எழுத்துரு அளவு Larger Font Smaller Font


21.09.1930- குடிஅரசிலிருந்து....

மேல்நாட்டார் முதலியவர்கள் தாங்கள் உலகத்தில் இருப்பதே சுகமாய் வாழ்வதற் கென்றும், சுகாதார முறைப்படி இருப்பதற்கே சம்பாதிப்பதென்றும் சுகாதார வாழ்க்கையை அனுசரித்தே தனது பொருளாதார நிலைமை என்று கருதி அதற்கே தனது கவனத்தில் பெரும் பாகத்தைச் செலவு செய்கிறான். அதனாலேயே மேனாட்டுக்காரன் நம்மைவிட இரட்டிப்புப் பலசாலியாகவும், சுக சரீரியாகவும், அதிக புத்திக் கூர்மையும், மனோவுறுதி உடையவனாகவும், நம்மை விட இரட்டிப்பு வயது ஜீவியாகவும் இருந்து வருகிறான்.

நமது மக்களின் சராசரி வயது 24 லேயாகும். வெள்ளைக்காரனின் சராசரி வயது 45 ஆகும். இதற்குக் காரணமென்ன என்பதை நாம் கவனிப்பதில்லை. சுகாதாரத்தினால் இன்ன பலனிருக்கின்றது என்பதே நமக்குத் தெரியாது. எல்லாம் கடவுள் செயல் என்கின்ற ஒரே ஒரு அறிவுதான் நமக்கு உண்டு. நமக்குக் காலரா வந்தால் ஓங்... காளியம்மனின் குற்றமென்று பொங்கல் வைக்கவும், வேல் மிரவணை செய்யவும் தான் முயற்சி செய்வோம். வைசூரி வந்தால் மாரியம்மனின் குற்றமென்று மாரி யாயிக்குத் தயிர் அபிஷேகமும், இளநீர் அபிஷேகமும் தான் செய்வோம்   வயிற்றுவலி வந்தால் திருப்பதி பொன்றாமத்தையனுக்கு வேண்டுதலை செய்து கொள்ளுவோம். நரம்புச் சிலந்தி வந்தால், சிலந்திராயனுக்கு அபிஷேகம் செய்வோம்.

நம் சங்கதிதானிப்படியென்றால் குழந்தை களுக்குக் காயலா வந்தால் பாலாரிஷ்டம் என்போம், கிரகதோஷ மென்போம். செத்து விட்டால் விதி மூண்டு விட்டதென்போம். ஆகவே இந்த மாதிரி வழிகளில் தான் நமது புத்திகள் போகுமேயல்லாமல் ஏன் வியாதி வந்தது? ஆகாரத்திலாவது பானத்திலாவது காற்றிலாவது என்ன கெடுதி ஏற்பட்டது? சரீ ரத்தில் என்ன கோளாறு இருக்கின்றது என் கின்ற விஷயங்களில் கவலை செலுத்தும்படி யான அறிவோ, படிப்போ நமக்குக் கிடை யாது. நமது நாட்டு சுகாதாரத்தின் யோக்கியதை தெரிய வேண்டுமானால் மி மேயோவின் இந்தியத் தாய் என்னும் புத்தகத்தைப் பார்த் தால் சிறிது விளங்கும். நமது நாட்டு மக்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளைப் பக்கத்து வீட்டுக்கு முன்புறமாகக் கொண்டு போய்க் கொட்டுவதே வழக்கம்.

பக்கத்து வீட்டுக்காரன் நமது வீட்டுக்கு முன்புறத்தில் கொண்டு வந்து கொட்டி விட்டுப் போவது வழக்கம். நமது குழந்தை களுக்குப் பொது வீதிகளேதான் கக்கூசுகளா யிருக்கின்றன.

பெரிய ஆட்களுங்கூட இராத்திரி நேரங் களில் ரோட்டு ஓரங்களில் ஜலமலவு பாதைக்கு இருப்பதே வழக்கம். வாய்க்கால், குளம், கிணறு, குட்டையாகி யவைகளின் கரைகளை யேதான் பொது ஜனங்கள் கக்கூசாக உப யோகித்து வருகின்றார்கள். அங்குளங்களி லேயே கால் அலம்புவது முதலிய அசிங் கங்கள் செய்கின்றார்கள்.

நமது வீட்டு ஜலதாரைத் தண்ணீரெல்லாம் கிராமங்களில் தெரு நடுவில் ஓடுவதும், அதையே மக்கள் மிதித்து, மிதித்து நடப்பதும் மழை வந்தால் கரையிலுள்ளத் தண்ணீரும் தெருவிலுள்ள தண்ணீரும் வழிந்தோடி வாய்க்கால்களிலும் குளம் குட்டைகளில் விழு வதும் அதையே மறுபடியும் ஜனங்கள் குடிப் பதும், குளிப்பதுமான காரியங்கள் செய்வதும், சர்வ சாதாரண வழக்கமாயிருக்கின்றது.

பட்டணங்களிலும் ஜலதாரைத் தண்ணீ ரெல்லாம் ரோட்டின் இரு மருங்குகளிலும் பள்ளம் வெட்டி ஓடச் செய்வதும் அப்பள்ளத்து ஓரத்தி லேயே திண்ணைபோட்டு சதா அங்கேயே உட்கார்ந்து கொண்டு வியாபாரம் முதலியவைகள் செய்வதும், பலகாரக் கடை முதலியவைகள் அந்த டிச்சின் ஓரத்திலேயே சுடுவதும், அங்கேயே வைத்து விற்பதுமாகிய காரியங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறு கின்றன. நமது நாட்டு தல ஸ்தாபனங்களிலோ அவற்றின் அங்கத்தினர்களுக்கும், தலைவர் களுக்குமே சுகாதாரம் என்றால் என்னவென்று தெரியாது. டிச்சின் மேல் வைத்து வியாபாரம் செய்வதற்கே லைசென்ஸ் கொடுப்பார்கள்.

சுகாதாரத்திற்கு ஏற்பட்ட பணத்தை யெல் லாம் சுகாதார உத்தியோகஸ்தர்களும், சிப் பந்திகளுக்கும் சம்பளமாய் கொடுத்து நல்ல பேர் வாங்குவதற்கே செலவு செய்து விடு வார்கள். அந்த உத்தியோகஸ்தர்களும், சிப்பந்திகளும் தங்கள் எஜமானனுக்குச் சுகாதார அறிவு கிடையாது என்பது நன்றாய்த் தெரியுமாதலால் அவர்கள் எஜமானர்களுக்குச் சலாம் போட்டு அவர்களைப் புகழ்ந்து பேசி திருப்தி செய்வ திலேயே தங்கள் காலத்தைக் கடத்தி வாங்கிய சம்பளத்திற்குக் கடனைக் கழித்து விடுவார்கள்.

தெருவில் குப்பையைப் போட்டால் வீட்டுக்காரனைக் கேட்கமாட்டார்கள். கேட் டால் அவன் நாளைக்கு ஓட்டுப் போட மாட்டான். எச்சிலையையும், குழந்தைகள் மலத்தையும், சாம்பல் முதலிய குப்பை களையும் தாராளமாய் வீதிகளில் கொட்டு வார்கள். அவர்களுக்குச் சிறிதும் அறிவும் இருக்காது, பயமுமிருக்காது. கேட்பதற்கு ஆளுமில்லை. ஊரைச்சுற்றிலும் தண்ணீர் தேங்கி நின்று கொசுக்களை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கும். அக் கொசுக்களினால் வீட்டிற்கு இரண்டொருவர் காயலாவாயிருந்து கொண்டேயிருப்பார்கள். இதற்கு என்ன காரணமென்பதே சுகாதார சிப்பந்திகளுக்குத் தெரியாது. அதன் பொறுப்பும் அவர்களுக் கில்லை. மேல் நாடுகளில் இவ்விஷயங்கள் கேட்பதற்கே ஆச்சரியப்படத்தக்கதாயிருக் கும். அவர்களின் சுகாதார அறிவே அற்புத மான பழக்க வழக்கங்களாயிருக்கும்.

ஆலயங் கட்டியவர்கள் கதி
10.08.1930, 17.08.1930 - குடிஅரசிலிருந்து

தஞ்சாவூர் ராஜாக்களை விட உலகத்தில் இன்னொருவன் கோயில் கட்டியிருக்கிறானா? சத்தி ரங்கள் கட்டியிருக்கிறானா? மான்யங்கள் விட்டிருக் கிறானா? அந்தக் கடவுள் தர்மம் அந்த ராஜாக்களுக்கு என்ன செய்தது? வம்சம் இருந்ததா? அவர்கள் வாரிசு தாரர்களுக்குக் கடவுள் தர்மம் ஒன்றும் செய்யவில்லை. வெள்ளைக்காரன் தான் சொத்துக்கு கொடுக்கிறான். அந்த சாஸ்திரங்களுக்கு மதிப்பு இருந்தால் அந்த தஞ்சாவூர் முதலிய அரசர்கள் இப்படி அழிந்து போயிருப்பார்களா?

பழனியில் குடம் குடமாய்ப் பாலைக் கொட்டு கிறார்கள். அது தொட்டியில் விழுந்து துர்நாற்றம் எடுத்துப் போய் காலரா ஏற்பட வழியாகிறது. ஏழைகளின் குழந்தைகள்பால் இல்லாமல் குரங்குக் குட்டிப்போல் மெலிந்து தவிக்கையில் குழவிக் கல்லின் தலையில் அதைக் கொட்டி வீணாக்கு கிறார்கள். அந்தக் குழந்தைகளின் வாயில் கொட்டு என் தலையில் கொட்டாதே என்று தான் யோக் கியமான கடவுள் சொல்லுமே யொழிய எந்த கடவுளும் அதில்லை என்று கோபித்துக் கொள்ளாது. அப்படி கோபித்துக் கொண்டால் கோபித்துக் கொள்ளட்டுமே. அது நம்மை என்ன செய்யமுடியும்? (சிரிப்பு) இப்படி இருந்தால் மக்களுக்கு ஜீவகா ருண்யம், பரோபகார சிந்தை, இரக்கம் இவை எப்படி ஏற்படும்? கைலாசம், வைகுண்டம், சொர்க்கம் என்ற இவை கற்பிக்கப்பட்டது. முதல் மனிதன் அயோக் கியனானான். இவற்றின் பெயரால் மனிதனை மனிதன் இம்சித்தான். கொடுமை செய்தான். ஒரு சிம்டா விபூதிக்காக எல்லாப் பாவமும் போக்கி மோட்சம் கொடுத்ததால் மனிதனது அறிவு மயங்கிப்போயிற்று.

இந்த மோட்ச நம்பிக்கைகள் ஒரே அடியாய் ஒழிய வேண்டும். இவ்வுலக அனுப வங்கள் லட் சியம் செய்யாமல் நாம் எப்பொழுது மேல் உலகமே பெரிது என்று கருதினோமோ அப்பொழுதே ஜீவகாருண்யத்திற்கும் ஒழுக்கத்திற்கும் இடமில் லாமற் போய் விட்டது.

தான் மோட்ச மார்க்க்கத்தை நாடுவதற்காக ஒருவன் அயோக்கியனாகவும், கொடுமை செய்பவ னாகவும் இருக்க வேண்டியதாயிற்று. இது ஒருகாலும் உண்மையான நாகரிகம் அல்ல. அன்பு அல்ல, இரக்கம் அல்ல, பரோபகாரம் அல்ல.

கடவுளைப் பற்றி கவலை வேண்டாம்
10.08.1930, 17.08.1930 - குடிஅரசிலிருந்து

உங்களுடைய தெய்வமும், மதமும் விடப்பட் டொழிந்தாகவே வேண்டும். நான் கடவுளை உண்டு என்றோ இல்லை என்றோ சொல்ல வரவில்லை. கடவுள் இருந்தால் அது இருக்கட்டும். அது இந்த ராமசாமிக்காக ஓடிப்போய் விடாது. அதற்கு எவனும் வக்கீலாக இருக்க வேண்டியதில்லை.

ராமசாமி கடவுள் இல்லை என்கிறான். பூசை வேண்டாம் என்கிறான் என்றெல்லாம் பேசுகிறார்கள். நல்ல கடவுளாக இருந்தால் அது உங்களது பணச் செலவை எதிர்பார்க்குமா? அல்லது உங்கள் எண்ணெயையும், பாலையும் பஞ்சாமிர் தத்தையும் குளிப்பாட்டுதலையும் எதிர்பார்க்குமா?

கடவுள் உண்டு, இல்லை என்ற சண்டை உலகம் தோன்றிய நாள் முதல் நடக்கிறது. நமக்கு அதை முடிவு செய்ய அவசியமில்லை.

உன் அறிவையும் முயற்சியையும் உன் வாழ்க் கைக்கு உபயோகப்படுத்து. உன் செல்வத்தை வீணாக கடவுளுக்கென்று அழிக்காதே என்றே சுயமரியாதை இயக்கம் சொல்லுகிறதே தவிர வேறில்லை. உங்கள் தெய்வங்களது நிலைமையில் நான் இருக்க சம்மதிக்கமாட்டேன்.

ஏனெனில் நீ குளிப்பாட்டும் போது தான் குளிக்க வேண்டும். நீ வேஷ்டி கட்டிவிடும் போது தான் கட்டிக் கொள்ள வேண்டும். நீ எண்ணெய் தேய்த்து விடும்போது தான் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு யார் சம்மதிப்பார்கள்? கடவுள் உன் பூசை யையும் உற்சவத்தையும் நகைகளையும் விரும்பு கிறது என்று சொல்லுவது வெட்கக்கேடு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner