எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 28  சென்னை பார்வதி மருத்துமனை தலைமை முட நீக் கியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். முத்துகுமார் அவர்கள் முழங் கால் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றி கரமாக செய்துள்ளார்.

வழக்கமான முழுமையான முழங்கால் மாற்று சிகிச்சை போலன்றி பகுதியளவில் நோ யாளியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக செய்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை நடைமுறையானது யுனி கான்டைலர் முழங்கால் ஆர்தோ பிளாஸ்டி எனப்படும் மிகவும் சிறிய வகை அறுவை சிகிச்சை யாகும்.

இந்த சிகிச்சை ஒரு பெண்ணுக்கு மேற்கொள்ளப் பட்டது. இந்த சிகிச்சையை டாக்டர் எம்.கே.வெற்றிகுமார்,  ஆகி யோரடங்கிய மருத்துவ குழு மேற்கொண்டது.

இந்த அறுவை சிகிச்சை யானது முழுமையான முழங்கால் மாற்று சிகிச்சையாகும். அத் துடன் சிகிச்சை முடிந்த பிறகு ஏற்படும் அசவுகரியங்கள் இதில் ஏற்படாது. அதேபோல நோயாளி விரைவாக குணமடைவதோடு, வழக்கமான முழங்கால் இணைப் பைப் போல நடமாட இயலும்.

பகுதியளவு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையானது, யுனிகான்டைலர் முழங்கால் ஆர்தோ பிளாஸ்டி (யுகேஏ) என்று அழைக்கப்படுகிறது.

ஆர்த்ரைடிஸ் நோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு இத்தகைய அறுவை சிகிச்சை மிகவும் பயனுள்ளது என மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர்.