வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரண்மாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கலாம் என்று டிவி அல்லது ரேடியோவில் வானிலை அறிவிப்பின் போது தெரிவிப்பார்கள்.மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.

தரையிலிருந்து தொடங்கி வானில் பல கிலோ மீட்டர் உயரம் வரை காற்று பரவியுள்ளது.காற்றுக்கு எடை உண்டு. ஆகவே மேலிருந்து கீழ் வரை உள்ள காற்று நம்மை அழுத்துகிறது. எந்த ஒருவரையும் காற்றானது கடல் மட்டத்தில சதுர செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் அழுத்துகிறது. ஒரு புறத்திலிருந்து மட்டும் அழுத்தம் இருந்தால் நம்மால் உணர முடியும்.

ஆனால் காற்று நம்மை எல்லாப் புறங்களிலிருந்தும் அழுத்துவதால் காற்று அழுத்துவதை நம்மால் உணர முடிவதில்லை.

ஓர் இடத்துக்கு மேலே இருக்கின்ற மொத்தக் காற்றின் அளவு இடத்துக்கு இடம் வித்தியாசப்படும். ஆகவே காற்றழுத்தமும் வித்தியாசப்படும். ஓரிடத் தில் காற்றழுத்தம் மிக அதிகமாக இருக்கும். வேறி டத்தில் குறைவாக இருக்கும்.இதற்கு சூரியனும் காரணம். காற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று வீசும். காற்றுடன் மேகங்களும் நகரும். ஆகவே காற்றழுத்த நிலைமைகள் வானிலைத் துறையினருக்கு மிக முக்கியம்.

வானிலைத் துறையினர் காற்றழுத்தத்தை அளக்க மேலே சொன்ன (சதுர செண்டிமீட்டருக்கு இவ்வளவு என்ற) கணக்கை பின்பற்றுவதில்லை.அவர்கள் கணக்குப்படி கடல் மட்டத்தில் சராசரி காற்றழுத்தம் 1013 மில்லி பார். காற்றழுத்தம் இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ஆங்காங்கு காற்றழுத்த அளவு மானி வைக்கப்படுகிறது.

காற்றழுத்தமானிகள் தெரிவிக்கின்ற எண்ணற்ற தகவலகளை வைத்து காற்றழுத்த நிலவரப் படம் தயாரிப்பார்கள். எந்தெந்த இடங்களில் ஒரே மாதிரி அழுத்தம் இருக்கிறதோ அந்த இடங்களை எல்லாம் சேர்த்து கோடு போடுவார்கள். இதற்கு  Isobar என்று பெயர்.அருகே உள்ள படத்தில்  L என்ற Low எழுத்து   என்பதைக் குறிப்பதாகும். H என்பது  high என் பதைக் குறிப்பதாகும். ஓரிடத்தில் காற்றழுத்தம் குறைவாக இருக்க, அதைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் அதிகமாக இருக்க நேரிடலாம். நட்ட நடுவே காற்றழுத்தம் குறைவாக உள்ள இடத்தை  என்று குறிப்பிடுவார்கள். நேர் மாறாக நட்ட நடுவே ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அது மேடாக இருக்கும் இடத்திலிருந்து தண்ணீர் பள்ளமாக இருக்கின்ற இடத்தை நோக்கிப் பாய்வது போலவே காற்றும் செயல்படுகிறது. வடகிழக்குப் பருவ மழைக் காலத்தின் போது காற்று வட கிழக்கிலிருந்து வீசுகிறது. கடல் மீதாக வருகின்ற மேகங்கள் ஆவி வடிவிலான நீரைத் தாங்கிய வையாக வருகின்றன். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அந்த மேகங்களை ஈர்க்கும் போது மழை பொழிகிற்து.. ஆகவே கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றினால் மழை பெய்யும் வாய்ப்பு தோன்றுகிறது.


குரல் மூலம் கட்டுப்படும் கருவிகள்

அமேசான், தன் அலெக்சா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வைத்து, பல கருவிகளை விற்பனை செய்து வருகிறது.

ஸ்மார்ட் ஸ்பீக்கர் வகை கருவிகளான, எக்கோ, டாட், ஷோ போன்ற கருவிகளுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள அமேசான், மேலும் சில சிறிய கருவிகளையும் வெளியிட்டுள்ளது.

வீட்டில் இருப்போரின் குரல் உத்தரவுகளை நிறைவேற்றும் அலெக்சா மென் பொருள் தான் இந்த கருவிகளின் அடிப்படை. வீட்டாரின் குரலுக்கு கட்டுப்படும், ஸ்மார்ட் பிளக்குடன் இணைந்துள்ள எந்த கருவியையும் முடுக்கவோ, அணைக்கவோ முடியும்.

உலகின் முதல் தானோட்டி டிராம் வண்டியை, ஜெர்மனியிலுள்ள பாட்ஸ்டாம் நகரில் தொழில்நுட்ப வல்லுநர்கள், வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்த்து உள்ளனர்.

ரயில்களைப் போல அல்லாமல், டிராம் வண்டிகள், நகரின் சாலைகளுக்கு நடுவே புகுந்து செல்பவை. எனவே, பாதசாரிகள், இரு சக்கர வாகனங்கள், டிராமின் தண்டவாளத்திற்குக் குறுக்கே திடுமென வரும் வாய்ப்புகள் அதிகம். சீமென்ஸ் நிறுவனத்தின் கூட்டுறவில் தயாராகி இருக்கும் இந்த தானோட்டி டிராம் வண்டி, அத்தகைய குறுக்கீடுகளின்போது, பிரேக் போட்டு நின்று, பின் சென்று காட்டியது. பாட்ஸ்டாம் நகருக்கு அருகே உள்ள பெர்லின் நகரில் நடக்கும், இன்னோ டிரானஸ் - 2018 என்ற போக்குவரத்து தொழில்நுட்பக் கண்காட்சியை ஒட்டி இந்த வெள்ளோட்டம் நடத்திக் காட்டப்பட்டது. தானோட்டி கார்களில் உள்ள ஏதே லிடார், உணரிகள், கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் போன்ற தொழில்நுட்பங்களை, இந்த தானோட்டி டிராம் வண்டியும் பயன்படுத்தியது.

மூன்றில் ஒருவர் இரவில் நன்றாகத் தூங்குவதில்லை. பெரும் பாலானவர்களுக்கு 8 மணி நேர உறக்கம் அவசியம். சிலருக்கு அதைவிட குறைந்த நேரம் போதும் உங்கள் உடலுக்கு எவ்வளவு நேரம் தூக்கம் தேவை என்பதை முதலில் அறியுங்கள். அவ்வளவு நேரம் தூங்குவதை உறுதி செய்யுங்கள்.

தொடர்ந்து போதிய தூக்கமில்லாமல் இருந்தால் அது உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும். உடல் பருமன், நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவை இதனால் உண்டாகும்.

நன்றாகத் தூங்கினால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும். மன நலமும் மேம்படும். நீரிழிவுக்கான வாய்ப்புகள் குறையும். பாலியல் வாழ்க்கையும் சிறக்கும்.

ஒரு நாள் சரியாகத் தூங்காவிட்டால், மறுநாள் அதிகம் தூங்குங்கள். பல மாதங்கள் போதுமான தூக்கம் இல்லாவிட்டால், மீண்டு வரவே சில வாரம் தேவை.

Banner
Banner