எழுத்துரு அளவு Larger Font Smaller Font


வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. இதில் வாழைப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்து  கொள்வோம். இரத்தத்தில் கலந் துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம்  உதவுகிறது. இத னால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.  இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு  சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.  மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக  வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும். மலச்சிக்கலைப்  போக்கும். சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.  வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில்  ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும் தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல்  தடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.

ரத்த சோகைக்கு நெல்லிக்காய்

தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும் - அது ஆப்பிளுக்கு நிகரான சத்துக் களைக்கொண்டது. அதாவது ஒரு  நெல்லிக்காய் மூன்று ஆப்பிள் களுக்குச் சமம்.

நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர் வேதம் போன்ற  இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள்.  வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் திரிபலா சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.

உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் சளிப் பிரச்சினையை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக் கிறார்கள். உண்மையில் சளிப் பிரச்சினை வராமல் நெல்லிக்காய் தடுக்கும்.

நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய் களையும் கட்டுப்படுத்தும்.

திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக  அதிகம்.  ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது.

பச்சைக் காயாகச் சாப்பிடும் போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது  சாப்பிடலாம்.  நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை  அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து.

நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும்  பயன்படுத்தப்படுகிறது.

தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். அதிக  உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த...

உங்களுடைய உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், அது தொடர்பான வேறு சில பிரச்சினைகளுக்கும் ஆளாகிட நேரிடும். சாப்பிடும் உணவு மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி ஆகியவை இரண்டும் நீரிழிவு நோயாளிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள நம்ப வேண்டிய இரண்டு வழிமுறைகளாகும்.  பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாகத் தவிர்த்து விட்டு, இயற்கையான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டியதும் அவசியமாகும்.

1. நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட் டால் சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.

2.  நீரிழிவுக்கு உணவுக் கட்டுப்பாடுதான் முதலிடம். மற்றவை எப்படி அமைய வேண்டும் என்பதை உணவே தீர்மானிக்கிறது. உணவுக் கட்டுப்பாடு, மருத்துவம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் சேர்ந்துதான் நீரிழிவு நோய் மிகாமல், அதன் தாக்கத்தை அதிகப்படுத்தாமல் தடுக்கின்றன.

3. முட்டைக்கோஸ், கலோரிகள் குறைவாக மற்றும் நார்ச் சத்து அதிகமாக உள்ளது, எனவே அது நீரிழிவுக்கு தேர்வு செய்ய ஒரு சிறந்த காய்கறி ஆகிறது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இது நீரிழிவுக்கு ஒரு மருந்தாகும்  ஆன்டியாக்சிடென்ட் மற்றும் ஹைப்பர்க்ளைசிமிக் எதிர்ப்புப் பண்புகள் நிறைய உள்ளது.

4. சீத்தாப்பழத்தை தினமும் சிறிய அளவுகளில் சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிக அளவு வைட்டமின் சி உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விரும்பினால், உடலிலுள்ள வைட்டமின் சி சத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் இன்சுலின் தேவையை கட்டுப்படுத்த முடியும்.

5. சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.

நரைமுடியை தவிர்க்க...

மனிதனின் உணவுப் பழக்க மாற்றங்களால் பல்வேறு நோய்கள் உருவாகின்றன. முக்கியமாக முதுமைப் பருவத்தில் வரும் பல மாற்றங்கள் தற்போது இளமையிலேயே வந்து விடுகின்றன. பள்ளிக்குச்செல்லும் பருவத் திலேயே இளைஞர்களுக்கு நரைமுடி ஏற்படுவது, பற்கள் பலமிழப்பது, தோல் வறட்சியடைவது மிகவும் அதிகமாக மாறிவருகிறது.

இளவயதில் நரைமுடியை தவிர்ப்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

நாம் தினசரி தேநீர் மற்றும் இதர இனிப்பு பண்டங்களில் சேர்க்கும்  வெள்ளைச் சர்க்கரையை, அதிகமாக  சாப்பிடுவதாலும் நரை முடி விரைவில் உண்டாகிறது. உடல் உழைப்பில்லாத போது சர்க்கரை ரத்தத்தில் கலந்து அமிலத்தன்மையாக மாறிவிடுகிறது, மேலும் விட்டமின் இ  செயல்பாட்டையும் குறைக்கிறது. விட்டமின் இ என்பது முடி வளர்ச்சிக்கு மிக முக்கியமாக தேவையான ஒன்றாகும். இது புரோட் டினை, கரோட்டினாக மாற்றி முடி வளர உதவுகிறது. இந்த நிலையில் ரத்தத்தில் அமிலத்தன்மை இருக்கும் போது இயற்கை கருமை நிறம் மங்கி வெள்ளை நிறம் உருவாகிறது. ஆகையால் சர்க்கரையை தவிருங்கள். உடலில் சர்க்கரை ஒரு குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டியது அவசியம். எனவே நீங்கள் அந்த சர்க்கரையை செயற்கையான பொருட்களில் இருந்து எடுக்காமல், இயற்கையாக கிடைக்கும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளலாம். இயற்கை சர்க்கரையானது சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.

உப்பு என்பது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்றாலும் கூட, இதனை அதிகளவு சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.

செயற்கை சுவையூட்டிகளை முற் றிலும் தவிருங்கள். முக்கியமாக அஜி னோமோட்டோ என்னும் வேதிப்பொருள் காரத்திற்காக சேர்க்கப்படுகிறது. உணவிற்கு சுவையளிப்பதற்காகவும், உணவின் சுவையை கூட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. துரித உணவு வகைகளிலும் பாக்கெட்டுகளில் அடைக் கப்பட்ட சிப்ஸ் மற்றும் மசாலாவகைக் கடலைகள் உள்ளிட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் காரமான அனைத்துப் பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது.  மேலும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் டப்பிகளில் அடைக்கப்பட்ட காய்கறிகள், சூப் போன்ற பல உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. இந்த அஜி னோமொட்டோ பல ஆரோக்கியக் கேடுகளை விளைவிக்க கூடியதாகும். இந்த அஜினோமோட்டா உடலில் மிகவும் அதிக அளவு அமிலத்தன்மையை உருவாக்கிவிடுக்கிறது, இதனால் மிகவும் விரைவிலேயே நரைமுடி ஏற் பட்டுவிடுகிறது,

முக்கியமாக அதிகமான அமிலத் தன்மையால் அதை சரிசெய்ய ரத் தத்தில் அதிகம் யூரிக் அமிலம் சுரக்க ஆரம்பிக்கிறது. இந்த யூரிக் அமி லமும், நரைமுடி ஏற்பட மிகமுக்கிய காரணமாகிவிடுகிறது, பொதுவாக உடலில் அதிகம் யூரிக் அமிலம் ஏற்படாமல் இருக்க தண்ணீர் நிறைய குடிக்கவேண்டும். இதன் மூலம் ரத்தத்தில் பொதுவாக உள்ள அமிலத்தன்மை நீங்கி யூரிக் அமிலம் சுரப்பது மிகவும் குறைகிறது இதனால் நரைமுடி மற்றும் வலுவிழந்த நகங்கள் வறண்ட தோல் போன்ற வெளிஉடல் மாற்றங்கள் நீங்கிவிடும்

ஆகவே பாக்கெட் உணவுகளைத் தவிருங்கள், விடுதிகளில் அதிக காரம் கொண்ட உணவுகளைச் சாப் பிடாதீர்கள், இனிப்பு வகைகளை குறைத் துக்கொள்ளுங்கள். வீட்டில் தயாரிக்கும் உணவுகளை சாப்பிடுங்கள், எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் அதிகம் குடியுங்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner