பிரிட்டனின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் ஒன்றின் மீது ‘வேண்டுமென்றே’ ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பறக்கவிடப்பட்ட சம்பவம் விமான பயணங்களை பாதித்ததோடு, உலகம் முழுவதும் இதுகுறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது.

லண்டனில் உள்ள பரபரப்பான காட்விக் விமான நிலையத்தின் விமான ஓடுபாதை அருகே அடிக்கடி பறந்த ட்ரோனால் அதிர்ச்சி யடைந்த விமான நிலைய அதிகாரிகள், அந்த விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த விமானங்களை மற்ற இடங்களுக்கு திருப்பி விட்டதுடன், விமானங்களின் புறப்பாட்டை ரத்து செய்தனர்.

காட்விக் விமான நிலையத்தில் சூழ்நிலை அபாயகட்டத்தை அடைந்ததை தொடர்ந்து உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து செயல்படுவதற்காக பிரிட்டன் ராணுவம் வரவழைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. எனவே, சுமார் 24 மணிநேரத்திற்கு மேலாக நீடித்த பதற்றத்திற்கு பிறகு காட்விக் விமான நிலையம் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப் பட்டுள்ளது.

கடந்த சில காலமாகவே உலகமெங்கும் உள்ள அரசாங்கங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தலை விளைவிக்க கூடிய இடங்களில் ட்ரோன்கள் நுழைந்தால் அதை சமாளிப்பதற்காக பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகின்றன.

சமீபகால தொழில்நுட்ப வளர்ச்சியின் வடிவமாக பார்க்கப்படும் ட்ரோன்களை எதிர்கொள்வதற்கு புதுமையான வழியொன்றை கண்டறிந்துள்ளது நெதர்லாந்து.

சந்தேகத்திற்கிடமாக பறக்கும் ட்ரோன்களை நோக்கி பறந்து சென்று அவற்றை தனது நகங்களால் திசைதிருப்பி, செயலிழக்கச் செய்யும் வகையில் அந்நாட்டு காவல்துறையினர் கழுகுகளுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.

இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்ட கழுகுகள் ட்ரோன்களை இரையாக கருதுவதாகவும், ஆனால் வேறெந்த பொருட்களையும் இவை தாக்குவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

ரேடார், ‘ஜாமிங்’ அமைப்புமுறைகள்

அனுமதியின்றி, தவறான நோக்கத்தில் இயக்கப்படும் ட்ரோன்களின் செயல்பாட்டை கேமராக்கள், ரேடார், ரேடியோ அலைகள் போன்றவற்றை கொண்டு அதன் இருப்பை கண்டுபிடிக்கவோ, இடத்தை கண்டறியவோ பயன்படுத்த முடியும்.

மேற்காணும் தொழில்நுட்பங்களை தற்போதுள்ள விமான நிலைய பாதுகாப்பு அமைப்பு முறையில் இணைத்து, பல கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ட்ரோன்களைகூட கண்டறிய முடியும்.

அதுமட்டுமின்றி, இந்த அமைப்புமுறையை கொண்டு அந்த குறிப்பிட்ட ட்ரோனுக்கும், இயக்குபவருக்குமிடையேயான தகவல் தொடர்பை துண்டிக்க செய்து, மீண்டும் அது எங்கிருந்தோ கிளம் பியதோ அங்கேயே திரும்ப அனுப்ப முடியும்.

ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி வரும் ட்ரோனை சுமார் அரை மைல் தூரத்திற்கு முன்பாகவே செயலிழக்க செய்யும் இதுபோன்றதொரு தொழில்நுட்பத்தை சீனா ஏற்கெனவே உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் வெளிப்படையான ஒரு வழி என்னவென்றால், அச் சுறுத்தலை உண்டாக்கும் ட்ரோனை சுட்டு வீழ்த்துவதேயாகும்.

எனினும், இலக்கை தவறவிடும் தோட்டாக்கள் ஏற்படுத்தும் ஆபத்தின் காரணமாக இந்த முறையை தாங்கள் பயன்படுத்தவில்லை என்று காட்விக் விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இருந்தபோதிலும், சந்தேகத்திற்கிடமாக காணப்படும் ட்ரோன்களை கை அல்லது தோள்பட்டை மீது வைத்து பயன்படுத்தும் துப்பாக்கிகளை கொண்டு சுடும்போது அதிலிருந்து வெளிவரும் வலைகள் மூலம் ட்ரோனை பிடிக்கும் மாற்று வழிமுறைகளை சில நிறுவனங்கள் உண்டாக்கியுள்ளன.

பிரிட்டனை சேர்ந்த பொறியியல் நிறுவனமான ஓபன்ஒர்க்ஸ் உருவாக்கியுள்ள ஏவுகணைத் துப்பாக்கியான ‘ஸ்கைவால்100’, இலக்கை நோக்கி சுட்டவுடன் வலையை வெளியேற்றுகிறது.

இந்த வகை துப்பாக்கி, ஆசியா, அய்ரோப்பா மட்டுமின்றி வட அமெரிக்க நாடுகளின் அரசாங்க மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் பயன்படுத்தப்படுகிறது.

அனுமதிக்கப்படாத இடத்தை நோக்கி வரும் ட்ரோனை இடை மறித்து, வலையை செலுத்தி அதன் இயக்கத்தை நிறுத்தும் ட்ரோன் களும் பயன்பாட்டில் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட கருவியின் இருப்பிடத்தை கண்டறிந்த ஒரு சில நொடிகளில் சுட்டு வீழ்த்தும் ஒளிக்கதிர்களை அடிப்படையாக கொண்ட தொழில்நுட்பத்தை அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் பரிசோதித்துள்ளன.

பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், சக்திவாய்ந்த இன்ஃபராரெட் கேமராக்களை கொண்டு சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் ட்ரோன்களை செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது. நாசா விஞ்ஞானிகள் தகவல்!

சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

சூரியக்குடும்பத்தில் 6ஆவது கோளாக இருக்கும் சனி, சூரியனிலிருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து உள்ளது. சனிக்கோளின் நடுப் பகுதியை சுற்றி தட்டையாக வளையங்கள் காணப்படுகிறது,

சனிக்கோளுக்கு அழகு சேர்க்கும் இந்த வளையங்கள் பனித் துகள்கள், பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளால் ஆனவை ஆகும். மற்ற கோள்களில் இல்லாது சனிக்கோளில் மட்டுமே இருக்கும் இந்த வளையங்கள், தற்போது படிப்படி யாக மறைந்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து உள்ளனர். சனிக்கோளின் வளிமண்டலத்தில் அம்மோனியா படிகங்கள் இருப்பதால் வெளிர் மஞ்சள் நிறம் கொண்டுள்ளது.

சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டான் புதன் கோளை விடவும் பெரியது எனவும் கூறப்படுகிறது. சூரியக்குடும்பத்தில் நீரை விட குறைவான அடர்த்தி உள்ள கோள் சனி மட்டுமே என்பதை அவசியம் குறிப்பிட வேண்டும்.

இந்த நிலையில் சனிக் கோளின் வளையங்களில் தூசிகள் படிந்ததால்தன் பனிக்கட்டிகள் உருகி வருகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் சனிக்கோளில் இருக்கும் வளையங்கள் அடுத்த 100 மில்லியன் ஆண்டுகளில் முற்றிலும் மறைந்துவிடும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இந்தியா தன் வரலாற்றிலேயே சந்தித்திராத மிக மோசமானதொரு நீர் நெருக்கடியை தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது என்கிறது நிதி ஆயோக். நெருக்கடியை சமாளிக்கும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்காவிடில், 2030ஆம் ஆண்டில் கிடைக்கும் குடிநீரின் அளவைவிட தேவை மிக அதிகமாகிவிடும் என நிதி ஆயோகின் ஆய்வு தெரிவிக்கிறது.

டில்லி, பெங்களூரு, சென்னை, அய்தராபாத் உள்ளிட்ட 21 நகரங்களின் நிலத்தடி நீர் 2020ஆம் ஆண்டில் மிகவும் குறைந்து சுமார் 10 கோடி மக்களைப் பாதிக்க இருக்கிறது என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது. நிலைமை இப்படியே நீடிக்கு மானால், 2050ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதம் இழப்பு ஏற்படும் என்றும் அறிவிக்கிறது அந்த ஆய்வு.

மத்திய இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் உள்ள மாநிலங்களில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்கிறது சிஜிடபிள்யுபி அறிக்கை. கடினப்பாறை நிலப்பரப்பின் காரணமாக இந்த மாநிலங்களில் நீரைச் சேமிக்கும் வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன. போதாக்குறைக்கு இம்மா நிலங்களில் மழைப் பொழிவும் குறையும்போது நிலைமை படு மோசமாகி விடுகிறது, விவசாயத்திற்கு, குறிப்பாக நெல் சாகுபடிக்கு, நீர்த்தேவை அதிகமாக இருப்பதால் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது. விளைவாக, நிலத்தடி நீரின் அளவு மிகவும் குறைந்து அபாய கட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படி நிலத்தடி நீர் வேகமாகக் குறைந்துவருவது மக்கள் தொகை அதிகரித்துவரும் அடுத்த தலைமுறைக்கு குடிநீர் கிடைப்பதில் மிகக் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. கிடைக்கும் நிலத்தடி நீராவது சுத்தமாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை .  அமெரிக்கா வின் டியூக் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இந்தியாவின் 16 மாநிலங்களில் நீர்த் தேக்கங் களிலிருந்து கிடைக்கும் நீரில் யுரேனியம் கலந்திருக் கிறது எனத் தங்களது சமீபத்திய ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர். ஒரு லிட்டர் நீருக்கு அதிக பட்சம் 30 மைக்ரோகிராம் யுரேனியம் வரைதான் இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் வரைய

று த்துள்ளது, ஆனால் இந்தியாவில் உள்ள யுரேனியக் கலப்படம் இதைவிட மிக அதிகமாகவே உள்ளது.

Banner
Banner