மனிதன் உண்ட உணவை செரிப்பது முதல், கழிவை வெளியேற்றுவது வரை முக்கியமான வேலைகளை செய்வது கோடிக் கணக்காண நுண்ணுயிரிகள் தான்.

இந்த நல்ல நுண்ணுயிரிகள், நாம் பலவித சிகிச்சைகளுக்காக எடுத்துக் கொள்ளும், ஆன்டிபயாடிக் மருந்துகளால் கூண்டோடு அழித்து வெளியேற்றப்படுகின்றன. இத னால், சிறிது காலத்திற்கு குடல் பகுதியே நிலைகுலைந்து போகிறது. சரி, குடலில் நல்ல நுண்ணுயிரிகள் மீண்டும் தழைக்க எத்தனை காலம் ஆகும்?

கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஆறு மாதங்களாக மேற் கொண்ட ஆய்வின் முடிவில், பெரும்பாலான நுண்ணுயிரிகள் மீண்டும் குடலில் பல்கிப் பெருகுவதற்கு, ஆறு வாரங்கள் வரை ஆகும் என்று தெரிய வந்தது. ஆனால், ஆறு மாதங்களாகியும் சில நல்ல வகை பாக்டீ ரியாக்கள் திரும்பவும் தழைக்கவே இல்லை என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

புரோபயாடிக் என்று பாட்டிலில் அடைத்து விற்கப்படும் நல்ல பாக்டீரி யாக்களை சாப்பிடலாமா? அதனால், நல்ல நுண்ணுயிரிகள் குடலில் தழைக்கும் என்றாலும், அதிலும் சில மோசமான பக்கவிளைவுகள் இருப்பதாக அண்மைக்கால ஆய்வுகள் எச்சரித்துள்ளன.

என்ன தான் செய்வது? நல்ல பாக்டீரி யாக்களின் எண்ணிக்கையை வெளியேற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை அடிக்கடி உட்கொள்ளாமல் பார்த்துக்கொள்வதே சிறந்த வழி என்கின்றனர் ஆய்வாளர்கள். அளவுக்கு மிஞ்சினால் ஆன்டிபயாடிக்கும் நஞ்சு.

இந்த எச்சரிக்கையானது வெப்பமயமாதல் குறித்து ஆய்வில் ஈடுபட்டிருக்கும் உலகின் தலைசிறந்த பருவநிலை ஆய்வாளர்களிட மிருந்து வந்துள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந் தத்தில் உள்ளபடி புவி வெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவைவிட குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதனை நோக்கி அனைத்து நாடுகளும் பயணிக்க வேண்டும் என்றும் முடி வெடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், இப்போது அதற்கு எதிராக புவி வெப்பம் அதிகரிப்பதாக எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது புவி வெப்ப அதிகரிப்பு 3 டிகிரி செல்சியஸ் அளவை நோக்கி செல்வதாக கூறுகிறார்கள்.

பருவநிலை மோசமாக பாதிப்படையாமல் இருக்க வேண்டுமென்றால் புவி வெப்ப அதிகரிப்பு 1.5 செல்சியசுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

இப்போதுள்ள சூழ்நிலை தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும். ஆனால், இப்போதும் இதிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ள தாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அறிவிய லாளர்கள்.

மூன்றாண்டு ஆய்வுக்குப் பின் பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடை யேயான குழுவின்  விஞ்ஞானிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை தென்கொரியாவில் நடந்தது. இதற்குப் பின் 1.5 செல்சியஸ் வெப்ப அதிகரிப்பு பருவநிலையில் எத்தகைய தாக்கத்தை உண் டாக்குமென சிறப்பு அறிக்கை வெளியிடப் பட்டது.

வெப்பம் இதே அளவு தொடர்ந்தால் கடுமையான வறட்சி, காட்டுத்தீ, வெள்ளம் ஏற்படும். இதன் காரணமாக மோசமான உணவு பற்றாக்குறை ஏற்படலாம், லட்சக்கணக் கானவர்கள் பஞ்சத்தில் சாக நேரிடலாம்.

சரி சாமான்யனாக நாம் என்ன செய்ய லாம்? வெப்பத்தை குறைக்க, கட்டுக்குள் வைக்க என்ன மாதிரியான முயற்சிகளை எடுக்கலாம்?

ஏராளமான பொது அறிவு செயல் திட் டங்கள் இருப்பதாக கூறுகிறார் அரோமர் ரெவி. பருவநிலை மாற்றத்திற்கான அரசாங் கங்களுக்கிடையேயான குழு ஆய்வறிக் கையை தயாரித்தவர்களில் முதன்மையானவர் இவர். சாமானியர்கள் மற்றும் நுகர்வோர்கள் தான் உலகம் வெப்பமயமாவதை தடுப்பதில் முக்கிய பங்குவகிக்கப் போகிறார்கள் என் கிறார் அரோமர் ரெவி.

தினசரி வாழ்க்கையில் நம்மால் செய்ய முடிந்த சில விஷயங்களை இங்கே பட்டிய லிடுகிறோம்.

பொது போக்குவரத்து

வாய்ப்பிருந்தால் நடந்து செல்லுங்கள், மிதிவண்டியில் செல்லுங்கள். கூடுமானவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள். இது உடல்நலத்திற்கும் நல்லது, சுற்றுச் சூழலுக்கும் நல்லது.

பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங் களுக்கிடையேயான குழு ஆய்வறிக்கையை தயாரித்த குழுவில் மற்றொரு முக்கிய நபரான டெப்ரா, நகரங்களில் நம் போக்குவரத்தை நாம் முடிவு செய்ய முடியும். நமக்கு பொது போக்குவரத்து இல்லாதபட்சத்தில், பொது போக்குவரத்தை உறுதி செய்யும் ஆட்சி யாளர்களை தேர்ந்தெடுங்கள்.

அதுபோல, மின்சார வாகனங்களை தேர்ந்தெடுங்கள். விமான போக்குவரத்தை விட, தொடர்வண்டி போக்குவரத்தே சால சிறந்தது.

இயன்றால் உங்களது வணிக பயணத்தை ரத்து செய்துவிட்டு, காணொலி காட்சி மூல மாக கூட்டத்தை நடத்துங்கள்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

இரண்டாவது மிக முக்கியமான விஷயம் ஆற்றலை சேமிப்பது. அதாவது இயன்றவரை மின்சாரத்தை பயன்படுத்துவதை குறை யுங்கள். தேவையற்றபோது மின்விசிறியை பயன்படுத்தாமல் இருப்பது முதல் வாசிங் மிசன் பயன்படுத்துவது வரை மிக கவனமாக திட்டமிடுங்கள்.

இது உங்களுக்கு சாதாரணமான விசய மாக தோன்றலாம். ஆனால், இந்த சிறு விசயங்கள்தான் வியத்தகு விளைவுகளை தரும். ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். அடுத்த முறை மின்சாதன பொருட்களை வாங்க செல்லும் போது, மின்சாரத்தை குறை வாக பயன்படுத்தி நிறைவாக வேலை செய்யும் மின்சாதன பொருளா என்று பாருங்கள். அதனை நிச்சயம் அந்த பொருட் களின் அட்டையில் குறிப்பிட்டு இருப்பார்கள்.

மற்றொரு யோசனையும் இருக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுங்கள். தண்ணீர் சூடேற்றும் சாதனம் முதல் உங்கள் மொபைல் சார்ஜர் வரை சூர்ய ஆற்றலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாரிஸ் பருவநிலை மாற்ற சந்திப்பில், 119 நாடுகள் விவசாயத்தினால் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுவை குறைப்பதாக உறுதி அளித்தன. அந்த நாடுகள் எவ்வாறு அதனை செய்யும் என்று நமக்கு தெரியாது. ஆனால், நாம் மனது வைத்தால் நிச்சயம் முடியும்.

ஏற்கெனவே சொல்லியது போலதான், நம் உணவு பழக்கத்தை கொஞ்சம் மாற்ற வேண்டும்.  இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், உங்கள் பகுதியில் எது விளைகிறதோ, அதனை உண்ணுங்கள்.

மறுசுழற்சி குறித்து நமக்கு முன்பே தெரியும். பள்ளிக் காலத்திலிருந்தே பலர் நமக்கு அது குறித்து வகுப்பெடுத்து இருக் கிறார்கள். ஆனால், கெட்ட வாய்ப்பானது என்ன வென்றால், மறுசுழற்சிக்கு பயன்படும் பொருட்கள் கூட வெப்பமயமாதலுக்கு ஒரு காரணிதான். சால சிறந்தது என்னவென்றால், நம் நுகர்வை குறைத்துக் கொள்வது மற்றும் பொருட்களை தூக்கி எறியாமல் கூடுமான வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதுதான். இது தண்ணீருக்கும் பொருந்தும். நாளைய தலைமுறைக்கு இந்த புவி மிச்சம் இருக்க வேண்டுமென்று நினைத்தால் நாம் இதனை செய்ய வேண்டும். இப்போது செயலாற்றுங்கள். அல்லது மோசமான பிரச்சினையை எதிர்க்கொள்ளுங்கள்.! என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். நாளைய தலைமுறை மோசமான பிரச்சினையை எதிர்கொள்ள இந்த தலை முறை செய்த தவறுகள் காரணமாக அமைந்து விட வேண்டாம்.

காது கேட்காமல் போவதை குணப்படுத்தும் ஆய்வில், முக்கிய முன்னேற்றத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.

நாள்பட காது கேட்காமல் போவதற்கு பல காரணங்கள் உண்டு. உட்காதுப் பகுதியில் நத்தையின் சுருண்ட கொம்புகளைப் போல உள்ள பகுதியில் வளரும் முடி வடிவில் உள்ள செல்கள் பாதிக்கப்படுவது அதில் ஒன்று. ஒரு மனிதருக்கு சராசரியாக, 15 ஆயிரம் செல்கள் இருக்கும்.

மிகையான இரைச்சல், அத்துமீறிய ஓசை போன்றவற்றால் இந்த நுண்ணிய செல்கள் நாள டைவில் பாதிக்கப்படுகின்றன. இதனால், காதின் ஒலி உணர் திறன் குறைந்து, ஒரு கட்டத்தில் முற்றிலும் காது கேளாமல் போய்விடும் ஆபத்தும் உண்டு.

மனிதனின் உடலில் உள்ள பிற செல்களைப் போல முடி செல்கள் ஒருமுறை பாதிக்கப்பட்டால், மீண்டும் வளர்வதில்லை. எனவே, அவற்றின் வளர்ச்சியை மீண்டும் துண்ட முடியுமா என, விஞ்ஞானிகள் சோதித்து வருகின்றனர்.

அண்மையில் பிரிட்டனில் உள்ள ரோசெஸ்ட்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், எலிகளை வைத்து மேற்கொண்ட ஆய்வில், எலிகளின் காதுகளில் உள்ள முடி செல்கள், மீண்டும் வளர்வதற்கு சமிக்ஞை தரும் புரதங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஆனால், அவை ஏனோ, முடி செல்கள் வளர்வதற்கு சமிக்ஞை தராமலேயே இருக்கின்றன. அந்த செல்களுக்கு தூண்டுதல் தந்த போது, அவை மீண்டும் வளர ஆரம்பித்தன.

எலிகளின் மீதான ஆய்வுகளில் விஞ்ஞானிகள் இழந்த செவி கேட்கும் திறனை மீட்க முடியும் என நிரூபித்துள்ளனர். இதே போன்ற ஆய்வை செவித் திறனை இழந்தோர் மீது விரைவில் அவர்கள் துவங்கி வெற்றி கண்டால், காது கேளாமையை முற்றிலுமாக ஒழித்து விடலாம்.

Banner
Banner