Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

இனி வெறும் நடை பயிற்சி வேண்டாம்... வீடு திரும்பியதும் ஷூவில் இருந்து காகித வடிவ ஜெனரேட்டரை எடுத்து செல்போன் சார்ஜ் செய்யலாம், எல்இடி விளக்கை எரிய செய்யலாம். ஆம். நடப்பதில் மின்சார உற்பத்தி செய்ய முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுபற்றி லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் நாளேட்டில் வெளியான செய்தி வருமாறு: அமெரிக்காவின் லாரன்ஸ் பெர்க்லே தேசிய ஆய்வகத்தின் மின்சக்தி துறை விஞ்ஞானிகள் காகித வடிவ ஜெனரேட்டரை வடிவமைத்துள்ளனர். அதை ஷூவில் பொருத்திக் கொண்டு நடந்தால் மின்உற்பத்தி செய்யப்பட்டு சேமிக்கப்படும். ஷூவில் இருந்து ஜெனரேட்டரை எடுத்து இணைத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம். எல்இடி விளக்கை எரிய விடலாம். சிறிய எல்சிடி டிஸ்பிளேவுடன் இருக்கும் இந்த ஜெனரேட்டரை விரலால் தொட்டால் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் தீமை செய்யாத வைரஸ்கள் தூண்டப்பட்டு காந்த சக்தியை மின்சாரமாக மாற்றும். நடக்கும் தூரத்துக்கு ஏற்ப கிடைக்கும் மின்சாரத்தின் அளவு வேறுபடும். எனினும், சராசரியாக ஒரு பென் டார்ச் செல் எனப்படும் ஏஏஏ பேட்டரியை புதிதாக வாங்கும்போது கிடைக்கும் மின்சக்தியில் நான்கில் ஒரு பங்கு மின்சாரத்தை பெற முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

 

 

சந்திரன் வளர்ந்து தேய்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் தகவலளித்துள்ளனர். சந்திரன் ஒரு இயற்கையான செயற்கைகோள் என்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி மய்யத்தில் உள்ள எல்.ஆர்.ஓ. என்ற கேமரா துல்லியமாக படம் பிடித்து அடையாளம் காட்டியுள்ளது. முன்னதாக அப்பல்லோ- 15, 16 மற்றும் 17 விண்வெளி பயணங்கள் மூலம் சந்திரனில் செங்குத்தான பாறைகள் மற்றும் நிலப்பரப்பு உள்ளது தெரிய வந்தது. அவை 10 மீட்டர் உயரமும், பல கிலோ மீட்டர் நீளமும் கொண்டவையாக உள்ளன என்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில், சந்திரன் மிகவும் குளிர்ச்சியானது. அவற்றின் பாறைகள் சுருங்கி விரிவடையும் தன்மை உடையது இதுபோன்ற பல தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, சந்திரன் வளர்ந்து மீண்டும் தேயக்கூடிய தன்மை வாய்ந்தது. எனவே, இது ஒரு செயல்படக்கூடிய கிரகம் தான் என நாசா விண்வெளி மய்யத்தின் சந்திரன் ஆய்வு குழு தெரிவித்தது. சந்திரன் பல அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. இவர் வேத காலத்தைச் சேர்ந்தவர். சுஸ்ருதரை உலக அளவில் தெரியாது. தற்போது ஆதி காலத்திலேயே அறுவை சிகிச்சை இருந்துள்ளது என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. விலங்குகளின் தோல், ரோமங்களை உடையாக அணிந்த காலத்திலேயே அறுவை சிகிச்சை டாக்டர்களும் இருந்துள்ளனர். அவர்கள் அறுவை சிகிச்சை செய்த அறுவை சிகிச்சை நிலையம் (ஆபரேஷன் தியேட்டர்) புதை படிவமாக தற்போது கிடைத்துள்ளது. தெற்கு பாரிஸ் நகருக்கு அருகே ஒரு சமாதி இருந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனுடன் ஒரு மரக்கூடாரமும் இணைந்துள்ளது. இது அவர்களின் அறுவை சிகிச்சை நிலையமாக இருந்திருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சி வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர். அங்கு கிடைத்த பொருட்கள், எலும்புத் துண்டுகள் பிரான்ஸ் தேசிய தொல்பொருள் ஆராய்ச்சி மய்யத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்