எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குளியலே சிகிச்சைதான்!

சிகிச்சை என்பது மாத்திரைகள், மருந்துகள், தெரபிக்கள் மட்டுமே அல்ல. அன்றாட வாழ்வில் நாம் செய்துகொண்டிருக்கும் சின்னச்சின்ன விஷயங்களிலேயே ஆச்சரியப்படத்தக்க பல மருத்துவ குணங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த ஆச்சரியப்பட்டியலில் ஒன்று குளியல். தினசரி கடமைகளில் ஒன்றாக செய்துவரும் குளியலின் பின்னால் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

* சருமம், நுரையீரல், மலக்குடல், சிறுநீரகப்பை  என நான்கு முக்கியமான கழிவு நீக்க உறுப்புகள் நம் உடலில் உள்ளன. இவற்றில் சருமத்தில் உள்ள கழிவுகளை நீக்குவதுதான் குளியலின் முக்கிய நோக்கம்.  நம் உடலில் முக்கால் பாகம் நீரால் வடிவமைக்கப்பட்டது. உடலின் அனைத்து செல்களிலும்  நீர் ஏதாவது ஒருவடிவில் அமைந் துள்ளது. இவ்வாறு உடலில் அமைந்துள்ள நீர், சீரான வளர்சிதை மாற்றம், உடல் உஷ்ண கட்டுப்பாடு, உடல் இயக்கத்துக்கான ரத்த உற்பத்தி என  பல்வேறு விதமான செயல்களுக்குப் பயன்படுகிறது.

* உடலின் முக்கிய செயல்களின் பின்னணியில் இருக்கக் கூடிய, உடலுக்குள் இருக்கும் நீரானது உடல் சூடு, ரத்தத்தில் கழிவுகள் தேக்கம் போன்றவற்றால் நோய்வாய்ப்பட்டு விடுகிறது. பிரச்சினைக்குரிய உட்புற நீரை வெளியேற்றி சுத்தம் செய்வதற்கு குளியல் மிகவும் அவசியமாகிறது.

* அதிகாலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் குளிப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் நோய் நொடியற்று வாழ்கிறார்கள். இதற்கு காரணம் இருக்கிறது. இரவில் நிகழக்கூடிய உடலின் வெப்ப உயர்வை அதிகாலை குளியல் போக்கிவிடுகிறது. ரத்தக்குழாய்களையும் நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிப்பதால் ரத்த ஓட்டம் சீராகி, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கிறது.

* அதிகாலை குளியலின்போது சருமங்களின் துவாரங்களின் மூலமாக நல்ல காற்றோட்டம் மற்றும் பிராண பரிமாற்றங்கள் நிகழ்வதாலும் உடல் உள்ளுறுப்புகள் புத்துணர்வு பெறுகிறது. மூளை விழிப்படைந்து ஞாபகத்திறனும் மேம்படுகிறது.  பொதுவாக குளிர்ந்த நீரில் குளிப்பதே நல்லது. குளிர்ந்த நீரில் குளிக்கும்போதுதான் ரத்த ஓட்டம் தூண்டப்படும். இதற்கு மாறாக சுடுநீரானது ரத்த ஓட்டத்தின் செயல்பாட்டைக் குறைக்கிறது. சுடுநீரில் குளித்த பிறகு தூக்கம் வருவது போன்ற உணர்வுக்கு இதுதான் காரணம்.

* பக்கவாதம், முடக்குவாதம்,ஒற்றைத்தலைவலி, நரம்புத் தளர்ச்சி, ரத்தசோகை, தூக்கமின்மை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் 5 நிமிடம் சுடுநீரில் குளித்துவிட்டு, பிறகு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அப்போது நோய் பாதிப்பு கட்டுக்குள் வரும். பாதிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் சுடு தண்ணீரில் குளிக்கலாம்.

* குளிரைத் தாங்கும் திறன்7 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்குக் குறைவாக இருக்கும். அதனால், மிதமான சூடு உள்ள தண்ணீரில் குளிக்க வைப்பதே சரியானது. வயது ஏற ஏற தண்ணீரில் வெப்பத்தைக் குறைத்து குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கலாம். இந்த முறையைப் பின்பற்றினால் குழந்தைகளின் நரம்பு மண்டலம் வலுப்படும். படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் மாறும்.

அலட்சியம் வேண்டாம்... கவனம் தேவை

குழந்தைகளுக்கோ கணவருக்கோ ஏதேனும் பிரச்சினை என்றால் துடித்துப் போவார்கள் பெண்கள். அதுவே தமது உடலில் ஏதேனும் பிரச்சினை என்றால் முடிந்தவரை அலட் சியப்படுத்துவார்கள்.போதிய ஊட்ட முள்ள உணவு, தூக்கம் துறப்பது மட்டுமின்றி, ஆரோக் கியத்திலும் அலட்சியத்தைக் காட்டும் அவர்களுக்கு உடலில் தெரிகிற சில அறிகுறிகள் ஆபத்தான பிரச்னைகளுக்கான எச்சரிக்கை மணி என்பது புரிவதில்லை. அப்படி அலட்சியம் செய்யக்கூடாத அவசிய அறிகுறிகள் பற்றித் தெளிவாக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

கை, கால்களில் ஏற்படுகிற பலவீனம் நூற்றுக்கு 90 பெண்கள் அலட்சியம் செய்கிற விஷயம் உடல் பலவீனம். குறிப்பாக கை, கால்களில் ஏற்படுகிற அசதி மற்றும் வலிகளை அதிக வேலை செய்ததன் விளைவுகளாக நினைத்துக் கொண்டு அலட்சியம் செய்வார்கள். கை, கால்களில் ஏற்படுகிற சோர்வோ, மரத்துப் போகிற உணர்வோ, முகத்தில் ஒரு பக்கம் மரத்துப் போவதோ பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். நிலை தடுமாறுவது, தலைசுற்றல், நடப்பதில் சிரமம் போன்றவையும் பக்கவாதத்தின் அறிகுறிகளே.

பேசுவதில் குழப்பமோ, கடுமையான தலைவலியோ, மேற்சொன்ன அறிகுறிகளோ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். குறிப்பாக அடிக்கடி தாங்க முடியாத தலைவலி வந்தால் டென்ஷன், சைனஸ் என அதற்கு நீங்களே காரணம் சொல்லித் தட்டிக் கழிக்காமல், ஏதோ பிரச்னையின் அறிகுறி என உஷாராகுங்கள். பக்கவாதம் ஏற்பட்ட அடுத்த நான்கு மணி நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால், முழுமை யாகக் குணப்படுத்திவிட முடியும்.காரணமற்ற உடல்வலிதினமும் தலை முதல் கால் வரை ஏதோ ஒரு இடத்தில் வலியை உணர் வார்கள் பல பெண்களும். ஆனாலும் எதையுமே முக்கியமாக நினைக்க மாட்டார்கள். பொறுத்துக் கொள்ள முடியாத வலி என்றால் வலி நிவாரணியை விழுங்கித் தற்காலிகமாக நிவாரணம் தேடிக் கொள்வார்கள். அதையும் தாண்டி வலித்தால் மட்டுமே மருத்துவரிடம் செல்வார்கள்.

ஃபைப்ரோமயால்ஜியா என்கிற வலியாக இருந்தால் அதை வலி நிவாரண மருத்துவர்களால் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். எனவே, ஒரு மருத்துவரிடம் சென்று உடலில் பிரச்னையே இல்லை என சத்து மாத்திரை களைக் கொடுத்தும் வலி குறையவில்லை என்றால் வலி நிவாரண சிறப்பு மருத்துவரைப் பார்க்க வேண்டும்.நெஞ்சுவலி பெண்களுக்கு அரிதாகவே மாரடைப்பு வரும் என்கிற நிலை மாறி, இன்று ஆண்களுக்கு இணையாகஅவர்களுக்கும் அதிகளவில் ஹார்ட் அட்டாக் வருகிறது.உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. நெஞ்சுவலி, அதனுடன் அசாதாரண வியர்வை, வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை இருந்தால் இன்னும் அதிக எச்சரிக்கை அவசியம். இந்த அறிகுறிகள் எல்லாம் இதய நோய் மற்றும் மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.

தவிர இவை உடலில் ஏற்பட்டுள்ள வேறு பிரச்சினைகளுக் கான எச்சரிக்கை மணியாகவும் இருக்கலாம். உதாரணத்துக்கு, நுரையீரலை நோக்கி ரத்தக்கட்டி நகரும் போதும் இப்படி ஏற்படலாம். திடீரென இதயமே கனத்த மாதிரி உணர்வது, சில நிமிடங்கள் நீடித்து மறைவது, அடிக்கடி இப்படி ஏற்படுவது போன்றவை அலட்சியம் செய்யப்பட வேண்டியவை அல்ல.முழங்கால் வலி மற்றும் களைப்புஇதுவும் டீப் வெயின் த்ராம் போசிஸ் என்கிற பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். நீண்ட நேரம் கால்களை ஒரே நிலையில் வைத்தி ருப்பது, பல நாட்கள் படுக்கையில் இருப்பது போன்றவற்றின் விளைவால் இது ஏற்படலாம்.

ரத்தக் கட்டாக இருந்தால் நடக்கும்போதும் நிற்கும்போதும் வலி அதிகமாக இருக்கும். வீக்கமும் தெரியும். காலின் ஒரு பகுதி சிவந்து, வீக்கத்துடன், இன்னொரு காலை விட சற்றே பெரிதாகத் தெரியும்.

பொதுவாக உடற்பயிற்சி செய்த பிறகு இப்படி ஏற்படுவது சகஜம். ஆனால், மற்ற நேரத்திலும் இருந்தால்தான் அலர்ட் ஆக வேண்டும். ரத்தக்கட்டாக இருந்தால் அது வெடித்து தீவிரமான பிரச்னையில் முடிவதற்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.சிறுநீரில் ரத்தக் கசிவுசிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுவதும் வலிப்பதும் சிறுநீரகக் கற்கள் உருவாகியிருப்பதன் அறிகுறிகளாக இருக்கலாம். அதை அதற்கான பரிசோதனைகளின் மூலம் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.சிறுநீருடன் ரத்தம் வெளியேறுவது மட்டுமின்றி, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வும், அடக்க முடியாத நிலையும் ஏற்படுவது தொற்றின் காரணமாகவும் இருக்கலாம். சிலருக்கு இத்துடன் காய்ச்சலும் சேர்ந்து கொள்ளும். அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுவது, தாமாக ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்வது போன்றவை, அந்தப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வைத் தராது. மாறாக, சிறுநீரகப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். எனவே... கவனம் தேவை.

கறிவேப்பிலை இலையின் மருத்துவ குணங்கள்

வைட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன் றவை கறிவேப்பிலையில் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் இவை:

* கொழுப்புகள் கரையும்

காலையில் வெறும் வயிற்றில் 15 கறி வேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

* ரத்த சோகை

ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறி வேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.

* சர்க்கரை நோய்

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட வர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

* இதய நோய்

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்ச னையில் இருந்து பாதுகாப்பு தரும்.

* செரிமானம்

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சினையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

* சளித் தேக்கம்

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner