எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெல்லை, செப்.12 திராவிட இயக்கச் சிந்தனையாளர், பெரி யாரியப் பற்றாளர், தமிழீழ ஆதரவாளர், குருதிக் கொடையாளர், சமூக செயற்பாட்டாளர், நெல்லை களஞ்சியம் ஆவணப் பட ஒருங் கிணைப்பாளர், திமுக மாண வரணி முன்னாள் துணை அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழக நெல்லை மாவட்டத் துணைச் செயலாளர் மறைந்த ஜெ. பிரின்சு அவர்களின் நினை வேந்தல் நிகழ்ச்சி திருநெல்வேலி அருணகிரி விடுதியில்  பகுத்தறி வாளர் கழக நெல்லை மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலை மையில் நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் நயினார் வரவேற்புரை யாற்றினார். இந்நிகழ்வில்  நக் கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின், திமுக மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, திராவிட மாணவர் கழக மாநிலச் செய லாளர் பிரின்சு என்னாரெசு பெரி யார், திமுக பேச்சாளர் சின்ன மனூர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு தோழர். பிரின் சுக்கு மரியாதை செலுத்தினர். மேலும் வரலாற்று ஆய்வாளர் செ.திவான், வழக்குரைஞர் தீன், நெல்லை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளர் கவிப் பாண்டியன், தொ.மு.ச. நட ராஜன், முரசொலி முருகன், பிரிட்டோ, கழக மாவட்டச் செய லாளர் இராசேந்திரன், பேச்சாளர் பிரபா கிருஷ்ணன், எழுத்தாளர் ஆரிச்சன் ஆகியோர் தோழர். பிரின்சு குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் திமுக பகுதிச் செயலாளர் நமச்சிவாயம்,  திரா விட இயக்கத் தமிழர் பேரவை மாநில இளைஞரணி அமைப் பாளர் சந்தானம், அதிமுக இளை ஞரணி சிவா, மதிமுக அவைத் தலைவர் சுப்பையா, மே 17 முத்துக்குமார்,  செங்கொடி எழுச்சிப் பேரவை செய்யதலி,  மின்வாரிய தொமுச,  இனியன், ராமசாமி, பேரா. இளங்கோ, பேரா. திருநீலகண்டன்,  நன் னெறித் தொடர்பகம் முத்துக் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுத் தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் கேடி சி.குருசாமி நன்றி கூறினார். நிகழ்ச்சியினை பேரா. நீலகிருஷ்ணபாபு தொகுத்து வழங்கினார்.