எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குருதிக் கொடை மற்றும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை, டிச. 6- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் (2.12.2018) 86ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் வெகு சிறப்புடன் நடைபெற்ற குருதிக் கொடை வழங்குதல் மற்றும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் விழா மாட்சிகள் குறித்த விவரம்:-

சென்னை பெரியார் திடலில் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 2.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் சிறப்பு மருத்து வமுகாம் மற்றும் குருதிக் கொடை வழங்கும் முகாமை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் துவக்கி வைத்தார்.

இம்மருத்துவ முகாமில் கண் சிகிச்சைப் பிரிவில் பேராசிரியர் டாக்டர் எம்.இராதா கிருஷ்ணன் எம்.எஸ்.டி.ஓ. (மேனாள் இயக்குனர் மற்றும் கண்காணிப்பாளர், அரசு கண் மருத்துவமனை எழும்பூர் சென்னை -8) கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

பொதுமருத்துவம் பிரிவில் டாக்டர் இ.பிரபு (தலைமை அணு ஆற்றல் சிறப்பு மருத்து வர் - அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை) மற்றும்  மயக்க இயல் மருத்துவர் டாக்டர் நளினி பிரபு அவர்களும் இம்முகாமில் கலந்து கொண்டனர் மேலும் Neprologist டாக்டர் சக்தி மற்றும் காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் அறவாழி கலந்து கொண்டார். இதய நோய் சிகிச்சைப் பிரிவில் டாக்டர் நவீன்ராஜா (கார் டியாலஜிஸ்ட்), டாக்டர் சி.சுந்தரேசன் எம்டிஆர்டி ஆகியோர் கலந்து கொண்டனர். பல் மருத் துவம் பகுதியில் பல்மருத்துவர் டாக்டர் ஆர்.மித்ரா கலந்து கொண்டார்.

காது மூக்கு தொண்டை பகுதியில் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜோதீஸ்வரன் கலந்து கொண்டார்.

சிறுநீரக இயல் துறைக்கு சென்னை சைதாப்பேட்டையில் இயங்கும் ஆர்.ஜி.ஸ்டோன் மருத்துவமனையில் இருந்து ராஜா, செவிலியர் ஆகியோர் கலந்து கொண்டனர். கண் சிகிச்சைப் பிரிவிற்கு சென்னை-, வாசன் அய்கேர் பிரிவில் இருந்து கண் பரிசோ தனை மருத்துவ உபகரணங்களை கொண்டு வந்திருந்தனர்.

குருதிக்கொடையை வழங்க 62 தோழர்கள் வந்தி ருந்தனர் அவர்களில் உடல் தேர்வு செய்யப்பட்டு குருதிக்கொடையை 40 தோழர்கள் மகிழ்ச்சியுடன் வழங்கினர். இராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து வந்திருந்த இரத்த வங் கியை சார்ந்த மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் இப்பணியை சிறப்புடன் செய்திருந்தனர்.

திரளான பொதுமக்கள் மற்றும் திராவிடர் கழகத்தினர் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றோர் விபரம்: ஆண்கள் 152, பெண்கள் 81 என மொத்தம் 233 பேர் கலந்து கொண்டனர். வந்திருந்த மருத்துவ வல்லுனர்கள் அவரவர் துறை சார்ந்த மருத்துவ சேவையினை வழங்கி சிறப்பித்தனர். இம்முகாமிற்கு வந்திருந்த சிறப்பு மருத்துவர்களை பெரியார் மணியம்மை மருத்துவமனை மய்யத்தின் இயக்குனர்கள் டாக்டர் சி.மீனாம்பாள், டாக்டர் ஆர்.கவுதமன், டாக்டர் பிறைநுதல் செல்வி (மறைந்த திராவிடர் கழக பொருளாளர்) நிலைய மருத்துவர் டாக்டர் டி. தங்கம் ஆகியோர் வரவேற்றனர்.

இம்மருத்துவமனை விழா ஏற்பாடுகளை மேலாளர் ஜி.குணசேகரன், ஜி.தயாளன் மற்றும் செவிலியர்கள் நித்யா கல்பனா, சி.ஆக்னஸ், .உமா லூசி, நற்சோனை, லேப் டெக் னீசியன் ஜெயந்தி, கோகிலா, இயன் முறை மருத்துவர் ஜாபர் அலி ஆகியோர் ஒருங்கிணைந்து பணியாற்றினர். பெண் உதவியாளர்கள் லலிதா, எம்.சி., சியா மளா ஆகியோரும் உடனிருந்தனர். முகாமில் நன்கு கவனித் ததாக சிகிச்சை பெற்றவர்கள் கூறிச்சென்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner