புதுடில்லி, டிச.13  பாலியல் வன்கொடு மையால் பாதிக்கப்பட்டோரின் பெயர்கள் மற்றும் பிற அடையாளங்களை வெளியிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள மனுக் கள், நீதிபதி மதன் பி லோகுர் தலைமையிலான அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் முன்பு, டில்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவமும், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள் ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த மனுக்கள் தொடர்பான விசா ரணையில் உச்சநீதிமன்றத்துக்கு உதவும் மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி, நீதிமன்ற விசாரணையில் இருக்கும் விவகாரங்களை, ஊடகங்கள் தனியாக விசாரணை நடத்தி வருகின்றன; ஆதலால் பெண்களுக்கு எதிரான குற்றம் குறித்த செய்திகளை ஊடகங்கள் எவ்வாறு வெளியிட வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் மேலும் கூறியதாவது:

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன்பு, ஊடகங்களுக்கு தகவலை கசிய விட்டு விடுகின்றனர். இது நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுவது போன்றது. கதுவா விவகாரத்தில் காவல்துறையினர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் முன்பு, குற்றவாளிகளில் ஒருவர் நிரபராதி, அவர் குற்றம் எதுவும் இழைக்கவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்தன.

இந்திய தண்டனையியல் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தை களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் (போஸ்கோ) ஆகியவற்றில் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாவோரின் பெயர்கள், பிற அடையாளங்களை வெளியிடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பான வழக்குகளில், ஊடகங்கள் விதிகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில், அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக் கையாகும் என்றார் அவர்.

இதைக் கேட்ட நீதிபதிகள் கூறிய தாவது: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர், சமூகத்தில் தீண்டத் தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர். இது மிகவும் கெட்ட  வாய்ப்பானது ஆகும். இதை கருத்தில் கொண்டு, அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு, பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் ரீதியிலான தாக்குதலால் பாதிக்கப்பட் டோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது என உத்தரவிடுகிறோம். பாலியல் வன்கொடுமை, பாலியல் தாக்குதல் தொடர்பாக பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை காவல்துறையினர், இணையதளத்தில் வெளியிடக் கூடாது. இதில் சிறார்களுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கைகளும் அடங்கும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உங்களது கைப்பேசியில் குறிப்பிட்ட செயலிகளை நிறுவுறுவதன் மூலம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கைபேசி முதல் கண்ணுக்கு புலப்படாத கேமராக்கள் வரை அனைத்தையும் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புள்ளது.

சில நூறு ரூபாய்க்கு கூட ஆண்ட்ராய்டு கைபேசிகளை வாங்கிவிட முடியும். என்ன தான் விலை குறைவான கைபேசியிலும் கிட்டத்தட்ட அனைத்து செயலிகளையும் பயன்படுத்த முடியும் என்றாலும், குறிப்பிட்ட செயலியின் அனைத்து சிறப்பம்சங்களையும் உங்களால் பெற முடியாது.

மேலும், ஆண்ட்ராய்டு மட்டுமின்றி ஆப்பிளின் அய்ஓஎஸ் இயங்குதளத்திலும் போலி செயலிகள் உலவுவதால் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து செயலிகளும் எதிர்பார்த்த பலனை கொடுக்குமென்று சொல்ல முடியாது.

ரகசிய கேமரா கண்டறியும் செயலிகள் எப்படி செயல்படுகின்றன?

நீங்கள் ரகசிய கேமராக்களை கண்டறியும் எந்த செயலியை தரவிறக்கினாலும், அவை ஒரு முக்கிய செய்தியை காண்பித்த பிறகே செயல்பட தொடங்குகின்றன. அதாவது, எங்களது செயலி அளிக்கும் முடிவுகள் உங்களது கைபேசியின் திறனை சார்ந்தது. ஒருவேளை இந்த செயலி செயல்படுவதற்குரிய திறன் உங்களது கைபேசியில் இல்லை யென்றால், நீங்கள் தவறான முடிவுகளை பெறக்கூடும் என்று அந்த செயலிகள் குறிப்பிடுகின்றன.

