மருத்துவம்

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதவை. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான இறைச்சி, முட்டையில் அதிக புரதம் உள்ளது. சைவ உணவை பொறுத்தவரை பருப்பு வகைகளை தான் நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

துவரம் பருப்பு: இதில் புரத சத்துடன், ஃபோலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுவதை தடுக்கலாம்.

பாசிப்பருப்பு: விட்டமின் ஏ,பி,சி,ஈ, கனிமச் சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவும். இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்க உதவும்.

பச்சைப் பயறு: புரோட்டீன், கால்சியம், பொட் டாசியம். பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. உணவினை எளிதில் செரிமானமடைய செய்யும். உடல் எடை மற்றும் கொழுப்பு சத்து  குறைய உதவியாக இருக்கும்.

கொண்டைக்கடலை: கொண்டைக்கடலையில் ஃபோலிக் அமிலம், மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிர சத்து அதிக அளவில் உள்ளன. எனவே கொழுப்பு குறைவதுடன், இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு. மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

மைசூர் பருப்பு: இந்த பருப்பின் முக்கிய சிறப்பு இதில் உள்ள நார்ச்சத்து. உடலில் உள்ள அசுத்தங் களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். உடலில் ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்ல உதவும்.

சுண்டல்: கொண்டைக்கடலையில் ஒரு வகை தான். கருப்பு நிறத்தில் இருக்கும் இதனை பெரும்பாலும் சுண்டல் செய்வது வழக்கம். உணவில் இதனை சேர்த்துக் கொள்வதால், இதயம் ஆரோக் கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், விட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், கருப்பைக் குழாயில் பிரச்சினை ஏற்படுவது, ரத்த சோகை பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும்.

கடலைப் பருப்பு: ஃபோலிக் அமிலம், மாங்கனீசு, இரும்புச்சத்து, தாமிர சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் மற்ற பருப்பு வகைகளை விட இரண்டு மடங்கு புரதம் அதிகம் நிறைந்து இருப்பதால், உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும்  இதய நோய் பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

சிவப்பு காராமணி: பி காம்ப்ளக்ஸ், விட்ட மின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கி யுள்ளது. புற்றுநோய், கொலஸ்ட்ரால் ஏற்படுவதை தடுக்கும். இதிலுள்ள விட்டமின்கள் மூளையின் செயல் பாட்டை சீராக வைக்கும். எலும்புகளை வலுவோடு வைக்க பெரிதும் உதவுகிறது.

தட்டைப் பயறு: தட்டைப் பயறு குழம்பின் சுவைக்கு ஈடு இணை இல்லை. இதிலுள்ள நார்ச்சத்து, இதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது. பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால், தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

உளுத்தம் பருப்பு: இட்லிக்கும், தாளிப்பதற்கும் பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிக முள்ளது. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த பருப்பு பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்தும் தன்மையுடையது.

குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தையை வளர்த்து ஆளாக்குவதற்குள் பெற்றோர் படும் பாடு சொல்லி மாள முடியாது. குறிப்பாக, 5 வயது வரையிலும் கூடுதல் கவனம் செலுத்தி ஒவ்வொரு விஷயத்தையும் நுட்பமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அவற்றில் குடல் தொடர்பான ஆரோக் கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவ சியத்தை உணர வைக்கிறது சிகெல்லா என்கிற தொற்றுநோய் பற்றி மருத்துவ ஆராய்ச்சியா ளர்கள் கூறுவதைப் பார்ப்போம்...

இளம் குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படுகிற சிகெல்லோசிஸ் என்கிற குடல் சம்பந்தப்பட்ட தொற்றுநோயை  உண்டாக்கும் ஒரு பாக்டீரியா குழுவின் பெயர்தான் சிகெல்லா(Shigella). பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகின்றனர். இருந்தபோதும் யார் வேண்டுமானாலும் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும்.

சிகெல்லா  பாக்டீரியாவில் நான்கு வகைகள் உள்ளன. Shigella sonnei அல்லது Group D Shigella, Shigella flexneri அல்லது Group B Shigella ஆகிய இந்த இரண்டு வகைகளும் அமெரிக்காவில் அதிகமாக காணப்படுகிறது. Shigella boydii, Shigella dysentariae ஆகிய இரண்டு  வகைகளும் வளர்ந்துவரும் நாடுகளில் மிகவும் பரவலாக காணப்படுகிறது.

