மருத்துவம்

திருச்சி, மார்ச் 23 தொண்டறச் செம்மல் அன்னை மணியம் மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெரி யார் மருத்துவ குழுமத்தின் சார்பாக பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொதுமருத்துவ முகாம் மற்றும் பெண்களுக்கான மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்று நோய் கண்டறியும் மருத்துவ முகாம் 22.03.2019, வெள்ளிக் கிழமை அன்று காலை 10 மணியளவில் பூவாயிப்பட்டி கிராமத் தில் நடைபெற்றது.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் தலைமையில் பெரியார் அறக்கட் டளையின் கட்டிட இயக்குநர் பேரா. ப. சுப்ரமணியன் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்ற இம் மருத்துவ முகாமில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை மிக ஆர்வமுடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மரு. பி. மஞ்சுளாவாணி மற்றும் மருத்துவ குழுவினர்கள் பொது மருத்துவ முகாமினையும், திருச்சி ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவ அலுவலர்கள் மரு. அய். ரூஹிபானு, மரு.எம்.சரண்யா மற்றும் மருத்துவ குழுவினர்கள் பெண்களுக்கான மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்று நோய் பரி சோதனைகளையும் மேற் கொண் டனர்.

194 பேர் பொதுமருத்துவ முகாமிலும், 131 பெண்கள் புற்றுநோய் பரிசோதனை களை யும் மேற்கொண்டு பயனடைந் தனர். இம்மருத்துவ முகாமில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலு வலர் முனைவர் த. சிறீவிஜய கிருபா, பேராசிரியர் ச. இராஜேஷ், பேரா. பி.  பாலசுப்ரமணியன்,  அ.ஷமீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இம்மருத்துவ முகாமினை பேரா. ப. சுப்ரமணியன் மற்றும் பொறியாளர் சேதுராமன் அவர்கள் ஒருங்கிணைத்ததுடன் அதற்கான  இடவசதி, போக்குவரத்து மற்றும் உணவு உட்பட அனைத்து வசதிகளையும் சிறப்பாக செய்தி ருந்தார்கள்.

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் பெரியார் மணியம்மை  மருத்துவமனை இணைந்து 10.03.2019 அன்று காலை 8.30 மணியளவில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை  தலைமையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.   பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், பேராசிரியர்கள்  மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்ற இம்முகாமில் திருச்சி சுந்தர் நகர், கலைஞர் கருணாநிதி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள 232  குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இம்முகாமிற்கான ஏற்பாடுகளை பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் செவிலியப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Banner
Banner