பகுத்தறிவு

சென்னை, செப்.1 பகுத்தறி வாளர், திராவிட இயக்க சிந்த னையாளர், அறிவுக்கொடி இதழின் ஆசிரியருமான பெரம் பூர் க.கந்தன் (வயது 68) நேற்று (31.8.2018) மாலை 5.15 மணி யளவில் சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

உடல் நலிவுற்று, சிகிச்சை பெற்ற நிலையில் மறைந்த அன் னாரது உடலுக்கு இன்று (1.9.2018) காலை 8.30 மணிய ளவில் அவரது இல்லம் சென்றிருந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கழகத்தின் சார்பில் மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

மகன் க.தமிழ்ச்செல்வன், மகள் அறிவுக்கொடி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மறைந்த பெரம்பூர் க.கந்த னுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, வட சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் மற்றும் திமுக தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

சென்னை மண்டல திராவிடர் கழக செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட தலை வர் வழக்குரைஞர் சு.குமார தேவன், துணைத் தலைவர் கருங்குழி கண்ணன், ஆவடி மாவட்ட தலைவர் பா.தென் னரசு, மாநில மாணவர் கழக துணை செயலாளர் நா. பார்த்திபன், மாவட்ட துணை செயலாளர்கள் கி.இராமலிங்கம், சி.பாசுகர், வடசென்னை மாவட்ட இளைஞரணி செய லாளர் சோ.சுரேசு, கும்மிடிப் பூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் க.ச.க.இரணியன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், கொடுங் கையூர் தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் தலைவர் பா. கோபாலகிருட்டிணன், அமைப்பாளர் தி.செ.கணேசன், தங்க.தனலட்சுமி, க.அகிலா, சு.விமல்ராசு, சொ.அன்பு, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப் பாளர் செ.பிரவீன்குமார், புரசை இளைஞரணி அமைப்பாளர் கா.காரல்மார்க்சு மற்றும் தோழர்கள் கழகத் துணைத் தலைவருடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

இன்று (1.9.2018) மாலை 4 மணிக்கு அன்னாரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டு திரு.வி.க.நகர் தாங்கல் இடுகாட்டில் மூடச்சடங்குகள் எதுவுமின்றி  இறுதி நிகழ்வு நடந்தது.

10.05.1931 - குடிஅரசிலிருந்து

இந்த வியாசமானது இந்து மதம் என்பது என்ன?  இந்துக்கள் என்பவர்கள்  யார்? இந்து மதத்தால் மக்களுக்கு விடுதலை உண்டா? என்பதைப் பற்றி ஆராய்தல் என்னும் தன்மையில் எழுதப்படுவதாகும்.

இதற்கு முன் பல தடவைகளில் இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் பல ரூபமாக வெளிவந்திருந்த போதிலும்  அவ்வாராய்ச்சியில் நமது முக்கிய தத்துவங்கள் சிலவற்றிற்கு அனுகூலமாக அதாவது நமது  கருத்துக்களை ஒத்ததாகக் காணப்படும் சில  விஷயங்கள் இவ்வார நவசக்தி உபதலையங்கத்தில் காணப்படுவதால் அதனை எடுத்துக் காட்டவும் மற்றும் அவைகளில் இருந்து இந்துக்கள்.  இந்துமதம் ஆகியவைகள் எவ்வளவு தூரம் சமயம் சமுகம் என்பவைகளுக்குப் பொறுப்பற்ற  தன்மையாகவும், ஒரு நாட்டின் கேட்டிற்கே இவை முக்கிய ஆதாரமாகவும் இருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டவும் இதை எழுதுகின்றோம்.

அதாவது நவசக்தியின் 06-05-1931 உப தலையங்கம் இந்துக்கள் யார்?  என்றும் தலைப்பில் திரு.திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்கள்  எழுதி இருப்பதின்  சுருக்கமாவது; வடநாட்டில் சத்பந்திகள் என்ற ஒரு சமுகத்தார் இருக்கின்றார்கள் அவர்களில் சாந்தேஷ் என்னும் ஜில்லாவில் மாத்திரம் 40000 பேர் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களை இந்துக்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகின்றார்கள். ஆனால் அவர்களது நடவடிக்கைகள் சிலது இந்துக்களைப் போலவும்  சிலது முஸ்லீம்களைப் போலவும்  காணப்படும்.  இதனால் இந்துக்கள் வருணாசிரம தர்ம மகாநாடு கூட்டி மேல்கண்ட சத்பந்திகள் என்னும் சமுகத்தார்கள் இந்துக்கள் அல்ல என்று  தீர்மானித்து விட்டார்கள். பிறகு, சத்பந்திகள் சங்கராச்சாரி சாமியாருக்கு அப்பீல் செய்ததில் சங்கராச்சாரி அவர்களை  இந்துக்கள் அல்ல என்று சொல்லி விட்டார்.  பிறகு சங்கராச்சாரியார் கட்டளை மீது மேல் கண்ட சத்பந்திகளை மற்ற இந்துக்கள் மத  பகிஷ்காரம் செய்தார்களாம்.   சத்பந்திகள் இதனால் தங்களுக்கு மான நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கோர்ட்டில் ஒருவழக்கு தொடுத்தார்கள்.  நீதிபதி சத்பந்திகள் இந்து முஸ்லீம் ஆகிய இருவர் பழக்க ஒழுக்கங்களையும் பின்பற்றுவதாய் காணப்படுவதால் மான நஷ்டமில்லை என்றும் வழக்கைத்  தள்ளிவிட்டார்.

இதில் நீதிபதி தீர்ப்பு ஒரு புறமிருக்கட்டும்.  மற்றபடி வருணாசிரம மகா நாட்டாரும், சங்கராச்சாரியாரும் கொண்ட முடிவை ஆராய்ந்து பார்த்தால் சத்பந்திகள் வேதம்தான் இந்து மதத்தின் ஆதாரம் என்பதை ஒப்புக் கொள்ளாத தாலும், ஏகாதசி முதலிய விரதம் இல்லாததாலும், பசுவை போற்றாமையினாலும் மற்றும் வெள்ளிக்கிழமை உபவாச விருப்பதாலும், மேற்கு நோக்கி  பிரார்த்தித்து வணங்குவதாலும் சத் பந்திகள் இந்துக்களாக மாட்டார்கள் என்று முடிவு சொல்லி இருக்கின்றனர்.

இன்னார் இந்து,  இன்னார் இந்து அல்ல  என்று வரையறுத்து கூறும் அதிகாரம் யாருக்குண்டு? வேதத்தை ஆதாரமாகக் கொள்ளு பவர்களை இத்துக்கள் ஆவார்கள் என்று எங்கு சொல்லப்பட்டி ருக்கின்றன? அதற்கு ஆதாரம் எது? இந்து சமுகத்தில் வேதத்தை பொருட்படுத்தாதவர்கள்  அநேகர்  இல்லையா? இந்துக்கள் எல் லோருக்கும் வேதம் தெரியுமா? வருணாசிரம இந்து மதத்தில் எல் லோருக்கும் வேதம் படிக்க உரிமை உண்டா? வேதம் படிக்கவே உரிமையில்லாதவர்கள் வேதத்தை எப்படி ஒப்பமுடியும்? சங்க ராச்சாரியார் எல்லா  இந்துக்களுக்கும் குருவா? சங்கராச்சாரியார்  கொள் கைகளை ஒப்புக்கொண்டு நடப்பவர் மாத்திரமா இந்து? (என்ற பல கேள்விகளை கிளப்பிவிட்ட  பிறகு திரு.வி.க. கலியாணசுந்தர முதலியாரவர்கள்  தமது அபிப்பிராயமாகக் கூறுவதாவது:)