இந்நோய் காட்டுத்தீ மற்றும் குறிப்பாக சிறைச்சாலைகள், மருத்துவ இல்லங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் பரவுகிறது. அமெரிக்கர்கள் மத்தியில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் வரை இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளாவதாக, அமெரிக் காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மய்யங்களின் புள்ளி விபரங்கள் மூலம் தெரிய வருகிறது. இவர்களில் பெரும்பாலானோருக்கு உடல்நலன் சரியாகிவிடுகிறது. ஆனால், சில சமயங்களில் இத்தொற்றினால் உடல் உறுப்பு களில் மோசமான சுகாதார பிரச்சினைகள் ஏற்படுகிறது.

நோய் அறிகுறிகள்

இந்த நோய்த்தொற்றின் முக்கியமான அறிகுறி வயிற்றுப்போக்கு. இது மற்ற வயிற்றுப் பிரச்சினைகளைவிட கடுமையானதாக இருக்கும். அடிக்கடி ரத்தத்துடன் கலந்த வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்றுத் தசைகளில் பிடிப்பு  போன்ற அறிகுறிகள் இருக்கும் என்கிறார் மருத்துவரும் அமெ ரிக்கக் குடல் மற்றும் இரைப்பை அமைப்பின் செய்தித் தொடர்பாளருமான Kara Gross Margolis. குமட்டல், வாந்தி, அரிதான வலிப்புத் தாக்கங்கள், பிந்தைய தொற்று வாதம் என்கிற எதிர்வினை வாதம் போன்ற பிற அறிகுறி களும் இந்நோயால் உண்டாகிறது.

இந்த வாதத்தின் அறிகுறிகள் பெரும் பாலும் கணுக்கால், முட்டிகள், பாதம் மற்றும் இடுப்புப் பகுதி மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்ற பிற வடிவங்களிலும் இருக்கின்றன. சிலருக்கு குடல் அசைவுகளில் பிரச்சினை, மலக்குடல் கீழே சரிந்து போதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. சிகெல்லோசிஸ் நோயின் அறிகுறிகள் பொதுவாக தொற்று ஏற்பட்டதற்கு பின் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தோன்றும். சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலும் இருக்கும்.

நோய் பரவுவதற்கான காரணிகள்

இந்த நோய்க்குக் காரணமான பாக்டீரியா பொதுவாக அசுத்தமான மலம் வழியாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. நோய்த்தொற்றுடைய நபரிடம் பாலியல்ரீதியாக தொடர்புடைய மற்றொரு நபருக்கோ, தொற்று உடையவரிடமிருந்து தண்ணீர் மூலமோ, பழங்கள், பச்சைக் கீரைகள், வான்கோழி, கோழி, மதிய உணவு, பால் போன்ற பல்வேறு வகையான அசுத்த மடைந்த உணவு வகைகளின் மூலமோ இந்நோய் பரவக்கூடும் என்கிறார், நியூயார்க் கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மய்யத்தில் குழந்தைகளுக்கான இரைப்பை குடலியல், கல்லீரல் பிரிவுகளின் இணைப் பேராசிரியர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணராக உள்ள மார்கோலிஸ்.

நோய்த்தடுப்பு முறைகள்

உங்களை சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்வதை கடுமையான முறையில் பின்பற்றுவது மிகவும் அவசியம். இந்த நோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு சரியான பின்பும் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வரைக்கும் இந்நோய்த் தொற்று இருக்கும். எனவே, நம்மை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு நம் சுற்றுப்புறச் சூழலையும் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.

கழிவறைக்கு சென்ற பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். குழந்தைகளின் Diaper-அய் மாற்றிய பிறகு சுத்தமாக கைகளை கழுவுவதோடு அதை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண் டும். உங்களுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சினை இருக்கும் போது உணவு தயார் செய்வதைத்  தவிர்க்க வேண்டும். இந்த பாக்டீரியா ஒரு வரிடமிருந்து மற்றொருவருக்கு பல வழிகளில் பரவும் என்பதால், உங்கள் குழந்தைகளுக்கு இப்பிரச்சினை இருந்தால் அது சரியாகும் வரையில் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். இதன் மூலம் மற்ற குழந்தைக ளுக்கு பரவுவதைத் தடுக்கலாம்.

வெளியிடங்களில் உணவருந்துவதைத் தவிர்த்துவிட்டு வீடுகளில் நாமே சுகாதாரமான முறையில் நமது உணவைத் தயார் செய்து சாப்பிடலாம். இதனால் வெளியிடங்களில் உள்ள சுகாதாரமற்ற  உணவுப் பொருட்கள் மூலம் இத்தொற்று பரவுவதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.

வளர்ந்து வரும் நாடுகளில் சுகாதார மில்லாத இடங்களில் பயணம் மேற்கொள்வது கூட இந்த நோய்த் தொற்றுக்குக் காரணமாக அமையலாம். இதனால்  அதிகளவிலான பயணங்களைத் தவிர்க்கலாம்.  மருத்துவர் ஆலோ சனைப்படி  மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயிலிருந்து மீண்டு வருவதைத் துரிதப்படுத்தலாம்.

மனித உடலில் வயிற்றுக்கு பின் பக்கம் இருக்கும் கணையம் எனும் பகுதியிலிருந்து முறையாக இன்சுலின் சுரக்காமல் தடைபடும்போது குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.  நீரிழிவு நோயில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகைகள் உள்ளது. இதில் டைப் 1 என்பது கணையத்திலிருந்து முற்றிலும் இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் ஏற்படும் குறைபாட்டால் ஏற்படுவது. டைப் 2 என்பது கணையத்திலிருந்து போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் ஏற்படுவது. இதில் இந்தியாவில் அதிகமானோர் டைப் 2 வகை நீரிழிவு நோயால்தான் பாதிக்கப்படுகிறார்கள்.   தற்போது டைப் 2 வகை நீரிழிவு நோய் சம்பந்தமாக வட அமெரிக்கன் மெனோபாஸ் சொசைட்டி மேற்கொண்ட ஆய்வில், தேவையான வைட்டமின் டி எடுத்துக்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என தெரிய வந்துள்ளது. வைட்டமின் டி எலும்பு நலனுக்கு உகந்தது, சூரிய ஒளியில் கிடைப்பது என்று நமக்குத் தெரியும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட    ஆராய்ச்சியில், நீரிழிவிலிருந்து தற்காத்துக் கொள் ளவும் வைட்டமின் டி உதவுகிறது என்பது தெரிய வந்துள்ளது.

தூக்கத்தின்போதுதான் குழந்தைகளின் தசைகள் தம்மைத்தாமே பழுதுபார்த்துக்கொள்ளும். இதில் இதயமும் அடக்கம். போதுமான அளவு தூங்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளின் மூளைப் புத்துணர்வுக்கும் தூக்கம் அவசியம். சரியாகத் தூங்கினால்தான் அவர்களால் கனவுகள் காண முடியும். கனவுகள் அவர்களுடைய கற்பனைகளை விரிக்கும். தூங்கும்போது பகலில் நிகழ்ந்த சம்பவங்களின் நினைவுகளை மூளையானது சேகரித்து வைக்கும்.

