டெல் அவிவ், பிப்.1- தினமும் 2 டம்ளர் பால் குடித்து வந்தால் உடல் எடை குறையும் என்று இஸ்ரேல் ஆராய்ச்சி யில் தெரிய வந்துள்ளது.
இஸ்ரேலின் நெகிவ் நகரில் உள்ளது பென் குரியான் பல்கலைக்கழகம். அதன் பேராசிரியர் டானிட் ஷாகர் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர், உடல் எடை குறைப்பு பற்றி விரிவான ஆய்வு நடத்தினர். தினமும் மனித உடலுக்கு 580 மில்லி கிராம் விட்டமின் டி தேவைப்படுகிறது. அது சரியான விகிதத்தில் உடலில் சேர்ந்தால் பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க முடியும் என்று அந்த குழு கருதியது. இதற்காக 40 முதல் 65 வயது வரையுள்ள குண் டான ஆண், பெண்கள் 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தினமும் 580 மி.கி. விட்டமின் டி சேரும் அளவுக்கு பால், பால் பொருட்கள் அவர்களது டயட்டில் சேர்க்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஆய்வில் தினமும் 580 மி.கி. வைட்டமின் டி (2 டம்ளர் பால்) உடலில் சேர்ந்தவர்கள் 6 கிலோ எடை குறைந்திருந்தனர். பாலில் உள்ள கால்சியம் தவிர விட்டமின் டி, உடல் எடை குறைய அதிக பங்கு வகிக்கிறது என்று பேராசிரியர் டானிட் ஷாகர் தெரிவித்தார்.