எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 23- சென்னை அடையாரில் அமைந்திருக்கும் ஃபோர்டிஸ் மலர் மருத்துவ மனையில் உள்ள மருத்துவர்கள் நேற்று (22.5.2018) 200 இருதரப்பு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

இந்த முயற்சி குறித்து இம்மருத்துவமனையின் தலைமை ஆலோசகர் எலும் பியல் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ ரான டாக்டர் ஏ.பி.கோவிந்தராஜ் கூறுகையில்:-

இருதரப்பு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை என் பது இன்றைய துரித உலகில் நடைமுறையையே மாற்றக் கூடிய ஒன்றாகும் மற்றும் இது தேவையில்லாமல் இரண்டு முறை மருத்துவமனையில் சேர்க் கையை தவிர்க்கச் செய்கிறது.

இன்று இந்த அறுவை சிகிச்சை, வெற்றிகரமான அறுவை சிகிச்சை நடைமுறைகளில் ஒன்றாக ஆகியுள்ளது மற்றும் இது வாழ்க்கைத் தரத்தை மேம் படுத்துவதால் நோயாளியின் பார்வை முற்றிலும் அனுகூல மானதாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner