எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளி களுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும். இவை எல்லாம் காலி பிளவரின் குணங்கள்.

வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள்.

காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம்.

காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்.

உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி

இஞ்சித் துவையலை ருசி பார்க்காதவர்கள் மிகவும் குறைவு. தவிர சமையலிலும் இஞ்சியை தாரளமாக பயன் படுத்திக் கொள்கிறோம்.

பல பகுதியில் இஞ்சியை ஊறுகாயில் அதிகமாக சேர்க் கிறார்கள். இஞ்சிக்கு உஷ்ணப் படுத்தும் குணம் உண்டு. பசியைத் தூண்டும். உடலுக்குப் பலத்தை தரும். ஞாபக சக்தியை வளர்க்கும்.

கல்லீரலைச் சுத்தப் படுத்தும். வயிற்றில் சேர்ந்த வாயுவை நீக்கி பஞ்சு போல ஆக்கும். பிறகு அதிலுள்ள தீயப் பொருட்களையும், கிருமிகளையும் நீக்கி கபத்தால் உண்டாகும் எல்லா விதமான நோய் களையும் தடுக்கும்.

முகம், மூக்கு தொண்டைகளைப் பற்றிய நோய் களையும், குன்மம், ஆஸ்துமா, பாண்டு நோய் ஆகியவற்றையும் இஞ்சி போக்கும். நுரையீரல் நோய்களைக் கூட இஞ்சி குணப்படுத்துகிறது. அதனால் தினந்தோறும் கொஞ்சம் இஞ்சியை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஆனால் ஓர் எச்சரிக்கை. இஞ்சியை அதிகமாக சாப்பிட்டால் தொண்டை கம்மி விடும். அதற்கு சர்க்கரையும், தேனும் மாற்றுப் பொருட்களாகும்.

சுட்டெரிக்கும் வெயில்; கண்கள் ஜாக்கிரதை

சுற்றுலா, விடுமுறை, விளையாட்டு எனக் குழந்தைகள் குதூகலமாகச் சுற்றித் திரியும் காலம் கோடைக் காலம். வெயில் காலத்தில் தூசு நிறைந்த சுற்றுப்புறத்தில் குழந் தைகள் விளையாடுவதற்கான சாத்தியம் அதிகம்.

இப்படி விளையாடும்போது கண்ணில் உள்ள கன்ஜங்டிவா என்ற வெள்ளைப் பகுதியில் ஏற்படும் ஒவ்வாமையான அலர்ஜி கன்ஜங்டிவைட்டிஸ், கண் உலர்தல் நோய் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.

இதனால் கண் சிவந்து இருப்பது, கண் அரிப்பால் கண்ணைத் தேய்த்துக்கொண்டு, கண்ணை அடிக்கடி சிமிட்டிக்கொண்டிருப்பது போன்ற அறிகுறிகளுடன் தங்கள் குழந்தைகளைக் கண் மருத்துவரிடம் அழைத்து வரும் பெற்றோர் அதிகம்.

தடுப்பது எப்படி?

> குழந்தைகள் புழுதி நிறைந்த இடங்களில் விளையாடு வதைத் தவிர்க்க வேண்டும்.

> வெயிலில் செல்லும்போது தரமான கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு செல்ல வேண்டும். தரமற்ற, போலியான கூலிங்கிளாஸ் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். கண் மருத்துவர் அல்லது கண்ணாடிக் கடைகளில் கிடைக்கும் புறஊதா கதிரியக்கத்தைத் தடுக்கக்கூடிய கூலிங் கிளாஸைப் பயன்படுத்தவும்.

> குளிர்ந்த தண்ணீரால் அடிக்கடி முகம் கழுவ வேண்டும்.

> கண்களை மூடிக்கொண்டு, குளிர்ந்த தண்ணீரில் பஞ்சை நனைத்துக் கண் மீது ஒத்தடம் வைக்க வேண்டும்.

> கண் அலர்ஜி நோய் உள்ளவர்கள் வெயில் காலத்தில் கண் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்து கொண்டும், அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முறை யாகப் பயன்படுத்த வேண்டும்.

> மருந்துக் கடைகளில் மருத்துவர் பரிந்துரையில்லாமல் மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

> வீட்டைத் தூசியில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

> அடிக்கடி கைகளைக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நீச்சல் குளத்தில் கண் பாதுகாப்பு

விடுமுறை காலத்தில் குழந்தைகளில் பலரும் கோடை வெப்பத்தைத் தணித்துக்கொள்ள நீச்சல் பயிற்சி செல்வது வழக்கமாக இருக்கும்.

> அப்படி நீச்சல் குளத்தில் குளிக்கும் போது பாதுகாப்புக் கண்ணாடி அணிந்துகொள்ளவும்.

> நீச்சல் குளத்தின் சுத்தத்தை உறுதிசெய்து கொள்ளவும்.

> குளித்து முடித்தவுடன் குளிர்ந்த, சுத்தமான தண்ணீரால் முகம், கண் பகுதியைக் கழுவிக்கொள்ளவும்.

கூர்மையான பொருட்கள் ஜாக்கிரதை

விடுமுறை காலத்தில் குழந்தைகள் ஒன்றுகூடி விளையாடும்போது, கூர்மையான விளையாட்டுப் பொருட்களை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்களா என்றும் பெற்றோர் கவனிக்க வேண்டும். விளை யாடும்போது கூர்மையான பொருட் கள் கண்ணில் குத்தி விபத்து ஏற்படுவது அதிகம் என்று ஆய்வு கூறுகிறது.

உலர் கண் நோய்

வெயில் காலத்தில் அதிகப்படியான வெப்பத்தின் காரணமாகக் கண் நீர் படலம் உலர்ந்து, கண் எரிச்சல், உறுத்தல், மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் காணப்படும்.

இதை எப்படித் தடுப்பது?

1.அதிகப்படியான தண்ணீர், பழச்சாறு உட்கொள்ள வேண்டும்.

2.செல்போன், அய்பேடு, டேப்லெட் போன்ற மின்னணு கருவிகளில் குழந்தைகள் வீடியோ கேம்ஸ் விளை யாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

3.குளிர்சாதனப் பெட்டியிலிருந்து காற்று நேரடியாகக் கண்ணில் அடிக்காத வாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

4.கண் மருத்துவரை அணுகிச் செயற்கை கண்நீர் சொட்டு மருந்து வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

வெளிவேலை செய்வோர்

அதிகப்படியான வெயிலில் உள்ள புறஊதா கதிர்கள் வெயிலில் வேலை செய்பவர்களுக்குக் கண் சதை வளர்ச்சி, கண் புரை, விழித்திரை பாதிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக விவசாயிகள், வெயிலில் அதிகம் வேலை செய்பவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தடுப்பது எப்படி?

> வெயில் காலத்தில் வெயில் அதிகம்

நன்மை பயக்கும் எண்ணெய் குளியல்

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், தோலின் மூலமாக எண்ணெய் உட்கிரகிக்கப்பட்டு லிம்ஃ பாட்டிக்ஸ் என்று சொல்லப்படுகிற நிணநீர்க் கோளத்தில் சேர்ந்து உடலுக்கு நன்மை பயக்கிறது என்று அறிவியல் ஆய்வும் ஒப்புக்கொள்கிறது. லிம்ஃபாட்டிக்ஸ் எனப்படும் நிணநீர்க் கோளமே உடல் செல்களுக்கு ஊட்டம் கொடுக்கவும், உடலில் உருவாகும் கழிவுகளை வெளித்தள்ளும் வேலை யையும் செய்கிறது. எண்ணெய் குளியல், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள சூட்டை உத்தம நிலையில் வைக்கிறது. அதனால் உடல் உறுப்புகள் நன்கு செயல்படும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner