எழுத்துரு அளவு Larger Font Smaller Font

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4

05.06.1948, குடிஅரசிலிருந்து...

தாய்மார்களே! நீங்கள் எதையும் பகுத்தறிந்து பார்க்கவேண்டும். கல்லை கடவுளென்று நம்புவ தையும், பார்ப்பானைக் கடவுள் அவதாரம் என்று நம்பி அவனுக்கு அரிசி பருப்பு அழுவதையும் அறவே விட்டொழிக்க வேண்டும். சாணி மூத்திரத் தைக் கலக்கிக் குடிப்பது மதம் அல்ல. மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுப்பதுதான் மதம் என்பதை, மனிதனை மனிதனாக மதித்து நடத்துவது தான் மதம் என்பதை, நீங்கள் உய்த்துணர வேண்டும். புராண சம்பந்தமான நாடகங்களுக்கோ, சினிமாக் களுக்கோ, புண்ணிய ஷேத்திரங்கள், புண்ணிய தீர்த்தங்கள் என்பன வற்றிற்கோ நீங்கள் கட்டாயம் போகக் கூடாது. இவை யாவும் பார்ப்பனர்கள் உங்கள் காசைப் பறித்துச் சுகபோகவாழ்வு வாழ்வதற்கு வகுத்துக் கொண்ட வழிகள். நீங்களும் மேல்நாட்டுப் பெண்களைப் போல் சகல உரிமைகளும் பெற்று இன்ப வாழ்வு வாழ வேண்டும். அதற்கு நீங்கள் ஆண்களைப் போல் படிக்க வேண்டும். உங்களுக்குச் சட்டத்தின் மூலம் பல உரிமைகள், சொத்துரிமை, விவாகரத்து உரிமை ஆகிய உரிமைகள் வரக் காத்தி ருக்கின்றன. அவ்வுரிமைகளை அனுபவிக்க உங் களுக்குக் கல்வியறிவு அவசியமாகும். நகைகளிலோ, சேலைகளிலோ உங்களுக்குள்ள பிரியத்தை ஒழித்து விடுங்கள். இவற்றில் பிரியம் வைத்துக் கொண்டிருப் பீர்களானால் ஜவுளிக்கடையிலும், நகைக்கடையிலும் சேலை விளம்பரங்களுக்காக, அவ்வப்போது வெவ் வேறு சேலையுடுத்தி, வெவ்வேறு நகை மாட்டி வெளியே நிறுத்தி வைக்கும் வெறும் பொம்மைகளாகத் தான் நீங்கள் ஆக நேரிடும். ஆகவே, அவ்விருப்பங் களை விட்டு கல்வி அறிவில் விருப்பம் கொள்ளுங்கள். வீரத்தாய்மார்களாக ஆக ஆசைப்படுங்கள்.

நீங்கள் இன்ப வாழ்வு வாழ.....? -தந்தை பெரியார்

 

05.06.1948, குடிஅரசிலிருந்து... தாய்மார்களே! நீங்கள் எதையும் பகுத்தறிந்து பார்க்கவேண்டும். கல்லை கடவுளென்று நம்புவ தையும், பார்ப்பானைக் கடவுள் அவதாரம் என்று நம்பி அவனுக்கு அரிசி பருப்பு அழுவதையும் அறவே விட்டொழிக்க வேண்டும். சாணி மூத்திரத் தைக் கலக்கிக் குடிப்பது மதம் அல்ல. மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுப்பதுதான் மதம் என்பதை, மனிதனை மனிதனாக மதித்து நடத்துவது தான் மதம் என்பதை, நீங்கள் உய்த்துணர வேண்டும். புராண சம்பந்தமான நாடகங்களுக்கோ, சினிமாக் களுக்கோ, புண்ணிய ஷேத்திரங்கள், புண்ணிய தீர்த்தங்கள் என்பன வற்றிற்கோ நீங்கள் கட்டாயம் போகக் கூடாது. இவை யாவும் பார்ப்பனர்கள் உங்கள் காசைப் பறித்துச் சுகபோகவாழ்வு வாழ்வதற்கு வகுத்துக் கொண்ட வழிகள். நீங்களும் மேல்நாட்டுப் பெண்களைப் போல் சகல உரிமைகளும் பெற்று இன்ப வாழ்வு வாழ வேண்டும். அதற்கு நீங்கள் ஆண்களைப் போல் படிக்க வேண்டும். உங்களுக்குச் சட்டத்தின் மூலம் பல உரிமைகள், சொத்துரிமை, விவாகரத்து உரிமை ஆகிய உரிமைகள் வரக் காத்தி ருக்கின்றன. அவ்வுரிமைகளை அனுபவிக்க உங் களுக்குக் கல்வியறிவு அவசியமாகும். நகைகளிலோ, சேலைகளிலோ உங்களுக்குள்ள பிரியத்தை ஒழித்து விடுங்கள். இவற்றில் பிரியம் வைத்துக் கொண்டிருப் பீர்களானால் ஜவுளிக்கடையிலும், நகைக்கடையிலும் சேலை விளம்பரங்களுக்காக, அவ்வப்போது வெவ் வேறு சேலையுடுத்தி, வெவ்வேறு நகை மாட்டி வெளியே நிறுத்தி வைக்கும் வெறும் பொம்மைகளாகத் தான் நீங்கள் ஆக நேரிடும். ஆகவே, அவ்விருப்பங் களை விட்டு கல்வி அறிவில் விருப்பம் கொள்ளுங்கள். வீரத்தாய்மார்களாக ஆக ஆசைப்படுங்கள்.

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner