கோடைகாலத்தில் வீட்டினுள்ளே ஏற்படும் வெப்பத்தினால் அவதிப்படுபவர்களுக்கு பெரும் செலவுகளை ஏற்படுத்தும் ஏசிக்கு மாற்றாக சூரிய ஒளியின் வெப்பத்தை தடுக்கும் ஒருவித பிலிமை அமெரிக்காவின் மாசாசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் கோடை காலத்தை சமாளிப்பது மிகவும் சவாலானதாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களது பொருளாதார சூழ்நிலைக்கேற்ப மின் விசிறி, ஏசி போன்றவற்றை கொண்டு சமாளிக்க முயல்கின்றனர். இருப்பினும், அந்த இயந்திரங்களின் விலை மட்டுமல்லாது, மின்சார செலவும் மிகவும் அதிகமாக உள்ளது.

வீடுகள், அலுவலகங்களில் கோடைகாலத்தில் அதிக அளவிலான வெப்பம் ஏற்படுவதற்கு காரணமாக சன்னல்கள் மற்றும் கதவுகள் உள்ளதை கண்டறிந்த விஞ்ஞானிகள், அதை தடுக்கும் வகையிலான குறைந்த செலவு தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், 32 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக வெயில் அடித்தால் அதை வீட்டிற்குள் நுழைவதை தடுக்கும் பிலிமை அமெரிக்காவின் எம்அய்டி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  எப்போதெல்லாம் வெயிலின் அளவு 32 டிகிரி செல்சியசை தாண்டி செல்கிறதோ, அப்போது அதனுள்ளே பொருத்தப் பட்டிருக்கும் சிறிய நுண்பொருட்கள் வெப்பத்தை தடுத்து வெளியேற்றும்.

இன்றைய நிலையில் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் காரணமாகத்தான் பல்வேறு வானிலை மாறுபாடுகள் ஏற்படுகின்றன. புயல், வெள்ளம், அதிக வெப்பம் இவற்றுக்கெல்லாம் மனிதர்கள் பல ஆண்டுகளாக ஏற்படுத்தி வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான் காரணம் என அறிவியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுபடப் பலரும் பலவிதமான கண்டுபிடிப்புகளை மேற் கொண்டு வருகின்றனர். உடுமலை ஆர்.கே.ஆர். கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவர் திருவருள்செல்வன், ட்ரோன் கருவியை மாதிரியாகக் கொண்டு ஆள் இல்லாக் குட்டி விமானங்கள் மூலம் செயற்கை மழையை உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சிகளில் மாவட்ட, மாநில அளவில் இவரது படைப்பு முதலிடம் பெற்றுள்ளது.

செயற்கை மழையை உருவாக்கக்கூடிய ஆள் இல்லாக் குட்டி விமானத்தை வடிவமைத்திருப்பது மட்டுமல்லாமல் பேரழிவைத் தடுக்கும் கருவியையும் இவர் கண்டுபிடித்திருக்கிறார். சீர்கேட்டின் நிலை காரணமாகப் பருவமழை மாற்றமடைகிறது. அதனால் சில இடங்களில் மட்டும் கன மழை பொழிந்து வெள்ளப் பாதிப்பு ஏற்படுகிறது. சென்னையில் புயல், வெள்ளப் பாதிப்புக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுதான் காரணம்.

புதிய கருவியின் மூலம் காற்றின் வேகத்தைத் திசை திருப்பவும், வேகத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ அதன் தன்மையை மாற்றவோ இயலும் என்கிறார் திருவருள்செல்வன்.

இயற்கை செழிக்கத் தேவை மழை. ஆனால், அந்த மழையையே செயற்கையாக உருவாக்குவது அல்லது மடை மாற்றுவது என்பது எப்படி நல்ல கண்டுபிடிப்பாக இருக்க முடியும்?

இதன் மூலம் வேதிப்பொருள் மூலம் காற்றின் தன்மையைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து மழைப் பொழிவைச் செயற்கையாக ஏற்படுத்தலாம். அரபு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் விமானம் மூலம் அதிகப் பொருள் செலவில் செயற்கை மழையை உருவாக்கி வருகின்றன. ஆனால், சில்வர் அய்யோடைட் உள்ளிட்ட அபாயகரமான வேதிப்பொருட்களைப் பயன்படுத்தும்போது அது இயற்கைக்கும் மனிதனுக்கும் கேடு விளைவிக்கும். என்னுடைய கண்டுபிடிப்போ வடிநீரில் சோடியம் குளோ ரைட் எனப்படும் உப்பைக் கலந்து அதன் மூலமாக இயற்கைக்குக் கேடுவிளைவிக்காத வேதிப்பொருளை உருவாக்குவதாகும். இந்தியப் பொருளாதாரத்துக்குத் தக்க வகையில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு தொடக்கமாக இருக்கும். என்கிறார் திருவருள்செல்வன்.

ஆதரவு கொடுங்க!

திருப்பூரில் செயிண்ட் ஜோசப் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியில் இப்படைப்பு முதலிடம் பெற்றது. திருச்சியில் இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கண் காட்சியில் மாநில அளவில் முதலிடமும் பெற்றுள்ளது.

மேலும் திருவருள்செல்வன் கூறுகை யில், பள்ளிப் பாடத்தை மட்டுமே சார்ந்தி ருக்காமல் மாணவர்களிடம் என்ன திறமை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை ஊக்குவிக்க வேண்டும். கல்வி என்பது மனித வளத்தை மேம்படுத்தவும், தெரியாத ஒன்றைத் தெரிந்துகொள்ளவும் உதவுகிறது. மாணவருக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதில் கவனம் செலுத்த அரசும் கல்விக் கூடங்களும் பெற்றோரும் உதவ வேண்டும் என்கிறார் திருவருள் செல்வன்.

வலிப்பு நோயால் மரணமடைபவர்களில், 17 சதவீதம் பேர் வரை, எதிர்பாராமல் திடீரென மரணமடைவதாக மருத்துவர்கள் கணக்கிட்டுள்ளனர். இத்தகைய மரணங்களில் கணிசமானவை, வலிப்பு நோய் உள்ளவர்கள் துங்கிக் கொண்டிருக்கும் போது நிகழ்கின்றன.
வலிப்பு நோய் உள்ளவரின் படுக்கையில், சில உணரிகளை பொருத்தி, திடீர் உடல் வலிப்புகளை கண்காணித்து எச்சரிக்கும் கருவிகள், தற்போது வந்துள்ளன. என்றாலும், அதைவிட மிக துல்லியமாக, துக்கத்தில் வரும் வலிப்பை கண்டறிய, நெதர்லாந்தின் எய்ண்ட்ஹோவென் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள், புதிய கருவியை உருவாக்கி உள்ளனர்.
‘நைட் வாட்ச்‘ என்ற கையில் அணியும் கருவியான இது, வலிப்பு நோயாளியின் இதயத்துடிப்பு, அவரது கைகள் வலிப்பால் அசையும் வேகம் போன்றவற்றை, துல்லியமாக அளக்கிறது.
இதனால் வலிப்பு வந்தவுடன், வீட்டிலிருப்பவர்களுக்கு தெரிவிக்க, எச்சரிக்கை மணியை ஒலிக்கும்.
மேலும், வேண்டியவர்களின் மொபைலுக்கும் தகவல்களை அனுப்பும். சோதனைகளின் போது, வலிப்பு வந்திருப்பதை, 85 முதல் 96 சதவீதம் வரை, துல்லியமாக கணித்து, எச்சரிக்கை விடுத்தது, நைட்வாட்ச் கருவி.
எய்ண்ட்ஹோவன் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பத்தை லிவ்அஷ்யூர்டு என்ற அமைப்பு, நைட்வாட்ச் கருவியை மேலும் சோதித்து, விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

Banner
Banner