இணைய இணைப்பிற்கான அகல அலைக் கற்றை வசதியை பூமியின் எல்லா பகுதிகளிலும் கிடைக்கச் செய்வதற்கு செயற்கைக்கோள்களை பயன்படுத்தும், ‘ஸ்டார் லிங்க்‘ திட்டத்தை வேகப் படுத்துகிறது, ‘ஸ்பேஸ் எக்ஸ்’.

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர், எலான் மஸ்க்கின் முன்னணி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், இதற்கென அண்மையில் மிகத் தாழ்வட்டப் பாதையில், 7,518 நுண்செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ, அமெரிக்க அரசின் அனுமதிகளைப் பெற்றுள்ளது. ஏற்கனவே தாழ் வட்டப் பாதையில், 4,425 செயற்கைக்கோள்களை செலுத்த அனுமதி பெற்றுவிட்டது. இத்துடன் மொத்தம், 11 ஆயிரத்து, 943 செயற்கைக் கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் விண்ணில் செலுத்தும். கடந்த பிப்ரவரியில் ஏவிய இரு செயற்கைக் கோள்கள் நன்றாக இயங்குகின்றன. வரும், 2019க்குள் இத்தனை செயற்கைக் கோள் களையும் ஸ்பேஸ் எக்ஸ் விண் ணில் ஏவிவிட திட்டமிட்டுள்ளது.

ஒருவருக்கு மாரடைப்பு வந்திருக்கிறதா என்பதை கண்டறிய மருத்துவரும், ஈ.சி.ஜி எனும் இயந்திரமும் தேவை. ஆனால், மாரடைப்பு ஏற்படும்போது இந்த இரு வசதியும் அருகில் இருப்பது கடினம். ஆனால், இப்போது தான் எல்லாரிடமும் மொபைல் இருக்கிறதே? அதை வைத்தே ஒருவருக்கு மாரடைப்பு வந்திருக்கிறதா என்று கண்டறிய ஒரு செயலியை உருவாக்கியுள்ளது இன்டெர்மவுன்டெய்ன் ஹெல்த்கேர் என்ற நிறுவனம்.

கடந்த வாரம் அமெரிக்க இதய நலச் சங்கம் நடத்திய மாநாட்டில், இந்த செயலியின் துல்லியம் குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைல் செயலியுடன் விரல்களை வைத்து நாடி பார்க்கும் ஒரு சிறிய வில்லை போன்ற கருவியையும் பயன்படுத்த வேண்டும். தனக்கு மாரடைப்பு வந்திருப்பதாக நினைப்பவர், தன் விரல்களை இந்த வில்லையில் வைத்து கொண்டால், அது நாடித் துடிப்பை மொபைலுக்கு அனுப்பும். அதை செயலி, இ.சி.ஜி., இயந்திரம் போலவே வரைபடமாக மாற்றி, இணையத்தின் மூலம் இதய மருத்துவருக்கு அனுப்பும்.  உடனடியாக நோயாளி மருத்துவமனைக்குச் செல்லலாம். இல்லாவிடில் நிம்மதியாக இருக்கலாம்.

இதய வலி உள்ள, 200 பேருக்கும் மேற்பட்ட வர்களுக்கு இந்த செயலியைப் பயன்படுத்தி துல்லியமாக தாக்குதல் இருப்பதை கண்டறிய முடிந்ததாக ஆய்வாளர்கள் இதய மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்திலோ அல்லது குறைந்த ஒளி கொண்ட இடத்திலோ புகைப்படங்களை எடுக்கும்போது இருக்கும் சிரமத்தை பெருமளவில் நீக்கும் தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தொழில்முறை கேமராக்களில் மட்டுமே எடுக்க முடிந்த தரமான புகைப்படங்கள்/ காணொலிகளை தற்போது கைபேசிகளிலேயே எடுக்குமளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. இருந்தபோதிலும், இரவு அல்லது ஒளி குறைந்த இடங்களில் புகைப்படங்களை எடுக்கும்போது தெளிவான புகைப்படங்களை பெறுவதில் சிரமம் நீடித்து வருகிறது. கைபேசியிலுள்ள ஃபிளாஷை பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படங்களும் செயற்கையான தோற்றத்தையே அளிக்கின்றன.

இந்நிலையில், தமது பிக்சல் கைபேசிகளில் இருக்கும் கேமராக் களுக்கென ‘நைட் சைட்’ என்னும் பிரத்யேக வசதியை அறிமுகப்ப டுத்தியுள்ளது கூகுள். அதாவது, இயந்திர நுண்ணறிவு தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்த வசதியின் மூலம் அனைத்து விதமான ஒளியிலும் பளிச்சென வண்ணமயமான புகைப்படங்களை எடுக்கமுடியுமென்று கூகுள் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Banner
Banner