மருத்துவம்

 

இயற்கையான தாய்ப்பாலுடன் ஒப் பிடும் போது பால் மாவில் சத்துக்கள் ஒன்றுமே யில்லை என்று சொல்லிவிடலாம். பால் மாவில் தீய கொழுப்பு, புரதம், இனிப்புப் பொருட்கள் உள்ளன. கார்போஹைட்ரேட் சத்துக்காக இனிப்புச் சோள சிரப், சர்க்கரை ஆகியவை பால் மாவில் சேர்க்கப்படுகின்றன. தாய்ப்பாலில் உள்ள திட சர்க்கரைப் பொருட் களான லாக்டோஸ் போன்றவை பால் மாவில் குறைவாகவே உள்ளன. லாக்டோஸ் செரிமானத்துக்குப் பெரிதும் உதவுவதும்கூட.

ரொட்டி சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையுமா?

கோதுமை போன்ற தானிய ரொட்டியில் உள்ள கரையாத நார்ச்சத்துப் பொருள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமில் லாமல் 85 கிராம் அல்லது மூன்று ஸ்லைஸ் சாப்பிட்டால் போதுமானது.

ரத்த அழுத்தத்துக்கு உட்கொள்ளும் மாத்திரை களால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன?

மயக்கம், தலைவலி, பேதி, மலச்சிக்கல், எதிர்க்களித்தல், விறைப்புக் குறைபாடு, மாத விடாய்க் கோளாறுகள், இதயப் படபடப்பு, பலவீனம், களைப்பு ஆகியவற்றோடு சிறுநீரகம், கல்லீரல் செயலின்மையும் கூட ஏற்படலாம்.

ரத்த அழுத்தத்தை ரத்த அழுத்த மாத்திரைகள் குறைக்கின்றனவா?

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள 9 ஆயிரம் பேரிடம் அமெரிக்காவில் பரிசோதனை நடத்தியதில், இந்த மாத்திரைகள் கொஞ்சம் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவுகின்றன என்பது தெரியவந்துள்ளது. ஆனால் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றை இந்த மாத்திரைகளால் தடுக்க முடிவதில்லை.

மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?

இதற்கு வைட்டமின் டி குறைபாடுதான் மிக முக்கியமான காரணமென்று 90 சதவீத நிபுணர்கள் கருதுகின்றனர். வைட்டமின் டி - யில் சீரத்தின் அளவு 40 என்ஜி/எம்எல் குறையாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.


 

உடற்பருமன், வயது அதிகரிப்பது, மூட்டில் அடிபடுதல், மூட்டுச் சவ்வு கிழிதல், யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகி மூட்டுகளில் படிவது, பாக்டீரியா தொற்று, ருமாட்டிக் நோய், காசநோய், எலும்பு வலுவிழப்பு நோய் போன்றவை முழங்கால் மூட்டுவலிக்குப் பொதுவான காரணங்கள்.

நாற்பது வயதுக்குமேல் இந்த வலி ஏற்படுவதற்கு அடிப் படைக் காரணம் மூட்டில் ஏற்படுகிற தேய்மானம்தான். உடலில் உள்ள மூட்டுகளிலேயே முழங்கால் மூட்டின் உள்ளமைப்பு சற்று வித்தியாசமானது. அசையும் மூட்டுகளில் மிகப் பெரியதும் இதுதான். இங்குள்ள எலும்புகளின் தலைப் பகுதியை சைனோவியல் படலம்  சூழ்ந்துள்ளது. இது சைனோவியல் திரவம் எனும் பசை போன்ற ஒரு திரவத்தைச் சுரக்கிறது. மூட்டில் இது ஒரு மசகுபோல் பணிசெய்கிறது. மூட்டு எலும்புகள் உரசிக் கொள்ளாமல் அசைவதற்கு இது உதவுகிறது.

மேலும், மூட்டுகளைச் சுற்றி மிருதுவான குருத்தெலும்புகள் உள்ளன. பொதுவாக, இவை வழுவழுப்பாக இருக்கும். இதற்குக் காரணம், அவற்றில் கொலாஜென் எனும் புரதப்பொருள் இருப்பதுதான். முதுமை நெருங்கும்போது, இயற்கையாகவே கொலாஜென் உற்பத்தி குறைந்துவிடும்; குருத்தெலும்புத் திசுக்கள் தேய்ந்து மெலிதாகிவிடும். இதன் விளைவால் மசகு போட மறந்த சைக்கிள் சக்கரம் கிரீச்சிடுவதுபோல, வயதாகும் போது முழங்கால் மூட்டுகள் உரசிக்கொள்ள, மறமறவென்ற சத்தமும் மூட்டுவலியும் ஏற்படுகின்றன.

என்ன சிகிச்சை? உங்கள் மூட்டுகளில் தேய்மானம் உள்ளதா என்பதை

எக்ஸ்-ரே மூலம் தெரிந்துகொள்ளலாம். நோயின் ஆரம்பத்தில் குடும்ப மருத்துவரே சிகிச்சை கொடுத்துவிடுவார். அவர் பரிந்துரை செய்தால் மட்டும் எலும்புநோய் சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சையைத் தொடர வேண்டும்.

ஆரம்பநிலையில் உள்ள மூட்டுவலிக்கு வலி நிவாரணி மாத்திரைகள், பிசியோதெரபி சிகிச்சை மூலம் நிவாரணம் பெற முடியும். இவற்றில் ,  சிகிச்சைகள் பிரதானம். இவற்றுடன் தொடைத் தசைகளுக்குப் பயிற்சி கொடுத்தால் மூட்டுவலி குறையும்.

சிலருக்கு முழங்கால் மூட்டுக்குள் ஸ்டீராய்டு ஊசியைப் போட்டால், சில மாதங்களுக்கு வலி இருக்காது. இன்னும் சிலருக்கு ஆர்த்ராஸ்கோப் மூலம் மூட்டின் உள்பகுதி சுத்தம் செய்யப்படும். இதனால் மூட்டில் வலி ஏற்படுத்தும் பொருட்கள் வெளியேறிவிடும். இதன் பலனால், 6 மாதம் முதல் ஒரு வருடத்துக்கு மூட்டுவலி இல்லாமல் இருக்க முடியும்.

மூட்டில் தேய்மானம் மிகவும் அதிகமாகிவிட்டால், இந்த சிகிச்சைகள் எல்லாம் திருப்தி தராது. அப்போது செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை செய்ய வேண்டியது வரும். இவ்வளவு வளர்ப்பானேன்?

உடற்பயிற்சியும் உணவும்


இப்போது நீங்கள் மேற்கொள்ளும் தோப்புக்கரணத்துக்குப் பதிலாக, நடைப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் மூட்டுத் திசுக்கள் பலம் பெறும். தினமும் அரை மணி நேரம் உடலில் சூரியஒளி படும்படி நில்லுங்கள். இதன் மூலம் தோலின் அடிப்பாகத்தில் வைட்டமின்  டி தயாராகிறது. இது எலும்புக்கு பலம் தரக்கூடியது.

மூட்டுவலியைத் தடுக்க உணவு வகைகளும் உதவும். பால், பால் பொருட்கள், பருப்பு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடர் பச்சை நிறக் காய்கறிகள், கீரைகளைச் சாப்பிட வேண்டும். இவற்றில் உள்ள சத்துக்கள் மூட்டுகளில் கொலாஜென் உற்பத்திக்கு உதவுவதால், மூட்டுவலி குறையும்.

உடல் எடையை வயதுக்கு ஏற்றபடி பராமரிக்க வேண் டியது கட்டாயம். முழங்கால் மூட்டுக்கு வலுவூட்டும் யோகாச னங்களும் இருக்கின்றன. அவற்றை முறைப்படி செய்துவந்தால் மூட்டுவலியை நிச்சயம் தள்ளிப்போட முடியும்.

நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பயணங்களின் போது மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளைப் போதிய அளவு கையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

மருத்துவக் குறிப்புகள், தொலைபேசி எண் போன்ற தகவல்களை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். குறிப்புகளைத் தங்கள் செல்போனில்கூடச் சுருக்கமாக வைத்திருக்கலாம்.

கையில் எப்போதும் வீட்டு விலாசம், அவசர காலத்தில் தொடர்புகொள்ளத் தொலைபேசி எண் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
பயணத்தின்போது எந்தவிதமான பரபரப்புக்கும் உள்ளாகாமல், தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்சினைகள் இருந்தால் கிளம்புவதற்கு முன் ஒருமுறை பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரைக்குப் பின் பயணம் மேற்கொள்வது நல்லது.

பேருந்தில் அமர்ந்து பயணிப்பது உடல்  சவுரியத்தை ஏற்படுத்தலாம். ரயில் அல்லது விமானப் பயணம் நல்லது.
மருந்து தீர்ந்துபோனால் அதே மாத்திரைகள் வாங்க வேண்டும். மாற்று மருந்து அல்லது அளவு மாறினால் பிரச்சினையாகிவிடலாம்.

இரண்டு நாள்தானே என்று உணவுக் கட்டுப்பாட்டை மீறிவிட வேண்டாம். மருத்துவர் பரிந்துரைத்த உணவு களையே உண்ண வேண்டும். விருந்தும் வேண்டாம், விரதமும் தேவையற்றது.

உப்பும் கொழுப்பும் குறைவாக உள்ள உணவு வகைகளைச் சிறிய அளவில் சிறு இடைவெளிவிட்டு எடுத்துக்கொள்ளலாம்.
மருத்துவர் கூறிய உடற்பயிற்சி, நடைப் பயிற்சிகளை எங்கே இருந்தாலும் மறக்காமல் தினமும் செய்ய வேண்டும். மூன்று வேளை உணவைப் பிரித்து அய்ந்து வேளையாக எடுத்துக்கொண்டால் நல்லது.

எப்போதும் கட்டாயம் தவிர்க்க வேண்டியவை: புகை, புகையிலைப் பொருட்கள், போதை வஸ்துகள், எண்ணெயில் வறுத்த - பொறித்த உணவுகள், காய்கறி மற்றும் இறைச்சி, கேக், க்ரீம் சாக்லெட், பிஸ்கெட், கொட்டை வகைகளான முந்திரி, நிலக்கடலை, குளிர்பானங்கள், சிப்ஸ், ஊறுகாய், அப்பளம், உப்பு அதிகம் உள்ள எந்த உணவுப் பொருளும், சீஸ், சாஸ், பனீர் போன்றவைகள் தவிர்க்கப்பட வேண்டும்.


தினமும் காலையில் எழுந்தவுடன் நிறைய சுத்தமான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம். மேலும் வேப்பிலைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஆரம்ப நிலையிலுள்ள சர்க்கரை நோய் குணமாகும். சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து மிகுதியாக உள்ள வெண்டைக்காய், கீரை வகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி சோற்றுக்கு பதிலாக கோதுமை, கம்பு, கேழ்வரகு ரொட்டிகளை சாப்பிடுவது நல்லது. எண்ணெய் குறைவாக சேர்க்க வேண்டும்.

நடப்பது என்பது சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு மிகத் தேவையான விஷயமாகும். தினசரி காலை நேரங்களில் வேகமாக நடக்கும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். காலையில் நேரம் கிடைக்காதவர்கள் மாலையில் நடைப் பயிற்சியை செய்யலாம். சாப்பிட்டவுடன் உட்காரவோ, உடனே தூங்கவோ கூடாது. ஒரு பத்து நிமிடமாவது நடந்துவிட்டு, பிறகுதான் தூங்கச் செல்ல வேண்டும். இதனால் உடலில் சர்க்கரை அதிகமாகும் அளவு குறைக்கப்படும்.

சர்க்கரை நோயிற்கான காரணங்கள் மற்றும் தேவையான மருந்து தீர்வுகள்

உடலில் உள்ள கணையச் சுரப்பியில் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோயில் இரண்டு வகை உண்டு.

1.உடலில் இன்சுலின் உற்பத்தி அறவே இல்லாமல் போய் ஆயுள் முழுவதும் இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை. இந்த முதல்வகை சர்க்கரை நோய்க்கு அய்டிடிஎம்  என்று பெயர். இந்த வகை சர்க்கரை நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரக் கூடியது.

2. உடலில் இன்சுலின் உற்பத்தி போதிய அளவுக்கு உற்பத்தி ஆகாததால் ஏற்படுவது இரண்டாவது வகை சர்க்கரை நோயாகும். இந்த வகை சர்க்கரை நோய்க்கு என் அய்டிடிஎம்  என்று பெயர். இந்த வகை சர்க்கரை நோ யாளிகள் ஆயுள் முழுதும் மாத்திரை சாப்பிட வேண்டி யிருக்கும்.

இந்தியாவில் இரண்டாவது வகை சர்க்கரை நோய் காரணமாக பாதிக்கப்படுவோர்தான் அதிகம். உடல் பருமன், உடல் உழைப்பு இன்மை, முறையற்ற உணவு பழக்கவழக்கங்கள் காரணமாக இந்த வகை சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

சர்க்கரை நோய் வந்து விட்டால், ரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உணவுக் கட்டுப்பாடு தரும் பயன்

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்தவுடன் பயப்படத் தேவையில்லை. சாப்பிட்டு ஒன்றரை மணி கழித்து எடுக்கப்படும் இரத்தத்தில் இரத்த சர்க்கரை அளவு 180 மில்லி கிராமுக்கு கீழ் இருக்கும் நிலையில் உணவுக் கட்டுப்பாடு மற்றும் தினசரி உடற்பயிற்சி போதுமானது. மாத்திரை தேவையில்லை. ஆக 20 சதவிகித சர்க்கரை நோயாளிகள் மாத்திரைகளின் தேவையின்றி உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலமே இரத்த சர்க்கரை அளவை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு ஒரு நோயாளி உணவுக்கட்டுப்பாட்டில் தொடர்ந்து விரும்பி அக்கறை செலுத்தினால் சர்க்கரை நோய் காரணமாக உடலில் ஏற்படும் விளைவுகளை தடுக்க முடியும். ஏனெனில் கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய் காரணமாக இதயம், சிறுநீரகங்கள், கண்கள், பாதங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி முதலில் உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிப்பது அவசியம். ஒவ்வொருவருக்கும் உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள குத்துமதிப்பான கணக்கு ஒன்று உள்ளது.

அதாவது உங்களது உயர அளவிலிருந்து 100-அய்க் கழிக்க வரும் எண்ணே உங்களது சரியான எடை அளவு. உதாரணமாக 170 செ.மீ உயரம் இருந்தால், அவரது எடை 70 கிலோ கிராம்தான் இருக்க வேண்டும். அவரே சர்க்கரை நோயாளியாக இருந்தால் உடல் எடை 10 சதவிகிதம் குறைவாக இருப்பது நல்லது. அதாவது 63 கிலோ கிராம் இருந்தால் நல்லது. சர்க்கரை நோயாளிகள் சமச் சீரான உணவில் தினமும் கவனம் செலுத்துவது அவசியம். புரதம், கார்போ ஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, வைட்ட மின்கள் ஆகியவை போதுமான அளவுக்கு தினமும் உணவில் சேருவதே சமச்சீரான உணவு என சொல்லப் படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிட வேண்டிய காய்கறிகள் : கேரட், பீட்ரூட், பட்டாணி, டபுள் பீன்ஸ் ஆகியவை.

தவிர்க்க வேண்டியவை: உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சேப்பங் கிழங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை தேன், குளுக்கோஸ், ஜாம், வெல்லம், இனிப்பு வகைகள், பிஸ்கட்டுகள், கேக், இளநீர், தேங்காய், குளிர்பா னங்கள், மதுபான வகைகள், ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன் விட்டா, காம்ப்ளான் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அனைத்து வகையான பிஸ்கட்டுகளையும் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

அல்சைமர் நோயை தடுக்க...

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் அல்சைமர் நோய்க்கு நோ என்ட்ரி சொல்லிவிடலாம் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. காரணம் ஒமேகா 3 நினைவாற்றல் செல்களை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக்க உதவுகிறது, அதனால் அல்சைமர் நோய் பாதிப்புக்களிலிருந்து தப்பலாம் என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவு.

அல்சைமர் என்றாலே அது கொஞ்சம் கொஞ்சமாக ஞாபக சக்தியை இழக்கச் செய்து ஒரு கட்டத்தில் நாம் யாரென்றே மறக்க செய்துவிடும் அளவுக்கு கொடுமையானது. நினைவாற்றல் மற்றும் மூளைத் திறனை முற்றிலும் பாதிப்படையச் செய்துவிடும் நோய் அது.

இந்த நோயைத் தடுக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மத்தி, நெத்திலி, கெளுத்தி மற்றும் சால்மன் வகை மீன்களில் உள்ளது.  மேலும் ப்ளக்ஸ் விதை, வால்நட், சோயா பீன்ஸ் மற்றும் புதினா ஆகியவற்றில் காணப்படுகின்றது.

மூளையின் ஆரோக்கியத்துக்கு இந்த சத்து மிகவும் அவசியம்.

வைட்டமின் டி குறைபாடு என்ன செய்யும்?

நடுத்தர வயது ஆண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி யின்மை காரணமாக உண்டாகும் பல்வேறு நோய்கள் மற்றும் ஹார்மோன் பிரச்சினைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டி ருக்கிறது.  எலும்புகளின் வலுவுக்கு கால்சியம் மிகவும் முக்கியம். அந்த கால்சியம் சத்து உடலில் கிரகிக்கப்பட வைட்டமின் டி சத்து மிகவும் அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதை தாண்டி வைட்டமின் டி-க்கு பல முக்கிய பணிகள் உண்டு. அதுவும் ஆண்களுக்கு நீரிழிவு வராமல் தடுப்பதில் தொடங்கி, குழந்தையின்மை யைத் தவிர்ப்பது வரை இதில் அடக்கம்.

எலும்புகளில் மட்டுமின்றி, உடல் திசுக்கள் பலவற்றிலும் இந்த வைட்டமின் இருப்பதும், மூளையின் பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி, கணையம் போன்றவற்றிலும்கூட இருக்கிறது. ஆண்களுக்கு உயிரணு உற்பத்திக் குறை பாட்டுக்கும், அந்த அணுக்களின் தரக் குறைவுக்கும்கூட வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி.

வைட்டமின் டி சத்தில் குறைபாடு ஏற்பட்டுவிட்டால் அது உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்காக செயல்படும் ஹார்மோன்களின் சீரான சுரப்பை குறைத்து விடுவதுடன் நாளாவட்டத்தில் உடல் தசை சரிவடைந்து பலவீனமடையச் செய்துவிடும் என்று அந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. படிப்படியாக உடலில் உள்ள சத்துக்களை இழந்து, உடல் இயக்கப் பிரச்சினை ஏற்பட்டு, வயது ஏறும் போதே வலுவிழந்து, உடல் பகுதிகளில் பாதிப்படைந்து ஒரு கட்டத்தில் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்று அச்சுறுத்துகிறது இந்த ஆராய்ச்சி. உலகம் முழுவதும் பலவீனம் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது என்கிறார் அக்னிஸ்கா ஸ்விகிக்கா.

எலும்பு அடர்த்தி மற்றும் ஆரோக்கியத்துக்கு வைட்ட மின் டி மிகவும் அத்தியாவசியமானது என்றார். மேலும் தசை உட்சேர்க்கைக்குரிய அனபாலிக் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டுவிட்டால் உடல் அதிகமாக பலவீனம் அடைந்து விடும். ஆண்களில் வயதானவர்களிடம் காணப்பட்ட குறைந்த அளவு டிஹைட்ரோஎபியன்டோஸ்டிரோன் ஹார்மோன் அவர்களை அதிக அளவு பலவீனப்படுத்துகிறது.

இத்தகைய ஆராய்ச்சிகள் ஒட்டுமொத்தமாக அனை வருக்கும் பொருந்தாது. இன்னும் சில தீவிர ஆய்வுக்குப் பிறகே இதனைப் பற்றி முழுமையாகக் கூற முடியும். ஆனால் வைட்டமின் டி சத்துக் குறைவு நடுத்தர வயது ஆண்களையும் முதியோர்களையும் நிச்சயம் கடுமையாக பாதித்துவிடும் என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காளான், மீனின் சதை (சல்மான், டியூனா மற்றும் மாக்கரெல்) மற்றும் மீனின் குடல் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் டி அதிக அளவில் இருக்கும் எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்கு மேல் அடிக்கடி கை, கால் வலி, எலும்பு வலி, உடல் வலி போன்றவை இருந்தால் உடனே மருத்துவரை நாடி வைட்ட மின் டி சத்துக் குறைபாடு இருக்கிறதா என ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி குறைபாடு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டாலும் கவலை வேண்டாம். இதற்கான சிகிச்சையை உடனே மேற்கொண்டு இரண்டு அல்லது மூன்று மாதங்களில் குணமாக்கிவிடலாம். தினமும் 20 நிமிடங்களாவது சூரிய வெளிச்சம் படும்படி இருப்பது மிகவும் முக்கியம்.

பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் டவுட்டி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் தன் உடல்நிலையில் அக்கறையுடன் முழு உடலுக்கான பொது மருத்துவ பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு 59 வயது. ரிச்சர்டுக்கு சர்க்கரை நோய் உள்ளதாக டாக் டர்கள் சொன்னவுடன் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சில பரிசோதனைகள் செய்தபோது அவ ருக்கு டைப் 2 டயபடீஸ் இருப்பது தெரிய வந்தது.

ரிச்சர்ட் இதனால் மன உளைச்சலுக்கு உள்ளா னார். காரணம் அவருக்கு புகைக்கும் பழக்கம் இல்லை, நல்ல சத்தான உணவையே உட்கொள்பவர், தவிர அவரது பரம்பரையில் யாருக்கும் சர்க்கரை நோய் இல்லை, அதிக இனிப்புகளை சாப்பிடும் பழக் கமும் தனக்கு இல்லை என்று மருத்துவரிடம் கூறினார்.

அதிகப்படியான கலோரிகள் உடைய உணவுப் பொருட்களை சாப்பிட்டதால்தான், ரிச்சர்டின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். குறைவான கலோரிகள் உடைய உணவை உட்கொண்டால் சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம் என்று மருத்துவர் கூறவே, உடனடியாக களத்தில் இறங்கினார் ரிச்சர்ட்.

ஆன்லைன் முழுவதும் தேடி குறைந்த கலோரி கள் உள்ள உணவு வகைகள் எவை என்று பட்டிய லிட்டார். ஒரு பதிவில் எட்டு வாரங்கள் குறைந்த கலோரியுடைய உணவுகளை உட்கொள்வதன் மூலம் சர்க்கரையை குறைக்கலாம் என்ற ஆய்வைப் படித்து அதை கடைப்பிடிக்க முடிவு செய்தார். அதன்படி தினமும் 800 கலோரிகளை தரும் உணவை மட்டுமே சாப்பிட முடிவு செய்தார்.
வழக்கமான உணவுக்குப் பதிலாக 600 கலோ ரிகள் மட்டுமே உடைய பழச்சாறுகள், கீரை வகைகள் மற்றும் 200 கலோரிகளை உடைய பச்சைக் காய்கறிகளை மட்டுமே சாப்பிடத் தொடங்கினார். மூன்று லிட்டருக்கு அதிகமாகாமல் தினமும் தண்ணீர் குடித்தார். இதை கவனமாகப் பின்பற்றினார். ஆச்சரி யத்தகுந்த வகையில் அவர் உடலின் சர்க்கரை அளவுகளில் மாற்றம் ஏற்பட்டது.

11 நாள்கள் தொடர்ந்து இந்த உணவுக் கட்டுப் பாட்டை கடைப்பிடித்த ரிச்சர்ட் மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்து, தன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மீண்டும் நிலைநிறுத்தினார். இதனால் ரிச்சர்ட் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

முறையான உணவு கட்டுப்பாட்டின் மூலம் ரத் தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க முடியும் என்று தன் நண்பர்களிடம் இந்த தகவலைப் பகிர்ந்து வருகிறார் ரிச்சர்ட். குறைந்த அளவிலான கலோரி களை உடைய உணவை சாப்பிடுவதன் மூலம் ரத்தத் தில் சர்க்கரையின் அளவில், கட்டுப்பாடு ஏற்படு கிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள கொழுப்புகள் கரைக்கப்பட்டு அதில் இருந்து தேவையான சர்க்கரை பெறப்படுகிறது. சர்க்கரை யின் அளவு நடுநிலையை அடைந்ததும், சீரான உணவுப் பழக்க வழக்கத்தை பின்பற்றுவதன் மூலம், மீண்டும் சர்க்கரை நோய் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளலாம். ரிச்சர்டின் இந்த செயலால், உலக சர்க் கரை நோயாளிகளுக்கு நம்பிக்கையான உதாரண மாகி விட்டார்.

தோலில் ஏற்படும் அரிப்பை சரி செய்ய...

சிலருக்கு தோலில் அடிக்கடி அரிப்பு ஏற்படும். அதை சரி செய்ய அடிக்கடி சொறிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதுவும் பொது இடங் களில் அவ்வாறு செய்வது சங்கடத்தை ஏற்படுத்தும். இதற்கு சிறந்த தீர்வு வெட்சிப் பூ மருத்துவம். கொப் புளங்கள், அரிப்பு, தடிப்பு போன்ற தோல் நோய்க ளை சரிசெய்ய வெட்சி செடியின் இலைகளை அரைத்து பற்றுப்போட்டு வந்தால் விரைவில் குணமாகும். அடிபட்ட இடத்தில் மேல்பற்றாக வெட்சி செடியின் இலையைப் அரைத்துப் பற்றுப் போடும்போது புண்கள் விரைவில் ஆறிப்போகும்.

வெட்சி இலை இரண்டை ஒரு டம்ளர் தண்ணீ ரில் கொதிக்க வைத்து, அத்துடன் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து குடித்து வர சளியை கரைத்து வெளியேற்றும். வயிற்றுப்போக்கை நிறுத்தும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை எடுத்து அதனுடன் நீர்விடாமல் அரைத்த வெட்சிப் பூவை சேர்த்து தைலமாக காய்ச்ச வேண்டும். இதை வடிகட்டி பூசி வர தோல்நோய்கள் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். தலையில் தேய்த்து குளித்துவர பொடுகை தடுக்கிறது.

வெட்சிப்பூ தேநீரை காலை, மாலை இருவேளை அருந்தி வர உடல் சோர்வு, காய்ச்சல், கழிச்சல், சீத கழிச்சல் ஆகியவை குணமாக்கும்.

Banner
Banner