அப்போதுதான் குழந்தைகளால் நடந்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆழ்ந்த, போதுமான உறக்கம். பள்ளிக்கூடத்தில் தூங்காமலிருக்கவும், பாடங்களை கவனித்து உள்வாங்கவும் இரவில் போதிய தூக்கம் முக்கியம். போதிய அளவு தூங்கும் குழந்தைகள் பாடங்களை மறப்பதில்லை என்கிறது உளவியல். பெரியவர்களைவிடவும் குழந்தைகளுக்கு தூக்கம் அதிகம் தேவை. 3 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு 11 முதல் 14 மணி நேரத் தூக்கம் அவசியம். 3 முதல் 5 வயதுக் குழந்தைகளுக்கு 11 முதல் 13 மணிநேரத் தூக்கம் தேவை. 6 முதல் 13 வயதுக் குழந்தைகளுக்கு  9 முதல் 11 மணி நேரத் தூக்கம் அவசியம். டீன் ஏஜில் இருப்பவர்களுக்கு 8 மணிநேரத் தூக்கம் தேவை. குழந்தையை பகலில் தூங்க அனுமதிக்கலாமா என்பது பல பெற்றோர்களின் சந்தேகம். அது குழந்தை இரவில் தூங்கும் நேரத்தைப் பொறுத்தது. பொதுவாக 5 வயதுக்கு மேல் குழந்தைகளின் பகல் தூக்கம் குறைய ஆரம்பிக்கும். அந்த வயதைத் தாண் டியும் குழந்தைகள் பகலில் தூங்கினால், அவர்களை இரவில் இன்னும் சீக்கிரம் தூங்கப் பழக்கப்படுத்த வேண்டும். அதுவே டீன் ஏஜில் உள்ளவர்கள் பகலில் தூங்கினால், அது அவர்கள் இரவில் போதுமான அளவு தூங்கவில்லை என்பதையே குறிக்கும். பல பெற்றோர்களுக்கும் குழந்தையைத் தூங்க வைக்கிற நேரம் போராட்டமானதாகவே இருக்கிறது. உண் மையில் அதை அப்படிப் பார்க்க வேண்டிய தில்லை. தினமும் இரவில் தூங்கும் நேரத்தை ஒழுங்கு படுத்துங்கள். ஒரே நேரத்தில் தூங்குவதைப் பழக்குங்கள். விடுமுறை நாட்களிலும் இதையே பின்பற்றுங்கள். தூங்குவதற்கு முன் பல் தேய்ப்பது, குளிப்பது, சிறுநீர் கழிப்பது போன்றவற்றை ரொட்டீ னாகச் செய்யப் பழக்குங்கள்.  குழந்தைகளின் படுக்கையறையில் வெளிச்ச மின்றியும், சத்தமின்றியும், குறிப்பாக மொபைல், டி.வி திரைகள் இன்றியும் பார்த்துக் கொள் ளுங்கள்.தூங்குவதில் பிரச்சினை செய்கிற குழந்தை களுக்கு படுக்கையை தூக்கத்துக்கு மட்டும் பயன்படுத்த அனுமதியுங்கள்.  படுக்கையில் இருந்த படி ஹோம் வொர்க் செய்வது, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றைச் செய்ய அனுமதிக்க வேண்டாம். மேலே சொன்ன விஷயத்தை சிறு குழந்தைகளுக்குப் பழக்கலாம். டீன் ஏஜ் பிள்ளைகள் விஷயத்தில் அது கஷ்டம். உங்கள் டீன் ஏஜ் மகனோ, மகளோ இரவில் அதிக நேரம் விழித்துக் கொண்டிருக்கிறார்களா? தூங்கும் நேரம் வந்ததும் வீட்டின் அனைத்து அறை களின் வெளிச்சத்தையும் குறையுங்கள். டி.வி., லேப்டாப், மொபைல் போன்றவற்றை இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு உபயோகிப் பதை அனுமதிக்காதீர்கள். விடுமுறை நாட்களில் கூடுதலாக, அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதியுங்கள். அதற்கு மேல் வேண்டாம்.

பரோட்டா, சோலாப்பூரி, நாண், தந்தூரி ரொட்டி, பட்டூரா, பாதுஷா, கேக், பிரெட், பீட்ஸா, பர்கர், பப்ஸ், சமோசாக்கள், பாவ், சிலவகை கலர் கலர் அப்பளங்கள், சந்திரகலா, சூர்யகலா, சோனே ஹல்வா (கார்ன் ஃப்ளவர்) மேலும் பல இனிப்பு வகைகள் அனைத்துமே மைதாவில் தான் தயாராகின்றன. இன்றைய தேதிக்கு வட இந்தியர்களைக் காட்டிலும் தென்னிந்தியர்கள் மைதா அதிகம் சாப்பிடு கிறார்கள் என்றொரு வதந்தி உலவுகிறது. காரணம் பரோட்டா. சரி அந்த பரோட்டா தயாரிக்கத் தேவையான மைதா எதிலிருந்து தயாராகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? மைதா,  கோதுமையில் இருந்து தயாராகிறது என்கிறார்கள் சிலர். இன்னும் சிலர் அது ஜவ்வரிசி, சேமியா போல மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாராகிறது என்றும் நம்புகிறார்கள். நம்மூர் மைதா பெரும்பாலும் கோதுமையின் உட்புற ஸ்டார்ச்சில் இருந்து தான் தயாராகிறது என்று நம்பலாம். கோதுமையில் இருந்து தயாரானாலும் கோதுமையின் நற்குணங்கள் ஏதும் இதற்கில்லை. ஏனெனில் கோதுமையில் நார்ச்சத்து, விட்டமின்கள், புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், அமினோ ஆசிடுகள் என்று உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் அனைத்தும் கலந்து இருக்கும்.

ஆனால் மைதாவில் அவை அனைத்தும் கோதுமை மாவாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பின் எஞ்சும் ஸ்டார்ச் போன்ற வெள்ளை வஸ்து மட்டுமே மிஞ்சுவதால் இதில் 100% ஸ்டார்ச் தவிர வேறு எந்த சத்தும் இருப்ப தில்லை. மைதாவில் கலந்திருப்பதாகக் கருதப்படும் ரசாயனங்கள்... பென்ஸாயில் ஃபெராக்சைட்

அலாக்சன்

மோனோ சோடியம் குளூட்டமேட்

மேற்காணும் ரசாயனங்கள் மைதாவின் தரத்தை கூட்டும் வகையில் கலக்கப்படுவதால்  சாப்பிடுவோருக்கு கேடு விளைவிப்பவை யாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எனவே மிக மோசமான உடல் நலக் கேடுக்கு 100 சதவிகித உத்தரவாத முண்டு.

மைதாவுக்கு வெளிநாடுகளில் வேறு பெயருண்டு. ஆல் பர்பஸ் ஃப்ளவர் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியக்கூடும். அது சாட்ஷாத் நம்மூர் மைதாவே தான். மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை அதிகளவில் உண்டால் என்ன ஆகும்?

மைதா உணவுப் பொருட்களை அதிகம் உண்பதால் ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். அதன் காரணமாக ஒபிசிட்டி,  ஹை பிளட் ப்ரஸ்ஸர், மனக் கொந் தளிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாக வாய்ப்பு அதிகம்.

மைதா உயிருக்கு கேடா?! நிஜம் எது? கட்டுக்கதை எது?

இல்லை.. ஒரேயடியாக அப்படிச் சொல்லி விட முடியாது. ஏனெனில் மைதா கண்டு பிடிக்கப்பட்ட ஆரம்பகாலங்களில் உழைக்கும் வர்க்கத்தினரின் அதாவது நேரம் காலம் கரு தாது உழைத்தே தீர வேண்டிய  நிர்ப்பந்தம் விதிக்கப்பட்டவர்களுக்கும் கொத்தடிமை களுக்கும் பசிப்பிணி தீர்க்கும் உணவுப் பொருட்களை உருவாக்க பேருதவியாக இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு இருக்கவே இருக்கிறது பீட்ஸா. முதன்முதலில் இத்தாலியில் பீட்சா உரு வான கதையை அறிய முற்பட்டீர்கள் என்றால் மைதா அலைஸ் ஆல் பர்பஸ் ஃப்ளாரின் அருமை புரிய வரும். பரோட்டா பசி தாங்கும். ஆனால், அதையே நாற்காலியைக் குத்தகை எடுத்த மூளை உழைப்பாளிகள்  ருசிக்காக தொடர்ந்து  சாப் பிட்டு வந்தோமென்றால் விளைவுகள் விபரீதமாகத் தான் அமைந்து விடும். அத னால் ஜாக்கிரதை!

அறுசுவை தளத்தில் மைதா உணவு குறித்த கேள் விக்கு ஒருவர் பதில் சொல்லி இருந்தார்...

எந்த உணவில் தான் இன்றைக்கு ரசாயனக் கலப்பு இல்லாமல் இருக்கிறது. வேண்டுமானால் பரோட்டா சாப்பிடும் அல்லது மைதா வில் செய்த வேறு எந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதாக இருந்தாலும் சரி மைதா உணவு வகைகளைக் ருசிக்காகவும், ஆசைக்காகவும் கொஞ்சமாகவும்  காய்கறி குருமா அல்லது சாலட் வகைகளை அதிக மாகவும் சாப்பிட்டு வைத்தோமென்றால் மைதா உணவுகளால் ரத்தத்தில் ஜிவ்வென்று ஏறக்கூடிய சர்க்க ரையின் அளவை கொஞ்சமே கொஞ்சம் சமப்படுத்த முடியும் என்று; ஆனால், அதெல்லாம் சும்மா வெற்றுச் சமாதானம். நீரழிவு நோய் இருப்பவர்கள் மைதா பரோட்டா மற்றும் மைதாவில் தயாரிக்கப்படும் அத்தனை உணவுகளையும் தவிர்த்து விடுதலே நலம்.

Banner
Banner