எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருமயம், அக். 11- புதுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.09.2018 ஞாயிறு மாலை 5.30 மணியளவில் திருமயம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற அலு வலகத்தில், மாவட்ட பக தலைவர் அ. சரவணன் தலைமையில் நடைபெற்றது.

மண்டல கழக தலைவர் பெ.இரா வணன், மாவட்ட கழக தலைவர் மு. அறி வொளி, மாவட்ட கழக செயலாளர் ப.வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட பக அமைப்பாளர் எ. இளங் கோவன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பகுத் தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் சி. இரமேசு தனது உரையில், நீட் புதிய கல்விக் கொள்கையின் ஆபத்துகளை மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் எடுத்துக் கூறுகின்ற வகையில் கருத்தரங்கம் நடத்த வேண்டிய அவசியத்தையும், பகுத்தறிவு ஆசிரியர் அணிக்கு அதிக அளவில் ஆசிரியர்களை சேர்க்குமாறும் எடுத்துரைத் தார். தொடர்ந்து பேசிய மாநில துணைத் தலைவர் முனைவர் மு.சு.கண்மணி தனது உரையில், அரசு அலுவலங்களில் உள்ள முற்போக்கு, பகுத்தறிவு எண்ணம் கொண்ட தோழர்களைக் கண்ட றிந்து பகுத்தறிவாளர் கழகத்தில் இணைக் கும் முயற்சியை மேற்கொள்வது குறித்தும், மாவட் டத்திற்கு ஒதுக்கப்பட்ட மாடர்ன் ரேசன லிஸ்ட் சந்தா இலக்கை விரைந்து முடிக்கு மாறும் கேட்டுக் கொண்டார்.

ஏற்புரை ஆற்றிய மாவட்ட பக தலை வர் அ.சரவணன்  தனது உரையில், பகுத் தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில், புதுக்கோட்டை அரிமா சங்கம், மாவட்ட ஓவியர்கள் சங்கத்துடன் இணைந்து பள்ளி மாணவர் களுக்கு மாவட்ட அளவிலான ஓவியப் போட்டிகள்  நடத்தி, அதன் பரிசளிப்பு விழாவில் சிந்த னைக்களம்   தொடர் சொற்பொழிவு தொடக்க விழாவை அக்டோபர் மாதத்தில் நடத்த இருப்பதாக அறிவித்தார். மாவட்ட பக செயலாளர் இரா.மலர்மன்னன் நன்றியு ரையில் புதிய உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடித்து தஞ்சையில் நடைபெற இருக்கும் ப.க. பொதுக்குழுவில் படி வத்தை ஒப்படைப்பதாகத் தெரிவித்தார்.

புதிய பொறுப்பாளர்கள்:

1. பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட தலைவர் இரா.கலையரசன்

2. பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட செயலாளர் ச.சண்முகம்

3. பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்ட அமைப்பாளர் கவிஞர் மு.கீதா

கலந்துரையாடலில் கு.ராமமூர்த்தி (திருமயம் பெல் நிறுவனம்), அ.தர்ம சேகர் (மாவட்ட ப.க. தலைவர் அறந் தாங்கி), ச.சண்முகம் ப.க. ஆகியோர் பங் கேற்றுச் சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner