எழுத்துரு அளவு Larger Font Smaller Font


இந்தியாவில் 60 லட்சம் பேருக்கு வலிப்பு நோய் இருக்கிறது; உலகில் ஆயிரம் பேரில் 4 முதல் 10 பேர்வரை வலிப்பு பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள் என மருத்துவ ஆய் வறிக்கை ஒன்று கூறுகிறது. யாருக்கு வரலாம்?

வலிப்பு நோயல்ல; நோயின் அறிகுறி. சிலருக்கு மூளையில் உள்ள திசுக்கள் நேரடி யாகப் பாதிக்கப்படுவதால் வலிப்பு ஏற்படலாம். இன்னும் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்படும் போது வலிப்பு ஏற்படலாம். மூளையில் ஏற்படக் கூடிய கட்டிகள், மூளைத் திசுக்களைத் தாக்கும் கிருமிகள், மூளைக் காயங்கள், மூளைத் திசுக்கள் சிதைவதால் ஏற்படும் பாதிப்புகள், மூளை ரத்தக்குழாய் பாதிப்பு போன்றவற்றால் வலிப்பு ஏற்படலாம். மதுப் பழக்கம் மூலம் ஏற்படும் தலைக்காயங்கள், மூளையில் ஏற்படும் ரத்தக் குழாய் மாற்றங்களாலும் வலிப்பு ஏற்படலாம்.

குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுமா?

பிறவியிலேயே மூளையில் பிரச்சினை உள்ளவர்கள், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை களும்கூட வலிப்பு நோய்க்கு ஆளாகலாம். பிறந்ததிலிருந்து 2 வயதுக்குள் உள்ள குழந்தை களுக்குக் கிருமித்தொற்று மூளையைத் தாக்கும் ஆபத்து உண்டு. இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வரும். குழந்தையின் ரத்தத்தில் சர்க்கரை, கால்சியம், மக்னீசியம், பிரீடாக்சின் போன்ற சத்துக்குறைவு காரணமாகவும் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு வலிப்பு நோயில் முடியலாம்.

சில குழந்தைகளுக்குக் காய்ச்சல் வரும்போது வலிப்பு நோய் வருவதைப் பார்த்திருப்பீர்கள். பெரும்பாலும் ஆறு மாதம் முதல் அய்ந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாக வலிப்பு ஏற்படுகிறது. இதை பெப் ரைல் பிட்ஸ் என்று சொல்லுவார்கள். 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமான காய்ச்சல் குழந் தைகளைத் தாக்கும்போது வலிப்பு ஏற்படலாம். காய்ச்சல் காரணமாக வரும் வலிப்பு சில நிமிடங் களில் மட்டுப்பட்டுவிடும்.
வலிப்பு பரம்பரை நோயா?

வலிப்பு நோய் பரம்பரையாக வரக்கூடும் என சமீப கால மருத்துவ ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வலிப்பு உள்ளவர் களின் நெருங்கிய உறவினர்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது வலிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள், ஆறு மடங்கு அதிகம் காணப் பட்டன. எனவே குடும்பத்தில் ஒருவருக்கு வலிப்பு நோய் இருந்தாலும், வீட்டில் உள்ள மற்ற வர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிகிச்சைகள் என்னென்ன?

நவீன மருத்துவ வளர்ச்சியின் விளைவாக, வலிப்பைக் குறைக்கவும் தடுக்கவும் வலிப்பு நீக்கி மருந்துகள் நிறைய வந்துவிட்டன. மருந்து களுடன் கூடிய முறையான மருத்துவ சிகிச் சையும் வலிப்பு நோயாளிக்குப் பயன் தரும். முறையாக சிகிச்சை பெற்றால், 60 முதல் 80 சதவீதம் பேருக்கு வலிப்பு வருவது முழுவதும் தடுக்கப்படக்கூடியதுது. எனவே, முறையான சிகிச்சை முறையைப் பின்பற்றுவது முக்கியம்.

வலிப்பு நோயாளிக்கு எப்போதும் மனதில் ஓர் அச்சம் காணப்படும். அது, வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமோ என்பதுதான். வலிப்பு நோயாளிகள் அச்சப்படத் தேவையில்லை. மருந்து சாப்பிட தொடங்கியதிலிருந்து 3 ஆண்டுவரை வலிப்பு வரவில்லை என்றால் மாத்திரைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, ஒரு கட்டத்தில் முழுமையாக நிறுத்திவிடலாம். ஆனால், உடனடியாக மாத்தி ரைகளை நிறுத்துவதோ நேரம் தவறி உட்கொள் வதோ கூடவே கூடாது.

