எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நடுத்தர வயது ஆண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக உண்டாகும் பல்வேறு நோய்கள் மற்றும் ஹார்மோன் பிரச்சினைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

எலும்புகளின் வலிமைக்கு கால்ஷியம் மிகவும் முக்கியம். அந்த கால்ஷியம் சத்து உடலில் கலக்க வைட்டமின் டி சத்து மிகவும் அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்தை 'காப்பாற்றுவதை தாண்டி 'வைட்டமின்-டி'க்கு பல முக்கிய பணிகள் உண்டு. அதுவும் ஆண்களுக்கு நீரிழிவு வராமல் தடுப்பதில் தொடங்கி, குழந்தையின்மையைத் தவிர்ப்பது வரை இதில் அடக்கம்.

எலும்புகளில் மட்டுமின்றி, உடல் திசுக்கள் பலவற்றிலும் இந்த வைட்டமின் இருப்பதும், மூளையின் பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி, கணையம் போன்றவற்றிலும்கூட இருக்கிறது. ஆண்களுக்கு உயிரணு உற்பத்திக் குறைபாட்டுக்கும், அந்த அணுக்களின் தரக் குறைவுக்கும்கூட வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி.

வைட்டமின் டி சத்தில் குறைபாடு ஏற்பட்டுவிட்டால் அது உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்காக செயல்படும் ஹார்மோன்களின் சீரான சுரப்பை குறைத்து விடுவதுடன் நாளாவட்டத்தில் உடல் தசை சரிவடைந்து பலவீனமடையச் செய்துவிடும் என்று அந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக உடலில் உள்ள சத்துக்களை இழந்து, உடல் இயக்கப் பிரச்சினை ஏற்பட்டு, வயது ஏறும் போதே வலுவிழந்து, உடல் பகுதிகளில் பாதிப்படைந்து ஒரு கட்டத்தில் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்று அச்சுறுத்துகிறது இந்த ஆராய்ச்சி. உலகம் முழுவதும் பலவீனம் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது என்கிறார் அக்னிஸ்கா ஸ்விகிக்கா.

எலும்பு அடர்த்தி மற்றும் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி மிகவும் அத்தியாவசியமானது என்கிறார். மேலும் தசை உட் சேர்க்கைக்குரிய அனபாலிக் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டுவிட்டால் உடல் அதிகமாக பலவீனம் அடைந்துவிடும்.ஆண்களில் வயதான வர்களிடம் காணப்பட்ட குறைந்த அளவு டிஹைட்ரோஎபியன் டோஸ்டிரோன் ஹார்மோன் அவர்களை அதிக அளவு பலவீனப் படுத்துகிறது.

இத்தகைய ஆராய்ச்சிகள் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் பொருந்தாது. இன்னும் சில தீவிர ஆய்வுக்குப் பிறகே இதனைப் பற்றி முழுமையாகக் கூற முடியும். ஆனால் வைட்டமின் டி சத்து குறைவு நடுத்தர வயது ஆண்களையும் முதியோர்களையும் நிச்சயம் கடுமை யாக பாதித்துவிடும் என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அக்னிஸ்கா ஸ்விகிக்கா

இந்த ஆய்வு முடிவு ஆர்லாண்டோவில் எண்டோக்ரைன் சொசைட்டியின் 99ஆம் ஆண்டு  விழா நடைபெற்ற எண்டோ 2017 கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

இத்தனை அவசியமான இந்த வைட்டமினை நம் உடலே உற்பத்தி செய்கிறது. சூரிய வெளிச்சத்தில் உள்ள புற ஊதா கதிர்கள், ஒரு வித ஹார்மோனின் தூண்டுதலின் உதவியுடன், டீஹைட்ரோ கொலஸ்ட்ரால் என்பதை சில வேதியல் மாற்றங்கள் செய்து, வைட்டமின் டியாக மாற்றித் தருகின்றன.

தேவையான அளவு வைட்டமின் டி அளவுகள் உணவுமுறையில் சேர்த்தல் மற்றும் அல்லது சூரிய ஒளி வெளிப்பாடு ஆகியவற்றின் மூலம் பெற முடியும். வைட்டமின் 2வை விட விரைவாக உறிஞ்சப்படக் கூடிய வைட்டமின் 3 (கோல்கேல்சிஃபெரால்) என்பதே விரும்பப்படும் வடிவமாகும். காளான், மீனின் சதை (சல்மான், டியூனா மற்றும் மாக்கரெல்) மற்றும் மீனின் குடல் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் டி அதிக அளவில் இருக்கும் எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்கு மேல் அடிக்கடி கை, கால் வலி, எலும்பு வலி, உடல் வலி போன்றவை இருந்தால் உடனே மருத்துவரை நாடி வைட்டமின் டி சத்துக் குறைபாடு இருக்கிறதா என ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி குறைபாடு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டாலும் கவலை வேண்டாம்.  இதற்கான சிகிச்சையை உடனே மேற்கொண்டு இரண்டு அல்லது மூன்று மாதங்களில் குணமாக்கிவிடலாம். தினமும் 20 நிமிடங் களாவது சூரிய வெளிச்சம்படும்படி இருப்பது மிகவும் நலன் பயக்கும்.

'அல்ஷைமர்ஸ்' நோயைத் தடுக்க இதைச் சாப்பிடுங்க!

ஒமேகா - 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் 'அல்ஷைமர்ஸ்' நோய்க்கு நோ என்ட்ரி சொல்லி விடலாம் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. காரணம் ஒமேகா-3 நினைவாற்றல் செல்களை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக்க உதவுகிறது, அதனால் 'அல்ஷைமர்ஸ்' நோய் பாதிப்புக்களிலிருந்து தப்பலாம் என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவு.

'அல்ஷைமர்ஸ்' என்றாலே அது கொஞ்சம் கொஞ்சமாக ஞாபக சக்தியை இழக்கச் செய்து ஒரு கட்டத்தில் நாம் யாரென்றே மறக்கச் செய்துவிடும் அளவுக்கு கொடுமையானது. நினைவாற்றல் மற்றும் மூளைத் திறனை முற்றிலும் பாதிப்படையச் செய்துவிடும் நோய் அது. இந்த நோயைத் தடுக்க ஒமேகா - 3 கொழுப்பு அமிலம் மத்தி, நெத்திலி, கெளுத்தி மற்றும் சால்மன் வகை மீன்களில் உள்ளது. சைவத்தில் ப்ளக்ஸ் விதை, வால்நட், சோயா பீன்ஸ் மற்றும் புதினா ஆகியவற்றில் காணப்படுகின்றது.  மூளையின் ஆரோக்கியத்துக்கு இந்த சத்து மிகவும் அவசியம்.இந்த ஆராய்ச்சியில் ஒமேகா 3 ணிறிகி+ஞிபிகி  யின் நிலை, மூளை திரவ நிலை மற்றும் மூளையின் அறிவாற்றல் நிலை ஆகியவற்றை ஒன்றிணைத்து சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கிறது இந்த ஆய்வு.

மருந்து மாத்திரைகள் மூலமாகவும் ஒமேகா 3 பெற முடியும். மீனில் இருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெய் மாத்திரைகளில் ஒமேகா 3 இருக்கிறது. ஆனால் உணவின் வாயிலாகக் கிடைக்கும் சத்து தான் மிகவும் நல்லது. காரணம் உணவுடன் சேர்ந்து  மற்ற ஊட்டச் சத்துகளும் கிடைத்துவிடும். கருவுற்ற வர்கள் தேவையான அளவு ஒமேகா - 3  எடுத்துக் கொள்ளாத பட்சத்தில்  பிறக்கும் குழந்தைகள் கவனக்குறைபாட்டுப் பிரச்னைக்கு ஆளாகலாம். கருவுற்ற காலத்தில் ஒமேகா-3 உணவுகளை சாப்பிட்ட பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் புத்திக்கூர்மையுடன் இருப்பதும் முந்தைய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒமேகா - 3 உணவு உட்கொண்டவர்களின் செய்த வேலைகள் அறிவாற்றலுடன் இருந்தது. நவீன கண்டுபிடிப்பான SPECT (Single photon emission computed tomography)   எனும் இமேஜிங் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மூளைபற்றிய ஆராய்ச்சியை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இதில் உடலில் ஒமேகா-3 சத்து அதிகமுள்ள 166 நபர்கள் பங்கேற்றனர். அவர்களின் அறிவாற்றல் திறன், மூளையின் ரத்த ஓட்டம் மற்றும் நரம்பியல் சோதனைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஜர்னல் ஆஃப் 'அல்ஷைமர்ஸ்டிசீஸ்' எனும் பத்திரிகையில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. ஒமேகா - 3 கொழுப்பு அமிலத்தால் மன நலன் மேம்படுகின்றது என்றும் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.

ஓடுங்கள்! ஆடுங்கள்!
மன அழுத்தம் குறையும்!   

ஏரோபிக்ஸ் தொடர்ந்து செய்வதால் மனநலம் மற்றும் மூளைத் தொகுதியின் அளவு அதிகரிக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

லேசான மனநல குறைபாடுகள் உள்ளவர்கள் சில ஏரோபிக் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நல்லதொரு மாற்றத்தைக் காண்பார்கள். வேகமான சுறுசுறுப்பான நடை, ஓட்டம், ஜாகிங் அல்லது நீச்சல் பயிற்சி போன்றவற்றை வாரத்தில் நான்கு முறை கடைப் பிடித்தார்கள் எனில் அவர்களின் மூளைத் தொகுதி அதிகரிக்கும். அதனால் அவர்களின் செயல் திறனும் மேம்படும். நினைவாற்றல் திறன், சிந்திக்கும் திறன், அல்ஜீமர், டிமென்ஷியா போன்ற பாதிப்புள்ளவர்கள் நிச்சயம் ஏரோபிக்ஸ் பயிற்சிகளை செய்ய வேண்டும். அது அவர்களுக்கு கவனிக்கத்தகுந்த வகையில் நல்ல மாற்றங்களை தரும் என்கிறது அந்த ஆய்வு.  மற்றவகை உடற்பயிற்சிகளை செய்வது நல்லதுதான், ஆனால் ஏரோபிக் பயிற்சி அதைவிட பலன்களை அதிகமாகத் தரக்கூடியது என்கிறது இந்த ஆராய்ச்சி. அதிலும் மந்தமாக இருப்பவர்களுக்கு இது அருமருந்தாக செயல்படும் எனலாம் என்கிறார் அமெரிக்க வேக் ஃபாரஸ்ட் பல்கலை கழகப் பேராசிரியர் ஜீயாங்சுல் கிம்.

இந்த ஆய்வில் லேசன மனநல பாதிப்புடைய 35 நபர்கள் பங்கேற்றார்கள். முதலில் இரண்டு குழுக்களாக அவர்கள் பிரிக்கப்பட்டார்கள்.  இதில் ஏரோபிக் பயிற்சி செய்தவர்கள் மற்றும் ஸ்ட்ரெச்சிங் செய்தவர்கள் ஆகிய இரண்டு பகுதியினரின் மூளைத் தொகுதியும் கவனிக்கத்த அளவில் அதிகரித்திருந்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் எனில் சாம்பல் நிறப் பருப்பொருள் பகுதிக்கு   மற்றும் நெற்றிப் பொட்டு மடல்கள் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றேம் காணப்பட்டது. இது குறுகிய கால நினை வாற்றல் திறனுக்கு உதவும் மூளையின் பகுதிகளாகும். இதில் முக்கியமாக கருத வேண்டியது ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்தவர்களை விட ஏரோபிக்ஸ் பயிற்சி செய்தவர்களின் மூளைத் தொகுதி அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner