எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய இலக்கியங்கள் கண்ணைக் கொண்டாடிய நிகழ்வுகள் ஏராளம். உண்மையில் அகத்திலுள்ளதை முகத் தில் காட்டும் முக்கிய பணியைச் செய்வது கண்கள்தாம்.

அழுக்கோ அழகோ தன் முன்னால் உள்ளதை ஒளிக்கற்றை வழியாகப் பெற்று, மூளைக்கு அனுப்பி, அங்கே அமைக்டலாவைத் தூண்டி காதலையோ கரிசனத்தையோ கொட்டச் செய்வது கண்கள் வழிதாம்.

அந்தக் கண்களை, கரிசாலை மை தடவிக் குளிர்ப்பித்த காலத்திலிருந்து, மஸ்காரா பயன்படுத்தும் காலம்வரை பராமரித்த விதங்கள் ஏராளம். 80-களில் கண்ணாடி போட்டவர்களை கேலி செய்வது, அவமானப்படுத்தும் சொல். ஆனால், இன்று கண்ணாடி அணிவது மதிப்பான ஒன்றாகிவிட்டது.

விளைவுகளை

உதாசீனப்படுத்தாதீர்

இனிப்பு தேசத்தில் இந்தக் கண்களைப் பராமரிக்க இன்னும் கூடுதல் அக்கறை தேவைப்படுகிறது. ரத்தச் சர்க்கரை அளவு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாத போது, ஆரம்பத்தில் நிகழும் சில விளைவுகளை உதாசீனப்படுத்திவிட்டு, பின்னாட்களில் பார்வைக்காகப் போராட்டம் நடத்துவோர் பலர்.

சர்க்கரை நோயினர், கண்கள் விசயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?

# அடிக்கடி நிகழும் பார்வைத்திறன் மாற்றம்

# பார்வையில் கரும் புள்ளிகள் அல்லது அழுக்கு மிதப்பது போன்ற உணர்வு

# தெளிவற்ற காட்சி

# காட்சியில் ஆங்க £ங்கே வெற்றிடம் அல்லது கருவட்டம்

இந்தப் பிரச்சினைகள் இருந்தால் அது டயாபட்டிக் ரெட்டினோபதியின்  தொடக்கம் எனலாம்.

என்ன நடக்கிறது கண்ணில்?

கண்ணில் விழித்திரையை (ரெட்டினா) ஒட்டிய நுண்ணிய ரத்தக் குழாய்கள் பாதிப்புறுவதால், விழித் திரையில் உள்ள நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. ஆதலால் அந்த நுண்ணிய நரம்புகள் வலுவிழப்பது, நரம்பின் உறை வீக்கமுறுவது என பாதிப்புகள் ஏற்பட்டு, பார்வைத்திறன் குறைய ஆரம்பிக்கிறது.

கேட்டராக்ட் நோயில் நிகழும் லென்ஸ் பாதிப்பு போன்றோ, சாதாரண கிட்ட- தூரப் பார்வை போன்றோ இது அவ்வளவு எளிதாகச் சரி செய்யக் கூடியது அல்ல என்பதை இனிப்பு நோயினர் கவனத்தில் கொள்ள வேண்டும். விழித்திரையின் நரம்பில் ஏற்படும் நாள்பட்ட பாதிப்பு முழுமையான பார்வை இழப்பைக் கொடுத்து விடும்.

இரண்டு வகை பிரச்சினைகள்

சர்க்கரை நோய் இரண்டு விதமாய் விழித்திரையைப் பாதிக்கிறது. நான் ப்ரோலிஃபரேட்டிவ் ரெட்டி னல் டிசீஸ்,  ப்ரோலிஃபரேட்டிவ் ரெட்டினல் டிசீஸ்   என்பன அவை. முதலாவதில், அடிக் கடி பார்வைத்திறன் குறைந்து கண்ணாடி மாற்றும் செலவை அடிக்கடி தரும். நரம்பு உறை நார்கள் வீக்கமும், விழித்திரையின் மய்யப் பகுதியில் வீக்கமும் ஏற்படும். இது தொடர்ந்தால், நாளடைவில் ரெட்டினல் டிடேச் மெண்ட் எனும் விழித்திரை விலகல் ஏற்படலாம்.

இரண்டாம் பிரிவில், விழிக்கோள நீரினுள் ரத்தக் கசிவு, விழித்திரை விலகல், க்ளுக்கோமா எனப்படும் கண் அழுத்தம் அதிகரித்தல் என ஒவ்வொன்றாய் ஏற்பட்டு முடிவில் பார்வை இழப்பு வரக் கூடும்.

என்ன செய்ய வேண்டும்?

குறிப்பிட்ட கால இடைவெளியில் கண் பரிசோதனை நிச்சயம் அவசியம். இன்று லேசர் சிகிச்சை முதல் கண்ணுக்கு உள்ளேயே செலுத்தும் மருந்துவரை நிறைய மருத்துவ வசதிகள் வந்துவிட்டன. அதனால் ஆரம்ப கட்டத்தில் பரிசோதித்துவிட்டால், சிகிச்சை சுலபம்.

தவிர, சீரான ரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு மிக மிக அவசியம். பொதுவாகக் கண்களைப் பாதுகாக்க மரபு சொல்லும் முக்கிய வழி எண்ணெய்க் குளியல். பித்தத்தைச் சீர்செய்யும் இந்த மரபுப் பழக்கம், பல நூறு ஆண்டுகள் நம்மிடம் இருந்த நலவாழ்வுப் பேணல். இனிப்புநோய் அதி பித்தத்தில் பிரதானமாய்த் தொடங்கும் நோய். ஆதலால் இனிப்பு நோயினருக்கு எண்ணெய்க் குளியல் நிச்சயம் அவசியமான ஒன்று.

கூடவே, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரை, மீன்கள், வெள்ளாட்டு மண்ணீரல் ஆகியவை கண் களைப் பாதுகாக்க, மரபு சொன்ன உணவு வகைகள்.

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள்

கல்லீரல் சார்ந்த பாதிப்புகள் முற்றிலும் நீங்க அதிமதுரம், கீழாநெல்லி, சீரகம் இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் இரண்டு கிராம் பொடியை தினமும் காலையில் மட்டும் சாப்பிட்டுவந்தால் கல்லீரல் பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.

இளநரை, தலைமுடி உதிர்தல் தடுக்க அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை முடி உதிர்தல் இருக்காது.

அடிக்கடி வரும் தலைவலி குணமாக அதிமதுரம், சீரகம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி வரும் தலைவலி முழுமையாக குணமாகும்.

இளவயதில் உண்டாகும் வழுக்கை நீங்கி முடி வளர அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும்  முடி

வளரும்.

அனைத்து விதமான சளி, இருமல், ஆஸ்துமாவிற்கு சிறந்த நிவாரணம் அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும்.

தொண்டை சார்ந்த நோய்கள் குணமாக அதிமதுரம், ஆடாதொடை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து , தினமும் இரண்டு கிராம் அளவு காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால்  தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்.

பச்சிளம் குழந்தைகளுக்கு

காது கேட்கும் திறன் பரிசோதனை

அவசியம் தேவை

சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற காது, மூக்கு தொண்டை தொடர்பான தேசியக் கருத்தரங்கில் டாக்டர் வி.கனகசபை பேசியதாவது:

இந்தியாவில் 6.3 கோடி பேர் காது கேளாமை குறைபாடுடன் உள்ளனர். இவர்களில் 20 லட்சம் பேர் குழந்தைகள். ஆண்டு தோறும் காது கேளாதோர் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்து வருகிறது. 65 வயதுக்கு மேற்பட்ட 3 பேர்களில் ஒருவருக்கு கேட்கும் திறன் இழப்பு உள்ளது.

ஆயிரம் குழந்தைகளில் 4 குழந்தைகள், பிறவிக் கேளாமை குறைபாட்டுடன் பிறக்கின்றன. காது கேளாமை குறைபாட்டை 50 சதவீதம் தடுக்க முடியும். உரிய சிகிச்சை மூலம் 30 சதவீதம் குணமாக்க முடியும். ஒரு வயது கடந்த பச்சிளம் குழந்தைகளின் கேட்கும் திறன் கட்டாயம் பரிசோதிக்கப்பட வேண்டும்.

கிராமப்புறங்களில் 4 வயது வரை குழந்தைகளின் கேட்கும் திறன் பரிசோதனை செய்யப்படாமல் இருக்கும் நிலை உள்ளது. நாட்டில் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 800 ஆக உள்ளது.  5 லட்சம் பேருக்கு ஒரு காது கேட்கும் திறன் பரிசோதகர், பேச்சு பயிற்சியாளர் என்ற நிலை உள்ளது. காது, மூக்கு,தொண்டை மருத்துவர்கள் எண்ணிக்கையும், துறை சார்ந்த மருத்துவத் தொழில்நுட்ப உதவியாளர்களின் எண்ணிக்கையும் அதி கரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். காது கேட்கும் திறன் பரிசோதகர்,பேச்சு பயிற்சியாளர் படிப்பு எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 2007 ஆம் ஆண்டு இந்தியாவில் 10 மாநிலங்களைச் சேர்ந்த 25 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட தீவிர காது கேளாமை குறை பாடுக்கான சிகிச்சை நடவடிக்கை கெட்டவாய்ப்பாக தொடர்ந்து மேற்கொள்ளப்படவில்லை.அந்த நடவடிக்கையை மீண்டும் தீவிரப் படுத்த வேண்டும். இதன் மூலம் காதுகேளாதோர் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க முடியும் என்றார்.

எலும்புகளை பலப்படுத்தும் கீரைகள்!

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்க விளைவில்லாத மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், எலும்புகளை பலப்படுத்தும் மருத்துவம் பற்றி பார்க்கலாம். எலும்பு பலமாக இருந்தால்தான் உடல்நலம் நன்றாக இருக்கும். வயது அதிகமாகும்போது எலும்புகள் பலம் குறையும். எலும்புகள் தேய்மானம் அடைகின்றன. இதனால் நடப்பதற்கு சிரமம், கூன் விழுவது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். அரைக் கீரை, முருங்கை கீரை, புளிச்சை கீரை ஆகியவை எலும்புகளை பலப்படுத்தும் மருந்துகளாக விளங்குகின்றன.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner