பகுத்தறிவு

மதுரை, அக்.13 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் & பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பாக சிறப்புக்கூட்டம் 07.10.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ. எஸ்.அரங்கில்  நடைபெற்றது. நிகழ்விற்கு பகுத்தறிவு எழுத் தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு தலைமை தாங்கினார்.நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வர வேற்ற பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பா.சட கோபன் சிறப்புரை ஆற்ற வருகை புரிந்திருக்கும் பேரா.நம்.சீனிவாசன் அவர்கள் இயக்கத்திற் கும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் உற்ற துணையாக எவ்வாறெல்லாம் இருக்கின்றார் எனப்பெருமிதத் தோடு குறிப்பிட்டு வரவேற்றார்.

திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் வே.செல்வம் மதுரை மண்டலத்தலை வர் மா.பவுன்ராசா,செயலாளர் ந.முருகேசன்,மதுரை மாவட்ட தலைவர் சே.முனியசாமி,மாவட்ட செயலாளர் அ.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

படத்திறப்பு

அண்மையில் மறைந்த மதுரை  புறநகர் மாவட்ட பகுத் தறிவாளர் கழகச்செயலாளர் ஆசிரியர் ஜெ.சுப்பிரமணியன் அவர்களின் படத்தினை வழக்கறிஞர் சித்தார்த்தன் கழகப் பொறுப்பாளர்கள்,ஆசிரியர் சங்கப்பொறுப்பாளர்கள், அவரின் மகன் ஜெ.சு.சித்தார்த்தன்,அவரது தங்கை ஜெ.கனகசித்ரா,அவரது கணவர் மற்றும் அவரது உறவி னர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.அவருக்கு வீரவணக்க மும், மரியாதையும் கூட்டத்தில் செலுத்தப்பட்டது.

திருமங்கலம் ஒன்றிய ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர் பொ.விஜயபார்த்திபன், ஜெ.சுப்பிரமணியன் அவர்களின் ஆசிரியர் பணி, தொழிற்சங்கப் பணியைப் பற்றியும், தொழிற் சங்க ஈடுபாடு, தொழிற்சங்க அறை கூவலுக்கு ஏற்ப சிறைப் பட்டது போன்ற நிகழ்வுகளை குறிப்பிட்டு மிக உருக்கமாக நினைவுரை ஆற்றினார்.

கொள்கையால் உருவான குடும்பம்

தொடர்ந்து அவரின் நினைவுகளைப்  பகிர்ந்துகொண்ட மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர் சுப.முருகானந்தம் அவர்கள்  ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்னால் நானும் சுப்பிரமணியும் ஒரே நிறுவனத்தில் பணி யாற்றினோம். இயக்கப்பணிகளில் இருவரும் இணைந்து ஈடுபட் டோம். அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள் சொல்வதைப் போல கொள்கையால் உறவான குடும் பம் அவரது குடும்பமும் எனது குடும்பம் என உரையாற்றினார்.

தொடர்ந்து திராவிடர் கழகத் தின் மாநில அமைப்பு செயலாளர் வே.செல்வம் அவர்கள் மறைந்த ஆசிரியர் ஜெ.சுப்பிரமணியன் பற்றியும், செய்தியைக் கேட்டு துயரமடைந்த அய்யா ஆசிரியர் அவர்கள் தொலைபேசி வாயிலாக அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் உறுதியையும் அளித்ததைக் குறிப்பிட்டார். தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்குழுவின் தீர்மானங்களை எல்லாம் குறிப்பிட்டு அதனை நிறைவேற்ற எல்லோரும் உழைக்க வேண்டும், ஒத்து ழைப்பு அளிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். அடுத்து நீதிக்கட்சி- சுயமரி யாதை இயக்கம் என்னும் தலைப்பிலே உரையாற்றிய பேரா.முனைவர். நம். சீனிவாசன் அவர்கள் பார்ப்பனரல்லாதார் இயக்கம், வெள்ளுடை வேந்தர் சர்.பி.டி.தியாகராயர்,டி.எம். நாயர் ஆகியோர் பற்றி விரிவாகக் குறிப்பிட்டார். நீதிக்கட்சியின் தோற்றம், வரலாறு,ஆட்சி, இயற் றிய சட்டங்கள், அதனால் பலன் பெற்றோர் என அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கும் கணிப்பொறி போல அழகுற எடுத்துவைத்தார். தொடர்ந்து தந்தை பெரியார் அவர்கள் ஆரம்பித்த சுயமரியாதை இயக் கம், அதன் வளர்ச்சி, வரலாறு எனக் குறிப்பிட்டு நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்து திராவிடர் கழகமாக 1944இ-ல் உதயமானது எனக் குறிப்பிட்டார். வரலாற்றுத்தகவல்கள், நீதிக்கட்சி தலைவர்கள், நீதிக் கட்சி ஆண்டபோது முதல்வராக இருந்தவர்கள், அமைச்சராக இருந்தவர்கள் என அனை வரையும் வருடத்தோடு குறிப் பிட்டு சாதனைகளைப் பட்டிய லிட்டார். மிகச்செறிவும், செய்தியும் மிக்க உரையாக அவரது சிறப்புரை அமைந்தது. நிறைவாக மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் நா.மணிகண்டன் நன்றி கூறினார்.

