் மொறுக் என ருசித்து நொறுக்கும் போது கேட்கப்படும் ஒலி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

தர்பூசணி உடம்பிற்கு மிகுந்த குளிர்ச்சியை ஊட்டக்கூடிய பழ மாகும். உடல் சூட்டை தணித்து கோடை  வெம்மையிலிருந்து நம்மைக் காக்கும். இப்பழத்தை யார் வேண்டுமானாலும் சாப்பிட லாம். பழம் இனிப்பாக இருப்பதால்  நீரிழிவு நோய் உடையவர்கள் சாப்பிடலாமா என்ற அச்சம் ஏற்படலாம். ஆனால் இப்பழத்தை நீரிழிவு நோய் உள்ளவர்கள்,  இதய நோய் உள்ளவர்கள் தாராளமாக உண்ணலாம். ரத்தக்கொதிப்பு உடையவர்கள், குண்டானவர்கள் உண்ணலாம்.  இப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. குறைந்த அளவில் நார்ச்சத்து உள்ளது.

மருத்துவப் பயன்கள்

* தர்பூசணி பழச்சாறுடன், இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெம்மை, உடல் சூடு தணியும்.

* பழத்துண்டுகளை பதநீரில் போட்டு, ஒரு துண்டு அய்ஸ்கட்டி சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி  உடலை குளிர்விக்கும் பானமாகவும், வயிற்றுவலியை நீக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது.

* பழச்சாறு பசியை தீர்க்கும், காய்ச்சலை குணப்படுத்தும்.

* பழச்சாறுடன் சிட்டிகை அளவு சீரகப் பொடி, சீனி கலந்து அருந்த சிறுநீரக கோளாறுகள் நீங்கும். சிறுநீர்த்தாரை  எரிச்சல் மாறும்.

* கோடையில் ஏற்படும் நீர்ச்சுருக்கை குணப்படுத்தும்.

* பழச்சாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மாறும். கண்கள் குளிர்ச்சி பெறும்.

* பழச்சதையை கண் இமைகளை மூடியபின் மேலே வைத்து ஒற்றி எடுக்க கண்வலி, கண் சூடு குறையும்.

* தர்பூசணி பழச்சாறு புத்துணர்ச்சியை ஊட்டும்.

* பழச்சதையை உடம்பில் தேய்க்க அரிப்பு மாறும்.

* பழச்சதையை பிசைந்து சிறிதளவு பால், தேன் கலந்து முகத்தில் பூசி ஊறியபின் கழுவி வர முகம் பளபளக்கும்.

* பழச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து அருந்த வயிற்றுக்கடுப்பு மாறும்.

* பசியின்மை, அஜீரணம் போன்றவற்றை குணப்படுத்தும்.

* பழச்சாறுடன் மோர் கலந்து அருந்த சிறுநீர் எரிச்சல் மாறும்.

* தர்பூசணிப் பழம் செரிமானத்தை சீர்படுத்தும்.

* பழச்சதை நீங்கலாக இருக்கும் வெள்ளை பகுதியை கூட்டு, குழம்பு தயாரிக்க பயன்படுத்தலாம். இக்கூட்டு குடல்  நோய்களை குணப்படுத்தும்.

* தர்பூசணி பழம் பசியைத் தீர்க்கும். செரிமானத்தைக் கூட்டும். அஜீரணத்தை நீக்கும். உடம்பை குளிர்வித்து  சுறுசுறுப்பூட்டும். மொத்தத்தில் இப்பழம் கோடையை தணிக்கும் சிறந்த ஒரு பழமாகும்.

எண்டோதீலியம் பற்றிய விழிப்புணர்வு தேவை

நுரையீரல் நோய்கள், இதயநோய்கள், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு என தற்போது அதிகரித்துவரும் உயிர்கொல்லி நோய்களுக்கு மருத்துவரீதியாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இவற்றின் மூல காரணம் மாசடைந்த சுற்றுச்சூழல் என்பதைப் பலரும் கவனிக்கத் தவறிவிடுகிறோம். ஏனெனில் ரசாயன கழிவுகள் காரணமாகவும், மாசடைந்த காற்றை சுவா சிக்கும் காரணமாகவும் நம் உடலில் உள்ள  என்னும் மெல்லிய படலம் சேதமடைவதாலேயே இத்தகைய நோய்கள் வருகின்றன. பொதுமக்களிடம் எண்டோ தீலியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்கிறார் இதய சிகிச்சை சிறப்பு மருத்துவரான ஜாய் தாமஸ்.

மேலும் அவர் கூறுகையில்,  மனித உடலில் தமனிகள், நரம்புகள் மற்றும் மயிரிழை போன்ற நுண்குழாய்கள் என சுமார் 60 ஆயிரம் மைல் நீளத்துக்கு ரத்த நாளங்கள் உள்ளன. இந்த மிகப்பெரிய நெட்வொர்க்கை  என சொல்லப்படும் செல்கள்தான் பராமரிக்கின்றன. ஆயிரக்கணக்கான  செல்களைக் கொண்ட கட்டமைப்பு  என்று குறிப்பிடப்படுகிறது.

நரம்புகள், ரத்தநாளங்கள் என உடல் முழுவதும் உள்ள குழாய்களில் இந்த எண்டோதீலியம் மெல்லிய படலமாக மூடப்பட்டிருக்கும். இதுதான் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கிறது.

எண்டோதீலியத்தின் வேலைகள்:  ரத்தக்குழாய் சுவற்றை பாதுகாப்பதும், ரத்த ஓட்டத்தை சீராக வைத்தி ருப்பதும் எண்டோதீலியத்தின் முக்கியமான வேலை. ரத்தத்தில் உள்ள ரசாயனங்கள் மற்றும் வெள்ளை, சிவப்பு அணுக்கள் மற்றும் ரத்த தட்டுக்கள். உடல் திசுக் களுக்குள் செல்லாமலும், திசுக்களிலுள்ள தேவையற்ற கழிவுகள் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு ரத்தத்தில் கலக்காமலும் பாதுகாக்கும் அரணாக இந்த எண்டோ தீலியம் செயல்படுகிறது.

உடலில் அடிபடும்போது ரத்தம் அதிகமாக வெளியேற விடாமல் ரத்தத்தை உறைய வைக்கும் அதே நேரத்தில், ரத்த குழாய்களுக்குள் ரத்தத்தை உறைய விடாமல் சீராக ஓட வைக்கும் வேலையையும் இந்த எண்டோதீலியல் செல்கள் செய்கின்றன.

எண்டோதீலியம் பழுதடைந்தால்

உடலில் ஏற்படும் விளைவுகள்

ரத்த அழுத்த மாறுபாடுகள், ரத்தநாளங்கள் சுருக்கம் மற்றும் விரிவடைதல், அழற்சி நிகழ்வுகள், ரத்தத்தில் ஆக்சிஜன் சுழற்சி மற்றும் ரத்த உறைதல் போன்றவற்றில் எண்டோதீலியம் மிக இன்றியமையாததாக இருக்கிறது. இதயத்தைப் பாதுகாக்கும் எண்டோதீலியத்தின் ரோக்கியத் துக்கு நைட்ரிக் ஆக்ஸைடு சமநிலையில் இருக்க வேண்டும். நைட்ரிக் ஆக்ஸைடு சமநிலை தவறினால் எண்டோதீலியம் சேதமடைந்து ரத்தத்தில் இருக்கும் உயிரணுக்கள் ரத்த நாளங்கள் வழியாக அருகில் உள்ள திசுக்களுக்குள் கலந்துவிடலாம்.

பெரிய ரத்தநாளங்களில் சுவர் இருப்பதுபோல் நுண்ணிய ரத்த நாளங்களில் சுவர் இருக்காது. வெறும் எண்டோதீலியப் படலம் மட்டுமே இருக்கும். இந்த நுண் ணிய ரத்தக்குழாய்களில்தான் ஆக்சிஜன் உள்ளேற்றம், கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம் மற்றும் உணவி லிருந்து ஆற்றல் மாற்றம் போன்றவை நடைபெறும். ரத்த ஓட்டத்தை சீராக்குவதன் மூலம் ரத்த அழுத்தத்தை ஒழுங்காகப் பராமரிப்பதிலும் எண்டோதீலியம் தீவிரமாக  செயலாற்றுகிறது.  ரத்த ஓட்டம் வழியாக ரத்த அழுத்தத்தை உண்டாக்குவதற்கும், ஓட்டத்தை ஏற்படுத்துவதற்கும் ரத்தநாள எதிர்ப்பு தேவைப்படுகிறது. இந்த முறையான ரத்த சுழற்சி எதிர்ப்பு அமைப்பை    என்று சொல்கிறோம். இது அதிகமாகும்போது ரத்த அழுத்த அதிகரிப்பும், குறையும்போது ரத்த அழுத்த குறைவும் ஏற்படுகிறது. இதிலிருந்தே இதயம் காப்பதில் எண்டோதிலியத்தின் முக்கியத்தை நாம் உணர முடியும்.

எண்டோதீலியம் எதனால் சேதம் அடைகிறது

மாசடைந்த காற்று, புகை, மதுப்பழக்கம், ரசாயன ஆலைகளிலிருந்து வெளிப்படும் காற்றை சுவாசிப்பதால் மூச்சுக்குழாய், உணவுக்குழாய் மற்றும் ரத்தநாளங்களில் உள்ள இந்த மெல்லியபடலமான எண்டோதீலியம் சேத மடைகிறது. மேலும் நம் உடல்சார்ந்த உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த கொழுப்பு, அதிக ரத்த சர்க்கரை போன்ற வற்றாலும் எண்டோதீலியம் சேதமடைகிறது.

எண்டோதீலியம் சேதமடைவது, நீரிழிவு, இதயநோய், மாரடைப்பு, பார்க்கின்ஸன், ஆர்த்தரைடிஸ், குளுக்கோமா, சிறுநீரக செயலிழப்பு, ரத்த உறைதல், உடல்பருமன் மற்றும் தூக்கக்குறைபாடு போன்ற பலநோய்களுக்கு காரண மாகிறது. சுற்றுச்சூழல் மாசிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதும், புகைப்பழக்கத்தை கைவிடுவதும் இதில் முக்கியம். வெளியில் செல்லும்போதும், தொழிற்சாலை களில் வேலை செய்யும்போதும் மாஸ்க் அணிந்து கொள் வது எவ்வளவு முக்கியமோ அதேபோல் வீட்டுக்குள் ளேயும் ரசாயன வெளிப்பாடுகளிலிருந்து நம்மை பாது காத்துக் கொள்வதும் அவசியம்.

உடலுக்கு குளிர்ச்சியை தரும் பதநீர்

இயற்கையாக கிடைக்கும் நீர்ச் சத்து நிறைந்த பழங்கள் மற்றும் பழச்சாறுகள் குடிப்பது நம் உடலுக்கு நல்லது. குறிப்பாக  வெயில் காலம் தொடங்கும் போதே இயற்கை அதற்கேற்றவாறு நீர்ச் சத்து நிறைந்த பொருட்களை நமக்கு வழங்குகிறது.  இதில் மிக முக்கியமானது பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீர். பனைமரம் எல்லா காலங் களிலும் ஊட்டச்சத்து  நிறைந்த பல்வேறு உணவுகளை நமக்கு வழங்கும் ஆற்றல் பெற்றது. அப்படி இயற்கையாக கிடைக்கும் பனைமரத்தின்  பதநீர் குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவ பேராசிரியர் அப்துல் காதர்.

இயற்கையாக கிடைக்கும் உடலுக்கு குளிர்ச்சியை தரும் பானங்களில் பதநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. பதநீரை  சரியான பதத்தில் எடுத்து காலை 7 மணி முதல் 9.30 மணிக் குள் வெயில் தொடங்கும் நேரத்திற்குள் குடிப்பது  நல்லது.  பனை மரத்திலிருந்து இறக்கப்பட்ட பதநீர் சராசரியாக  3 மணிநேரம் வரை நன்றாக இருக்கும்.பதநீர்  குடிப்பதால் உடல் குளிர்ச்சி அடையும். கண் எரிச்சல், தூக்கமின்மையால் ஏற்படும் தலை பாரம் நீங்கும். பதநீர்  மூளையை ஊக்குவிக்கும் சிறந்த தன்மை கொண்டது. அதனால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். பித்தத்தால் ஏற்படும்  மயக்கம், தலைச்சுற்றல், அசதி, சோர்வு போன்ற வற்றை குறைக்கும். உடலில் இருக்கும் பித்தத்தை குறைக்கும்  தன்மையும் பதநீருக்கு உண்டு.

இதில் கால்சியம், மெக்னீசியம், சால்ட், சர்க்கரை, குளுக் கோஸ் ஆகிய சத்துகள் உள்ளன. புரோட்டீன் மிகக்குறை வாக  இருக்கிறது. சர்க்கரைச் சத்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை குடிக்கலாமா என்கிற கேள்வி எழலாம்.  தாராளமாகக் குடிக்கலாம். இதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இயற்கையாக கிடைக்கும் சர்க்கரைச் சத்து  நிறைந்த பொருட்கள் எளிதாக உடலில் கரைந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை சமன்படுத்திவிடும். ஆண், பெண்,  குழந்தைகள் என அனைவரும் 150 மில்லி லிட்டரில் இருந்து 200 மில்லி லிட்டர் வரை குடிக்கலாம்.

குழந்தைகளுக்கு சுத்தமான பதநீரை எடுத்து பாகு பதம் வரும்வரை காய்ச்சி கொடுத்தால் பனங்கற்கண்டு சுவையில்  இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். 1 வயது குழந்தைகள் முதல் அனைவருக்கும் கொடுக்கலாம். இதில்  கால்சியம் சத்து நிறைந்து இருப்பதால் எலும்புகள் நன்றாக வலுப்பெறும். பற்கள் வளர்ச்சி நன்றாக இருக்கும்.  குழந் தைகள் உற்சாகத்துடன் இருப்பார்கள். வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் பிரச்சினைகளை  குணப் படுத்தும் தன்மை பதநீருக்கு உண்டு.

இயற்கை மனிதர்களுக்கு கொடுத்திருக்கும் மிக அற்புத மான பானம் பதநீர். சுத்தமான பதநீர் கிடைக்கும் இடங் களுக்கு சென்று வாங்கி  குடிப்பதுதான் வெயில் காலத்தில் உடலுக்கு மிக நல்லது என்கிறார்.

 

Banner
Banner