இந்து மதம் என்று சொல்லுவதானது எக்கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டதல்ல.  அதற்கு சத்மார்க்கம் என்று  பெயர். அதில் எல்லாக் கொள்கைகளுமடங்கும். அது யாருக்கு உரிமையுடையதாகும்.  அதை ஒரு கட்டுப்பாட்டிற்குள் அடிமைப்படுத்துவது அறியாமை. சமரசக் கொள்கையுடையோரனைவரும்  இந்துக்கள். இந்து என்னும் பெயர் பிற்காலத்தில் வந்தது

ஒருவன் கோவிலுக்குப் போவது போகாமலிருப்பது,  மதசின்னங்கள் அணிவது, அணியாமலிருப்பதும் உருவத்தை வழிபடுத்துவதும். வழிபடாமலிருப்பதும்,  ஆத்திகம் பேசுவது,  நாத்திகம் பேசுவது ஆகிய காரியங்கள்  எது வேண்டுமானாலும் செய்து  கொண்டு செய்யாமலிருந்து கொண்டும் இந்துவாக இருக்கலாம். இந்து  மதத்தில் நாஸ்திகத்திற்கு இடமுண்டு, பிறப்பினால் ஜாதி கற்பிப்பதே வருணாசிரமாகும். இதனை எல்லா இந்துக்களும் ஏற்றுக் கொள்ளுவதில்லை. வருணாசிரமத்தை ஒப்புக் கொள்ளாதவர்களை இந்துக்கள் அல்லவென்று யாரும் தள்ளுவதில்லை, வேதாந்த மத சங்கராச்சாரியார் வருணா சிரமத்தில் ஏன் விழ வேண்டும்? வேதத்தை ஆதாரமாகக் கொண்டு இவர் இந்து,  இவர் இந்துவல்ல என்று சொல்லும் சங்கராச்சாரியார் வேதத் தின்படி  நடக்காதவர்களை யெல்லாம் இந்துவல்ல என்று விலக்குவாரா?  பார்ப்பன வக்கீல்கள் இந்துக்களாவார்களா? அவர்களை இந்துக்கள் அல்லவென்று சங்காராச் சாரியார் ஏன்  கூறவில்லை? சமரச சன்மார்க்கம் ஏற்பட்டு  வரும் இந்நாளில் இடை காலத்தில் ஏற்பட்ட வருணாசிரமத்திற்கும்  ஆதிக்கம் தேடுவது அக்கிரமமாகும்.  நால் வருணாசிரம முதலா நவின்ற கலை சரிதமெல்லாம் பிள்ளை விளை யாட்டே என்பதாக திரு. முதலியார் அவர்கள் குறிப்பிட்டுஇருக்கின்றார்.

இவற்றுள் இந்து மதத்தைப் பற்றி நாம் அவ்வபோது சொல்லி வந்த பல விஷயங்களையே  திரு. முதலியார் அவர்கள் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இந்து மதத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட கொள்கை இல்லை என்று நாம் சொல்லி வந்ததை ஏற்றுக் கொண்டு  மேலும் கோவிலை ஒப்புக்கொள்ளாமலும் உருவ வழி பாட்டைச்  செய்யாலும்  மதச் சின்னத்தை அணியாமலும்  கடவுள் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளாமலும் இருப்பவர்கள் கூட இந்து மதஸ்தாரர்கள் என்பதாகவே, அது மாத்திரமல்லாமல் சமரசக்  கொள்கைகள் உடையாரனைவரும்  இந்துக்கள் என்றே குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

இவற்றையெல்லாம் விடமற்றொன்று அதாவது ஒவ் வொருடைய மனச் சாட்சிக்கும் மதிப்புக்கு   கொடுப்பது இந்து  மதம் என்றும்  சொல்லி இருப்பதாகும்.

எனவே வாசகர்களுக்கும் இப்போதாவது இந்து மதம் என்பதின் கொள்கை யோக்கியதையும் மதிப்புக்  கொடுப்பதும் இந்து மதம் என்றும் சொல்லி இருப்பதாகும். எனவே வாசகர்களுக்கும் இப்போ தாவது இந்து மதம் என்பதின்  கொள்கை யோக்கியதையும்  நடை முறையின் யோக்கியதையும் அதன் பேரால் மக்களை அடிமைக் கொண்டு கசக்கிப் பிழிந்து பார்ப்பனச் சோம்பேறிகள். புரோகித அர்ச்சக சாஸ்திரி  கூட்டத்தார்கள் கொள்ளையடித்து வரும் யோக்கிய தையும் விளங்கவில்லையா என்று  கேட்கின்றோம்.

27.09.1931 - குடிஅரசிலிருந்து...

இன்று இங்கு இந்த விழா துவக்கப்படுமுன்  நிகழ்ச்சிக் குறிப்பில் குறிப்பிட்டிருந்த பிரார்த்தனை என்னும்பேரால் ஒரு பொய்நடிப்பு நடிக்கப்பட்ட தானது உங்களுக்குத் தெரியும், பிரார்த்தனை என்று தலைவர் சொன்னவுடன் சில பிள்ளைகள் வந் தார்கள். கைகட்டினார்கள் கண்களை மூடிக் கொண் டார்கள். ஜனகணமன ................. என்று எதை யோ சொன்னார்கள். அதுபோலவே சில பெண்கள் வந்தார்கள். கை கட்டினார்கள். கண்மூடினார்கள். ஏதோ பாஷையில் எதையோ சொன்னார்கள். இதற்குப் பெயர் பிரார்த் தனையாம். இது பக்திக்காக செய்யப்படுவதாம், மேலும் இது கடவுளுக்கு ஆகவாம். நண்பர்களே! இதில் ஏதாவது அறிவோ நாணயமோ இருக்கின்றதா? என்பதை நிதானமாய், பொறுமையாய் யோசித்துப் பாருங்கள். தயவு செய்து ஆத்திரப்படாதீர்கள்.

கடவுள் என்பதும் பக்தி என்பதும் பிரார்த்தனை என்பதும் எவ்வளவு முக்கிய மானதாகவும், உண்மையானதாகவும் இருக்கவேண்டுமென்று சொல்லிவருகின்றீர்களோ அந்தக்குணம் எல்லாம் மேல்குறிப்பிட்ட இந்த பிரார்த்தனையில் இருந்ததா? பாருங்கள். சாதாரணமாக கிராமபோனுக்கு உள்ள அறிவு போன்ற சிறுவர்கள் அவர்களுக்கும், அவர் களுக்கு இந்த பிரார்த்தனைப் பாட்டு  சொல்லிக் கொடுத்தவர்களுக்கும் புரியாத ஒரு பாட்டை, இந்த சபையிலுள்ள சுமார் ஒரு ஆயிரம் பேருக்கும் புரியாத பாஷையில் நாடகத்தில் நடிப்பதுபோல் வந்து சொல்லிவிட்டு போவது என்றால் இதற்குச் சமமாக எதை சொல்லுவது?

அநேகமாக நமது பிரார்த்தனைகள் என்பதெல் லாம் புரியாத பாஷை, புரியாத சொற்கள், புரியாத கருத்துகள் கொண்ட பாடல்களாகவும் வாக்கியங் களாவும் இருக்கின்றனவே தவிர, பக்தி என்பதற்கு பொருத்தமானதாய் இருக்கின்றதா? பாருங்கள். எந்தப் பக்தி பாட்டும் சங்கீத பிரதானியத்திலும், இலக்கண இலக்கிய பிரதானியத்திலும், வேஷப்பிரதானியத்திலும், சடங்குப்பிரதானியத் திலும், இருக்கிறதே தவிர, உண்மை பிரதானியத்தில் சிறிதாவது இருக்கின்றதா? பாருங்கள். இந்த மாதிரி வேஷமுறையில் இவ்வளவு சிறு குழந்தைப் பருவத்தில் இருந்தே புகுத்தப்பட்ட இந்தப் பக்திக்கு ஏதாவது ஒரு துரும்பளவு யோக்கிய தையாவது இவர்களது பிற்கால வாழ்வில் உண்டாகிறதா என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இதிலிருந்து அக்குழந்தைகளுக்கு ஒரு பித்தலாட்டத் தையும் நாணயக் குறைவையும் பக்தி என்னும் பேரால் புகட்டினவர்களானோமா? இல்லையா? என்று யோசித்துப் பாருங்கள்.


பகுத்தறிவும் - மதமும்

27.09.1931 - குடிஅரசிலிருந்து...

உதாரணமாக தற்கால நிலைமையின் பயனாய் ஏற்பட்ட ஆராய்ச்சி சவுகரியத்தைக் கைகொண்ட ஒரு வானசாஸ்திரி கிரகணத்திற்குக் காரணம் சொல்லுவதாய் இருந்தால். அவன்  பூமியுடையவும், சூரியனுடையவும் நடப்பைக்கொண்டு கணக்குப் போட்டு பார்த்து ஒன்றின் நிழலால் மற்றொன்றின் ஒளி இன்ன காலத்தில் இன்ன அளவுக்கு மறைக்கப் படுகின்றது என்று சொல்லுவான். இதே விஷ யத்தைப் பற்றி மத சாஸ்திரியை கேட்டால் அவன் சூரிய சந்திரன்களுக்கு ஏற்பட்ட சாபத்தின் பயனாய் ராகு, கேது என்னும் இரண்டு கெட்ட கிரகங்களால் ஏற்படும் பீடைகள் என்று சொல்லுவான்.

இதில் இருக்கும் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், ஒரே ஆசாமி வான சாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும் போது பூமியின் நிழலால் மறைக்கப்படுகின்ற தென்றும், மதசாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும்போது சூரியன், சந்திரன் என்னும் தேவர்களை ராகு, கேது என்னும் பாம்புகள் விழுங்குகின்றன என்றும் சொல்லுவான்.

இது மாத்திரமல்லாமல் வானசாஸ்திரியாய் இருந்து சூரியக்கிரகணத் தன்மையைப் பிரதட்சயப் பாடமாக சில சாதனங்களைக் கொண்டு பிள்ளை களுக்குப் பாடம் கற்பித்துவிட்டு வீட்டுக்குப் போன வுடன் ராகு கேது பாம்புகள் விழுங்குகின்றன என்பதற்குத் தகுந்தபடி தோஷபரிகாரத்திற்கு நானம் செய்யவும் தர்ப்பணம் செய்யவும் சங்கல்பம் செய்து கொள்ளவும் சாந்தி செய்யவுமான காரியத்தில் ஈடுபடுகின்றான்.  ஆகவே, கல்வியுடன் மதத்தையும் கலக்குவதால் மனிதனுடைய பகுத்தறிவும் அறிவு சுதந்திரமும் எவ்வளவு கேவலமான  நிலைமைக்கு வந்துவிட்டது என்பதை நினைத்துப்பாருங்கள்.

அதிலும் நமது மதசம்பந்தமான அபிப்பிராயங் களும், குறிப்புகளும் மிக மிகப் பழமையான தினால் காட்டுமிராண்டித்தனமான காலத்து எண்ணங் களையும் அதன் முடிவுகளையும் இன்று எவ்வ ளவோ தெளிவானகாலத்தில் கட்டிக்கொண்டு அழு வதுடன் அதைக் கல்வியுடன் கலக்கி கல்வியையே பாழ்படுத்தி விட்டோம்.

புதுக்கோட்டையில் விடுதலைச் சந்தா சேர்ப்பது குறித்து கலந்துறவாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சென்னையில் 20.8.2018 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு தீர்மானத்தின்படி விடுதலைச் சந்தா சேர்க்கும் முகத்தான் புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக அலுவலகத்தில் எதிர் வரும் 25.8.2018 காலை 10.30 மணிக்கு கலந்துறவாடல் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு கழகத்தின் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமை வகிக்கிறார். மண்டலத் தலைவர் பெ. இராவணன், மண்டலச் செயலாளர் சு.தேன்மொழி, மாவட்ட தலைவர் மு. அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் இர.புட்பநாதன், இரா.சரசுவதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

நிகழ்ச்சிக்கு கழகப் பொதுச் செயலாளருடன் அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் இரா. கோபால், மகளிர் பாசறைச் செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்தி ரையன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

எனவே கழகத் தோழர்களும் இளைஞரணி, மகளிரணி, மாண வர் கழக ப.க. தோழர்கள் அனைவரும் தவறாது குறித்த நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியை புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைவுக்கு வீரவணக்கம்

தருமபுரி, ஆக. 19 பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில பொறுப் பாளர்கள் கூட்டம் 12.8.2018 அன்று காலை 10.30 மணிக்கு தருமபுரி பெரியார் மன்றத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் மா.அழகிரிசாமி தலைமையில் நடந்தது.

திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மகளி ரணி, மகளிர் பாசறை மாநில அமைப் பாளர் ஜெ.தமிழ்ச்செல்வி, மண்டல தலைவர் பெ.மதிமணியன், மண்டல செயலாளர் கரு.பாலன், மாவட்ட தலை வர் இளைய.மாதன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா. சரவணன் வரவேற்புரையாற்றினார். கூட் டத்தின் நோக்கங்களை விளக்கி மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிசாமி பேசினார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச் செல்வன், மாநில பொறுப்பாளர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றி பேசி னார்.

கூட்டத்தில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்கள் கே.டி.சி. குருசாமி, கா.நல்லதம்பி, கோபு.பழனி வேல், மு.சு.கண்மணி, தரும.வீரமணி, அ.தா.சண்முகசுந்தரம், அண்ணா.சரவ ணன், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்கள் எஸ்.அருள்செல்வன், சி.ரமேசு, வா.தமிழ்பிரபாகரன் ஆகியோர் இதுவரை தாங்கள் ஆற்றிய பணிகள் பற்றியும், ஆற்ற இருக்கும் பணிகள் பற்றி யும் விளக்கிப் பேசினார்கள்.

கூட்டத்தின் தொடக்கத்தில் திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு ஒரு நிமிடம் அமைதிகாத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பார்வையாளர்களாக தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கதிர்.செந்தில்குமார், மாவட்ட செயலாளர் மாரி. கருணாநிதி, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் இரா.கிருட்டிணமூர்த்தி, மாவட்ட இளை ஞரணி தலைவர் வ.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். ப.க.துணைத் தலை வர் கே.டி.சி.குருசாமி நன்றியுரையாற் றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) திமுக தலைவரும், மேனாள் முதலமைச்சருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு இக் கூட்டம் வீரவணக்கத்தையும், ஆழ்ந்த இரங்கலையும்  தெரிவித்துக் கொள்கிறது.

2) பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பகுத்தறிவு ஆங்கில ஏடான மாடர்ன் ரேசனலிஸ்ட்' சந்தா தொகையினையும், பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் படி வத்தையும் செப்டம்பர் மாதம் இறு திக்குள் முடித்து தலைமைக் கழகத்திடம் ஒப்படைத்திட தீர்மானிக்கப்படுகிறது.

3) மாதம் தோறும் மாவட்ட அமைப் புகளின் சார்பில் கருத்தரங்குகளை நடத் துவது என தீர்மானிக்கப்படுகிறது.

4) மாநில கழக பொறுப்பாளர்கள் மாவட்டம் தோறும் பயணம் செய்து மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

5) தென்சென்னை மாவட்ட பகுத் தறிவு ஆசிரியரணி (கல்லூரிகள்) அமைப் பாளராக பேராசிரியர் குமார் அவர்களும் புதுச்சேரி பகுத்தறிவு ஆசிரியரணி (கல் லூரிகள்) அமைப்பாளராக பேராசிரியர் ஏ.முத்தமிழ் அவர்களும் நியமனம் செய் யப்படுகிறார்கள்.

Banner
Banner