எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பயணங்களின் போது மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளைப் போதிய அளவு கையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

மருத்துவக் குறிப்புகள், தொலைபேசி எண் போன்ற தகவல்களை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். குறிப்புகளைத் தங்கள் செல்போனில்கூடச் சுருக்கமாக வைத்திருக்கலாம்.

கையில் எப்போதும் வீட்டு விலாசம், அவசர காலத்தில் தொடர்புகொள்ளத் தொலைபேசி எண் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
பயணத்தின்போது எந்தவிதமான பரபரப்புக்கும் உள்ளாகாமல், தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்சினைகள் இருந்தால் கிளம்புவதற்கு முன் ஒருமுறை பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரைக்குப் பின் பயணம் மேற்கொள்வது நல்லது.

பேருந்தில் அமர்ந்து பயணிப்பது உடல்  சவுரியத்தை ஏற்படுத்தலாம். ரயில் அல்லது விமானப் பயணம் நல்லது.
மருந்து தீர்ந்துபோனால் அதே மாத்திரைகள் வாங்க வேண்டும். மாற்று மருந்து அல்லது அளவு மாறினால் பிரச்சினையாகிவிடலாம்.

இரண்டு நாள்தானே என்று உணவுக் கட்டுப்பாட்டை மீறிவிட வேண்டாம். மருத்துவர் பரிந்துரைத்த உணவு களையே உண்ண வேண்டும். விருந்தும் வேண்டாம், விரதமும் தேவையற்றது.

உப்பும் கொழுப்பும் குறைவாக உள்ள உணவு வகைகளைச் சிறிய அளவில் சிறு இடைவெளிவிட்டு எடுத்துக்கொள்ளலாம்.
மருத்துவர் கூறிய உடற்பயிற்சி, நடைப் பயிற்சிகளை எங்கே இருந்தாலும் மறக்காமல் தினமும் செய்ய வேண்டும். மூன்று வேளை உணவைப் பிரித்து அய்ந்து வேளையாக எடுத்துக்கொண்டால் நல்லது.

எப்போதும் கட்டாயம் தவிர்க்க வேண்டியவை: புகை, புகையிலைப் பொருட்கள், போதை வஸ்துகள், எண்ணெயில் வறுத்த - பொறித்த உணவுகள், காய்கறி மற்றும் இறைச்சி, கேக், க்ரீம் சாக்லெட், பிஸ்கெட், கொட்டை வகைகளான முந்திரி, நிலக்கடலை, குளிர்பானங்கள், சிப்ஸ், ஊறுகாய், அப்பளம், உப்பு அதிகம் உள்ள எந்த உணவுப் பொருளும், சீஸ், சாஸ், பனீர் போன்றவைகள் தவிர்க்கப்பட வேண்டும்.