நிகழ்வில் பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்கள் அ.மன்னர்மன்னன், ச.பால்ராசு.எல்.அய்.சி. கிருட்டிணன், செல்வ.சேகரன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற பொறுப்பாளர் பா.காசி நாதன்,வழக்குரைஞர் நா. கணேசன், திராவிடர் கழக புறநகர் மாவட்ட பொறுப்பாளர் கள்  சிவ குருநாதன், த.ம. எரி மலை, மாநகர் பொறுப்பா ளர்கள் ஆட் டோ  செல்வம், விராட்டி பத்து சுப்பையா, புதூர் பாக்கியம், பீபிகுளம் பிச்சைப்பாண்டி, கனி, சுந்தர்,ஆசிரியர் இராமசாமி, ஆசிரியர் சேகரன், அழகுபாணிடி, அகில், இளமதி, கவிமுகில், செல்லத்துரை எனப்பலர் கலந்து கொண்டனர்.

03. 04. 1932 - குடிஅரசிலிருந்து...

மூச்சடக்கிப் பலவகையாக யோகஞ் செய்வதன் மூலம் சிறிது சரீரம் திடம் பெறுவதற்கு ஏதாவது மார்க்கமிருக்குமேயொழிய அதில் வேறு தெய்வீகத் தன்மை யாதொன்றுமில்லை என்பதே நமது அபிப்பிராயமாகும். ஆகவே இதுவும் கழைக் கூத்து, சர்க்கஸ், ஜால வித்தை, முதலியவைகளைப் போல ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் நமது மக்கள் யோகத்தில் ஏதோ தெய்வீகத்தன்மை இருப்பதாக நம்பியிருப்பதால் அநேகர் யோகிகள் என்று கிளம்பி, சில ஜாலங்களைச் செய்து, பாமர மக்களை மலைக்கச் செய்து ஏமாற்றி வருகின்றனர். ஜன சமுகமும் இவர்கள் பால் பரம்பரையாகவே ஏமாந்து கொண்டும் வருகிறது.

இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கவனித்தால் விளங்கும். ஹட யோகம் என்பதில் சித்தி பெற்றவராகச் சொல்லப்பட்ட நரசிம்மசாமி என்பவர், சென்னை, கல்கத்தா முதலிய இடங்களில், பிரபல ரசாயன சாஸ்திரிகளின் முன்னி லையில், கொடிய விஷம், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் முதலியவற்றை விழுங்கி உயிரோடிருந் தாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசாயன சாஸ்திரிகள் எல்லோரும் மலைத்துப் போய்விட்டனர். ஆகவே யோகத்தின் மகிமைப்பற்றிப் பத்திரிகைகளில் விளம் பரப்படுத்தப்பட்டது.

ஆனால் இதே நரசிம்ம சாமியார் சில தினங்களுக்கு முன் ரெங்கூனில் இரண்டாம் முறையாக விஷங் களையும் கண்ணாடித் துண்டுகளையும் விஷங் களையும் விழுங்கிய கொஞ்ச நேரத்திற்குள் மரண யோகம் பெற்று விட்டார். இதற்கு காரணம் விஷம் உண்டவுடன் ஹட யோகம் பண்ணுவதற்கு கொஞ்சம் நேரமாகிவிட்டது என்று பத்திரிகைகளில் சொல்லப் படுகின்றன. ஆனால் அவைகளை உட்கொள்ளும் சாதுரியத்திலோ அல்லது மாற்று மருந்தை உட் கொள்ளுவதிலோ அல்லது பழக்கப்பட்ட அளவை உட்கொள்ளுவதிலோ தவறிவிட்டார் என்று ஏன் சொல்லக் கூடாதென்று தான் நாம் கேட்கின்றோம்.

யோகத்தில் தெய்வத் தன்மை உண்டென்பது வீண் புரட்டேயொழிய வேறில்லை. சாதுரியத்தினாலோ அல்லது பழக்கத்தினாலோ அல்லது மாற்று மருந்து களினாலோ செய்யப்படும் காரியங்களை யெல்லாம் யோகமென்றும், மந்திரமென்றும், தேவதையென்றும், தெய்வசக்தியென்றும், சொல்லி ஒரு கூட்டத்தார் ஜன சமுகத்தை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை அறிய வேண்டுகிறோம். ஆகையால் இனியேனும் இது போன்ற மோசடியான காரியங்களைக் கண்டு ஏமாறாமலிருக்கும்படி எச்சரிக்கை செய்கிறோம்.


தலை விதி

20.11.1932 - குடிஅரசிலிருந்து...

கஷ்டப்படுகிற மனிதர்கள் தாங்கள் பாடுபட்டும் பட்டினி இருக்க நேருவதையும், யோக்கியமாய் நாணயமாய் நடந்து இழிவாய் கீழ் மக்களாய்க் கருதப்படுவதுமான தங்களது கொடுமையின் நிலைமைக்கு மற்றவர்களால் தாங்கள் ஏமாற்றப் படுவதுதான் காரணம் என்பதை உணராமல் தங்களுடைய முன் ஜென்மகர்ம பலன் - தலை விதி - கடவுள் செயல் என்பதாகக் கருதிக் கொண்டு சிறிதும் முன்னேறுவதற்கு முயற்சி செய்யாமலும் சூழ்ச்சியின் தன்மையை உணராமலும் இருப்பதோடு தங்கள் நிலைமையைப் பற்றி சிறிதும் அதிருப்திக் கூட அடைய கூடாதென்று கருதி தங்கள் நிலையைப் பற்றி தாங்களே சமாதானமும் சாந்தமும் அடைந்து கொள்ளுகிறார்கள். வெளியில் சொல்லிக் கொள்ளக் கூட வெட்கப் படுகிறார்கள். ஏனெனில் கஷ்டப்படுகின்ற மக்களுக்குக் கடவுள் உணர்ச்சியும் மதமும் இதைத்தான் போதிக்கின்றது.

எப்படி என்றால், ஓ கஷ்டப் படுகின்ற மனிதனே! கஷ்டப் பட்டும் பட்டினி கிடக்கின்ற இளைத்த ஏழை மனிதனே!! நீ உனது முன்ஜென்மம் பாவகர்ம பலத்தினால் தலை விதியால் - கடவுள் சித்தத்தால், இம் மாதிரி துன்பத்தை அனுபவிக்கின்றாய். இந்த ஜன்மத்தில் நீ உனக்கேற்பட்ட இந்த நிலைமையை பொறுமையுடன் ஏற்று சமாதானமும் சாந்தமும் அடைந்து இருப்பாயாகில் அடுத்த ஜென்மத்தில் சுகப் படுவாய் மேலான பிறவி பெறுவாய் அல்லது மேல் உலகில் மோட்சம், என்னும் மேன்மையை அடைவாய் - கடவுள் சன்மானம் அருளுவார் என்கின்ற உபதேசமேயாகும்.

இந்தப் பொறுமை உபதேசமும் சாந்த உபதேச மும், சமாதான உபதேசமும், மக்களைக் கோழை களாகவும், முற்போக்கற்றவர்களாகவும், செய்து அவர்களது கஷ்டத்திலிருந்தும், இழிவிலிருந்தும் முன்னேற முடியாமலும், விடுபட முடியாமலும் சுயமரியாதை உணர்ச்சி பெறாமலும் இருந்து உயிர் வாழும் படி செய்து வந்திருக்கிறது.

 

30.10.1932 - குடிஅரசிலிருந்து...

நான் ஒரு நாதிகனல்ல.,,. தாராள எண்ணமுடையோன். நான் ஒரு தேசியவாதியுமல்ல, தேசாபிமானியுமல்ல, ஆனால் தீவிர ஜீவரட்ச எண்ணமுடையவன். எனக்கு ஜாதி என்பதோ, ஜாதியென்பதின் பேரால் கற்பிக்கப்படும் உயர்வு தாழ்வுகளோ கிடையாது. அத்தகைய எண்ணத்தையே நான் எதிர்ப்பவன். ஆதரிப்பவனல்ல. தாங்கள் மேல் ஜாதியார், உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு, மனிதரது ஜீவாதாரமான உரிமைகளாகிய தெருவில் நடத்தல், கோவிலுக்குள் செல்லல் முதலியவற்றை மறுத்துக் கொண்டு ஏனையோர்க்கும் சமத்துவம் வேண்டுமென்று செய்கிற முயற்சியைக் கண்டிக்கிறேன்.

காலமெல்லாம் பண்டைய பழக்கவழக்கங்களும், மூடக் கொள்கை களும் நிலைத்தே நிற்க வேண்டுமென்றால் ஒரு பறையன் என்று சொல்லப்படுகின்றவனோ, அல்லது சக்கிலி என்று சொல்லப் படுகின்றவனோ, மிருகத்தைவிடக் கேவலமாக நடத்தப்பட்டே வர எப்படி இந்தியா அவன் தாய் நாடு தான் என்று எண்ணமுடியும்? ஒரு பொது சேவைக்கு அவர்களை நம்மோடு ஒத்துழைக்க எதிர்பார்க்க முடியுமா?

வேலையில்லாத் திண்டாட்டம்

கஷ்டப்படுகின்ற தொழிலாளிகள் அரசாங்கத்தை நடத்துகின்றவர் களாயிருக்க வேண்டும். ஜனங்களின் நன்மைக்காக, ஜனங்களாலேயே நடத்தப்படுகின்ற அரசாங்கமாயிருத்தல் வேண்டும். இந்தியாவைப் பற்றியுள்ள வறுமையை அகற்றக் கூடிய அரசாங்கமாயிருக்க வேண்டும். பிரான், ஜெர்மனி, கிரீ, அய்க்கிய தேசம் முதலியனவெல்லாம் குடிஅரசு நாடுகளாகவே இருக்கின்றன. ஆனால் எங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடுகிறது. ரஷ்யா ஒன்றில் மட்டும் வேலை இல்லாத திண்டாட்டமே கிடையாது.

ஒரு சில பிச்சைக்காரர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் வயது சென்றவர்களும், அங்கவீனர்களுமே, அவர்களை அரசாங்கம் போஷிக்கிறது. உண்மையில் அது ஒரு புதிய உலகம். அதுபோல் முன்னொரு போதும், எந்நாட்டிலும் சீர்திருத்தம் நடந்தேறியதேயில்லை. அந்நாடு தொழிலாளர் மயமாகவே இருக்கிறது. தோட்டி முதல் தொண்டமான் ஈறாக எல்லோரும் அரசாங்கத் தொழிலாளராகவே கருதப்படுகின்றனர். அங்கு எல்லா மனிதரும் சமமாகவே கருதப்படு கின்றனர்.

மக்களுக்குள் உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. வியாபாரம், தொழில், வர்த்தகம், கல்வி முதலிய சமுக அபிவிருத்திக்கான தொழில் களெல்லாம் அரசாங்கப் பொறுப்பிலேயே நடைபெற்று வருகின்றன விவசாயம் அய்க்கிய முறையில் அரசாங்க பொறுப்பில்  பரிபாலிக்கப்பட்டு வருகிறது.

அங்கு சமயமென்பது ஒன்றுமே கிடையாது ஜன சமுக நன்மையே சமயம் அதுவே சன்மார்க்கம். கிறித்தவ கோயில்களுண்டு. அதற்கு அரசாங்கத்தார் எவ்வித பணஉதவியும் செய்வது கிடையாது. அவர்களுக்குக் கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ கவலையோ, விசாரமோ, கிடையாது.

குற்றம் செய்தவர்களை அரசாங்கம் ஒரு நவீன முறையில் தண்டிக்கிறது. அவர்களுக்கு சகல சவு கரியங்களும் செய்து கொடுக்கப் பட்டாலும், அவர்கள் சம்பளத்தில் ஒரு பாகம் அபராதத்தொகையாக பறிமுதல் செய்யப்படுகிறது. பலமுறை குற்றம் செய்தவர்களைச் சுகாதார நிலையத்திற்கனுப்பி அங்கு அவர்களது மனோ நிலை மாறத்தக்க சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

பாடசாலைகள் மூலமாயும் சினிமாக்கள் மூலமாயும் இதுவரை கற்றிராத பாமரமக்களுக்கும் தொழில் முயற்சியை அஸ்திவாரமாகக் கொண்ட கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒரு மதத்தையும் பின் பற்றாத அரசாங்கம், மத எதிர்ப்பு சங்கத்திற்குப் போதிய உதவியளித்து வருகிறது.

நான் இத்தேசத்தைப் பார்வையிடச் சென்றதின் நோக்கமெல்லாம், அங்குள்ள நிலைமைகளைச் சரிவர அறியவும், அத்தேசத்தைப் பற்றிப் பெருமிதப் படுத்திக் கூறும் கதைகள் உண்மையா வென்று அறியவு மேயாகும். அரசாங்கம் தாம் தேசத்தைப் புணருத்தாரணம் செய்ய வேண்டுமென்பதிலேயே தீவிர கவனம் செலுத்துவதால் கடவுளைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ நினைப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை.

எகிப்து நாட்டில் பர்தா( கோஷா) முறை அநேகமாக அழிந்து விட்டதென்றே சொல்லலாம். சில வயோதிகக் கிழவிகள் மட்டும் அதைவிடவில்லை. எகிப்திய பெண்கள் ஆங்கில மாதரைப் போலவே ஆடை அணிந்து கொள்ளுகிறார்கள் துருக்கிதேசத்தில் அதி தீவிரமான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. சமுக முன்னேற்றத்தில் துருக்கி மாதர் அதிகபிரயத்தனம் எடுத்து வருகிறார்கள். சமீபத்தில் ஒரு துருக்கி மாது போலீசு சூப்பிரெண்டாக நியமனம் பெற்றிருக்கிறார்.

(கொழும்பில் 17-10-32இல் சிலோன் டெல்லி நியூ பத்திரிகை

பிரதிநிதியொருவருக்கு பேட்டி கொடுத்துப் பேசியது)

திருமயம், அக். 11- புதுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.09.2018 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் திருமயம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற அலு வலகத்தில், மாவட்ட பக தலைவர் அ. சரவணன் தலைமையில் நடைபெற்றது.

மண்டல கழக தலைவர் பெ.இரா வணன், மாவட்ட கழக தலைவர் மு. அறி வொளி, மாவட்ட கழக செயலாளர் ப.வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட பக அமைப்பாளர் எ. இளங் கோவன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பகுத் தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் சி. இரமேசு தனது உரையில், நீட் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளை மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் எடுத்துக் கூறுகின்ற வகையில் கருத்தரங்கம் நடத்த வேண்டிய அவசியத்தையும், பகுத்தறிவு ஆசிரியர் அணிக்கு அதிக அளவில் ஆசிரியர்களை சேர்க்குமாறும் எடுத்துரைத் தார். தொடர்ந்து பேசிய மாநில துணைத் தலைவர் முனைவர் மு.சு.கண்மணி தனது உரையில், அரசு அலுவலங்களில் உள்ள முற்போக்கு, பகுத்தறிவு எண்ணம் கொண்ட தோழர்களைக் கண்ட றிந்து பகுத்தறிவாளர் கழகத்தில் இணைக் கும் முயற்சியை மேற்கொள்வது குறித்தும், மாவட் டத்திற்கு ஒதுக்கப்பட்ட மாடர்ன் ரேசன லிஸ்ட் சந்தா இலக்கை விரைந்து முடிக்கு மாறும் கேட்டுக் கொண்டார்.

ஏற்புரை ஆற்றிய மாவட்ட பக தலை வர் அ.சரவணன்  தனது உரையில், பகுத் தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில், புதுக்கோட்டை அரிமா சங்கம், மாவட்ட ஓவியர்கள் சங்கத்துடன் இணைந்து பள்ளி மாணவர் களுக்கு மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகள்  நடத்தி, அதன் பரிசளிப்பு விழாவில் சிந்த னைக்களம்   தொடர் சொற்பொழிவு தொடக்க விழாவை அக்டோபர் மாதத்தில் நடத்த இருப்பதாக அறிவித்தார். மாவட்ட பக செயலாளர் இரா.மலர்மன்னன் நன்றியு ரையில் புதிய உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடித்து தஞ்சையில் நடைபெற இருக்கும் ப.க. பொதுக்குழுவில் படி வத்தை ஒப்படைப்பதாகத் தெரிவித்தார்.

புதிய பொறுப்பாளர்கள்:

1. பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட தலைவர் இரா.கலையரசன்

2. பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட செயலாளர் ச.சண்முகம்

3. பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்ட அமைப்பாளர் கவிஞர் மு.கீதா

கலந்துரையாடலில் கு.ராமமூர்த்தி (திருமயம் பெல் நிறுவனம்), அ.தர்ம சேகர் (மாவட்ட ப.க. தலைவர் அறந் தாங்கி), ச.சண்முகம் ப.க. ஆகியோர் பங் கேற்றுச் சிறப்பித்தனர்.

Banner
Banner