எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தோழர்களே, தோழர்களே! (இருபாலரையும்தான்) வரும் சனி, ஞாயிறு இரு நாள் மாலையிலும் நீங்கள்  இருக்க வேண்டிய இடம் சங்கமமாகக் கூட வேண்டிய இடம் சென்னை பெரியார் திடல்.

முதல் நாள் (25.11.2017) மாலை நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கம்.

மாலை 5 மணிக்குக் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் சிறப்பான தேவையான தலைப்பில் ஒரு பட்டிமன்றம்.

ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் முதன்மைக் கரணியம் பிரச்சாரமா? சட்டம் இயற்றலா? என்ற தலைப்பில் பட்டிமன்றமாக இல்லாமல் கருத்தாழம்மிக்க பட்டி மண்டபமாக நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்ற மேனாள் நீதிபதி திரு.து.அரிபரந்தாமன் அவர்கள் தலைமையேற்க ஜாதி தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங் கம் நடைபெறும். கழகப் பொருளாளர் டாக்டர் பிறை நுதல் செல்வி, எழுத்தாளர் பழ.கருப்பையா, மேனாள் துணைவேந்தர் முனைவர் எம்.ஜெகதீசன், இதழாளர் புனித பாண்டியன், போராளி கவுசல்யா சங்கர், அர்ச் சகர் பயிற்சி பெற்ற தோழர் வா.அரங்கநாதன் ஆகி யோர் கருத்து முழக்க மழை கொட்டயிருக்கிறார்கள். நிறைவுரை தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

இரண்டாம் நாள் 26.11.2017 மாலை அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் வரலாற்றுச் சிறப்போடு நடைபெற உள்ளது.

மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறி ஞர் கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதற்காக வழிமுறை களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதியுமான ஜஸ்டிஸ் திரு. ஏ.கே.ராஜன் தொடக்கவுரை ஆற்றிட உள்ளார்.

(அரசுக்கு அவர் அளித்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் "கோயில்கள், ஆகமங்கள் மாற்றங்கள்" எனும் தலைப்பில் அரிய நூலாகவே வெளிவந்துள்ளது - மிகச் செறிவான தகவல்கள் புதையலாக அதில் இடம் பெற்றுள்ளன).

தந்தை பெரியார் அவர்களால் அறிவிக்கப்பட்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் 1970ஆம் ஆண்டிலுல், 2006ஆம் ஆண்டிலும் இரு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

எம்.ஜி.ஆர். ஆட்சியின் காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அன்றைய இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களால் பழனி கோயிலில் அர்ச்சகர் பயிற்சி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது (1984).

ஜெயலலிதா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலத்திலும் இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டு, 69 சதவிகித அடிப்படையில் அனைத்து ஜாதியி னருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் என்று முதல் அமைச்சரால் அறிவிக்கப்பட்டது (17.9.1991).

அவ்வப்போது பார்ப்பனர்கள் - கோயில் பெருச் சாளிகள், சங்கராச்சாரிகள், ஜீயர்களின் துணையோடு நேரடியாக உச்சநீதிமன்றம் (சென்னை உயர்நீதிமன் றத்தில் அவர்களுக்கு நம்பிக்கை கிடையாது) சென்று குறுக்குச்சால் ஓட்டிக் கொண்டிருந்தனர். தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று கடைசியாக உச்சநீதி மன்றமே கூறிவிட்டது (6.12.2015).

அந்த தீர்ப்பின் அடிப்படையில் அர்ச்சகர்களை நியமிக்குமாறு முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீர மணி அவர்கள் விரிவான கடிதம் ஒன்றையும் எழு தினார். (21.12.2015).

இன்றைய தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் கழகத்தின் சார்பில் கடிதம் எழுதி வலியுறுத்தப்பட்டது (9.10.2017).

இவ்வளவு நடந்தும் கிணற்றில் விழுந்த கல் மாதிரி பிரச்சினை கிடப்பது சரியானதுதானா? நேர்மையானது தானா?

தமிழர்களின் இழிவைத் துடைப்பதில் இந்த அரசுக்கு ஏன் மெத்தனப் போக்கு?

எத்தனையோ போராட்டங்களை நடத்தியாயிற்று. ஒன்றிற்கும் அசையாது இந்த அரசு என்றால் அதனை அசைக்கும் போராட்டத்தை நடத்துவதைத் தவிர வேறு வழிதான் என்ன?

சட்டப் போராட்டம் ஒரு பக்கம் - வீதிப் போராட்டம் மறுபக்கம் என்ற தண்டவாளத்தில் தமிழர் தம் சூத்திர இழிவைத் துடைக்கும் பணியில் பயணம் தொடரும் - தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் அய்ய மில்லை.

தமிழ்நாட்டில் நாம் தொடங்கிய போராட்டத்திற்கு கேரளாவில் வெற்றி கிடைத்துள்ளது. திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம் ஆறு தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட 62 பேர்களை இந்துக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்து, அவர்களும் அர்ச்சகர் பணியைத் தொடங்கிவிட்டனர். எந்த சாமியும் தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி கர்ப்பக் கிரகத்திலிருந்து கோபித்துக் கொண்டு வெளியேறிடவில்லை.

வீதியில் போகிற யாரோ ஒருவரை அழைத்து அர்ச்சகராகச் சொல்லவில்லை. முறையாக அர்ச்சகர் பயிற்சி 18 மாதங்கள் அளிக்கப்பட்டு, தேர்வு நடத்தப் பட்டு அதில் வெற்றியும் கண்ட 206 பேர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அர்ச்சகர் பணிக்காகக் காத்துக் கொண்டுள்ளனர்.

காணாக் கண்ணராக - கேளாக் காதினராக இருக்கக் கூடிய இவ்வரசின் கண்களைத் திறக்கவும், காதுகளைக் கேட்கச் செய்யவுமான மாநாடு வரும் ஞாயிறன்று மாலை (26.11.2017) சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை யேற்க, ஜஸ்டிஸ் திரு.ஏ.கே.ராஜன் தொடக்கவுரையாற்ற, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா, இந் தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன், சி.பி.எம். மத்தியக் குழு உறுப்பினர் அ.பாலகிருஷ்ணன், மதிமுக பொருளாளர் அ.கணேச மூர்த்தி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், செந்தமிழ்வேள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஆகிய பெருமக்கள் நம் பக்கம் உள்ள நியாயத்தை நிரல்பட எடுத்துரைக்கவிருக்கிறார்கள்.

சூத்திரத் தன்மையை இழிவு என்று கருதி, அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று எண்ணுகிற தமிழர்கள் எல்லாம் இந்த மாநாட்டுக்கு அவசியம் வருகை தரவேண் டும். தந்தை பெரியார் பிறந்த தமிழ்மண் தன்மான அனல் தகிக்கும் புரட்சி மண் என்பதை நிரூபிக்க தமிழர்கள் வந்து பார்க்க வேண்டும்.

உங்களையெல்லாம் சூத்திரர்களாக விட்டுவிட்டுச் சாகப் போகிறேனே என்று தந்தை பெரியார் தனது இறுதிச் சொற்பொழிவில், சென்னை தியாகராயர் நகரில் (19.11.1973) முழங்கினாரே அது நம் காதுகளில் இன்னும் ஒலிக்கிறதே!

வாருங்கள் தோழர்களே, குடும்பம் குடும்பமாய்!

இதில் கட்சியில்லை - ஆனால் நம்மைக் கயமைப் படுத்தும் அமைப்பு முறையினைத் தகர்க்கும் தணல் வெப்பம் உள்ளது. இதில் ஜாதியில்லை - ஆனால் ஜாதியின் ஆணி வேரை அடியோடு வெட்டி வீழ்த்தும் வீரமுண்டு. விவேகமும் உண்டு.

வாருங்கள்! - வாருங்கள்!! தமிழர் தலைவர் அழைக் கிறார் வாருங்கள்!!!

கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner