வந்துவிட்டது ஒயர்லெஸ் சார்ஜர்

வந்துவிட்டது!மின் கம்பியில்லாமல் கருவி களுக்கு மின்னேற்றம் செய்ய முடியுமா? ‘ஒயர்லெஸ் சார்ஜிங்’ எனப்படும் இத் தொழில்நுட்பம், இதுவரை நிகழ மறுக்கும் அற்புதமாகவே இருந்தது.

ஆனால், அண்மையில், ‘எனர்கஸ் வாட்அப்’ என்ற நிறுவனம், கம்பி இல்லாமலேயே மொபைல் போன்ற சாதனங்களுக்கு மின் னேற்றம் செய்யும் தொழில்நுட்பத்தை வெற்றி கரமாக அறிமுகப்படுத்தி யிருக்கிறது.

மின்காந்த அலைகளை அனுப்பும் வாட்அப் சாதனத்திற்கு, சில அடிகள் தள்ளி மொபைலை வைத்தால், அது சார்ஜ் ஆகிவிடுகிறது. தற்போதைக்கு வாட்அப் சாதனத்திற்கு மிக அருகே வைத்தால் தான் சார்ஜ் ஆகிறது.

ஆனால், 2017 இறுதிக்குள், 2-4 அடி, 1,0-15 அடி ஆகிய தொலைவுகளில் தேவையான சாதனங்களை வைத்தால் சார்ஜ் செய்யும், ‘மின் பரப்பி’ கருவிகளை அறிமுகப்படுத்த இருப்பதாக எனர்கஸ் வாட்அப் அறிவித்துள்ளது.


மொபைலிலேயே கண் பரிசோதனை!

கண் கண்ணாடிகளை இணையத்திலேயே வாங்கும் வசதி வந்துவிட்டது. ஆனால், தூரப் பார்வையா, கிட்டப் பார்வையா என்பதை அறிய, மருத்துவர்களை நாடவேண்டியிருக்கிறது. இப்போது அதற்கு மாற்றாகவும் ஒரு கருவி வந்திருக்கிறது.

அமெரிக்காவில், கலிபோர்னியாவிலுள்ள, ‘அய்க்யூ’   என்ற நிறுவனம், அதே பெயரில் உருவாக்கியிருக்கும் சாதனத்தை ஒரு ஸ்மார்ட்போனில் பொருத்திக்கொள்ள வேண்டும். அதனுடன், இலவசமாகக் கிடைக்கும், ‘மை அய்க்யூ’ என்ற மொபைல் செயலி யையும் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அய்க்யூ சாதனம் வழியே மொபைலில் தெரியும் சில காட்சி களை பார்த்து, தெளிவாகத் தெரியும் வரை, செயலியில் தெரியும் பொத் தான்களை அழுத்தி சரி செய்ய வேண்டும். இரு கண்களையும் தனித் தனியே சோதித்த பின், அந்த சோதனை முடிவுகளை அய்க்யூ நிறுவனத்தின் மேகக் கணினிக்கு அனுப்பவேண்டும். அவ்வளவு தான்.

அந்த நிறுவனம் உங்கள் கண்களுக்கு, ‘பவர்’ என்ன என்பதை தெரிவிக்கும். அந்த அளவுகளை பயன்படுத்தி, கண்ணாடிக் கடை அல்லது கண்ணாடி விற்கும் இணைய தளத்திற்கு அனுப்பி ஆர்டர் செய்யலாம்.

உலகின் இலகுவான கைக் கடிகாரம்

கிராபீன் என்ற விந்தைப் பொருளைக் கொண்டு, உலகின் மிக எடை குறைவான கைக் கடிகாரம், அண்மையில் ஜெனீவாவில் வெளியிடப்பட்டது.

ரிச்சர்ட் மில்லெ என்ற பிரபல கைக் கடிகார நிறுவனமும், மெக்லாரன் எப்-1 என்ற கார் பந்தய அணியும் இணைந்து, இக் கடிகாரத்தை தயாரித் துள்ளன. கிராபீனை கண்டுபிடித்ததற்காக, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரு விஞ்ஞானிகள், 2010ல் பரிசை வென்றனர்.

ஆர்.எம்.50-30 என்ற இந்த கைக் கடிகாரத்தை தயாரிக்க, கிராபீன் மற்றும் சில பொருட்களைக் கலந்து உருவாக்கிய, ‘கிராப் டி.பி.டி.’ என்ற புதிய பொருளால் மிக இலகுவான, ஆனால், மிக வலுவான பாகங்களை உருவாக்கி, இக் கடிகாரம் தயாரிக்கப்பட்டுள்ளது,’’ என மான் செஸ்டர் பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவித்துள் ளனர்.

ரிச்சர்ட் மில்லெயின் வடிவமைப்பாளர்கள், பிரபலமான ஒரு பந்தயக் காரின், ‘ஷாக் அப்சார்ப’ரின் தோற்றம் தந்த உந்துதலில் ஆர்.எம்.50-30 வடி வமைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிடம் தெரிவித் தனர்.

சிக்கலான பாகங்களைக் கொண்ட இக் கடிகாரத்தின் எடை, வெறும் 40 கிராம் தான்.கிராப் டி.பி.டி.,யை வைத்து தயாரிக்கப்பட்ட கடிகாரத்தின் வெளிப் பாகமும், கைப்பட்டையும், கடினமான அதிர்ச்சி மற்றும் நொறுக்கல் சோதனைகளுக்கு உட்படுத்தியபோதும், சேதாரமடையவில்லை என, மான்செஸ்டர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தானே ‘பேலன்ஸ்’ செய்யும் பைக்!

பார்ப்பவர்கள் திடுக்கிட்டு, ஆச்சரியப்படும் அளவுக்கு, விந்தையான இருசக்கர வாகனத்தை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வண்டி, ‘ஸ்டாண்ட்’ போடாமல், தானாகவே சுதாரித்து நிற்கிறது.

உரிமையாளர் எங்கு போனாலும், அந்த வண்டி யும், நாய்க்குட்டி போல அவரை பின்தொடர்கிறது! ஏற்கனவே ஹோண்டா தயாரிக்கும், என்.சி., 750 எஸ் மாடலை வைத்தே இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

முன் சக்கரத்தையும், அதனுடன் இணைந்த உலோகத் தண்டு ஆகியவற்றை முன்னும், பின்னும், ‘தானாகவே’ நகர்த்தி சமன் செய்கிறது. வண்டி தானாகவே, ‘ஸ்டார்ட்’ ஆகி, குறைந்த வேகத்தில் பின் தொடர்வதால், அதற்கு செயற்கை நுண்ணறிவுத் திறனும் தரப்பட்டிருக்கலாம்.  ஏற்கனவே சில சிறிய வாகன தயாரிப்பாளர்கள், சுயசமன் தொழில் நுட் பத்தை பயன்படுத்தி மாதிரி பைக்குகளை உருவாக்கி உள்ளனர்.

இப்போது, ஹோண்டா போன்ற மாபெரும் வாகன தயாரிப்பாளரே அதை உருவாக்கி யிருப்பதால், இத்தொழில்நுட்பம், விரைவில் சாலைக்கு வந்துவிடும் என, எதிர்பார்க்கலாம். ‘கைராஸ்கோப்’ எனப்படும் மிகப் பழைய சுய சமன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினால், வண்டியின் எடை கூடும் என்பதால், ஹோண்டா அதை பயன்படுத்த வில்லை.

மாறாக, சில ஆண்டுகளுக்கு முன், ஹோண்டா ரோபாடிக்ஸ் பிரிவு, ‘யுனி கப்’ என்ற ஒற்றை சக்கர வாகனத்திற்காக வடிவமைத்த தொழில்நுட்பத் தையே, இதிலும் பயன்படுத்தியிருப்ப தாக ஹோண்டா அறிவித்துள்ளது.

ஜப்பானில்,  வயதுக்கு மேற்பட்டோர், 33 சதவீதம் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், 83 வயதுக்கும் மேல் உயிருடன் இருப்பார்கள்! எனவே, மூத்த குடிமக்கள், பிறர் உதவியின்றி பயணிக்க உதவும் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் ஜப்பானில் அதிகரித்து வருகிறது

இதயத் துடிப்பே கடவுச் சொல்!
புதிய தொழில்நுட்பம்

இணையவழி மருத்துவத்தின்போது தனிநபரின் உடல்நலம் பற்றிய மின்னணுத் தகவல்களைப் பாதுகாப்பதற்காக, அவரது இதயத் துடிப் பையே கடவுச் சொல்லாக (பாஸ்வேர்ட்) பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பிங்கம்டன் பல்கலைக்கழகப் பேராசியர் ஷன்பெங் ஜின் கூறியதாவது:

தற்போது தகவல்களைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் “என்க்ரிப்ட்’ தொழில்நுட்பங்கள் மிகவும் சிக்கல் நிறைந்தவையாகவும், செலவு பிடிப்பவையாகவும் உள்ளன.

அதனால், இந்தத் தொழில்நுட்பங்களை இணையவழி மருத்துவம், செல்லிடப் பேசி மூலமான மருத்துவம் போன்ற வசதிகளைப் பயன்படுத்தும்போது, ரகசியத் தகவல்களைப் பாதுகாக்க அத்தகைய பாரம்பரியத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, “என்க்ரிப்ட்’ தொழில்நுட்பத்துக்கு மாற்றாக, எளிமையான, மலிவான, மருத்துவத் துறைக்கென்று பிரத்யேகமான தகவல் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

அதன்படி, நோயாளியின் “இசிஜி’ பரிசோனை வரைபடத்தை கடவுச் சொல்லாகப் பயன்படுத்தி அவரது உடல்நிலை குறித்த விவரங்களைப் பாதுகாக்கும் முறையை உருவாக்கி வருகிறோம்.

பொதுவாக, நோயாளிகளின் உடல்நிலையை அறிந்துகொள்ள “இசிஜி’ பரிசோதனைதான் மிக அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, அந்தப் பரிசோதனை வரைபடத்தை கடவுச் சொல்லாகப் பயன்படுத்தத் தீர்மானித்தோம்.

இதன்மூலம், நோயாளிகளின் உடல்நலம் குறித்த மின்னணு தகவல்களை சுலபமாகவும், மலிவாகவும் பாதுகாக்க வழி ஏற்படும் என்றார் பேராசிரியர் ஷன்பெங் ஜின்.

Banner
Banner