தடுப்பது எப்படி?

குழந்தைகளுக்கு வலிப்பு உண்டாவதை நிச்சயம் தடுக்கலாம். கர்ப்பத்துக்கு முன்னும் பின்னும் சரியான பராமரிப்பு முறை, தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு பிரசவம் மேற் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் குழந்தை களுக்கு வலிப்பு உண்டாவதைத் தடுக்கலாம். போதுமான ஊட்டச்சத்து, தக்க நேரத்தில் தடுப்பூசி போடுவது, தலைக்காயங்களைத் தவிர்ப்பது போன்றவை அவசியம்.

வலிப்பு பற்றி பல்வேறு மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. அவற்றை நம்பிக்கொண்டிருப்பது பிரச்சினையைத் தீவிரமாக்கிவிடும். மருத்துவ சிகிச்சை மூலம் இதைக் குணப்படுத்த முடியும். உலக அளவில் இந்த நோயின் தாக்கத்தை உணர்த்தவும் விழிப்புணர்வை அதிகரிக்கவும் பிப்ரவரி 12ஆம் தேதி சர்வதேச வலிப்பு விழிப் புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது

கால் ஆணிக்கு அறுவை சிகிச்சை தேவையா?

பாதத்தில் உள்ள சருமத்தில் கால் ஆணி, காய்ப்பு, மரு ஆகிய மூன்று பிரச்சினைகள் வேதனைப்படுத்துவது உண்டு. இந்த மூன்றுக் கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். காரணம், பெரும்பாலோர் இந்த மூன்றையுமே கால் ஆணி எனத் தவறாகப் புரிந்துகொண்டு, அவர்களுக்குத் தெரிந்த சுயசிகிச்சைகளை மேற்கொண்டு, பிரச்சினை யைப் பெரிதாக்கிக் கொள்கின்றனர்.

கால் ஆணி என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். பாதத்தில் முள், கல், கம்பி போன்ற கூர்மையான பொருள் ஏதாவது குத்துவதால், அங்கே சிறிய துவாரம் விழுந்து விடலாம். அதைத் தொடர்ந்து அந்தத் துவா ரத்தைச் சுற்றியுள்ள தோல் உள்நோக்கி வளரத் தொடங்கலாம். இதில் உராய்வு அதிகமாகி அல்லது பொருத்தமில்லாத காலணியின் அழுத்தம் அதிகமாகி அந்த இடம் தடித்து விடலாம். இதுதான் கால் ஆணி. இதில் மென் மையானது, கடினமானது, விதைபோன்றது எனப் பல வகை உண்டு. மிகவும் ஆரம்ப நிலையில் உள்ள கால் ஆணியை கார்ன் கேப் எனும் ஸ்டிக்கர் ஒட்டி சரியாக்கலாம். ஆனால், தீவிரமாகிவிட்ட கால் ஆணியை அந்த வழி யில் அகற்ற முடியாது. மின் வெப்ப சிகிச்சை அல்லது அறுவைசிகிச்சைதான் நிரந்தரத் தீர்வு தரும்.

நோய் காட்டும் கண்ணாடி ‘கண்’

கணினி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளம் பெண் ஒருவர் தன்னுடைய கண் திடீரென மங்கலாகத் தெரிந்ததால், கண்ணை பரிசோதனை செய்துகொள்ள மருத்துவ மனைக்குச் சென்றுள்ளார். அவர் கண்களைப் பரிசோதித்த கண் மருத்துவர் அவருடைய விழித்திரையில் ரத்தக் கசிவு உள்ளதாகவும் அதனால்தான் பார்வை மங்கலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இளம் வயதில் இப்படி விழித்திரை ரத்தக் கசிவு ஏற்படுவதற்கு நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு போன்றவை காரணமாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. விழித்திரை ரத்தக் கசிவு ஏற்பட்டதற்கான காரணங்களைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தபோது , அவருக்கு சிறுநீரகம் செயலிழந்து காணப் பட்டது.

இரண்டாவது சம்பவம்

விழித்திரையைப் பார்த்து சிறுநீரக பாதிப்பை எப்படிக் கண்டுபிடிக்க முடியும் என ஆச்சரியத்துடன் மனதுக்குள் முணுமுணுக்கும் உங்களுக்கு இன்னொரு ரகசியமும் சொல் கிறேன். அரசு மருத்துவமனைக்கு ஒரு நாள் நடந்துவந்தால் இழுப்பு வாங்குகிறது, களைப் பாக இருக்கிறது, முகம் வீங்கிக்கொள்கிறது, பார்வை மங்கலாக இருக்கிறது என்று வந்த 46 வயதுப் பெண்மணியின் விழித்திரையை கண் மருத்துவர் பரிசோதித்தார். அந்த பெண்ணுக்கு புற்றுநோய் இருக்கலாம் எனக் கருதி ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவருக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். எப்படி இதைக் கண்டுபிடிக்க முடியும்?

அந்த பெண்ணின் விழித்திரையை பரி சோதித்த போது அந்த விழித்திரையில் ரத்தக் கசிவு இருந்தது. அந்த ரத்தக் கசிவின் மையத்தில் வெள்ளையாக இருக்கும். அதற்கு பெயர் தான் ரோத் ஸ்பாட். அது இருந்தால் இதய வால்வு பாதிப்பு, ரத்தப் புற்றுநோய், உடலில் மற்ற பகுதிகளில் உள்ள புற்றுநோய் இருப்பதைக் கண்டு பிடிக்கலாம்.

மூன்றாவது சம்பவம்

கல்லூரியில் படிக்கும் தன் மகளை அழைத்துக்கொண்டு ஒரு கண் மருத்துவ மனைக்கு ஒரு தாய் சென்றார். தன் மகளுக்கு ஓராண்டாக பார்வை மங்கி இருப்பதாகவும், ஓராண்டுக்கு முன் பார்வைக் குறைபாடு காரணமாக கண்ணாடி அணிந்ததாகவும், தற்போது கண்ணாடி அணிந்தாலும் பார்வை சரியாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

அவரை பரிசோதித்த கண் மருத்துவர் பார்வை நரம்பு வீங்கி இருந்த காரணத்தால் தலைக்கு எம்.ஆர்.அய். ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அவருடைய மூளையில் பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. பின் மூளைப் பகுதியில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் அவருக்கு பார்வை பறிபோயிருக்கும். மூளைக் கட்டி ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும்.

எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

ஆயிரக்கணக்கான சிலந்தி வலைகளை ஒன்றின் மேல் மற்றொன்று அடுக்கிவைத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் சிறுசிறு நரம்புக்கற்றைகள் அடுக்கப்பட்ட ஒரு அமைப்பு நம் விழித்திரை. கேமராவில் உள்ள மெமரி கார்டுபோலத்தான் மனிதனின் விழித் திரை உயிரோட்டமாக இருக்க சிறுசிறு ரத்த நாளங்கள் விழித்திரை நரம்புக்கற்றைகளி டையே படர்ந்திருக்கும். அந்த விழித்திரை நரம் புக்கற்றைகள் ஒன்றுகூடி பார்வை நரம்பாக வும், அந்த சிறுசிறு ரத்த நாளங்கள் ஒன்றுகூடி ரத்தக் குழாயாக மாறி பார்வை நரம்பின் மய்யப் பகுதி வழியாக

மூளைக்கும் செல்லும்.

நம்முடைய மூளை பயா, அரக்கினாய்டு, டியூரா என்ற மூன்று சவ்வுகளால் சூழப்பட் டுள்ளது. முதல் இரண்டு சவ்வுகளுக்கு இடை யில் சென்ரல் சீரஸ் திரவத்தில்தான் மூளை மிதக்கிறது.

அந்த திரவம் மூளையிலிருந்து கண் நரம்பு நுணிப் பகுதிவரை பரவியிருக்கும். மூளையில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும், அதாவது கட்டி ஏற்பட்டு சி.எஸ்.எப். திரவத்தின் சுரப்பு தடை பட்டாலோ அல்லது கிருமி பாதிப்பில் அதிக மாகச் சுரந்தாலோ, மூளை நீர் அழுத்தம் அதிக மாகி அது மூளை நரம்பை வீக்கம் அடைய செய்யும்.

ஆண்டுக்கு ஒரு முறை விழித்திரை பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் நமது மூளையில் ஏதாவது பிரச்சினை இருந்தால் முன்கூட்டியே கண்டுபிடித்துவிடலாம் .