மூன்றில் ஒருவர் இரவில் நன்றாகத் தூங்குவதில்லை. பெரும் பாலானவர்களுக்கு 8 மணி நேர உறக்கம் அவசியம். சிலருக்கு அதைவிட குறைந்த நேரம் போதும் உங்கள் உடலுக்கு எவ்வளவு நேரம் தூக்கம் தேவை என்பதை முதலில் அறியுங்கள். அவ்வளவு நேரம் தூங்குவதை உறுதி செய்யுங்கள்.

தொடர்ந்து போதிய தூக்கமில்லாமல் இருந்தால் அது உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும். உடல் பருமன், நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவை இதனால் உண்டாகும்.

நன்றாகத் தூங்கினால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும். மன நலமும் மேம்படும். நீரிழிவுக்கான வாய்ப்புகள் குறையும். பாலியல் வாழ்க்கையும் சிறக்கும்.

ஒரு நாள் சரியாகத் தூங்காவிட்டால், மறுநாள் அதிகம் தூங்குங்கள். பல மாதங்கள் போதுமான தூக்கம் இல்லாவிட்டால், மீண்டு வரவே சில வாரம் தேவை.

பிரிட்டனைச் சேர்ந்த சர்ரே பல்கலைக்கழகம், அண்மையில், ரிமூவ் டெப்ரிஸ் என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியிருக்கிறது. இது, பூமியைச் சுற்றி தாழ்வாக சுழன்று வரும் விண்வெளி குப்பையை, வலை வீசிப் பிடிக்கும் துப்புரவுப் பணியை, வெற்றிகரமாக செய்திருக்கிறது.

பல நாடுகள், விண்வெளியில் செயற்கைக் கோள்களை, 60 ஆண்டுகளாக ஏவி வருகின்றன. இக்கோள்களுக்கு சில ஆண்டுகளே ஆயுள். பின், அவை பூமிக்கு மேலே உலோகக் குப்பை கழிவுகளாக சுற்றி வருகின்றன.

இக்குப்பை, புதிய செயற்கைக்கோள்களுடன் மோதி செயலிழக்கச் செய்யும் ஆபத்து நேரக்கூடும் என்பதால், விண்வெளிக் குப்பையை அகற்ற, பல வழிகளை விஞ்ஞானிகள் முன்வைத்துள்ளனர்.

அதில் ஒன்றைத் தான் சர்ரே பல்கலைக்கழகம், தற்போது வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஒரு கையளவு சிறிய செயற்கைக்கோளை, ரிமூவ் டெப்ரிஸ் கோள் வலைவீசிப் பிடித்துள்ளது. அடுத்தகட்டமாக, அதை பூமியை நோக்கி தள்ளிவிட, அது புவியீர்ப்பு விசைக்கு ஆட்பட்டு, அதிவேகமாக காற்று மண்டலத்தில் நுழைய, எரிந்து துகள்களாகிவிடும். இந்த முறையில், கணிசமான விண்வெளிக் குப்பையை அகற்றலாம் என, சர்ரே விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

துபாய் நகரில், புதிய கட்டடங்கள் வேகமாக உருவாகி வருகின்றன. இந்நிலையில், 2025ஆம் ஆண்டுக்குள், துபாயில் கட்டப்படும் கட்டடங் களில் குறைந்தது, 25 சதவீதமாவது கட்டடம் கட்டுவதற்கு உதவும் பிரமாண்டமான முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் மூலம் கட்டப்பட வேண்டும் என, அறிவித்துள்ளது.

அய்க்கிய அமீரகத்தில், கட்டுமானத் தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் பற்றி, கடும் விமர்சனங்கள் உண்டு.

இதை தவிர்க்கவும், கட்டுமானச் செலவுகளை குறைக்கவுமே, துபாய் மாநகர நிர்வாகம் முப்பரிமாணத் தொழில்நுட்பத்தை நாடியிருக்கலாம் என்கின்றனர் வல்லுனர்கள்.

கட்டடங்களுக்கான, ‘3டி’ அச்சு தொழில்நுட்பம், பொருள் விர யத்தை குறைக்கவும், பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் உதவுகிறது.

தவிர, ஓரிரு மாடிக் கட்டடங்களை, ஒரே நாளில் கட்டி முடித்து விடுகின்றன. இதனால், கட்டுமானச் செலவில் பாதிக்கு மேல் குறைகிறது.

எனவே, 2019இல், ஒரு கட்டடத்தின், 2 சதவீத பகுதியாவது, ‘3டி’ அச்சியந்திரம் மூலம் கட்டப்பட வேண்டும்.

அடுத்தடுத்த ஆண்டுகளில், இந்த சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 2025இல், 25 சதவீத கட்டடம், ‘3டி’ அச்சியந்திரம் மூலம் கட்டப்பட வேண்டும் என, துபாய் முடிவு செய்து உள்ளது.


காகிதத்தால் ஆன எளிய மின்கலன்!

காகிதத்தால் ஆன எளிய மின்கலனை நியூயார்க் மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

மின் கலன்கள் கனமானவை, குப்பைக்குப் போனால் சுற்றுச்சூழலைக் கெடுப்பவை. எனவே தான், சுற்றுச்சூழலைக் கெடுக்காத, இலகுவான பேட்டரிகளை உருவாக்க ஆராய்ச்சிகள் வேகமாக நடக்கின்றன.

நியூயார்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், மெழுகு தடவிய காகிதத்தில் உலோகம் மற்றும் பாலிமரால் ஆன சர்க்யூட்டுகளை அச்சிட்டுள்ளனர்.

இந்தக் காகித அடுக்குகளுக்கு இடையே எலக்ட்ரான்களை அறுவடை செய்யும் பாக்டீரியாக்களை நிரப்பியுள்ளனர்.

இந்த காகித பேட்டரியை லேசாக அழுத்தினால், பாக்டீரியாக்கள் துண்டப்பட்டு மின்சாரம் உற்பத்தியாகிறது.

தற்போதைக்கு காகித பேட்டரிகளால் ஓரிரு சிறிய, எல்.இ.டி., விளக்குகள் அல்லது கால்குலேட்டர் போன்றவற்றை மட்டுமே இயக்க முடிகிறது.

என்றாலும் விரைவில் சற்று பெரிய கருவிகளை இயக்கும் அளவுக்கு மேம்படுத்த முடியும் என, விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

 

 

Banner
Banner