எழுத்துரு அளவு Larger Font Smaller Font

10.05.1931 - குடிஅரசிலிருந்து

இந்த வியாசமானது இந்து மதம் என்பது என்ன?  இந்துக்கள் என்பவர்கள்  யார்? இந்து மதத்தால் மக்களுக்கு விடுதலை உண்டா? என்பதைப் பற்றி ஆராய்தல் என்னும் தன்மையில் எழுதப்படுவதாகும்.

இதற்கு முன் பல தடவைகளில் இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் பல ரூபமாக வெளிவந்திருந்த போதிலும்  அவ்வாராய்ச்சியில் நமது முக்கிய தத்துவங்கள் சிலவற்றிற்கு அனுகூலமாக அதாவது நமது  கருத்துக்களை ஒத்ததாகக் காணப்படும் சில  விஷயங்கள் இவ்வார நவசக்தி உபதலையங்கத்தில் காணப்படுவதால் அதனை எடுத்துக் காட்டவும் மற்றும் அவைகளில் இருந்து இந்துக்கள்.  இந்துமதம் ஆகியவைகள் எவ்வளவு தூரம் சமயம் சமுகம் என்பவைகளுக்குப் பொறுப்பற்ற  தன்மையாகவும், ஒரு நாட்டின் கேட்டிற்கே இவை முக்கிய ஆதாரமாகவும் இருக்கின்றது என்பதை எடுத்துக் காட்டவும் இதை எழுதுகின்றோம்.

அதாவது நவசக்தியின் 06-05-1931 உப தலையங்கம் இந்துக்கள் யார்?  என்றும் தலைப்பில் திரு.திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்கள்  எழுதி இருப்பதின்  சுருக்கமாவது; வடநாட்டில் சத்பந்திகள் என்ற ஒரு சமுகத்தார் இருக்கின்றார்கள் அவர்களில் சாந்தேஷ் என்னும் ஜில்லாவில் மாத்திரம் 40000 பேர் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களை இந்துக்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகின்றார்கள். ஆனால் அவர்களது நடவடிக்கைகள் சிலது இந்துக்களைப் போலவும்  சிலது முஸ்லீம்களைப் போலவும்  காணப்படும்.  இதனால் இந்துக்கள் வருணாசிரம தர்ம மகாநாடு கூட்டி மேல்கண்ட சத்பந்திகள் என்னும் சமுகத்தார்கள் இந்துக்கள் அல்ல என்று  தீர்மானித்து விட்டார்கள். பிறகு, சத்பந்திகள் சங்கராச்சாரி சாமியாருக்கு அப்பீல் செய்ததில் சங்கராச்சாரி அவர்களை  இந்துக்கள் அல்ல என்று சொல்லி விட்டார்.  பிறகு சங்கராச்சாரியார் கட்டளை மீது மேல் கண்ட சத்பந்திகளை மற்ற இந்துக்கள் மத  பகிஷ்காரம் செய்தார்களாம்.   சத்பந்திகள் இதனால் தங்களுக்கு மான நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கோர்ட்டில் ஒருவழக்கு தொடுத்தார்கள்.  நீதிபதி சத்பந்திகள் இந்து முஸ்லீம் ஆகிய இருவர் பழக்க ஒழுக்கங்களையும் பின்பற்றுவதாய் காணப்படுவதால் மான நஷ்டமில்லை என்றும் வழக்கைத்  தள்ளிவிட்டார்.

இதில் நீதிபதி தீர்ப்பு ஒரு புறமிருக்கட்டும்.  மற்றபடி வருணாசிரம மகா நாட்டாரும், சங்கராச்சாரியாரும் கொண்ட முடிவை ஆராய்ந்து பார்த்தால் சத்பந்திகள் வேதம்தான் இந்து மதத்தின் ஆதாரம் என்பதை ஒப்புக் கொள்ளாத தாலும், ஏகாதசி முதலிய விரதம் இல்லாததாலும், பசுவை போற்றாமையினாலும் மற்றும் வெள்ளிக்கிழமை உபவாச விருப்பதாலும், மேற்கு நோக்கி  பிரார்த்தித்து வணங்குவதாலும் சத் பந்திகள் இந்துக்களாக மாட்டார்கள் என்று முடிவு சொல்லி இருக்கின்றனர்.

இன்னார் இந்து,  இன்னார் இந்து அல்ல  என்று வரையறுத்து கூறும் அதிகாரம் யாருக்குண்டு? வேதத்தை ஆதாரமாகக் கொள்ளு பவர்களை இத்துக்கள் ஆவார்கள் என்று எங்கு சொல்லப்பட்டி ருக்கின்றன? அதற்கு ஆதாரம் எது? இந்து சமுகத்தில் வேதத்தை பொருட்படுத்தாதவர்கள்  அநேகர்  இல்லையா? இந்துக்கள் எல் லோருக்கும் வேதம் தெரியுமா? வருணாசிரம இந்து மதத்தில் எல் லோருக்கும் வேதம் படிக்க உரிமை உண்டா? வேதம் படிக்கவே உரிமையில்லாதவர்கள் வேதத்தை எப்படி ஒப்பமுடியும்? சங்க ராச்சாரியார் எல்லா  இந்துக்களுக்கும் குருவா? சங்கராச்சாரியார்  கொள் கைகளை ஒப்புக்கொண்டு நடப்பவர் மாத்திரமா இந்து? (என்ற பல கேள்விகளை கிளப்பிவிட்ட  பிறகு திரு.வி.க. கலியாணசுந்தர முதலியாரவர்கள்  தமது அபிப்பிராயமாகக் கூறுவதாவது:)

இந்து மதம் என்று சொல்லுவதானது எக்கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டதல்ல.  அதற்கு சத்மார்க்கம் என்று  பெயர். அதில் எல்லாக் கொள்கைகளுமடங்கும். அது யாருக்கு உரிமையுடையதாகும்.  அதை ஒரு கட்டுப்பாட்டிற்குள் அடிமைப்படுத்துவது அறியாமை. சமரசக் கொள்கையுடையோரனைவரும்  இந்துக்கள். இந்து என்னும் பெயர் பிற்காலத்தில் வந்தது

ஒருவன் கோவிலுக்குப் போவது போகாமலிருப்பது,  மதசின்னங்கள் அணிவது, அணியாமலிருப்பதும் உருவத்தை வழிபடுத்துவதும். வழிபடாமலிருப்பதும்,  ஆத்திகம் பேசுவது,  நாத்திகம் பேசுவது ஆகிய காரியங்கள்  எது வேண்டுமானாலும் செய்து  கொண்டு செய்யாமலிருந்து கொண்டும் இந்துவாக இருக்கலாம். இந்து  மதத்தில் நாஸ்திகத்திற்கு இடமுண்டு, பிறப்பினால் ஜாதி கற்பிப்பதே வருணாசிரமாகும். இதனை எல்லா இந்துக்களும் ஏற்றுக் கொள்ளுவதில்லை. வருணாசிரமத்தை ஒப்புக் கொள்ளாதவர்களை இந்துக்கள் அல்லவென்று யாரும் தள்ளுவதில்லை, வேதாந்த மத சங்கராச்சாரியார் வருணா சிரமத்தில் ஏன் விழ வேண்டும்? வேதத்தை ஆதாரமாகக் கொண்டு இவர் இந்து,  இவர் இந்துவல்ல என்று சொல்லும் சங்கராச்சாரியார் வேதத் தின்படி  நடக்காதவர்களை யெல்லாம் இந்துவல்ல என்று விலக்குவாரா?  பார்ப்பன வக்கீல்கள் இந்துக்களாவார்களா? அவர்களை இந்துக்கள் அல்லவென்று சங்காராச் சாரியார் ஏன்  கூறவில்லை? சமரச சன்மார்க்கம் ஏற்பட்டு  வரும் இந்நாளில் இடை காலத்தில் ஏற்பட்ட வருணாசிரமத்திற்கும்  ஆதிக்கம் தேடுவது அக்கிரமமாகும்.  நால் வருணாசிரம முதலா நவின்ற கலை சரிதமெல்லாம் பிள்ளை விளை யாட்டே என்பதாக திரு. முதலியார் அவர்கள் குறிப்பிட்டுஇருக்கின்றார்.

இவற்றுள் இந்து மதத்தைப் பற்றி நாம் அவ்வபோது சொல்லி வந்த பல விஷயங்களையே  திரு. முதலியார் அவர்கள் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இந்து மதத்திற்கு என்று ஒரு குறிப்பிட்ட கொள்கை இல்லை என்று நாம் சொல்லி வந்ததை ஏற்றுக் கொண்டு  மேலும் கோவிலை ஒப்புக்கொள்ளாமலும் உருவ வழி பாட்டைச்  செய்யாலும்  மதச் சின்னத்தை அணியாமலும்  கடவுள் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளாமலும் இருப்பவர்கள் கூட இந்து மதஸ்தாரர்கள் என்பதாகவே, அது மாத்திரமல்லாமல் சமரசக்  கொள்கைகள் உடையாரனைவரும்  இந்துக்கள் என்றே குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

இவற்றையெல்லாம் விடமற்றொன்று அதாவது ஒவ் வொருடைய மனச் சாட்சிக்கும் மதிப்புக்கு   கொடுப்பது இந்து  மதம் என்றும்  சொல்லி இருப்பதாகும்.

எனவே வாசகர்களுக்கும் இப்போதாவது இந்து மதம் என்பதின் கொள்கை யோக்கியதையும் மதிப்புக்  கொடுப்பதும் இந்து மதம் என்றும் சொல்லி இருப்பதாகும். எனவே வாசகர்களுக்கும் இப்போ தாவது இந்து மதம் என்பதின்  கொள்கை யோக்கியதையும்  நடை முறையின் யோக்கியதையும் அதன் பேரால் மக்களை அடிமைக் கொண்டு கசக்கிப் பிழிந்து பார்ப்பனச் சோம்பேறிகள். புரோகித அர்ச்சக சாஸ்திரி  கூட்டத்தார்கள் கொள்ளையடித்து வரும் யோக்கிய தையும் விளங்கவில்லையா என்று  கேட்கின்றோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner