எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

ஆட்டிசம் என்பது குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைவதால் ஏற்படுகிற நோய் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலில்தான் ஆட்டிசக் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறது. ஆனால், இ.இ.ஜி., சிடி ஸ்கேன், எம்.ஆர்.அய். ஸ்கேன் எனப் பல பரி சோத னைகளில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளையைப் பரிசோதித்தபோது அவர்களுக்கு மூளை பாதிப்பு இல்லை என்கிற உண்மை தெரியவந்தது.

இது குழந்தையின் மொழித் திறன், பேச்சுத் திறன், சமூக நட்புத் திறன், ஒருங்கிணைப்புத் திறன் போன்ற நரம்பு சார்ந்த செயல்பாடுகளைப் பாதிக்கும் கோளாறு. இவர்களுக்கு அறிவு இருக்கும். ஆனால் அந்த அறிவைப் பயன்படுத்தவோ, வெளிப்படுத்தவோ வழி தெரியாது. இவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை இவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், அந்தப் புரிதலை நமக்குப் புரிய வைப்ப தற்கான மொழிதான் தெரியாது.

ஏன் வருகிறது?

ஆட்டிசம் வருவதற்கான காரணம் இன்னும் தீர்மானமாகவில்லை. இது வம்சாவளியில் வருகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. குழந்தையின் மரபணுவில் தோன்றும் பிழை காரணமாக இது ஏற் படுகிறது. நெருங்கிய உறவில் திருமணமான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

மிகவும் தாமதமான திருமணம், தாமதமான குழந்தைப் பேறு, நீரிழிவு நோய் போன்றவை பெண்ணிடம் காணப் பட்டால், அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிக்கு ருபெல்லா வைரஸ் தாக்கினால், தைராய்டு பிரச்சினை இருந்தால் அல்லது ஃபோலிக் அமிலச் சத்து குறைவாக இருந்தால் குழந்தைக்கு இந்தக் குறைபாடு வரலாம். கர்ப்பிணியிடம் காணப்படும் மன அழுத்தம், வலிப்பு நோய் மற்றும் மன நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிடுதல் போன்ற காரணிகள் இந்தக் குறைபாடு ஏற்படுவதை ஊக்குவிக்கின்றன.

அறிகுறிகள் என்ன?

தாய்ப் பாலூட்டும்போது தாயின் கண்களைக் குழந்தை பார்க்காது. ஆறு மாதம் ஆனால்கூட தாயின் முகம் பார்த்துச் சிரிக்காது. ஒன்பது மாதம் கடந்த பிறகும் ஒலி எழுப்பினால் அல்லது பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காது. கண்ணில் படும் பொருட்களை ஆர்வமாகப் பார்க்காது. அவற்றைத் தனக்கு விளையாடத் தரும்படி கேட்காது. டாட்டா காட்டுதல் போன்ற கை அசைப்பு இருக்காது. மழலைப் பேச்சுப் பேசாது. மற்ற குழந்தைகளுடன் விளையாட முயற்சிக்காது. குழந்தையின் வளர்ச்சிப் படிகளில் தாமதம் ஏற் படுவதுண்டு.

ஆட்டிஸம் உள்ள குழந்தைக்கு மூன்று வயதுக்கு முன்னரே மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சைகளை மேற் கொண்டால் நன்மைகள் அதிகம். அப்போதுதான் மூளை செல்களைப் பயிற்சிகள் மூலம் வழிக்குக் கொண்டுவர முடியும். காலம் தாழ்த்தினால், பயிற்சிகளால் பலன்கள் கிடைப்பது தாமதப்படலாம்.

ஆரோக்கியமான மூளைக்குச் சுத்தமான காற்று!

2014ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22 அன்று உலக  மூளை தினம் அனுசரிக்கப்படுகிறது. சுற்றுப்புறத்துக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பை வலி யுறுத்தவும், மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காகவும் இந்த தினம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நம்மால் உணவு, நீர் ஆகியவை இல்லாமல் ஒரு வாரம் வரை உயிர் வாழ முடியும். ஆனால், காற்று இல்லாமல் அய்ந்து நிமிடம்கூட இருக்க முடியாது. நாம் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் முறை சுவாசிக்கிறோம், 16 ஆயிரம் முறை காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறோம். நாம் சுவாசிக்கும் இந்தக் காற்றில் 78 சதவீதம் நைட்ரஜனும் 21 சதவீதம் ஆக்சிஜனும் மீதமுள்ள 1 சதவீதம் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்ஃபர் ஆக்சைடு, ஓசோன், மீத்தேன் என்று இன்னும் பல வாயுக்களும் கலந்துள்ளன. வளர்ந்துவரும் நாகரிகத்தாலும், வாகனங்களின் அதிகரிப் பாலும், தொழிற்சாலைகளின் தொடர் இயக்கத்தாலும், காற்று மாசுபடுவதும் அதிகரித்துவருகிறது.

நச்சுத்தன்மையுள்ள வாயுக்கள் நாம் வாழும் இந்தப் பூமியின் காற்றை மாசுபடுத்திய வண்ணமே உள்ளன. காற்றுதானே மாசுபடுகிறது அதனால் நமக்கென்ன கவலை என்று நாம் யாரும் ஒதுங்கிவிட முடியாது. நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜனின் அளவு குறையக் குறைய, நச்சுத்தன்மையுள்ள நுண்வாயுக்களின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, மனிதர்கள் பல்வேறு நோய்களால் இறக்க நேரிடும்.

மூளையைப் பாதிக்கும் காற்று

காற்று மாசுபடுவதால் ஒரு ஆண்டுக்கு 90 லட்சம் முதல் 120 லட்சம்வரையானோர் இறக்கிறார்கள். பக்கவாத நோய் 25 சதவீதமும் மாரடைப்பு நோய் 25 சதவீதமும் நுரையீரல் நோய் 43 சதவீதமும் புற்றுநோய் போன்ற நோய்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன. காற்று மாசுபடுவதால் நுரையீரல் நோய் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், காற்றும் கபாலத்தினுள் இருக்கும் மூளையும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையது. காற்று மாசுபட்டால் நமது மூளையிலும் பாதிப்பு ஏற்படும் என்கின்றன புதிய ஆய்வுகள். எப்படி?

நமது மூக்கில் உள்ள ஆல்ஃபாக்டரி எபிதீலியம் எனும் உறுப்பு, நாம் வாசனையை உணர்வதற்கு உதவுகிறது. இதுவே நம் மூளையையும் காற்றையும் தொடர்பு படுத்துகிறது.

நமது மூக்கின் வழியாக உள்ளிழுக்கும் காற்றில் மாசு கலந்திருக்கும்போது, மாசின் அளவைப் பொறுத்து பாதிப்பு ஏற்படுகிறது. மாசுத் துகளின் அளவு அதிகமாக இருந்தால், நமது மூக்கில் இருக்கும் முடியானது துகள் உள்ளே செல்லாமல் தடுக்கிறது. இந்தத் துகளானது கொஞ்சம் சிறியதாக இருந்தால் நமது தொண்டைப் பகுதிவரை செல்கிறது. ஆனால், இந்தத் துகள் நுரையீரலைச் சென்ற டையாமல், நாம் இதை இருமல் மற்றும் தும்மல் வழியாக வெளித்தள்ளுகிறோம். இந்தத் துகள், மிகவும் நுண்ணிய அளவில் இருந்தால் ஆல்ஃபாக்டரி எபிதீலியம் வழியாகச் சென்று மூளையில் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளுக்கும் பாதிப்பு

அசுத்தமான காற்றைச் சுவாசிப்பதால் நச்சுத்தன்மையுள்ள துகள்கள் மூக்கில் ஆல்ஃபாக்டரி எபிதீலியம் வழியாக மூளையைச் சென்றடைந்து பிளட் பிரெய்ன் பேர்ரியர்  எனும் மூளையின் பாதுகாப்பு வளையத்தைச் சிதைத்து விடுகிறது. அதனால் சாதாரணமாக மூளைக்குள் நுழைய முடியாத பல கிருமிகள், வேதியியல் பொருட்கள் போன்றவை மூளையைத் தாக்கி இம்யூன் டிஸ்ரெகுலேஷன்  என்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மல்டிபிள் ஸ்கெலரோசிஸ்  எனப்படும் கொடிய வியாதி மூளையைத் தாக்கிப் பல உயிர்கள் இறக்கின்றன. மூளையில் ஞாபகத்திறன் குறைந்து மூளை தன்னிலை இழந்து நிற்கும். எனவே, காற்றைச் சுத்தமாக வைக்க முயல்வோம்!

குழந்தைகளின் மூளையானது முதல் ஆயிரம் நாட்களில்தான் (அதாவது 2 வயதுக்குள்) 90 சதவீத வளர்ச்சியைப் பெறுகிறது. இந்த நாட்களில் குழந்தை, மாசுபட்ட காற்றைச் சுவாசிப்பதால், இந்த நச்சுப் பொருட்கள் மூளையில் உள்ள வெள்ளைப் படலத்தைப் பாதிக்கிறது. இதனால் குழந்தையின் அறிவுத்திறன் பாதிக்கிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தையின் நடவடிக்கையிலும் மாறுதல் ஏற்படுகிறது. அந்தக் குழந்தையிடம் கோபமும் சமூகத்துக்கு எதிரான சிந்தனைகளும் அதிகரிக்கின்றன.

மாசுபட்ட காற்று, நமது மரபணுவையே பாதிக்கும் தன்மை கொண்டது. இதனால் நாம், கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத அளவுக்குச் சிறுவயதிலேயே பல நோய்கள் வருவதற்குக் காரணமாக அமைகிறது.

பெரும்பாலான மக்கள் பாடி ஸ்பிரே, கார் ஸ்பிரே, ரூம் ஸ்பிரே எனப் பலவித வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துகிறார்கள். இதனாலும் காற்று மாசுபடுகிறது. இதில் உள்ள நுண் துகள்கள் நுரையீரல், மூளை, தோல் ஆகியவற்றைப் பாதித்து, நமது நோய் எதிர்ப்பாற்றல் சக்தியை நமக்கு எதிராகவே வேலை செய்யத் தூண்டுகிறது. இதனால் வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளை உட் கொள்ளும் நிலை ஏற்படும். அப்படி உட்கொண்டாலும் இந்த நோய் முழுமையாகக் குணமாவதில்லை என்பதுதான் வேதனைக்குரியது!

காற்று மாசுபடாமலிருக்க

நாம் செய்ய வேண்டியவை

வாகனங்களிலிருந்து வரும் புகை, மாசுக் கட்டுப்பாட்டு அளவுக்குள் உள்ளதா என்று மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும்.

தெருவில் சேரும் குப்பைகளைத் தீமூட்டக் கூடாது.

மிதிவண்டி பயன்பாட்டை அதிகரித்து, எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.

நம் வீட்டில் காற்றைச் சுத்தப்படுத்தும் தொட்டிச் செடிகளை வளர்க்கலாம். துளசி, கற்றாழை, மஞ்சள், மணி ப்ளான்ட், ஓமவல்லி, புதினா ஆகிய சிறிய செடிகள் காற் றைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை. வேப்பமரம், புங்கமரம் ஆகிய இரண்டையும் வளர்க்கலாம்.

நாள் முழுக்க புத்துணர்வுடன் இருக்க...

றீ திறந்துவைக்கப்பட்ட ஜன்னல் கதவுகளின் வழியே படரும் காலைச் சூரிய ஒளி, நமக்குத் தூக்கத்தை வரவைக்கும் மெலடோனின் ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்துகின்றன. உங்கள் படுக்கைக்கு அருகே பூக்களை வைத்திருந்தால் அன்றைய நாள் முழுவதும் நல்ல மனநிலையில் இருப்பீர்கள் என்கிறது ஹார்வர்டு பல்கலைக்கழகம் 2007-இல் நடத்திய ஆய்வு.

றீ காப்பி, தேநீர், பழரசம் அருந்தும்முன் ஒரு குவளை தண்ணீர் குடிப்பதால் வளர்சிதை மாற்றத்தின் வேகம் அதிகரிக்கும்.

றீ சரியான காலை உணவு உண்பது அன்றைய நாள் முழுவதும் அதிகமாக உண்பதைத் தடுப்பதற்கு உதவுவதாகச் சொல்கிறது மிசவுரி பல்கலைக் கழகத் தின் ஆய்வு. காலை உணவுக்கு குறைந்த கொழுப் புடைய தயிர், 30 கிராம் பாதாம் பருப்பு ஆகியவற்றை உண்ணப் பரிந்துரைக்கிறது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner