எழுத்துரு அளவு Larger Font Smaller Font


வாழைமரத்தின் அனைத்து பகுதிகளும் நமக்கு பலன் தரக்கூடியது. வாழைப்பூவை நாம் சமையலில் சேர்ப்பது மிகவும் அபூர்வ மான ஒன்றாக மாறிவிட்டது.  வாழைப்பூவை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள் நன்மைகரமானவை.

கிராமப்பகுதிகளில் பல வீடுகளில் கட் டாயம் வாழைமரம் காணப்படும். வாழைப்பூ மிகவும் அரிதாக கிடைக்க கூடிய ஒரு பொருள் எல்லாம் இல்லை.

ஆனாலும் இதனை நாம் ஏனோ அதிகம் பயன்படுத்துவதில்லை. வாழைப்பூவின் பயன் கள் பற்றி தெரிந்த பின்னர் கட்டாயம் நீங்கள் வாழைப்பூவை சமையலில் பயன்படுத்து வீர்கள்.
வாழைப்பூவை இரண்டு வாரங்கள் உட்கொண்டால் இரத்தில் உள்ள கொழுப்புகள் குறைக்கப்பட்டு, இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இரத்தசோகை வராது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மன அழுத்தத்தால் வரக்கூடிய வாயுத் தொல்லை, செரிமானக்கோளாறுகள், வயிற்றுப்புண் ஆகியவை ஆற தொடர்ந்து அய்ந்து மாதங்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம்.

மூலநோய், இரத்தம் வெளியேறுதல், மூல புண்கள், மலச்சிக்கல், சீதபேதி போன்ற வற்றிற்கு இந்த வாழைப்பூ மருந்தாக பயன் படுகிறது.

வாய் துர்நாற்றம் மிகுந்த அவமானத்தை தரக்கூடியது. வாய்துர்நாற்றம் நீங்கவும், வாய்ப்புண்கள் ஆறவும் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம்.

பெண்களை வாட்டி வதைக்கும் கர்ப் பப்பை கோளாறுகள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிற்கு இது மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.

வாழைப்பூவில் அதிமாக நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது.

வாழைப்பூவில் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பதால் இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

வேக வைத்த வாழைப்பூ பொரியல், நீரிழிவு நோய்களுக்கு மிகச்சிறந்த உணவாகும். இதில் உள்ள ஹைப் போகிளைசீமிக் எனும் வேதிப்பொருள், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

சிறுநீரகத்தை சுத்தமாக்க
என்ன செய்யலாம்?  

நமது உடலில் சிறுநீரகம் மிக மிக முக்கியமான உறுப்பாகும்.  சிறுநீரகத்தில் தேவையற்ற நச்சுக்கள் சேர்ந்துவிட்டால் பலவிதமான பிரச்சினைகளுக்கு வழிவகுத்து விடும். சிறுநீரகத்தைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தினமும் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தின் செயல்பாடு சீராகும்.

கேரட் ஜூஸ், புதினா, தக்காளி மற்றும் செர்ரி பழச்சாறுகள், சாலட்டுகளை அடிக் கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் அன்றாட உணவில் குதிரை வாலியைச் சேர்த்து வந்தால் சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்படாமல் தற்காப்பாகச் செயல்படும். வாழைப்பழம், செர்ரி, வெள் ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக் கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப் பழம் ஆகிய பழங்கள் அடிக்கடி சாப்பிட்டு வர சிறுநீரகக் கல் ஏற்படாது.

கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் போன்ற மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடு வதன் மூலமாக சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்கலாம்.  சிறுநீரகத்தை சுத்தம் செய்ய புரோட்டின் தேவை.

ஆனால் சிக்கன், மீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தவிர, காபி, சாக்லேட் மற்றும் பிற கால்சியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலத்தை உருவாக்கும் உணவு களை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

உடல் எடை குறையும்

தினமும் காலையில் எலுமிச்சைச் சாறு பருகினால் நேர்த்தியான மெல்லிய உடல்வாகைப் பெறலாம் என்கிறார்கள் ஊட்டச் சத்து நிபுணர்கள். அது உங்கள் எடையை குறைக்கும். ஜீரண மண்டலத்தை சீர் செய்துவிடும் திறன் எலுமிச்சம் பழத்துக்கு உண்டு. மேலும் உங்கள் உடலில் சேர்ந்துள்ள டாக்சின்கள் எனப்படும் நச்சுக் கழிவுகள் அனைத்தும் லெமன் ஜூஸ் குடிப்பதால் வெளியேறிவிடும். உங்கள் குடல் சுத்தமாவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதும் தவிர்க்கப்படும். ஓர் அற்புத இயற்கை உணவாக இது செயல்படுகிறது.

தாகம் அடங்கும்

வெறும் சுடு நீரை வெறும் வயிற்றில் குடிப்பது சிலருக்குப் பிடிக்காது. லெமன் நறுமணத்துடன் குடிக்கும்போது எளிதாக குடிக்க முடிவதுடன் சுவையும் இருப்பதால் நிச்சயம் குடித்து விடுவீர்கள். தேவைப்பட்டால் சிறிதளவு தேனை சேர்த்துக் கொள்ளுங்கள்.

நீரிழிவை குறைக்கும் கொய்யா இலை


அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் மிகுந்து காணப்படுகிறது.

கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் 6, கோலைன், விட்டமின் , கால்சியம், இரும்பு, மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸி டன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற தன்மைகளும் நிறைந்துள்ளது.

கொய்யா இலையில் உள்ள பயன்கள்

வயிற்றுப் போக்கினால் அவதிப்படுபவர்கள் 30கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 2 டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் உடனே நல்ல தீர்வு கிடைக்கும்.

கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ தயாரித்து, பின் அதை 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குறைக்கலாம்.

எட்டு கொய்யா இலையை ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி தினமும் மூன்று முறை குடித்து வர தீராத வயிற்று வலி காணாமல் போய்விடும்.

கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வருவதால் விரைவில் உங்கள் உங்கள் எடை குறைவதை நீங்கள் காணலாம்.

கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்றும் அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தாலும், வாயில் ஏற்படும் பல் வலி, ஈறு பிரச்சினைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகிய வற்றை உடனே சரி செய்கிறது.

மூக்கு அழற்சியால் தினமும் கஷ்டப்பட்டு வந்தால், கொய்யா இலையை டீ போல் செய்து குடித்து வர வேண்டும்.

செரிமான பிரச்சினை உள்ளவர்கள், கொய்யா இலையின் டீயை தொடர்ந்து குடித்து வந்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, செரிமானம் நடைபெறும்.

கொய்யா இலையில் போடும் டீயானது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது.
கொய்யா இலையில் தயாரிக்கப்படும் கசாயம், இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது.

கொய்யா இலையின் கசாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால், உதிரப்போக்கு தடைபடும், மேலும் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.

முதுகெலும்பும், முதுகும் நலமாக இருக்க 10 யோசனைகள்

1. நாள்தோறும் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக் கரணம் போடுவதும் மிகச் சிறந்தது)      
2.  நாள்தோறும் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்.
3. அமரும்போது வளையாதீர்கள்
4. ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்
5. நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.
6. சுருண்டு படுக்காதீர்கள்.
7. கனமான தலையணைகளைத் தவிர்த்து விடுங்கள். கழுத்திற்கு நல்லதல்ல. முதுகும் பாதிக்கப்படும்.
8. டூ வீலர் ஓட்டும்போது வளைந்து, குனிந்து ஓட்டாதீர்கள்.
9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். குத்த வைக்கும் நிலையில் அமர்ந்து தூக்கப் பழகுங்கள். பாரத்தை உங்கள் உடல் முழுதும் தாங்கட்டும்
10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வானத்தை நோக்கி நீட்டி மடக்குங்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner