எழுத்துரு அளவு Larger Font Smaller Font

25.10.1931 - குடிஅரசிலிருந்து...

இந்தியாவில் இந்துமதம் உள்ளவரை சூத்திரனும், பஞ்சமனும் ஒரு நாளும் மறைந்து போகமாட்டார்கள். அதுபோலவே இந்துமத, வேதமும் சாதிரமும், இராமாயண பாரதமும், பெரியபுரணம் சிவபுராணம் திரு விளையாடல் புராணம் முதலியவைகளும் உள்ளவரையிலும் சூத்திரப்பட்டத்தையும், பஞ்சமப் பட்டத்தையும் ஒழித்துவிடுவது என்பது முடியவேமுடியாது.

திரு.காந்தி எவ்வளவுதான் மகாத்மாவா னாலும் சாமிவேதாசலமும் எவ்வளவுதான் சுவாமியானாலும், சுவாமி சகஜானந்தமும் எவ்வளவு தான் சுவாமியானாலும் எதுவரை யிலும் தங்களை இந்துக்களென்றோ, சைவர் களென்றோ சொல்லிக்கொள்ளு கின்றார் களோ அது வரையில் அவர்கள் சூத்திரர்கள் என்பதையும் மூன்றாதவர், பஞ்சமர் (பறையர்) என்பதையும் பிரிவீகவுன்சில் வரையில் ருஜுபிக்க முடியும், அவர்களை அப்படிக் கூப்பிட உலக மக்களுக்கு உரிமை யுண்டு, மேல்கண்ட இவர்கள் எதுவரை இந்து மதப் பிரசாரமும், சைவப் பிரசாரமும் செய்கின்றார்களோ அதுவரை இவர்கள் தங்களுள்பட மக்களைச் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும்  ஆக்கி நிலைநிறுத்த முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்லுவேன்.

சம்பந்தனை ஒப்புக்கொண்ட சைவன், சம்பந்தன் பாடிய சாமிகளை ஒப்புக்கொண்ட சைவன், சம்பந்தனின் தேவாரங்களையும் சம்பந்தனின் சமயங்களையும் ஒப்புக் கொண்ட சைவன் சம்பந்தனைப் பார்ப்பனன் என்று ஒப்புக்கொண்ட சைவன் ஒருவன் தன்னைச் சூத்திரன் அல்ல என்று சொல்லிக் கொள்ள யோக்கியதை உண்டா? என்று நன்றாய் யோசித்துப் பாருங்கள்,

அதுபோலவே நந்தனை ஒப்புக்கொண்ட ஒருவன் அதுவும் நந்தன் பறையன் அவன் எங்கள் ஜாதி என்று ஒப்புக்கொண்ட ஒருவன் தன்னைப் பறையன் அல்ல என்றும், தான் தீண்டாதவன் அல்ல என்றும் சொல்லமுடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்,  உத்தியோகப் பார்ப்பனனுடனும், எலக்ஷன் பார்ப்பனனுடனும் சண்டை போடுவதற்கு வேண்டுமானால் ஏதாவது தந்திரம் பேசலாம். தமிழ்நாட்டில் ஆதியில் ஜாதியில்லை என்று சொல்லலாம்.

சாமர்த்தியமாய் விவகாரம் செய்யலாம். ஆனால் தன்னை இந்து என்றோ, சைவன் என்றோ, வைணவன் என்றோ சொல்லிக் கொண்டு வேறு ஒருவனிடம் விவகாரம் பேசி தன்னைச் சூத்திரவகுப்பிலிருந்தும், பஞ்சம வகுப்பிலிருந்தும் விலக்கிக்கொள்ள முடியுமா? என்று யோசித்துப்பாருங்கள். (சற்சூத்திரன் என்று சொல்லிக் கொள்வதால் தப்பித்துக் கொள்ள முடியாது)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner