எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கண்ணில் உள்ள லென்ஸில் பிரச்சினை ஏற்பட்டால், பார்வையில் கோளாறு வரும். அப்போது அதைச் சரி செய்வ தற்காக கண்ணாடி போடச் சொல்வார்கள், கண் மருத்துவர்கள். ஆனால், ஒரு சிலர் கண்ணாடியைத் தவிர்க்க விரும்புவார்கள். அப்போது அவர்களுடைய பார்வைக் கோளாறை  சரிப்படுத்துவதற்காக வழங்கப் படும் ஒரு மாற்றுத் துணைக் கருவிதான் கான்டாக்ட் லென்ஸ்.

இது கண்ணில் இருப்பதே தெரியாத அளவுக்கு மெல்லிய பிளாஸ்டிக்கினால் ஆனது. கண்ணின் வெளிப்புறத்தில் வட்ட மாக, கறுப்பாகத் தெரியும் கார்னியாவில் இதைப் பொருத்திக் கொள்வதன் மூலம் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, சிதறல் பார்வை, வெள்ளெழுத்து போன்ற பல்வேறு பார்வைக் குறை பாடுகளைச் சரிப்படுத்தி, தெளிவான பார்வையைத் தருகிறது.

இதன் தேவை என்ன?

பார்வைக் கோளாறுகளுக்கு மட்டுமன்றி, குறிப்பிட்ட சில வேலைகளில் இருப்பவர்களின் வசதி காரணமாகவும் கான்டாக்ட் லென்ஸ் தேவைப்படுவதுண்டு. உதாரணமாக ஒளிப்படக் கலைஞர்கள், மைக்ராஸ்கோப்பைக் கையாள் கிறவர்கள், விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் போன்றோருக்கு கான்டாக்ட் லென்ஸ் தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு கண் ணாடி ஏற்றுக்கொள்ளவில்லை எனும்போது, அவர்களுக்கும் இது தேவைப்படும். சில நோய்களின்போது, கண்ணாடிகளால் பார்வைக் குறைபாட்டைத் தீர்க்க இயலாது எனும் நிலையில், இதுதான் கைகொடுக்கும். இன்னும் சிலர் அழகு, புறத்தோற்ற மாற்றத்துக்காகவும் கான்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்து கின்றனர். எடுத்துக் காட்டாக நடிகர், நடிகைகள் திரைப்படக் காட்சிகளில் தோன்றும் போது இதைப் பயன்படுத்துவதுண்டு. அழகுப் போட்டி, திருமணம் போன்றவற்றுக்காகத் தற்காலிக மாகவும் சிலர் பயன் படுத்துகின்றனர். பெண்கள் தாம் அணியும் ஆடைகளுக்குப் பொருத்தமாக இருப்பதற்காக, பல வண்ணங் களில் கிடைக்கும் கான்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்துவது மேல்நாடுகளில் வழக்கம். தற்போது இந்த நாகரிகம் இந்தியாவிலும் பரவுகிறது.

வகைகள் உண்டு!

கண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்ப கான்டாக்ட் லென்ஸ்களைப் பொருத்துவது வழக்கம். இதற்கு உதவும் வகையில் பலதரப்பட்ட கான்டாக்ட் லென்ஸ்கள் உள்ளன. பார்வைக் கோளாறுகளுடன் கண்ணில் வேறு நோய்கள் ஏதேனும் இருந்தால் சிறப்புத் தேவை கான்டாக்ட் லென்ஸ்கள்  மூலம் சரிப்படுத்துவது உண்டு. யாருக்கு, எதைப் பொருத்துவது என்பதைக் கண் மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கைகள்

முதலில், கான்டாக்ட் லென்ஸ்களுக்குச் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ள, தகுதியும் திறமையும் வாய்ந்த கண் மருத்துவரிடம் கண்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண் டும்.

இவற்றை அணிவதற்கு கண்ணாடிக் கடைகளில் கண் பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடாது. கண்ணாடி அணி வதற்கான பரிசோதனைகளும், கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கான பரிசோதனைகளும் வெவ்வேறானவை. கண்ணாடி அணி வதற்கான பரிந்துரையை வைத்து கான்டாக்ட் லென்ஸ்களைத் தேர்வு செய்ய முடியாது. ஒருவருடைய தினசரி வேலை, வாழ்க்கைமுறை போன்றவற் றையும் கவனத்தில் கொண்டு, அவருக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் அவருக்குப் பொருத்தமாக இருக்கும். சிலர் பணச் செலவுக்குப் பயப்படுவதால், கான்டாக்ட் லென்ஸ்கள் வேண்டாம். ஆனால், கண்ணாடியை அவசியம் அணிய வேண்டும். இல்லாவிட்டால், கண்ணின் பவர் அதிகமாகி விடும். பிறகு, இப்போதுள்ள பவரைவிட அதிக பவரில் கண்ணாடி போட வேண்டி வரும். பவரைப் பொறுத்து கண்ணாடியின் தடிமன் கூடும். செலவும் அதிகரிக்கும். உடனே செயல்படுங்கள்.

பராமரிப்பது எப்படி?

கான்டாக்ட் லென்ஸ்களை அணிவதற்கும் அகற்றுவ தற்கும் சரியான வழிகளை வல்லுநரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.  அவற்றைப் பாதுகாக்கும் முறைகளையும் அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸ்களை அணியும் முன்பும், கண்களிலிருந்து அவற்றை அகற்றும் முன்பும் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸ்களுடன் வழங்கப்பட்ட திரவத்தை அதற்கான குப்பியில் ஊற்றி, அதில் கான்டாக்ட் லென்ஸ்கள் மூழ்க வைத்து, தினமும் இரண்டு முறை சுத்தப்படுத்த வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸ்களைப் பாதுகாக்கும் குப்பியை, அதைப் பாதுகாக்கும் திரவத்தால் வாரம் இரண்டு முறை சுத்தப்படுத்த வேண்டும். கான்டாக்ட் லென்ஸ்களைப் பாதுகாக்கும் குப்பியையும் அதைப் பாதுகாக்கும் திரவத்தையும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும்.

செய்யக்கூடாதவை

கான்டாக்ட் லென்ஸின் வட்ட அமைப்பில் விரலை வைத்து எடுக்கக்கூடாது.  கான்டாக்ட் லென்ஸை அணிந்துகொண்டிருக் கும்போது குளிப்பது, முகம் கழுவுவது, உறங்குவது ஆகியவற்றை மேற்கொள்ளக்கூடாது.

கான்டாக்ட் லென்ஸ்களை நேரடியாக சூரியஒளியில் வைக்கக்கூடாது. அதுபோல் குளிர்சாதனப் பெட்டியிலும் அவற்றை வைக்கக்கூடாது. கான்டாக்ட் லென்ஸ்களை அணிந்தி ருக்கும்போது, அவற்றின்மீது எவ்வித கண் சொட்டுமருந்து களையும் மருத்துவர் ஆலோசனையின்றி ஊற்றக்கூடாது.

கழுத்து வலி போக்கும் கால்சியம்

மத்திய வயதுள்ளவர்களுக்கும் அதற்கு மேல் வயதுள் ளவர் களுக்கும் கழுத்துவலி வருவதற்கு முக்கியக் காரணம், கழுத்தெலும்பு தேய்மானம். செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ் என்பது இதன் மருத்துவப் பெயர். முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு தேய்ந்துபோவது அல்லது விலகி விடுவது போன்ற காரணங்களாலும் கழுத்துவலி வருவது உண்டு.

பொதுவாக நாற்பது வயதில் இந்த ஜவ்வு தேயத் தொடங்கும். இதற்கு ஜவ்வுகளில் நீர்ச்சத்து குறைவதும், எலும்புகளில் கால்சியம் சத்து குறைவதும் முக்கியக் கார ணங்கள். இதனால், எலும்புகள் மெலிந்து, வலுவிழந்துவிடும். இவ்வாறு வலுவிழந்த எலும்புகள் வழக்கமான தசைகளின் அழுத்தம் காரணமாக, விரைவிலேயே தேய்ந்துவிடும். ஜவ்வு விலகியிருந்தால், அது கைகளுக்கு வரும் நரம்புகளை அழுத்தும். அப்போது கழுத்தில் மட்டுமல்லாமல் கைகளுக்கும் வலி பரவும். சில நேரம் வயதானவர்களுக்கு கழுத்தெலும்பில் எலும்பு முடிச்சுகள் வளரும். இதனாலும் கழுத்து வலி வரக்கூடும். இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள். அப்போது கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்தத் தவறான பழக்கம் நாளடைவில் கழுத்துவலியை ஏற்படுத்துகிறது.

குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்துவலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்து விடும். உடலுழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாதவர்களுக்குக் கழுத்துத் தசைகள் சீக்கிரத்தில் இறுகிவிடும். இதுவும் 50 வயதில் நிகழும். புகைபிடிக்கும் பழக்கம் இருந்தாலோ உடற் பருமன் இருந்தாலோ கழுத்துவலி சீக்கிரத்தில் வந்துவிடும்.

கழுத்துவலிக்கு இன்னொரு காரணம் இது: வயதாக ஆக கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் விரைவில் சோர்ந்து போகும். அப்போது கழுத்தை அந்தத் தசைகளால் தாங்கிப் பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடாகக் கழுத்துவலி வரும். அதிக சுமையைத் தலையில் தூக்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொள்வது போன்றவை இந்த மாதிரி கழுத்துவலிக்குப் பாதை போடும்.

அறிகுறிகள்

இந்த நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவதுபோல் வலிக்கும். விரல்கள்வரை வலி பரவக்கூடும். சிலருக்குக் கை, விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும்போது கழுத்துவலியுடன் தலைசுற்றலும் ஏற்படும். நடப்பதற்குச் சிரமமாக இருக்கும்.

என்ன பரிசோதனை?

கழுத்தை எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.அய். ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயைப் புரிந்துகொள்ளலாம்.

என்ன சிகிச்சை?

ஆரம்பநிலையில் உள்ள கழுத்துவலியைச் சாதாரண வலி மாத்திரைகளால் குணப்படுத்திவிடலாம். பிரச்சினை நீடிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி கழுத்தில் பட்டை அணிந்துகொள்வது, கழுத்துக்கு ட்ராக்ஷன் போட்டுக்கொள்வது, பிசியோதெரபி ஆகியவை உரிய பலன் தரும். சிலருக்குக் கழுத்தெலும்பில் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.

என்ன உணவு?

புரதம், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் மிகுந்த பால், பால் பொருட்கள், மீன், முட்டை, இறைச்சி, காய்கறி, பழங்களை உட்கொள்ள வேண்டும். கொள்ளு, சோயா பீன்ஸ், உளுந்து, பீட்ரூட், அவரை, துவரை, பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக் கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை போன்றவற்றில் கால்சியம் மிகுந்துள்ளது. இந்த உணவு வகைகளில் ஒன்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தடுப்பது எப்படி?

1. எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காரவும் நிற்கவும் நடக்கவும் பழகிக்கொள்ளுங்கள்.

2. பேருந்துகளில் பயணம் செய்யும்போது முடிந்தவரை பின் இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்வதைத் தவிருங்கள். பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்கு வதைத் தவிருங்கள். முடியாதபோது அல்லது அவசியம் ஏற்படும்போது தலையைப் பின்பக்கமாக சாய்த்துக்கொண்டு உறங்குங்கள்.

3. ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்க வேண்டாம்.

4. கணினியில் வேலை செய்கிறவர்கள் அதன் திரை, கண் பார்வைக்கு நேர்மட்டத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தலையைத் தூக்கியவாறு திரையைப் பார்க்கவேண்டும் என்றிருந்தால் கழுத்துவலி உறுதி.

5. கழுத்து அதிக நேரம் ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாகப் படிக்கும்போதும் கணினியைப் பார்க்கும்போதும் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுத்தை வேறு பக்கம் திருப்பி ஓய்வு தர வேண்டும்.

6.  தலையைக் குனிந்துகொண்டே அதிக நேரம் வேலை செய்யக் கூடாது. உதாரணம் - தையல் வேலை செய்கிறவர்கள்.

7.  மிருதுவான, சிறிய தலையணையைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு எப்படிப் படுத்துக்கொண்டால் கழுத்தும் தலையும் வசதியாக இருக்கிறதோ, அப்படிப் படுத்து உறங்குங்கள்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner