எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நெல்லிக்காயின் மகத்துவத்தையும், மருத்துவத்தையும் அறிந்து கொள்வோம். நெல்லிக்காய் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. கல்லீரலை பலப்படுத்துகிறது.

குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கை கட்டுப்படுத்துகிறது. மேலும் நெல்லிக்காய் எலும்புகளை பலப் படுத்தி அஜீரண கோளாறுகளை போக்கி செரிமானத்தை தூண்டக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது. ஆயுளை அதிகரிக்கக்கூடியதாக விளங்கும் நெல்லி மொத்தத்தில் ஆரோக்கிய உணவாக பயன்படுகிறது. பதப்படுத்தி வைத்தும் பயன்படுத்தலாம். இயற்கையின் கொடையான நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நோயின்றி வாழமுடியும்.

நெல்லிக்காய் அபரிமிதமான சத்துக்களை உள்ளடக்கியது. குறிப்பாக வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை கொண்டது. பசியை தூண்டக்கூடியது. எளிதில் கிடைக்கக்கூடியது. பல்வேறு பயன்களை தரும் இந்த நெல்லிக்கனியின் மூலம் கல்லீரலை பலப்படுத்தி பசியை தூண்ட உதவும் மருத்துவம் குறித்து தெரிந்து கொள்வோம்.

இதற்கு  தேவையான அளவு நெல்லிக்காய் எடுத்து கழுவி சுத்தம் செய்தபின் அதனை வேகவைத்து கொட்டை நீக்கி விழுதாக அரைத்து  ஒரு பாத்திரத்தை சூடாக்கி அதில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து அது காய்ந்ததும் அதில் கடுகு பெருங்காயம் போட்டு வெடித்ததும் நெல்லி விழுது சேர்த்து கிளறி அதில் மஞ்சள், வெந்தயம், கடுகு, மிளகாய் பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கினால் நெல்லிக்காயின் ஈரப்பசை போய் எண்ணெய் வெளியேறும் பதம் வரும். இதை ஆறவைத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்து பயன்படுத்தலாம். தினமும் இதை ஒரு டீஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டுவர பசியை தூண்டும். செரிமானக்கோளாறுகளை போக்கும். மேலும் இது கல்லீரலை பலப்படுத்தும் சிறந்த மருந்தாகும். இதனை இனிப்பு சேர்த்தும் செய்யலாம்.

இது நோய்எதிர்ப்பு சக்தி அளிக்கவல்லது. நெல்லிக்காய் ஊறுகாய் தயாரித்தும் பயன்படுத்தலாம். தேனில் ஊறவைத்து தேன்நெல்லிக்காய்களாகவும் குழந்தைகளுக்கு கொடுத்துவரலாம். உடனடித்தேவையாக நெல்லிக்காயை பயன்படுத்த இதனை வேகவைத்து மசித்து கெட்டி தயிருடன் கலந்து அதில் உப்பு சேர்த்து கடுகு, உளுந்து, பச்சை அல்லது காய்ந்த மிளகாய் தாளித்து பச்சடியாக உணவுடன் சேர்த்து கொள்ளலாம். இதனால் வயிற்று போக்கு கட்டுப்படும். வெள்ளைப்போக்கையும் இது கட்டுப்படுத்துகிறது.

வாத நோயை விலக்கி வைக்கலாம்

வாதநோய், முதுமை யானவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூளை - நரம்பியல் நோய். உலகில் அதிகமானோர் இறப்பதற்கு இரண்டாவது காரணமாக வாதநோய் இருக்கிறது.

உலகில் ஒவ்வொரு அய்ந்து விநாடிக்கும் ஒருவர் வாதநோய் காரணமாக இறக்கிறார். இந்தியாவில் ஆண்டுக்கு லட்சம் பேரில் 140 பேர் வாதநோயால் பாதிக்கப்படுகின்றனர். தினமும் இந்தியாவில் 1,800 பேர் வாதநோய், அதன் விளைவால் இறக்க நேரிடுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இந்நோய் பாதிப்பை ஏற்படுத்தினாலும், பெண்கள் - முதியவர்கள் மத்தியில் வாதநோய் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எப்படி வருகிறது?

ஒருவரின் இதய ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு, இதயத் தசைகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் சிக்கலை மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) என்கிறோம். இதேபோன்று ஒருவரின் மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படுவதால் மூளைத் திசுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடல், கை, கால் செயலிழப்பதை வாதநோய் (ஸ்ட்ரோக்) என்கிறோம்.

மூளைத் திசுக்களிடையே பரவி இருக்கும் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் ஏற்படும் அடைப்புகள், ரத்தக் குழாய்களில் பாயும் ரத்தம் உறைந்து போதல், சில நேரம் மூளை ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு மூளைத் திசுக்களிடையே ரத்தம் கசிந்து விடுதல் ஆகியவை காரணமாக மூளைச் செல்களுக்குத் தேவையான ரத்தம் பாய்வதில் தடை ஏற்படுகிறது. மூளையில் ஏற்படும் இந்தப் பாதிப்பால், அதன் கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட உடல் பகுதிகளில் செயல் இழப்பு ஏற்பட்டு வாதநோய் ஏற்படுகிறது. மூளையின் வலது பக்கம் பாதிக்கப்படும்போது உடலின் இடது பகுதியிலும், மூளையின் இடது பக்கம் பாதிக்கப்படும்போது வலது பக்கத்திலும் வாதத்தன்மை, பேச முடியாமை போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன.

அறிகுறிகள்

பார்வைக் குறைபாடு, மனநிலை மாற்றம், சுய உணர்வில் தடுமாற்றம், தலைவலி, குமட்டல், வாந்தி, தலைசுற்றுதல், இரட்டைப் பார்வை, உடல் உணர்வில் மாற்றம், தள்ளாட்டம், நடையில் தடுமாற்றம், வலிப்பு போன்ற தொந்  தரவுகள் திடீரென ஏற் படக்கூடும். இவை வாதநோயின் பொது வான அறிகுறிகள்.

இவை தவிர, உடலின் ஒரு பகுதியில் கை, கால்களை அசைக்க முடியாதபடி செயல் இழக்கக் கூடும். மேலும் செயலிழந்த பகுதியில் முகம் கோணலாகி, வாயும் அசைக்க முடியாமல் போய்விடும். முகப் பகுதியும் வாதத்தால் பாதிக்கப்படும்போது பேசுவதில் சிரமம் ஏற்பட்டு, பேச்சு உளறலைப் போல இருக்கும். இதைப் பேச்சு வழக்கில் பக்கவாதம் என்கிறோம்.

சிகிச்சை முறைகள்

முன்பெல்லாம் வாதநோய்க்குச் சிகிச்சை அளிப்பது கடினம் என்றிருந்த நிலை மாறி, தற்போது வாதநோயைக் குணப்படுத்த முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. வாதநோயால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்க நவீன சிகிச்சை முறைகள் தற்போது பெரிதும் உதவுகின்றன.

மூளையில் ரத்தம் உறைந்து வாதநோய் ஏற்படும்போது, அந்த ரத்த உறைவைக் கரைத்து, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்ய மேம்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. மேலும் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உண்டாகும் வாதநோயைக் குணப்படுத்தவும் தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தடுக்கும் முறைகள்

வாதநோய் ஏற்படாமல் தடுக்க, ரத்த அழுத்தநோய் ஏற்படாமல் தவிர்ப்பதும், ரத்த அழுத்த நோய்க்குச் சரியான சிகிச்சையும் அவசியம். ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். உணவில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ள பழங்களை உட்கொள்வதன் மூலம் வாதநோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கொழுப்புச் சத்துள்ள இறைச்சியைத் தவிர்ப்பதும் நல்லது. மது அருந்துவது, புகைபிடிப்பது, போதை மருந்து பழக்கத்தை விட்டொழிப்பது போன்றவற்றின் மூலம் வாதநோய் வருவதைத் தவிர்க்க முடியும். மனச்சோர்வு, மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுதல், உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவதும் நல்லது.

அவல் நன்மைகள்


அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் அவலை அப்படியே வேக வைக்காமல் வெல்லம் கலந்து சாப்பிட தரலாம். நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம். அவலுடன் உப்பு, புளிப்பில்லாத கெட்டி தயிர்சேர்த்து சாப்பிட வயிற்றுவலி மற்றும் சீதக்கழிச்சல் உடனடியாக கட்டுப்படும்.

சர்க்கரை அளவை குறைக்கும் வெண்டைக்காய்


நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடை சரக்குகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிமையான மருத்துவத்தை செய்யலாம்.

அந்தவகையில், சிறுநீர்தாரை எரிச்சலை போக்க கூடியதும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை கொண்டதும், மூட்டுவலியை குணப்படுத்த கூடியதுமான வெண்டைக்காயின் நன்மைகள் குறித்து  காணலாம். பல்வேறு நன்மைகளை உடையது வெண்டைக்காய். இந்த செடியின் இலைகள், வேர், காய்கள் ஆகியவை மருந்தாகி பயன்தருகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. ஆண்மலட்டு தன்மையை சரிசெய்கிறது.

எலும்புகளுக்கு பலம் தருகிறது. புற்றுநோய்களுக்கு காரணமாக விளங்கும் நச்சுக்களை அழிக்கிறது. வெண்டைக்காயை பயன்படுத்தி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் தேநீர் தயாரிக்கலாம்.  ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வெண்டை செடியின் வேரை நசுக்கி போட்டு கொதிக்க வைத்தால் தேநீர் கொளகொளப்பு தன்மை யுடன் இருக்கும். இதை வடிகட்டி குடித்துவர வெள்ளைப்படுதல், சிறுநீர் தாரையில் ஏற் படும் எரிச்சல் சரியாகும். கொப்புளங்களை குணப்படுத்துகிறது. தோல்நோய்களை சரி செய்கிறது. பால்வினை நோய்க்கு மருந்தாகிறது.

உணவாக மட்டுமின்றி மருந்தாக பயன்படும் வெண்டை காய்களை சாப்பிடும்போது உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது. வெண்டைக்காயை பயன்படுத்தி சர்க்கரையின் அளவை குறைக்கும் மற்றும்  மூட்டுவலியை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

வெண்டை பிஞ்சுகள் எடுத்து நீளவாக்கில் வெட்டி தண்ணீரில் மிளகுப்பொடி சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்துவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மூட்டுவலி குணமாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner