மருத்துவம்

 

வெயிலால் ஏற்படும் உடல்ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த உடல்நலப் பிரச்சினைகளை எப்படித் தவிர்க்கலாம்? என்பதை பார்ப்போம்.

தலைக்கு எண்ணெய்

வெயிலின் தாக்கத்தால் முடி உதிர்தல் ஒருபுறம் இருக்க, முடி உடைதலும் அதிகமாக இருக்கும். இதைத் தடுக்க, சுத்தமான தேங்காய் எண்ணெய்யைத் தலையின் மேல் தோலில் படுமாறு தினமும் மென்மையாகத் தேய்க்க வேண்டும். குறிப்பாகக் காலையில் தேய்த்து வர, அன்றாடம் வெயிலில் செல்லும்போது, வெயிலின் தாக்கத்தால் முடியின் வேர்கள் வலுவிழப்பது தடுக்கப்பட்டு, முடி உடைதல், முடி உதிர்வுப் பிரச்சினைகள் வெகுவாகக் குறையும். கூடுதலாக வெப்பத்தால் தலையில் ஏற்படும் கொப்பளங்களும் தடுக்கப்படும். மேலும், வெயில் தாக்கத்தால் ஏற்படும் கண் எரிச்சலும் குறையும்.

எரிச்சல் தீர்க்கும்

உடல் வறட்சி, உடலில் நீர்ச்சத்துக் குறைதல், அதைத் தொடர்ந்து ஏற்படும் சிறுநீர் எரிச்சல் போன்றவை இருக்கும் என்றாலும், கோடையில் அவற்றின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். வெட்டிவேர் போட்டு ஊறவைத்த தண்ணீரைக் குடித்துவர, உடல் சூடு குறையும்.

ஒரு லிட்டர் தண்ணீருக்குச் சீரகம், வெந்தயம் தலா 10 கிராம் சேர்த்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து அந்த நீரைக் குடித்துவர சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். மேலும் பூசணிக்காய், சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், எலுமிச்சை, இளநீர், நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை இந்தக் காலத்தில் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.

வெயில் சூட்டால் ஏற்படும் பேதிக்கு, நீர் மோரில் வெந்தயம் சேர்த்துக் குடிக்கலாம். உடல் செரிமானத்துக்கு நன்மை பயக்கும் பாக்டீரி யாவை உருவாக்கும் குணம் நீர் மோருக்கு உண்டு. இந்த நாட்களில் அதிக காரம், சூடு நிறைந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவில் நண்டு, கோழிக்கறி போன்றவற்றைத் தவிர்ப்பது நலம்.

தாகத்தைப் போக்கும் குளியல்

இந்த வெயிலில், தாகம்தான் எல்லோரையும் தாக்கும் பரவலான பிரச்சினை. தாகத்தைப் போக்க குடிக்க தண்ணீருடன், குளியலும் அவசியம். அதுவும், எண்ணெய்க் குளியல். உடல் சூட்டை அதிகரிக்காமலும் குறைக்காமலும் தாங்கும் பண்பு, இந்தக் குளியலுக்கு உண்டு. மற்ற நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோமோ இல்லையோ, கோடையில் தவறாது, வாரம் இரு முறை எண்ணெய்க் குளியல் போட்டே ஆக வேண்டும். கோடையில், நோய்த்தொற்று என்பது புறக்கணிக்கத்தக்க அளவே இருக்கும். ஏனெனில், கிருமிகள் வளர்ச்சிக்கு ஏற்ற காலம் வெயில் காலம் அல்ல. வெயிலால் உடலுக்கு ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளைத் தவிர பெரிய அளவில் நோய்கள் ஏற்படாது. எனவே, கோடை காலத்தில் உடல் சூட்டைக் குறைக்க அக்கறை தேவை.

காலை பானம் - கூடுதல் கவனம் தேவை!

மற்ற எந்த நோயையும்விட நீரிழிவு நோயில் எல்லோரும் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே எனச் சொல்றீங்களே! எதைத்தான் சாப்பிடுவது? என்ற கேள்வியோடு, மருத்துவர் முகத்தை வருத்தமாய்ப் பார்க்கும் நீரிழிவு நோயாளிகள் பலர். இந்த இனிப்பு தேசத்தில் ஏராளமான உன்னத உணவு வகைகள் அவர்களுக்கு உண்டு. தேவையெல்லாம் கொஞ்சம் கரிசனமும் அக்கறையும் மட்டும்தான்.

காலை வெறும் வயிற்றில் உள்ள சர்க்கரை அளவு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக முக்கியமானது. அதிகாலையில் அந்த அளவு கொஞ்சம் கூடுதலாக உள்ளபோது நடு இரவில் இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும்; உறக்கத்தில் இருக்கும் நீரிழிவு நோயாளிக்கு அது சற்று ஆபத்தானது. நீரிழிவு நோயினருக்கு வரும் மாரடைப்பு அதிகம் வலியைத் தராது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும் இரவு உணவிலும் அதிகாலை பானத்திலும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

காபியைவிட நிச்சயம் தேநீர் சிறப்பு. அதுவும் குறிப்பாக பிளாக் டீ எனப்படும் வறத் தேநீர்-கட்டன் சாயா, கிரீன் டீ, ஊலாங் டீ ஆகிய தேநீர் வகைகள் ரத்த சர்க்கரை அளவு கூடாமல் பாதுகாப்பதிலும், நீரிழிவு நோயாளிகளுக்கு, ரத்த நாளச்சுவர்களைச் சிதையாது பாதுகாப்பதிலும் உதவுவதை மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தொடர்ச்சியாக மூணு முதல் ஆறு கோப்பை பிளாக் டீ அன்றாடம் அருந்தும் நீரிழிவு நோயாளிக்கு, இதய நோய் 60% தடுக்கப்படுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன. தேநீரில் கொட்டிக்கிடக்கும் பாலிபீனால்களும் தியானைன் சத்தும்தான் இந்தப் பணியைச் செய்ய உதவுகின்றன.

கிரீன் டீ என்பது, இந்த பாலிபீனால்கள் தேயிலையைப் பதப்படுத்தும்போதும் மணச்செறிவூட்டுகையிலும் இழக்கப்பட்டுவிடாமல், அப்படியே உலரவைத்து எடுக்கப்படுபவை. அதனால்தான் கிரீன் டீக்கு மதிப்பு கொஞ்சம் கூடுதல், விலையும் கூடுதல். கிரீன் டீயின் விலை அதிகம் என நினைத்தால், பிளாக் டீ குடித்தாலும் கிட்டத்தட்ட அதே பலன் கிடைக்கும். பிளாக் டீயோ கிரீன் டீயோ தேநீருக்குப் பால் சேர்த்தால், அதன் பலன் சட்டென்று சரிந்துவிடும். தேநீரில் பாலை ஊற்றியதும் பாலிபீனால்கள் சிதைவடைந்துவிடுவதால், ஆன்ட்டி ஆக்சிடண்ட் தன்மை, கேபிலரி பாதுகாப்பு எல்லாம் குறைந்து போய்விடுகிறதாம். இனி பாலில்லாத பிளாக் டீ அல்லது கிரீன் டீ நீரிழிவு நோயினரின் தேர்வு பானமாக இருக்கட்டும்.

பால் வேண்டாம். துளியூண்டு சர்க்கரை? என்று சிலர் கேட்கலாம். கூடவே கூடாது. இன்னொரு முக்கிய விஷயம் நீரிழிவு நோய் மிகச் சிறந்த கட்டுப்பாடு வரும்வரை நாட்டுச் சர்க்கரை, தென்னைச் சர்க்கரை, பனஞ் சர்க்கரை என எந்த வகை சர்க்கரையும் கொஞ்ச காலத்துக்கு வேண்டாம்.

செயற்கை சர்க்கரை ஆபத்து

நீரிழிவு நோய் இன்னும் வரவில்லை. வயது 35-யைத் தாண்டுகிறது. பரம்பரைச் சொத்தாக நீரிழிவு நோய் வந்துவிடுமோ என அச்சத்தில் இருப்பவரும், இனிப்பு சுவைக்குத் தேனோ பனங்கருப்படியோ கொஞ்சமாகப் பயன்படுத்தலாம். கரும்பு வெல்லம் என்றால், அதை வெளுக்க வைக்க பயன்படுத்தப்படும் ஹைட்ரோஸ் சேர்க்காத வெல்லத்தூளைக் கொஞ்சமாகப் பயன்படுத்தலாம். 40 வயதைத் தாண்டும் எல்லோருமே இனிப்பு, உப்பு சுவைகளைக் குறைத்து கசப்பு, துவர்ப்பு சுவையைக் கூட்டுவது நீரிழிவு இதய நோய்கள் வராது காக்கும்.

இனிப்பு வேண்டாம். செயற்கை இனிப்பு? இன்றைக்கு ஸீரோ கலோரி எனச் சந்தையில் ஏராளமாய்ப் புழங்கும் செயற்கைச் சர்க்கரையையும் சற்று எச்சரிக்கையுடனேயே அணுக வேண்டியுள்ளது. சுக்ரலோஸ் இன்று உலகச் சந்தையை ஆக்ரமித்துள்ள செயற்கைச் சர்க்கரை. ஒரிஜினல் சர்க்கரை மூலக்கூறுகளில், சில அணுக்களை நீக்கிவிட்டு, குளோரின் அணுக்களைச் சேர்த்து செயற்கையாக உருவாக்கப்படும் இந்த இனிப்பு, வெள்ளைச் சீனியைவிட 600 மடங்கு அதிக இனிப்பைத் தரும்.

முதலில் இது முற்றிலும் பாதுகாப்பானது. உடலில் எந்த உறுப்போடும் பணியாற்றாது. முற்றிலும் இன்னெர்ட் எனப் பேசப்பட்டது. சமீப காலமாக ஆங்காங்கே இல்லை இந்த சுக்ரலோஸ் முற்றிலும் இன்னெர்ட் கிடையாது. குடல் நுண்ணியிரியோடு சேர்ந்து சில ரசாயனங்களை உருவாக்குகிறது. 450 பாரன்ஹீட்வரை உடையாது எனச் சொல்லப்பட்டாலும், சில சூழலில் அதற்கு முன்பே உடைந்துவிடுகிறது. அது புற்றுநோயை உருவாக்கும் காரணியாக மாறுமா? என ஆராயத் தொடங்கியுள்ளனர்.

அதற்குள் செயற்கைச் சர்க்கரையில் செய்த கேசரி, குலாப் ஜாமூன் என இறங்குவது நிச்சயம் நல்லதல்ல. கசப்புத் தேநீரை பருகியே ஆக வேண்டும். கசப்பு, நீரிழிவுக்கு எப்போதும் சிறந்த பாதுகாப்பும்கூட.

நடைப்பயிற்சிக்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் கொஞ்சமாக பிளாக் டீ, அலுவலகப் பணிக்கு இடையே சோர்வு நீக்க கிரீன் டீ, கொஞ்சம் கூடுதல் காஃபீன் மணத்தோடு தேநீர் வேண்டும் எனில் சீனத்து ஊலாங் டீ, மாலையில் லவங்கப் பட்டை, செம்பருத்தி இதழ் சேர்ந்த மூலிகைத் தேநீர், இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் முன்னதாக ஆவாரைக் குடி நீர் என நீரிழிவு நோயர் தங்கள் தேநீரைத் தேர்வு செய்துகொண்டால், எப்போதும் உற்சாகம் உண்டு. உடல் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும்!

நீர்க்கடுப்புக்கு நீரிழிவு காரணமா?

அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுவதற்கும்,  நீரிழிவுதான் முக்கியக் காரணமாக இருக்கும்.   ஒருமுறை ரத்தச்சர்க்கரை அளவுகளை வெறும் வயிற்றிலும், உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரத்துக்குப் பின்பும், மூன்று மாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவையும் (எச் பிஏ1சி) பார்த்துக்கொள்ளுங்கள். இவை எல்லாமே சரியாக இருக்கிறது என்றால், நீங்கள் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது அடுத்த காரணமாக இருக்க சாத்தியமுள்ளது.

கோடைக்காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொன்னால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுக்கள் அதிகமாகச் சேர்ந்துப் படிகமாகி சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால் சிறுநீர் போகும் போது எரிச்சல் ஏற்படும்; நீர்க்கடுப்பு உண்டாகும்.

கோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் சீக்கிரத்தில் நீர் இழப்பு ஏற்பட்டுவிடும். போதுமான அளவுக்குத் திரவம் நம் உடலில் இல்லையென்றால், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கும். அப்போது சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். குளிர் காய்ச்சல் வரும். நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும்.


பொதுவாக உடலில் கைகள், பாதம், விரல்கள், கால்கள் போன்ற பாகங்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால் தான் இந்த பிரச்சினை ஏற்படும். மேலும் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், சிறுநீரக பிரச்சினை, உயர் இரத்த அழுத்தம், வீங்கி பருத்து வலிக்கிற நரம்பு போன்ற தீவிரமான ஆரோக்கிய  பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தும் இஞ்சி, பல்வேறு பிரச்சினைகளுக்கும் நல்ல மருந்தாக செயல்படுகிறது. இதற்கு இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோன் மற்றும் ஜிஞ்சரால் என்னும் பொருட்கள் தான் காரணம். இவை இரத்தம் உறைதலைத் தடுத்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படும் பூண்டு, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் பூண்டு இரத்த நாளங்களை அமைதிப்படுத்தி, இரத்த சிவப்பணுக்களுடன் சேர்ந்து ஹைட்ரஜன் சல்பைட்டின் உற்பத்தியை அதிகரிக்கும். ஏனெனில் ஹைட்ரஜன் சல்பைடு தான் உடலில் இரத்த ஓட்டத்தை  அதிகரிக்கும்.

வெங்காயம் கூட இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதற்கு அதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் தான் காரணம். எனவே முடிந்த அளவில் இதனை  உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமெனில் தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வாருங்கள். ஏனெனில் அதில் உள்ள எபிகேலேகேட்டசின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இரத்த நாளங்களை விரிவடைய செய்து, இரத்த ஓட்டத்தை தடையின்றி உடல் முழுவதும் பாய  உதவு கிறது.  பெரும்பாலான உணவுப் பொருட்களில் காரத்திற்கும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் மிளகு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதிலும் இதனை அன்றாடம் ஏதேனும் ஒரு உணவுப்பொருளுடன் சேர்த்து சாப்பிட்டால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, இரத்த ஓட்டம் உடல் முழுவதும் சீராக பாயும்.

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க, லைகோபைன் நிறைந்த தக்காளியை உணவில் அன்றாடம் சேர்த்து வர வேண்டும். ஏனெனில் இதில் உள்ள லைகோபைன் பிளேக் கட்டமைப்பை உடைத்து, இரத்த ஓட்டத்தை உடலில் சீராக்குகிறது.

ஆப்பிள் சாப்பிட்டால் அளவிலா நன்மைகள்

ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை  உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது. ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.  ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.

ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். வெளிநாட்டில் அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமாக வைத்திருக்கும்  பொருள்களில் ஒன்று.

ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி  அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.

எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்யும் உணவு முறைகள்...!

எலும்புகள்தான் உடலின் அசைவுகளைச் சுலபமாக்குகின்றன. சிறு வயது முதல் உடல் உழைப்பு சீராக உள்ளவர்களுக்கு எலும்புத் தேய்மானம் சற்றுக் குறைவாக  இருக்கும். உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்களுக்கு எலும்புத் தேய்மானம் அதிகமாக ஏற்படும்.

பொதுவாக ஆண், பெண் இருவருக்கும் 30 முதல் 35 வயது வரை எலும்பு நல்ல வலிமையாக இருக்கும். பிறகு எலும்பின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும்.

பால் சாப்பிட்டால் எலும்பு நல்ல வலிமை பெறும். பாலில் வைட்டமின்கள், புரதம் மற்றும் பொட்டாசியம் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான  எலும்புக்கு உதவிபுரிகின்றன. தயிர், மோர் போன்ற உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

எலும்புகளுக்கு எந்த அளவுக்கு கால்சியம் அவசியமோ, கால்சியத்தைக் கிரகிக்க வைட்டமின் டி-யும் அவசியம்.தினமும் காலை மற்றும் மாலை வேளையில்  அரை மணி நேரம் சூரிய ஒளி நம் சருமத்தில் பட்டாலே, வைட்டமின் டி கிடைத்துவிடும்.
மீன் சாப்பிடுவதாலும் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். மீனில் வைட்டமின் பி மற்றும் இ, கால்சியம், இரும்பு, மக்னீசியம் அடங்கியுள்ளன. எலும்பு வலிமையாக இருக்க, பேரீச்சம்பழமும் சாப்பிடலாம்.

ஆரஞ்சுப் பழத்தில், கால்சியம் மற்றும் வைட்ட மின் சி நிறைவாக உள்ளன. இதுவும், எலும்புக்கு வலிமை தரும். வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுவதாலும், எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும்.

முட்டையில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் எலும்பு மற்றும் தசைகளை வலிமை பெறச் செய்கின்றன. அசைவ உணவுகள் உட்கொள்வதாலும் எலும்புகளுக்கும் தசைக்கும் வலிமை கிடைக்கும்.

அதிக உடல் எடை எலும்பு மூட்டுக்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி, தேய்மானத்தை விரைவு படுத்தும். உடல் பருமனானவர்கள் எடையைக் குறைப்பதன்  மூலம் முதுகெலும்பு, கால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக் கலாம்.

தோல்நோயை குணப்படுத்தும் வல்லாரை!

வல்லாரையில் இரும்புச்சத்து, சுன்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் நிறைந்து காணப்படுகின்றது. இது இரத்தத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

தோல் வியாதி உள்ளவர்கள் வல்லாரை மிக சிறந்த மருந்து. இக் கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வர தோல் சம்பந்தமான வியாதி குறையும்.

வல்லாரை கீரையை பச்சையாக சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்படையும். மாலைக்கண் நோய் குணமாக வல்லாரை கீரையோடு பசும்பால் சேர்த்து உண்டு வர மாலைக்கண் நோய் மறையும்.

வல்லாரை ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது. வல்லாரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி பெருகும். புத்தி கூர்மையாகும். நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை சாப்பிடுவது நல்லது. இக்கீரை மலச் சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.

வல்லாரைக் கீரையை நன்கு சுத்தம் செய்து, சாதாரணமாகக் கீரைச் சாம்பார் செய்யும் முறையில் சாம்பார் செய்து, வாரம் இரண்டு முறைகள் சாப்பிட நரம்புகள் பலமடையும். வீக்கம், கட்டிகள் மறைய வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, தொடர்ந்து வீக்கம், கட்டி ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் குணம் ஏற்படும். வல்லாரை இலைச்சாற்றைப் பிழிந்து, சம அளவு நெய் சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வர அடிபட்ட காயம், கொப்புளங்கள் குணமாகும்.

நாவல் பழத்தின் மருத்துவக் குணங்கள்!

நாவல் மரம் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பான மரமாக போற்றப்படுகிறது. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின்  போன்ற  தாதுக்கள் நிறைந்துள்ளன. நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக  உள்ளது.

நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். இதனை இரண்டு வேளைகள் என்று 3 நாட்களுக்கு  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.

பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக்குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்திசெய்யும்.

சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது. நீரிழிவு நோயை தடுக்கும் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க  வல்லது.

நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு  தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு சிறுநீர்ப்போக்குக் குறையும்.

நாவல்பழச்சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்தி விடலாம்.


விபத்தில் சிக்கி, அதிக எண்ணிக்கையில் எலும்புகள் முறிந்து விட்டால் அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு என்ற நிலை இருக்கிறது. பொதுமக்களிடம் மட்டுமல்லாமல், மருத்துவர்களிடமும் இந்த எண்ணமே இருக்கிறது. ஆனால், அறுவை சிகிச்சை எல்லா நேரங் களிலும் அவசியம் இல்லை. மருத்துவத்தில் வேறு வழிகளும் இருக்கின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் வெற்றி கரமான ஒரு மருத்துவ நிகழ்வு ஒன்று சென்னையில் நடந்திருக்கிறது. 80 வயது மூதாட்டி ஒருவரை அப்படி காப்பாற்றிய சம்பவத்தைப் பற்றி கூறினார் அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயப்பிரகாஷ்.  இது மக்களுக்கும், மருத்துவர்களுக்குமே ஒரு பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சாலை விபத்து ஒன்றில் சிக்கிய மூதாட்டி ஒருவரை சமீபத்தில் எங்களிடம் கொண்டு வந்தனர். முதலுதவி கொடுத்த பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றோம். அப்பெண்மணியின் உடலை ஸ்கேன் எடுத்தபோது கழுத்துப் பகுதியில் இருந்த எலும்புகளில் மட்டும் 5 முறிவுகள் ஏற்பட்டிருந்தது தெரிந்தது. 7 விலா எலும்புகள், தோள்பட்டை எலும்புகள், காலர் எலும்புகளும் முறிந்திருந்தது. மொத்தம் 20 எலும்புகளுக்குமேல் நொறுங்கியிருந்தன. முதுகுத்தண்டு அழுத்தம் அடைந்து, முதுகு எலும்புக்குள் ரத்தம் கசிய ஆரம்பித் திருந்தது. நுரையீரலும் வெடிப்பு ஏற்பட்டு அதற்குள்ளும் ரத்தப்போக்கு இருந்தது பெரிய சவாலாக இருந்தது. இதுபோன்ற சிக்கலான நிலையில் அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டியிருக்கும். இவர் மிகவும் வயதான பெண்மணி, அவருடைய எல்லா எலும்பு களும் வலுவற்ற நிலையில் வேறு இருந்தது. அதனால், இவருக்கு அறுவை சிகிச்சை செய்யாமலேயே குணப்படுத்தும் வழிகளை யோசித்தோம்.

இயற்கையாகவே நம் உடலுக்கு தானாக குணமடையும் சக்தி இருக்கிறது. உடலின் காயங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே ஆறிவிடும். மருத்துவத்தில் இதுதெளிவுடன் செயலின்மை  ஒரு சிகிச்சைமுறை ஆகும். அதன்படி கழுத்தெலும்புக்கு ஒரு பிடிப்பான காலர் மாட்டி விட்டோம். முழு உடலையும் அசைவில்லாமல் பெல்ட் போட்டு படுத்த நிலையில், மூன்று வாரங்கள் வைத்திருந்தோம். நன்றாக ஆறும்வரை பொறுமையுடன் காத்திருந்தோம். இப்படியே அசையாமல் மூன்று வாரம் வைத்தபிறகு, ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அனைத்து எலும்புகளும் சேர்ந்திருந்தது. நுரையீரலில் இருந்த ரத்தக்கசிவு மற்றும் முதுகெலும்புகளில் இருந்த ரத்தமும் மறைந்து விட்டது. பின்னர் நோயாளிக்கு பிஸியோதெரபி சிகிச்சை கொடுத்ததில் ஓரளவு நடக்க ஆரம்பித்தார். அதன்பிறகு அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். பெரும்பாலும் ஹோமியோபதி, நேச்சுரோபதி போன்ற மாற்று மருத்துவத்தில் மட்டுமே இதுபோன்ற அறுவைசிகிச்சை இல்லாத சிகிச்சைகளைச் செய்வதுண்டு. அலோபதி மருத்துவத்தில் எடுத்த உடனே அறுவை சிகிச்சை செய்வதும் நடக்கிறது. அந்த எண்ணத்தை இரண்டு தரப்பிலுமே மாற்றுவதாக அமைந்தது இந்த சம்பவம். இது எல்லோருக்கும் நம்பிக்கையும், பாடமும் அளிக்கும் ஒரு சிகிச்சையாகவும் இருக்கும் என்கிறார் ஜெயப்பிரகாஷ்.

மூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி!

மூக்கடைப்புக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று பாலிப் என்கிற சதை வளர்ச்சி. மூக்கினுள் விரல் நுழையும் பகுதியில், ஒரு சவ்வுப் படலம் உள்ளது. இதில் ஒவ்வாமை காரணமாகவோ காளான் கிருமிகளின் பாதிப்பினாலோ இங்கு சதை வளர்கிறது. மூக்கில் அடிக்கடி தொற்று ஏற்படுபவர் களுக்கும், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருப்பவர்களுக்கும் இது வரக்கூடிய சாத்தியம் அதிகம். பார்ப்பதற்கு இது ஓர் உரித்த திராட்சைக் கொத்துபோலிருக்கும்.

இது அருகிலுள்ள சைனஸ் துளைகளை அடைத்துக்கொள்வதால், சைனஸ் அறைகளில் நீர் கோத்துக்கொள்கிறது. இதன் தொடர்ச்சியாக பாலிப், மேலும் பெரிதாக வளர்கிறது. இப்படி பாலிப்பும் சைனஸ் பாதிப்பும் போட்டி போட்டுக்கொண்டு தொல்லை கொடுக்கும்போது, மூக்கு அடைத்துக் கொள்வதால், இவர்கள் வாயால்தான் சுவாசிக்க வேண்டிவரும். மூக்கடைத்தபடி பேசுவார்கள். வாசனையை முகரும் திறன் குறையும். பெரும்பாலும் இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் ஆஸ்துமா பிரச் சினைக்கு ஆளாவதும் உண்டு.

அறுவை சிகிச்சையே வழி

இந்தப் பிரச்சினைக்கு அறுவைசிகிச்சை மூலம் பாலிப்பை அகற்றுவதே சிறந்த வழி. இந்த அறுவைசிகிச்சையைத் திறம்பட மேற்கொள்ளும் மருத்து வரிடம் செல்ல வேண்டியது முக்கியம். மூக்குப் பகுதியை சி.டி. ஸ்கேன் எடுத்து, அதன் வேர் எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு, எண்டோஸ்கோப்பி முறையில் அதை வேரோடு அகற்றுவதே தீர்வைத் தரும்.

என்றாலும், பாலிப் மீண்டும் வராது என்று உறுதி கூற முடியாது. இதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, ஒவ்வாமை. அடுத்தது, காளான் பாதிப்பு. ஒவ்வாமை காரணமாக பாலிப் வளர்ந்திருந்தால், அந்த ஒவ்வாமை எது என்பதைச் சரியாகக் கணித்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒவ்வாமையை அறிந்து கொள்ள உதவும் சில பரிசோதனைகளை மேற் கொள்ள வேண்டும். பிறகு, அந்த ஒவ்வாமை துளியும் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது இயலாதபோது, ஸ்டீராய்டு மருந்துகள் மூலமே ஒவ்வாமையைக் கட்டுப்படுத்த வேண்டிவரும்.

காளான் கிருமிகள்

அடுத்ததாக, காளான் கிருமிகளால் பாலிப் ஏற்படும்போது அதை அறுவைசிகிச்சை செய்து அகற்றினாலும், மறுபடியும் அது வருவதற்கு அதிக சாத்தியம் உள்ளது. இந்தக் காளான் பாதிப்பில் ரைனோஸ்போரிடியோசிஸ் என்று ஒரு வகை உள்ளது. இது கால்நடைகள் மூலம் நமக்கு வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, கால்நடைகளைக் குளிப்பாட்டும் குளத்திலோ நீர்நிலைகளிலோ நாமும் குளிக்கும் போது, இந்தக் காளான் கிருமிகள் நம் மூக்கினுள் நுழைந்துகொள்கின்றன. இது பூஞ்சை வகையைச் சேர்ந்தது என்பதால், மூக்கில் உள்ள ஈரப்பதத்தைப் பயன்படுத்திக்கொண்டு நன்கு வளரத் தொடங்கு கின்றன. இது பார்ப்பதற்குப் புற்றுநோய் போலிருக்கும். இந்தச் சதையைத் தொட்டாலோ, அதை எடுக்க முயற்சி செய்தாலோ ரத்தம் கொட்டும். எனவே, இதை ஆபரேஷன் செய்து எடுப்பதற்கு நோயாளிகள் பயப்படுவார்கள்.

இந்த நோய்க்கு இப்போது பலதரப்பட்ட நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. குறிப்பாக, இந்தச் சதையை ஆபரேஷன் செய்து அகற்றிய பிறகு, காட்டரைசேஷன் எனும் மின்சூட்டுச் சிகிச்சையில் அதன் வேர்களை அழிக்க வேண்டும். லேசர் சிகிச்சையும் இதற்கு நல்ல பலன் கொடுக்கும்.

ரைனோஸ்போரிடியோசிஸ் பாதிப்பை ஆரம்பத் திலேயே கவனித்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். இந்தக் கிருமிகள் தொற்றியிருப்பவர் களுக்கு ஆரம்பத்தில் மூக்கில் அடிக்கடி அரிப்பு ஏற்படும். லேசாக ரத்தம் கொட்டும். ஆனால், இந்த அரிப்பு என்னும் அறிகுறி பொதுவான ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் இருக்கும் என்பதால், இந்த நோயைச் சரியாக கணிக்க முடியாமல் போய்விடும். அடுத்ததாக, லேசாக ரத்தம் கொட்டுவதை சில்லு மூக்கு உடைந்துவிட்டது என்று பலர் அலட்சியப் படுத்திவிடுவார்கள். நல்ல அனுபவமுள்ள காது-மூக்கு-தொண்டை மருத்துவரால் மட்டுமே ஆரம் பத்தில் இதை கணிக்க முடியும். தவிர, சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாலும் தெரிந்துவிடும்.

கண் எரிச்சலை போக்கும் கொத்துமல்லி

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத் துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பருத்திப்பாலின் நன்மைகள், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் கொத்துமல்லி பானம் குறித்து பார்க்கலாம்.

கொத்துமல்லி சாறு தலா 50 மில்லி எடுத்து, 10 மில்லி தேன் சேர்த்து கலந்து குடித்துவர கண் எரிச்சல் சரியாகும். ரத்த ஓட்டத்தை சீர் செய்யும். ரத்த அழுத்தத்தை குறைத்து சமன்படுத்துகிறது. இதய ஓட்டம் சீராகிறது. சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுகளை வெளி யேற்றும்.

சிறுநீர்தாரை எரிச்சலை போக்கும். ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்வதால் மாரடைப்பு, கைகால் வலி போன்ற பிரச்சினைகள் சரியாகிறது. மனம், சுவைக்காக உணவில் சேர்க்கப் படுகிறது. கொத்துமல்லி சாறை மேல்பற்றாக போடும்போது உடல் எரிச்சல் குணமாகும். கால்களில் நரம்புகள் சுற்றிக்கொள்வதால் ஏற்படும் எரிச்சலை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்சினையால் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. கால் வலி ஏற்படும். அடிபட்டால் அதிகமாக ரத்தம் வெளியேறும். அன்னாசி சாறுடன் சீரகப்பொடி சேர்த்து கலந்து குடித்துவர நரம்பு முடிச்சு விரைவில் குணமாகும்.

வைட்டமின் ஏ-வுக்கும் வந்தாச்சு சொட்டு மருந்து!

போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைப் போலவே, வைட்ட மின் ஏ-வுக்கும் சொட்டு மருந்து சமீபகாலமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.  குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் ஏ மிகவும் இன்றியமையாதது. ஏனென்றால், அவர்களுக்குத் தேவையான நோய் எதிர்ப்புசக்தி, குறை இல்லாத பார்வைத்திறன் ஆகியன இச்சத்தின் மூலமே கிடைக்கிறது. மேலும், குழந்தைகள் உயரமாக வளர்வதற்கும் வைட்டமின் ஏ உதவுகிறது. குழந்தைப் பருவத்தில் வருகிற பார்வை குறைபாட்டை நீக்குவதற்கு வைட்டமின்-ஏ உதவுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

5 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ குறைபாடு உள்ளதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையிலேயே வைட்ட மின் ஏ-வுக்கும் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

அதனால் 5 வயதுக்குட்பட்ட குழந்தை களைக் கொண்ட பெற்றோர் இது போன்ற சொட்டு மருந்து முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தங்களுடைய மருத்துவரின் ஆலோசனை பெற்றும் சொட்டு மருந்து கொடுக்கலாம். இதற்கான கால வரையறை 6 மாதம் முதல் 59 மாதங்கள் வரையிலான குழந்தைகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் 6 முதல் 12 மாதம் உள்ள குழந்தைகளுக்கு மாதத்துக்கு ஒரு முறை, ஒரு லட்சம் யூனிட் தர வேண்டும். 12 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு ஒரு தடவை 2 லட்சம் யூனிட் வரை வைட்டமின்-ஏ டிராப் கொடுத்து வர வேண்டும் என்ற கணக்கும் இருக்கிறது.


கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளி களுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும். இவை எல்லாம் காலி பிளவரின் குணங்கள்.

வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள்.

காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம்.

காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்.

உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி

இஞ்சித் துவையலை ருசி பார்க்காதவர்கள் மிகவும் குறைவு. தவிர சமையலிலும் இஞ்சியை தாரளமாக பயன் படுத்திக் கொள்கிறோம்.

பல பகுதியில் இஞ்சியை ஊறுகாயில் அதிகமாக சேர்க் கிறார்கள். இஞ்சிக்கு உஷ்ணப் படுத்தும் குணம் உண்டு. பசியைத் தூண்டும். உடலுக்குப் பலத்தை தரும். ஞாபக சக்தியை வளர்க்கும்.

கல்லீரலைச் சுத்தப் படுத்தும். வயிற்றில் சேர்ந்த வாயுவை நீக்கி பஞ்சு போல ஆக்கும். பிறகு அதிலுள்ள தீயப் பொருட்களையும், கிருமிகளையும் நீக்கி கபத்தால் உண்டாகும் எல்லா விதமான நோய் களையும் தடுக்கும்.

முகம், மூக்கு தொண்டைகளைப் பற்றிய நோய் களையும், குன்மம், ஆஸ்துமா, பாண்டு நோய் ஆகியவற்றையும் இஞ்சி போக்கும். நுரையீரல் நோய்களைக் கூட இஞ்சி குணப்படுத்துகிறது. அதனால் தினந்தோறும் கொஞ்சம் இஞ்சியை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஆனால் ஓர் எச்சரிக்கை. இஞ்சியை அதிகமாக சாப்பிட்டால் தொண்டை கம்மி விடும். அதற்கு சர்க்கரையும், தேனும் மாற்றுப் பொருட்களாகும்.

சுட்டெரிக்கும் வெயில்; கண்கள் ஜாக்கிரதை

சுற்றுலா, விடுமுறை, விளையாட்டு எனக் குழந்தைகள் குதூகலமாகச் சுற்றித் திரியும் காலம் கோடைக் காலம். வெயில் காலத்தில் தூசு நிறைந்த சுற்றுப்புறத்தில் குழந் தைகள் விளையாடுவதற்கான சாத்தியம் அதிகம்.

இப்படி விளையாடும்போது கண்ணில் உள்ள கன்ஜங்டிவா என்ற வெள்ளைப் பகுதியில் ஏற்படும் ஒவ்வாமையான அலர்ஜி கன்ஜங்டிவைட்டிஸ், கண் உலர்தல் நோய் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.

இதனால் கண் சிவந்து இருப்பது, கண் அரிப்பால் கண்ணைத் தேய்த்துக்கொண்டு, கண்ணை அடிக்கடி சிமிட்டிக்கொண்டிருப்பது போன்ற அறிகுறிகளுடன் தங்கள் குழந்தைகளைக் கண் மருத்துவரிடம் அழைத்து வரும் பெற்றோர் அதிகம்.

தடுப்பது எப்படி?

> குழந்தைகள் புழுதி நிறைந்த இடங்களில் விளையாடு வதைத் தவிர்க்க வேண்டும்.

> வெயிலில் செல்லும்போது தரமான கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு செல்ல வேண்டும். தரமற்ற, போலியான கூலிங்கிளாஸ் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். கண் மருத்துவர் அல்லது கண்ணாடிக் கடைகளில் கிடைக்கும் புறஊதா கதிரியக்கத்தைத் தடுக்கக்கூடிய கூலிங் கிளாஸைப் பயன்படுத்தவும்.

> குளிர்ந்த தண்ணீரால் அடிக்கடி முகம் கழுவ வேண்டும்.

> கண்களை மூடிக்கொண்டு, குளிர்ந்த தண்ணீரில் பஞ்சை நனைத்துக் கண் மீது ஒத்தடம் வைக்க வேண்டும்.

> கண் அலர்ஜி நோய் உள்ளவர்கள் வெயில் காலத்தில் கண் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்து கொண்டும், அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முறை யாகப் பயன்படுத்த வேண்டும்.

> மருந்துக் கடைகளில் மருத்துவர் பரிந்துரையில்லாமல் மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

> வீட்டைத் தூசியில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

> அடிக்கடி கைகளைக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நீச்சல் குளத்தில் கண் பாதுகாப்பு

விடுமுறை காலத்தில் குழந்தைகளில் பலரும் கோடை வெப்பத்தைத் தணித்துக்கொள்ள நீச்சல் பயிற்சி செல்வது வழக்கமாக இருக்கும்.

> அப்படி நீச்சல் குளத்தில் குளிக்கும் போது பாதுகாப்புக் கண்ணாடி அணிந்துகொள்ளவும்.

> நீச்சல் குளத்தின் சுத்தத்தை உறுதிசெய்து கொள்ளவும்.

> குளித்து முடித்தவுடன் குளிர்ந்த, சுத்தமான தண்ணீரால் முகம், கண் பகுதியைக் கழுவிக்கொள்ளவும்.

கூர்மையான பொருட்கள் ஜாக்கிரதை

விடுமுறை காலத்தில் குழந்தைகள் ஒன்றுகூடி விளையாடும்போது, கூர்மையான விளையாட்டுப் பொருட்களை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்களா என்றும் பெற்றோர் கவனிக்க வேண்டும். விளை யாடும்போது கூர்மையான பொருட் கள் கண்ணில் குத்தி விபத்து ஏற்படுவது அதிகம் என்று ஆய்வு கூறுகிறது.

உலர் கண் நோய்

வெயில் காலத்தில் அதிகப்படியான வெப்பத்தின் காரணமாகக் கண் நீர் படலம் உலர்ந்து, கண் எரிச்சல், உறுத்தல், மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் காணப்படும்.

இதை எப்படித் தடுப்பது?

1.அதிகப்படியான தண்ணீர், பழச்சாறு உட்கொள்ள வேண்டும்.

2.செல்போன், அய்பேடு, டேப்லெட் போன்ற மின்னணு கருவிகளில் குழந்தைகள் வீடியோ கேம்ஸ் விளை யாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

3.குளிர்சாதனப் பெட்டியிலிருந்து காற்று நேரடியாகக் கண்ணில் அடிக்காத வாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

4.கண் மருத்துவரை அணுகிச் செயற்கை கண்நீர் சொட்டு மருந்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

வெளிவேலை செய்வோர்

அதிகப்படியான வெயிலில் உள்ள புறஊதா கதிர்கள் வெயிலில் வேலை செய்பவர்களுக்குக் கண் சதை வளர்ச்சி, கண் புரை, விழித்திரை பாதிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக விவசாயிகள், வெயிலில் அதிகம் வேலை செய்பவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தடுப்பது எப்படி?

> வெயில் காலத்தில் வெயில் அதிகம்

நன்மை பயக்கும் எண்ணெய் குளியல்

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், தோலின் மூலமாக எண்ணெய் உட்கிரகிக்கப்பட்டு லிம்ஃ பாட்டிக்ஸ் என்று சொல்லப்படுகிற நிணநீர்க் கோளத்தில் சேர்ந்து உடலுக்கு நன்மை பயக்கிறது என்று அறிவியல் ஆய்வும் ஒப்புக்கொள்கிறது. லிம்ஃபாட்டிக்ஸ் எனப்படும் நிணநீர்க் கோளமே உடல் செல்களுக்கு ஊட்டம் கொடுக்கவும், உடலில் உருவாகும் கழிவுகளை வெளித்தள்ளும் வேலை யையும் செய்கிறது. எண்ணெய் குளியல், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள சூட்டை உத்தம நிலையில் வைக்கிறது. அதனால் உடல் உறுப்புகள் நன்கு செயல்படும்.


கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் -சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப் படுகிறது.

*  கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும் பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

*  உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப் பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

*    ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

*     கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விரைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

*    நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

*  சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

*    கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

*    முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

*    கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

*    3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

*    தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

*    கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

*  கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

புற்றுநோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப் பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப் பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள்.

ஏனெனில் கறிவேப்பி லையில் பல்வேறு மருத் துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண் மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபி யாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பி லையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு எண்ணையாக பயன்படுத் தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித் துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் சூடு குறையும்.

பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட் டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என் கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டி யில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறி வேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவி லிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவா வதையும் தடுக்கிறது.

பிரிரேடிக் கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களி லுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக் கல்ஸ் உருவா வதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என் கிறார்கள் மருத்துவர்கள்.

இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத் தக்கது.

கொலஸ்ட்ரால் பற்றி...

நம் உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலிலும், கொழுப்பு - நல்ல கொழுப்பு (HDL), கெட்ட கொழுப்பு (LDL) என்று

இரண்டு வகைகள் உள்ளன. உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று நம்பிக் கொண்டி ருக்கிறது மருத்துவ உலகம்.

அதன் காரணமாக இதய நோயைத் தடுக்க, உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிப்பது, கெட்ட கொலஸ்ட் ராலின் அளவைக் குறைப்பது என்ற அணுகுமுறையை அது பின்பற்றி வருகிறது. 1 லிட்டர் ரத்தத்தில் 1.03 மில்லி மோலுக்கும் குறைவாக நல்ல கொழுப்பு இருந்தால் இதயத்தில் பிரச்சினை வரும் என்று முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்திருந்தது தான் இந்த அணுகு முறைக்கு அடிப்படை.

ஆனால் கடந்த வாரம் (ஜூலை 22) பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு இதழான லேன்சட் தனது இணைய தளத்தில் வெளி யிட்டுள்ள ஒரு தகவல், நல்ல கொலஸ்ட்ரால் அளவிற்கும் இதய நோய்க்குமிடையே சம்பந்தம் இருப்பதாகக் கருதி மேற்கொள் ளப்பட்ட அணுகுமுறையைத் தூக்கி யெறிந்து விட்டது!

முதல்நிலை இதய நோய்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பதை ஆராய 17,800 பேரிடம் ஜூபிடர் என்ற ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் சரி பாதிப் பேருக்கு அதாவது 8,900 பேருக்கு, உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந் தான ரோசுவாஸ்டாட்டின், தினம் 20 மி.கி. அளவிற்குக் கொடுக்கப்பட்டது.

மீதமுள்ள மற்றொரு பாதியினருக்கு மருந்து கொடுக்கப் படவில்லை. ஆய்வின் முடிவுகள், நல்ல கொலஸ்ட்ரால் அளவிற்கும் இதய நோய்க்கு மிடையே சம்பந்தம் ஏதுமில்லை எனத் தெரிவிக்கின்றன. முதல் நிலை இதய நோய் ஏற் படாமல் தடுக்க, கெட்ட கொலஸ்ட் ராலின் அளவைக் கணிசமாகக் குறைத்து விட்டால் போதும், நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை எனத் தெரிவிக் கின்றன.

ஜூபிடர் ஆய்வறிக்கை இதுவரை மருத்துவ உலகம் கொண் டிருந்த நம்பிக்கைக்கு முற்றிலும் மாறாக உள்ளதால் மருத்துவ உலகில் ஒரு சிறிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

Banner
Banner