எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முதலில் வயிற்றைத் தயார்படுத்துவோம்?

மக்கள்மயப்பட்ட உணவான பிரி யாணியை எல்லோரும் பயமில்லாமல் சுவைத்துவிட முடிகிறதா? ஆசை தீர உண்டுவிட்டு நிம்மதியாக இருக்க முடிகிறதா என்று கேட்டால், இல்லை. வாரத்துக்கு ஒரு முறை உணவு மீதான வேட்கையைத் தணிக்க மணமணக்கும் ஒரு தட்டு பிரியாணியை உண்ட பின்பு இடி, மின்னல், புயல், வெள்ளம் எனப் பலவிதமான வயிற்றுச் சீற்றங்களுக்கு உள்ளாவோர் நம்மில் பலர். காரணம், நமக்கும் வயிற்றுக்குமான உறவு சுமுகமாக இல்லாமல் இருப்பதுதான். நமது உணவின் மீதான விருப்பமும் செரிமான மண்டலத்தின் திறனும் உடல் என்ற ஒரே கட்சிக்குள் இருந்தாலும், வெவ்வேறு அணியாகப் பிரிந்து முரண்பட்டு நிற்கின்றன.

பல்சுவை நிரம்பிய பிரியாணியை விருப்ப உணவாகப் பலரும் தேர்ந் தெடுக்கிறோம்.  இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையால், நம்முடைய உடல் தன்னுடைய ஆற் றலைச் சட்டென்று இழக்கிறது. அப்படி இழந்த ஆற்றலை, அந்த வெறுமையை ஈடுசெய்வது பல்சுவை பொதிந்த பிரி யாணிதான் என்பது நமக்குத் தெரியும்.

பிரியாணி உண்பதற்கு முன்னும் பின்னும், உண்ணும் போதும் பின்பற்ற வேண்டிய சில  முறைகளைச் சுருக்க மாகப் பார்த்துவிடுவோம்.
வயிற்றைத் தயார்படுத்துங்கள்

ஒரு சாதாரண நடுத்தர வருமானம் ஈட்டுவோர் வாழ்க்கையில் பிரியாணி உண்பது ஏகத் தடபுடலோடு `பிளான் பண்ணிப் பின்னுகிற ஒன்றுதான். உழைத்துச் சோர்ந்து சாப்பாட்டுக் கூடத்தில் அமர்ந்து என்ன சாப்பாடு? என்று கேட்கிறபோது, உடலையே வாரி சுருட்டும் வாசனை மணக்கும் பிரியாணி நம் எதிரே ஆவி பறக்க வந்து நிற்கும் நல்வாய்ப்பு வெகு அரிதாகத்தான் வாய்க்கிறது.

எனவே, பிரியாணிக்கு எப்படி திட்டம் போடுகிறோமோ அதுபோல வயிற்றையும் திட்டமிட்டு தயார் செய்துகொள்ள வேண்டும். நாளை மதிய உணவுக்குப் பிரியாணி என்றால், இன்று மாலை வெறும் பழ உணவாக உட்கொள்ளுதல் நன்று. வெறும் பழம் மட்டும்தானே என்று கிலோக்களில் கனக்கும் தர்பூஸையோ அல்லது பன்னூறு சுளைகள் அடங்கிய பலாப் பழத்தையோ தேர்ந்தெடுக்கக் கூடாது. இரண்டு ஆரஞ்சு அல்லது ஒரு மாதுளை என இருநூறு கிராம் அளவுடைய பழத்தை மட்டுமே உண்டு மிதமான வயிற்றோடு படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

மறுநாள் காலையில் வயிற்றைச் சாட்டையால் சொடுக்கியது போலப் பசி தலைகாட்டும். தான் ஈன்ற குட்டியைத் தொடப்போனால் எப்படிப் பூனை நம்மைப் பிறாண்டி எடுக்குமோ, அது போலப் பசி வயிற்றைப் பிறாண்டி எடுக்கும். இதற்கு அஞ்சக் கூடாது.

இப்போது வயிற்றில் ஏற்பட்டுள்ள பசித் தீயை அணைக்கச் சூடான தேநீர் போன்ற பானங்களை ஊற்றி வைக்கக் கூடாது. எலுமிச்சை சாறு அல்லது கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போட்டு அரைத்து வடிகட்டிய சாறு போன்றவற்றை 200 மில்லி அளவு நீரில், மிதமான இனிப்புக்குத் தேன் கலந்து குடித்து, பசியின் தீவிரத் தன்மையைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

மீண்டும் பதினோரு மணி சுமாருக் குப் பசி வேகம் காட்டும். இப்போதும் பழச்சாறு அருந்த வேண்டியதில்லை. வெறும் நீர் மட்டுமே குடித்து வயிற்றைச் சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டும். பின்னர் பிரியாணிக்கான நேரத்தில் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், வெறுமே வயிற்றை நிரப்புவதற்கு அள்ளிக் கொட்டாமல் பல்சுவை அடங்கிய பிரியாணியில் பொதிந்து கிடக்கும் ஒவ்வொரு சுவையையும் தனித்து உணரும் வண்ணம், உணவின் ஒவ்வொரு இணுக்கிலும் உமிழ் நீர் கலக்கும்படி நிதானமாக ரசித்து உண்ண வேண்டும்.
அதுவே பிரியாணிக்கும் நம் உடலுக்கும் செய்யும் மரியாதை. இப்படி உண்கிறபோது உண்ணத் தகுந்த உணவின் அளவு, நமக்கு வசப்படும். அளவறிந்து உண்கிறபோது உடலில் எந்த உபாதையும் தோன்றாது.

அதிகரித்து வரும் அறுவை சிகிச்சை பிரசவங்கள்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைப் பிரசவங்கள் நடப்பது கடந்த 16 ஆண்டுகளில் மூன்று மடங்குக்கும் மேலாக அதிகரித்திருப்பதாக வரும் தகவல் நம்மை அதிர வைக்கிறது.

சுகப் பிரசவத்துக்கு வாய்ப்பு இருந்தும் இன் றைக்கு அநேகம் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதையே பெரிதும் விரும்புகிறார்கள். இதனால் ஏற்படும் சிக்கல்களை அறிந்தும் பெரும்பாலான மருத்து வர்களும் அறுவைசிகிச்சை பிரசவத்தையே ஊக்கப்படுத்துகிறார்கள். தவிர்க்க முடியாத சூழலில் மருத்துவக் காரணங்களுக்காக

10-15 சதவீதம் அளவுக்கு அறுவைசிகிச்சைப் பிரசவங்களை அனுமதிக்கலாம் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். ஆனால், இந்திய மருத்துவர்களோ இது 15-20 சதவீதம் இருக்க லாம் என்கிறார்கள்.

எனினும் இப்போது இந்த அளவெல்லாம் கடந்துவிட்டது. தனியார் மருத்துவமனை கள்தான் பணத்துக்காக அதிக அளவில் அறுவை சிகிச்சை பிரசவங்களை ஊக்குவிப்ப தாக எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால், அரசு மருத்துவமனைகளிலும் இப் போது அறுவைசிகிச்சை பிரசவங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன என்கிறார் பெண்கள், பெண் குழந்தைகள் நலன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் பெண் கருக்கலைப்புக்கு எதிரான பிரசார இயக்கத்தின் (சி.ஏ.எஸ்.எஸ்.ஏ) ஒருங்கிணைப்பாளர் பவளம்.

நம்பிக்கைக்கு மாறாக

மத்தியக் குடும்ப நலம், சுகாதார அமைச்சகத் தின் தேசியக் குடும்பநல ஆய்வறிக்கை (என்.எஃப்.ஹெச்.எஸ்) 2015-16-ன் படி, தேசிய அளவில் 17.2 சதவீதமும் தமிழகத்தில் 34.1 சதவீதமும் அறுவைசிகிச்சை பிரசவங்கள் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே 2005-06-ல் முறையே 8.5 மற்றும் 20.3 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது. 2015-16 நிலவரப்படி தேசிய அளவில் 40.9 சதவீதம் தனியார் மருத்துவமனைகளிலும் 11.9 சதவீதம் அரசு மருத்துவமனைகளிலும் அறுவைசிகிச்சை பிரசவங்கள் நடப்பதாக என்.எஃப்.ஹெச்.எஸ். சொல்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை அறுவை சிகிச்சை பிரசவங்களில் 51.3 சதவீதம் தனி யார் மருத்துவமனைகளிலும் 26.3 சதவீதம் அரசு மருத்துவமனைகளிலும் நடப்பதாக அறிக்கை சொல்கிறது. அதேநேரம், தமிழகத் தில் தற்போது 99.8 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய் மார்களுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் அரசின் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் கிடைப்பதால் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

தவறான வழிகாட்டுதல்

இதையும் கள ஆய்வின் மூலம் உறுதிப் படுத்தும் பவளம், குடும்பநலத் துறை அளிக்கும் தகவல்படி 2000-2001-ல் அரசு மருத்துவ மனைகளில் நடக்கும் அறுவை சிகிச்சை பிரசவங்களின் அளவு 14 சதவீதமாக இருந்தது. 2005-06-ல் இது 21.2 சதவீதமாகவும், 2012-13-ல் 42.5 சதவீதமாகவும் உயர்ந்திருக்கிறது. இப்போதைய நிலவரப்படி கடந்த 16 ஆண்டு களில் அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் நடப்பது மூன்று மடங்குக்கும் மேல் அதிகரித்திருக்கிறது.

கடந்த ஆண்டில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் நடந்த பிரசவங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் அறுவைசிகிச்சை பிரசவங்கள். மருத்து வர்களின் தவறான வழிகாட்டுதல்களே அரசு மருத்துவமனைகளிலும் அறுவைசிகிச்சை பிரசவங்கள் அதிகரிக்கக் காரணம். இது, பிரசவிக்கும் தாய்மார்களுக்கும் குழந்தை களுக்கும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத் தும் என்பது குறித்துப் போதிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசு மேற்கொள்ள வேண் டும் என்கிறார்.

ஏன் அறுவை சிகிச்சை?

அறுவைசிகிச்சைப் பிரசவங்களின் தாக்கம் குறித்து அறுவைசிகிச்சை பிரச வங்கள் இப்போது நவீன முறையில் கையாளப் படுவதால் முன்புபோல சிக்கல் எதுவும் இல்லை. சுகப்பிரசவங்களின்போது கடைசி நேரத்தில் ஏற்படும் சிக்கல்களால், பிறக்கும் குழந்தைக்கு மூளையில் பாதிப்பு உள்ளிட்ட குறைபாடுகள் நிகழ வாய்ப்பிருக்கிறது. இவற்றைத் தவிர்க் கத்தான் பெரும்பாலானவர்கள் அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எனினும், அறுவைசிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகள் உடல் பருமன், ஒவ்வாமை, டைப் 1 நீரிழிவு நோய் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகவும் தாய்மார்களும் சில சங்கடங்களை எதிர்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் வெங்கடேசன்.

தமிழக மாவட்டங்களில்தான் அறுவை சிகிச்சை அதிகம்

உலகச் சுகாதார நிறுவனம் 2010-இல் 137 நாடுகளில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அவற்றில் பாதிக்கும் மேலான நாடுகள் 2008-இல் மட்டும்
ரூ.230 கோடியை அவசியமற்ற அறுவை சிகிச்சை பிரசவங்களுக்காகச் செலவழித்திருப்பது ஆய்வில் தெரிந்தது.

2014-15-இல் எடுக்கப்பட்ட ஆய்வின்படி இந்தி யாவில் 35 மாவட்டங்களில் அறுவைசிகிச்சை பிரசவங்கள் அதிக அளவில் நடப்பதாகத் தகவல் உள்ளது. இதில் 12 மாவட்டங்கள் தமிழகத்தையும் 9 மாவட்டங்கள் மேற்கு வங் கத்தையும் சேர்ந்தவை.

இந்தியாவில் 2015-16 நிலவரப்படி எட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் நடப்பதாக மத்தியக் குடும்ப நல அமைச்சகம் சொல்கிறது. தேசிய அள வில் மிகக் குறைந்த அளவாகத் நாகலாந் திலும் (5.8 சதவீதம்), மிக அதிக அளவாக தெலங்கானாவிலும் (58 சதவீதம்) அறுவை சிகிச்சைப் பிரசவங்கள் நடக்கின்றன


செவ்வாழை பழத்தில் உள்ள மருத்துவக் குணங்கள்..!

திருமணமான இணையர்கள் குழந்தை பேறு பெற செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத இணையர், தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

பல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner