அமெரிக்காவின் தனியார் விண்வெளி அமைப்பான ஸ்பேஸ் எக்ஸ், தனது பால்கன் 9 ராக்கெட்டின் உந்தும் பகுதியை, மூன்றாவது முறையாகப் பயன்படுத்தியது. கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதே ராக் கெட்டை உந்தும் அடிப் பகுதியை பயன் படுத்தியது.

கடந்த, 3ஆம் தேதி அமெரிக்காவின் வாண்டன்பர்க் விமானப் படைத்

தளத்திலிருந்து கிளம்பும்போது, பால்கன் 9இன் உந்தும் பகுதி பார்க்கப் பரிதாபமாக, கரி பூசப் பட்டிருந்தது. ஆனால், 64 சிறிய செயற்கைக் கோள்களை விண்ணில் சுழலவிட்டு, வெற்றி கரமாக பசிபிக் கடலில், ஒரு மிதவை மேடை மீது துல்லியமாக வந்திறங்கியது.

ராக்கெட்டுகளின் பகுதிகளை பலமுறை பயன்படுத்தப் போவதாக எஸ்பேஸ் எக்சின் அதிபர் எலான் மஸ்க் சொல்லி வருகிறார்.

அதன்படி, பால்கனின், 42.33 கோடி ரூபாய் விலை கொண்ட பெரிய மூக்குப் பகுதியையும் மறுபயன் செய்ய கடந்த சில ஏவுதல்களின் போது ஸ்பேஸ் எக்ஸ் முயன்றது. ஆனால் வெற்றி கிட்டவில்லை. இந்த முறையும், கடலில் விரித்த வலையுடன் மிஸ்டர். ஸ்டீவன் என்ற சிறிய கப்பல் நிறுத்தப் பட்டிருந்தது. ஆனால், பால்கன் மூக்கு வலைக்குள் விழாமல், தள்ளிப் போய் கடலில் விழுந்தது.

வலையை தவறவிட்டுவிட்டது. ஆனால் நீரில் மெதுவாக இறங்கியது என்று டுவிட்டரில் தெரிவித்தார் மஸ்க். அதை உலர்த்தி, மீண்டும் பயன் படுத்துவதுதான் திட்டம். சற்று நீச்சலடித்

ததில் தவறில்லை என்று அவர், டுவிட் செய்தார்.

கடலின் உப்பு நீர், ராக்கெட் மூக்கினுள் இருக்கும் மின்னணு பகுதிகளை பழுதாக்கக் கூடும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் மஸ்க் விடுவதாக இல்லை. அதை மீண்டும் பயன்படுத்த முயற்சிப்போம் என்கிறார்.

நிலவில் ரோபோவை நிலைநிறுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலான தனது முதல் திட்டத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரை பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு மூலையாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங்இ-4 என்னும் இந்த செயற்கைக்கோள் தரையிறங்கும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.

சீனாவிலுள்ள சிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லோங் மார்ச் 3பி என்னும் ராக்கெட்டில் இந்த ரோபோ நிலவை நோக்கி செலுத்தப்பட்டது.

இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டுவந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

ஜனவரி மாதத்தின் தொடக்க பகுதி வரை இந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காது. ஆனால், குறிப்பிட்ட காலம் முடிவுசெய்யப்பட்ட பிறகு செயற்கைகோள் நிலவின் வேறொரு மூலையிலுள்ள கரடு முரடான பகுதியில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனின் குறுங்கோள்களில் ஒன்று நிலவில் தெற்கு அரைக்கோளத்திலுள்ள அய்ட்கன் பேசின் பகுதியில் மோதியதால் அங்கு பெரும் பள்ளம் உண்டானது. எனவே, நிலவு குறித்த ஆராய்ச்சிகள் தொடங்கிய காலத்திலிருந்தே வோன் கர்மான் என்னும் இந்த இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தற்போது சீனாவினால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள் இதுவரை ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்படாத நிலவின் தென் துருவப் பகுதியின் புவியியல் அமைப்பு குறித்த தகவல்களை சேமிப்பதோடு அங்கிருந்து பாறை துண்டுகள், மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவரும்.  அல்லது ஓதப் பூட்டல் என்ற விளைவின் காரணமாக நம்மால் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. ஏனெனில், நிலவை சுற்றி வருவதற்கு எடுத்துக்கொள்ளும் அதே காலத்தை தன்னைத்தானே சுற்றி வருவதற்கும் நிலவு எடுத்துக்கொள்கிறது.

பொதுவாக நிலவின் இருண்ட பக்கம் என்றழைக்கப்படும் இந்த இடத்திலும் சூரிய வெளிச்சம் காணப்பட்டாலும், பூமியிலிருந்து இந்த இடத்தை பார்க்க முடியாது என்பதால் தான் இதை அவ்வாறு அழைக்கின்றனர். பூமியின் தொலைதூரத்தில் ரேடியோ அலை களை அடிப்படையாக கொண்ட தொலை நோக்கி களை நிலவின் தென் துருவத்தில் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும் இந்த செயற்கைக்கோள் மேற்கொள்ளும்.

அதுமட்டுமின்றி, நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக உரு ளைக்கிழங்கு, அரபிடோப்சிஸ் ஆகிய வற்றின் விதைகள் மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. லூனார் மினி பயோஸ்பியர் என்று பெயரிடப் பட்டுள்ள இந்த உபகரணத்தை 28 சீன பல்கலைக் கழகங்கள் இணைந்து உருவாக்கி யுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, டிச.13  சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வுகள் டிசம்பர் 22-ஆம் தேதி தொடங்கி வார இறுதி நாள்களில் மட்டும் நடத்தப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தொலைநிலைக்கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை மற்றும் தொழில் படிப்புகளுக்கான 2018-ஆம் ஆண்டு தேர்வுகள் வரும் 22- ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும். மாணவர்கள்  தொலைநிலைக் கல்வி நிறுவன இணையதளத்திலிருந்து தேர்வறை நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு கால அட்டவணை, தேர்வு மய்ய விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை, டிச.13  பள்ளி கல்வியில், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கான போட்டி தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களில், 50 சதவீதம், பதவி உயர்விலும்; 50 சதவீதம், நேரடி போட்டி தேர்வு வழியாகவும் நியமிக்கப் படுகின்றனர்.

இதன்படி, தற்போது காலியாக உள்ள, 18 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, மார்ச், 2இல் முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. இந்த தேர்வின் வழியாக, நேரடியாக, 14 பேரும், அரசு உதவி பெறும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், நான்கு பேரும் தேர்வு செய்யப் படுவர் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படித்தால் ரூ.2,000 உதவித் தொகை

சென்னை, டிச.13  உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் முது கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

சென்னை, தரமணியில் உள்ள, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் பல்கலை ஏற்புடன், தமிழ் முதுகலையில், தமிழ் சுவடியியல், பதிப்பியல் உள்ளிட்ட, பிஎச்.டி., படிப்புகள் உள்ளன.தமிழ் முதுகலை பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், மாதந்தோறும், 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று, மாணவர்களுக்கு, மாதந்தோறும், 2,000 ரூபாய் வழங்கும் திட்டம், இந்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

Banner
Banner