உங்களது கைபேசியில் இருக்கும் மாக்னெட்டோமீட்டர் என்ற சென்சார்தான் ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பதற்கு காரணமாக உள்ளது. அதாவது, கூகுள் மேப் செயலிக்கு நீங்கள் எந்த திசையை நோக்கி உள்ளீர்கள், நகர்கிறீர்கள் என்பதை தெரிவிப் பதற்கும் இதே சென்சார்தான் பயன்படுகிறது. ஒவ்வொரு மின்னணு பொருளும் காந்த அலைகளை வெளியேற்றி கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் பார்த்தால் உங்களது கைபேசியில் இருக்கும் மாக்னெட்டோமீட்டர் சென்சார், எந்த இடத்தில் காந்த அலைகளின் அளவு அதிகமுள்ளது என்பதை கண்டறிந்து கூறுவதற்கு இதுபோன்ற செயலிகள் பயன்படுகின்றன.

நீங்கள் கேமராவை கண்டறியும் செய லியை நிறுவி வைத்துள்ள கைபேசியை தவிர்த்து இன்னொரு கைபேசியை எடுத்துக் கொள்ளுங்கள். காந்த அலைகளின் எண் ணிக்கையை பொறுத்து உங்களிடமுள்ள மற்றொரு கைபேசியின் பகுதிகளான கேமரா, ஸ்பீக்கர் போன்றவற்றை கூட இந்த செயலிகள் காண்பிக்கக் கூடும். மின்னணு கருவிகள் வெளிப்படுத்தும் சராசரி காந்த அலைகளை கொண்டு இதுபோன்ற கணிப்புகளை இந்த செயலிகள் தருகின்றன.

மேற்குறிப்பிட்ட முறையின் மூலம் சாதாரண வகை கேமராக்களை கண்டுபிடிக்க முடியும். ஆனால், அகச்சிவப்பு கதிர்களை அடிப்படையாக கொண்டு செயல்படும் ரகசிய கேமராக்களை கண்டறிவதற்கு, உங்களது கைபேசியில் IR (இன்ஃப்ராரெட் ரேடியேஷன்) என்னும் சென்சார் இருக்க வேண்டும். அதாவது, ரகசிய கேமராக்களை கண்டறியும் செயலிகளில் இருக்கும்  IR வகை கேமராவை கண்டறியும் வசதியை பயன்படுத்துவதற்கு முன்னர் உங்களது அறையை இருட்டாக்கி விடுங்கள். பிறகு, அந்த கைபேசி செயலியின் மூலம் நீங்கள் இருக்கும் அறையை ஆராயும் போது,  IR கேமரா ஏதாவது கண்டறியப்பட்டால் கருப்பாக இருக்கும் திரை வெள்ளை நிறத்திற்கு மாறும்.

style="font-size: 12.16px;">ஒருவருக்கு காபி பிடிக்குமா அல்லது டீ பிடிக்குமா என்பதை அவரது மரபணுக்கள்தான் தீர் மானிக்கின்றன என்று கண்டறிந் துள்ளனர் விஞ்ஞானிகள்.

அமெரிக்காவின் நார்த்வெஸ் டர்ன் பல்கலைக் கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் கியூ.அய். எம்.ஆர்., பெர்கோபர் மருத்துவ ஆராய்ச்சி மய்யம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் சுவை உணர்வின் உடலியல் மற்றும் மரபணு காரணிகளை 4 லட்சம் பேரிடம் ஆராய்ச்சி செய்தனர்.

அதன்படி காபியிலுள்ள கசப் பான பொருளான காபீன், கசப்புச் சுவையை உடனே கண்டு கொள் ளும் திறன் உள்ளவர்களே காபி யின் சுவையையும் அது தரும் சுறுசுறுப்பையும் விரும் புவதாக தெரியவந்தது. கசப்பு சுவையை உணர மரபணுவில் மூன்று கூறுகள் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Banner
Banner