எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, செப். 12 தமிழக கல்வித்துறையின் ஓய்வுபெற்ற கல்வித்துறை அலுவலரும், சிறுவயது முதல் (மாணவர் கழகத்திலிருந்து) இயக்க தோழராக, தொண்டராக, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளராக இயக்கத்தில் பயணித்த புதுச்சேரி பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளரான பெரியார் பெருந்தொண்டர் கி.வ.இராசன்  & புதுச்சேரி கல்வித் துறையின் ஓய்வு பெற்ற அலுவலர், ஆசிரியர் லலிதா இராசன் ஆகியோரின் 50 ஆம் ஆண்டு பொன்விழா, 51 ஆவது திருமண நாளை முன்னிட்டு 6.9.2018 அன்று பங்கூரில் உள்ள அவரது இல்லத்தில் எளிமையான முறையில் குடும்ப விருந் தோம்பல் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி அவர்கள் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் புதுச்சேரி மண்டல கழக தலைவர் இர.இராசு, மண்டல செயலாளர் கி.வீரமணி, புதுச்சேரி தமிழ்ச்சங்க மேனாள் தலைவர் சினு.ராமச்சந்திரன், புதுச்சேரி உள்ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் மு.ந.நடராசன், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார், புதுச்சேரி கழக மகளிரணி தலைவர் எழிலரசி அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் லே.பழனி, விலாசினி இராசு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சொக்கலிங்கம், என்.சுப்ரமணி யன், அமுதகுமார் குடும்பத்தினர், ஆசிரியர் சுந்தரம் குடும்பத்தினர், இளைஞரணி தலைவர் திராவிட.இராசா, தேவகி பழனி, புதுச்சேரி நகராட்சி கழக அமைப்பாளர் மு.குப்புசாமி, பகுத்தறிவாளர் கழகம் இரா.வெற்றிவேல் ஆகியோர் பயனாடைகள் அணிவித்தும், பழங்கள் அளித்தும் வாழ்த்து தெரிவித்தனர். இறுதியாக புதுச் சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி சால்வை அணிவித்து வாழ்த்துக்கூறி உரை யாற்றினார். சிவராசன் நன்றி கூறினார். வருகை தந்த அனைவருக்கும் விருந்தளித்து லலிதா இராசன் உபசரித்தார்.