எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உண்மை வாசகர் வட்டத்தின் கருத்தரங்கம்

தூத்துக்குடி, ஆக.19 தூத்துக்குடி, உண்மை வாசகர் வட்டம் 9ஆவது கூட்டம் 28.7.2018 அன்று பெரியார் மய்யம் அன்னை மணியம்மையார் அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

மாவட்டத் திராவிடர் கழகத் துணைச் செயலாளர் இரா.ஆழ்வார் அனைவரையும் வரவேற்றார். பெரியார் மய்யப் பொறுப்பாளர் சு.காசி, மாவட்ட செயலாளர் மு.முனியசாமி ஆகியோர் முன் னிலை வைத்து உரையாற்றினார் கள். தலைமையுரையாக மாவட் டத் தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான் அவர்கள் நல்ல நேரம், கெட்டநேரம் என் பதே இல்லை. எல்லா நேரமும் பகுத்தறிவாளர்க்குரிய நேரமே என்று எடுத்துக் கூறினார்.

இறுதியாக மூடநம்பிக்கை களை த் தவிர்ப்போம்' என்ற தலைப்பில் மண்டலத் தலைவர் மா.பால்ராசேந்திரம் சிறப்புரை யாற்றினார்.

அவர்தம் உரையில்,

ராகு காலம் எமகண்டம், அட்டமி, நவமி இவையெல்லாம் பார்ப்பனர் நலன் கருதி உண் டாக்கப்பட்டப் பொய் நாட்க ளென்றார். சோமவார், மங்கல வார், குழுவார், சுக்லவார் என்ப தெல்லாம் கிழமைகளின் பெயர் தானேயொழிய இதில் அச்சப்பட வேண்டிய அளவிற்கு எதுவுமேயில்லை என்றார். சாணி தெளிப்பது, கையில் கயிறு கட்டுவது, திருஷ்டி சுற்று வது, கடியங்காய் கட்டுவது, உடைப்பது எல்லாமே வீணான பணச்செலவும், நேரக்கேடுமே யொழிய வேறு பலனேதுமில்லை என்றார். ஆடி மாதம் பீடை மாதமென்பதும், மார்கழி ஆகா தென்பதும் சுயநலக்காரர்களின் வருமானத்திற்காகவே சொல்லப் பட்டதாகும். மதங்கள், கடவு ளைக் காட்டிப் பலியிட வற் புறுத்தியதால் கொல்லப்பட்ட மனிதர்கள் நரபலி' என்ற பெய ரில் ஏராளம், ஏராளம் என்று கூறினார்.

சமீபத்தில் நடந்த கிரகணம் பற்றிய அறிவியலுக்கு அப்பாற் பட்டப் பொய்யுரைகளையும், பாம்புக் கதைகளையும் விளக்கிக் கூறினார். தீண்டாமை' என்றால் என்னவென்று விளக்கமுடியாம லேயே நீண்டகாலமாக மூடத்தன மாகக் கடைப்பிடித்து வரும் மனிதநேயக் கொடுமையையும் எடுத்துக் கூறினார். நோயுற்ற விலங்குகளோடு உறவாடுகிற மனிதன் நோயற்ற மனிதர்களைத் தொடுவதே, அவரின் நிழல் படுவதே ஆகாதென்பது எந்த வழியினில் நியாயமாகும் என்றார். பகுத்தறிவாளர்கள் எல்லா நிலைகளிலும் மூடநம்பிக்கை களுக்கு இடங்கொடாதோராய் வாழ வேண்டுமென்றார்.

இறுதியாக வழக்குரைஞர் பி.செல்வம் நன்றி கூறிட நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நிறைவு பெற் றது. இந்நிகழ்வினில் மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பொ.சாந்தி, மாநகர ப.க. செயலாளர் சுப்புராஜ், பெரியார் மய்யக் காப்பாளர் பொ.போஸ், ஜெரோம், செல்வம், சீ.மனோகரன், சந்திர சேகரன், உட்படக் கழகத் தோழர் கள் பலர் கலந்து கொண்டார்கள்.