எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நாம் தினமும் உண்ணும் உணவில், காய் மற்றும் கனிகளுக்கு பிரதான பங்கு இருக்கிறது. அதிலும் அன்றாடம் காய்கறி சேர்க்காமல் நாம் உணவு சமைப்பதில்லை. அந்த வகையில் காய்களுக்கு, தனி பெருமை உண்டு என்றே சொல்லலாம். ஒவ்வொரு காயிலும் ஒவ்வொரு விதமான சத்து உண்டு.

பொதுவாக ஆரஞ்சு போன்ற புளிப்பான பழங்களில் தான் வைட்டமின் சி அதிகமாக இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், குறைந்த அளவே விரும்பப்படும் முட்டைக்கோசில், ஆரஞ்சு பழங்களை விட வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது . முட்டைக்கோசில்,  தொற்று நோயை எதிர்த்துப் போராடும் சல்ஃபர் அதிக அளவில் இருப்பதால், தினமும் சிறிதளவு முட்டைக்கோசை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்த வியாதியும் நம்மை அணுகாமல் பார்த்துக்கொள்ளும்.
இதில் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது. மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்து, அதனால் மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலின் உட்பாகத்தில் சிறு கட்டிகள் தோன்றி, அதை நாம் கவனிக்காமல் போனால் அதுவே புற்று நோயாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது. முட்டைக்கோசை சாப்பிட்டால் அம் மாதிரியான கட்டிகள் கூடக் கரைத்து விடக்கூடும்.

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து, தாதுகள், வைட்டமின்கள் போன்ற எல்லாமே இதில் அடங்கியிருக்கிறதாம். ஒரு கப் சமைக்கப்பட்ட முட்டைக்கோசில், முப்பத்து மூன்று கலோரிகள் மட்டுமே இருப்பதால் உடல் எடையும் கூடாது. இந்தக் காயில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்கக் கூடியது. ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. அதனால் ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன.

கண் பார்வையை கூர்மையாக இருக்க வைப்பதோடு, காட்டராக்ட் எனப்படும் கண்புரை வருவதையும் தவிர்க்கிறது. சிலருக்கு இளம் வயதிலேயே முதுமையின் சாயல் தெரியத் தொடங்கும். தோலில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள், தோலின் நிற மாற்றம் ஆகியவைத் தோன்றத் தொடங்கும். அவை உண்டாகாமல் இருக்க முட்டைக்கோஸ் நல்ல ஒரு மருந்தாகும்.

மிக மிக முக்கியமாக அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய் உள்ளவர்கள் முட்டைக்கோசை தினமும் உணவில் சேர்த்துவந்தால், மறதி நோயிலிருந்து முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு நிவாரணம் பெறலாம் என்று மருத்துவர்களே கூறுகிறார்கள்.

சல்ஃபர், வைட்டமின் சி இரண்டுமே முட்டைக்கோசில் நிறைந் திருப்பதால், இதை உண்பதன் மூலம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், முடக்கு வாதம் இவற்றிலிருந்தும் தப்பித்துக்கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல,  பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் சத்துக் களை, இந்தக் காய் உள்ளடக்கி இருப்பதால், எலும்புகள் வலு வூட்டப்படுகின்றன.

ஒரு சாதாரண கோசில், இவ்வளவு மருத்துவத் தன்மைகள் இருக்கின்றன. அதனால் அதை பொரியலாகவோ, கூட்டாகவோ, சாலட் ஆகவோ தினசரி உணவில் எந்த வகையிலாவது சேர்த்துக் கொள்வது நல்லது.

முக்கியமாகச் சிறு வயது முதலே குழந்தைகளுக்கு முட்டை கோசை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்துவது எதிர்காலத்தில் மிகுந்த நன்மையைத் தரும்.


டெங்கு - சில தகவல்கள்

1) ஏடிஸ் எகிப்தி என்ற ரக கொசுவே டெங்கு வைரசை மனிதர்களிடையே பரப்புகிறது.

2) ஏடிஸ் கொசு கறுப்பு நிறத்தில், சிறகுகள் மற்றும் கால்களில் வெள்ளை புள்ளிகளுடன் இருக்கும்.

3) பெண் கொசு மூலம்தான் டெங்கு நோய் பரவும்.

4) காலை மற்றும் மதிய நேரத்தில் மட்டுமே ஏடிஸ் கொசு கடிக்கும்.

5) டெங்கு பாதித்தவரை கடித்த கொசு, பாதிப் பில்லாதவரை கடிக்கும்போது காய்ச்சல் பரவும்.

6) தண்ணீர், காற்று மூலம் பரவாது.

7) டெங்கு பாதித்தவரின் இருமல், தும்மல், எச்சில் போன்றவற்றால் பரவுவதில்லை.

8) காய்ச்சல் ஏற்பட்டால் உடலின் வெப்பம் 104 டிகிரி பாரன் ஹீட் வரை உயரும்.

9) தலைவலி, தசைவலி, கண்வலி, வாந்தி உடலில் அரிப்பு, மூட்டுவலி போன்றவை இதன் அறிகுறி களாகும்.

10) பெரும்பாலானோருக்கு நோய் பாதிப்பு ஏற் பட்ட ஏழு நாட்களுக்குள் சரியாகும்.

11) சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோச மான பாதிப்பை ஏற்படுத்தும்.

12) குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

13) டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்ட ணுக்களை அழித்துவிடும்.

14) தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 3,00,000 வரை இருக்க வேண்டும்.

15) டெங்கு காய்ச்சல் வந்தால் தட்டணுக்களின் எண்ணிக்கை  20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்து விடும்.

16) நுரையீரல், வயிறு, பல் ஈறு, சிறுநீர்ப் பாதை யிலும் ரத்தக் கசிவு ஏற்படும்.

17) உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் மரணம் நேரிடும்.

18) காய்ச்சல் ஏற்பட்டவுடன் டெங்குவை உறுதி செய்ய இயலாது.

19) மூன்று நாட்களுக்குமேல் காய்ச்சல் நீடித்தால் பரிசோதனை செய்ய வேண்டும்.

20) ரத்தப் பரிசோதனை மூலம் டெங்கு இருப்பதை கண்டு பிடிக்க முடியும்.  


டெங்குவுக்கு நிலவேம்புக் குடிநீர்: தெரிந்ததும் தெரியாததும்!

டெங்குவால் நிரம்பி வழிகின்றன தமிழக மருத்துவ மனைகள். இதற்கு சரியான தீர்வு நிலவேம்புக் குடிநீர் - சிறந்த மருந்துதான். அதேநேரம், நிலவேம்புக் குடிநீரை எடுத்துக்கொள்வதிலும் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. அது குறித்த கேள்வி களுக்கு சித்த மருத்துவர் குழுவின் பதில்கள் இவை:

நிலவேம்புக் குடிநீரை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?

டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் இந்தச் சூழலில், டெங்குவாக இருந்தாலும் சரி அல்லது சாதாரணக் காய்ச்சலாக இருந்தாலும் சரி, முதல் நடவடிக்கையாக நிலவேம்புக் குடிநீரை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்புக் குடிநீர் கொடுக்கக் கூடாது. 3 முதல் 12 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு 15 மி.லி. முதல் 30 மி.லி.வரை மருத்துவர் அறிவுரையின்படி கொடுக் கலாம். பெரியவர்கள் 60 மி.லி. வரை எடுத்துக் கொள்ளலாம். காலை மாலை என இரு வேளையும், தொடர்ந்து 5 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இது பக்கவிளைவுகள் அற்றது.

நிலவேம்புக் குடிநீர் எடுத்துக்கொண்ட முதல் மூன்று நாட்களுக்குப் பிறகும் காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி போன்றவை இருந்தால், உடனடியாக அருகிலுள்ள அரசு, தனியார் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதிக்கவும். அதை விடுத்து, சுய மருத்துவமாக நிலவேம்புக் குடிநீரை மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கக் கூடாது.

கர்ப்பிணிகள், பாலூட்டும் அம்மாக்கள் என எல் லோரும் நிலவேம்புக் குடிநீரை எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு, புற்றுநோய் போன்ற இதர நோய் பாதிப்புகள் உடையவர்கள், மருத்துவர் பரிந்துரையுடன் நிலவேம்புக் குடிநீரை எடுத்துக்கொள்ளலாம். மாத விடாய் காலத்தில் டெங்கு ஏற்பட்டால், வழக்கத்தை விட அதிக உதிரப் போக்கு இருக்கும். எனவே, அந்தக் காலத்தில் உடல் வலி, காய்ச்சல் ஆகியவையும் இருந்தால் அலட்சியமாக இருந்துவிடாமல், உடனடியாக மருத்துவமனைக்குச் செல் லவும்.

நிலவேம்புக் குடிநீரை எந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்?

கடைகளில் நிலவேம்புக் குடிநீர் பொடி என்கிற பெயரில் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்பு விற்கப் படுகிறது. அவற்றுக்கு பதிலாக நிலவேம்புக் குடிநீர் சூரணமே சிறந்தது. இது இம்ப்காப்ஸ் மருந்துகள் விற்பனை செய்யப்படும் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும்.

அந்தச் சூரணத்தை இரண்டு கரண்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதை இரண்டு டம்ளர் தண்ணீரில் கலக்க வேண்டும். பிறகு அடுப்பை சிம்மில் வைத்துச் சூடுபடுத்தி, அரை டம்ளராக வற்ற வைத்த பிறகே குடிக்க வேண்டும். சுமார் மூன்று அல்லது நான்கு மணி நேரம் மட்டுமே இந்த மருந்தின் தாக்கம் இருக்கும் என்பதால், உடனே குடித்துவிடுவது நல்லது. காலையில் தயாரித்துவிட்டு, மாலையில் குடிக்கலாம் என்கிற மெத்தனம் வேண்டாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner