குடிநீர், குளிர் பானங்களைத் தாங்கி வரும், ‘பெட்’ பாட்டில்கள், குப்பை மேட்டில் குவியும் சுற்றுச்சூழல் கேடுகள்.

இதை, புதிய வகையில் மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தை, சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். இந்த மறுசுழற்சி உத்திக்கு, அதிக செலவு பிடிக்காது என்பதும் கவர்ச்சிகரமான அம்சம்.

‘பெட்’ எனப்படும், பாலியெத்திலின் டெரப் தாலேட் பாட்டில்கள், முதலில் நுண் இழைகளாக கத்தரிக்கப்படுகின்றன. பின், அவற்றின் மீது சிலிக்கா பூசப்படுகிறது.

அந்த இழைகளை சில வேதிப் பொருட்களில் முக்கி எடுத்து, ஒவ்வொரு நுண் இழையும் அளவில் பெரிதாக ஆக்கி உலர்த்தப்படுகின்றன. இத்தகைய வேதி மாற்றத்திற்குப் பின், ‘ஏரோஜெல்’ வகையைச் சேர்ந்த, இலகுவான, ஏராளமான நுண்துளைகளைக் கொண்ட பொருள் கிடைக்கிறது.

‘சொல்லப் போனால், உலகிலேயே மறுசுழற்சி முறையில் பெட் பாட்டில்களை ஏரோஜெல்லாக முதல் முறையாக மாற்றியது, தாங்கள் தான்’ என, சிங்கப்பூர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பெட் ஏரோஜெல்லுடன், சில மீதைல் ரக வேதிக் கலவைகளை சேர்த்தால், அவை சந்தையில் கிடைக்கும் உறிஞ்சிகளை விட, ஏழு மடங்கு அதிக மான எண்ணெயை உறிஞ்சும் திறன் கொண்ட வையாக மாறுகின்றன. மேலும், இந்த இலகுரக ஏரோஜெல்லை கட்டடங்களின் சுவரில் பதித்து, வெப்பத்தை சீராக வைக்கவும், ஒலி இரைச்சல்கள் உள்ளே வருவதை தடுக்கவும் பயன்படுத்தலாம்.

காற்றிலுள்ள துசித் துகள்களையும், கார்பன் - டை - ஆக்சைடையும் உறிஞ்சும் தன்மை உடை யவை என்பதால், பெட் ஏரோஜெல்களை திரும்பத் திரும்பப் பயன்படுத்தும் சுவாசக் கவசமாகவும் வடிவமைக்க முடியும்.

இந்த தொழில்நுட்பத்தை விரைவில் சந்தைப் படுத்த, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

பாகற்காயின் கசப்புச் சுவைக்கு பயந்தே பலர் அதை ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் கசப்புத் தன்மை அவர்கள் நினைப்பது போல விஷம் அல்லது. மாறாக அமுதத்துக்கு சமமானது. நம்முடைய உடம்பு தனக்கு வேண்டிய அளவு இந்தச் சத்தை உறிஞ்சிக் கொண்டு எஞ்சியவற்றை கழிவுப் பொருட் களாக வெளித் தள்ளிவிடும். பாகற்காய் சூடு உண்டாக்கும். கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே கறி சமைத்து உண்ணக் கூடியவை. இது கசப்புள்ளதாக இருந்தாலும் பருப்பு, தேங்காய் முதலியவற்றைச் சேர்த்து சமைத்தால் உண்பதற்கு சுவையாக இருக்கும்.

இது உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல் லும். பசியைத் தூண்டும். பித்தத்தை தணிக்கும். மலத்தை இளக்கும். பெண்களுக்கு பாலைக் கொடுக் கும். இதனுடன் சிறிது புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. பாகற் காயை அவ்வப்போது சேர்த்துக் கொண்டால் ஜூரம், இருமல், இரைப்பை, மூலம், வயிற்றுப்புழு ஆகியவை அகலும். பாகற்காய் எளிதில் செரிமானமாகாது என்றாலும் ஜடாராக் கினியை ஊக்குவிக்கும். கபம், பித்தம், ரத்த தோஷம், பாண்டு, குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்குவது இதன் இயல்பாகும்.

கருத்தரித்தல் சோதனை மய்யங்களில் மேற்கொள்ளப்படும் உத்திகளை அடிப்படையாக கொண்டு குறைந்து வரும் மரங்களின் விதைகளை பாதுகாக்கும் முயற்சிகள் பிரிட்டனிலுள்ள ஆராய்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முன்னெப்போதுமில்லாத வகையில் உலக அளவில் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதாவது, உலகிலுள்ள ஒவ்வொரு அய்ந்து மரங்களில் ஒன்று அழிவை எதிர்நோக்கியுள்ளது.

இது காடுகளில் அழிவிற்குள்ளாகி வரும் மரங்களை பாதுகாக்கும் கொள்கை நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று பிரிட்டனிலுள்ள கியூஸ் மில்லினியம் விதை வங்கியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜான் டிக்கி கூறுகிறார்.

பரிணாம வளர்ச்சி என்பது எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அப்போது இதுபோன்ற மரங்களை இழப்பதை காட்டி லும், செலவு குறைந்த இம்முறையின் மூலம் பாதுகாப்பதென்பது அவசியமாகிறது.

போர், இயற்கை பேரிடர் போன்ற பேரழிவை ஏற்படுத்தும் சூழ்நிலைகளிலிருந்து மரங்களை பாதுகாக்க இந்த முயற்சி எடுக் கப்பட்டுள்ளது. அதாவது, இந்த சோதனைக் குழாய்களில் வைக்கப்படும் செடி, மரங்களின் விதைகள் வெடிகுண்டு, வெள்ளம், கதிரியக்கம் போன்ற எவற் றாலும் பாதிக்கப்படாத வகையில் பாதுகாக்கப் படுகிறது.

வரும் 2020ஆம் ஆண்டிற்குள் அழி வின் விளிம்பிலுள்ள குறைந்தது 75 சதவீத மரங்களை இம்முறையின் மூலம் பாது காப்பதே ஆராய்ச்சியாளர்களின் இலக்காக உள்ளது. ஆனால், சமீபத்திய கணிப்பின்படி, அச்சுறுத்தலிலுள்ள பல்வேறு மரங்களை வழக்கமான விதை பதப்படுத்துதல் முறையை கொண்டு பாதுகாக்க முடியாது என்பது தெரியவந்தது. இது இலக்கை நோக்கிய பயணத்தில் பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இந்நிலையில், இந்த புதிய உத்தியை கொண்டு அனைத்து விதமான தாவரங் களையும் பாதுகாக்க முடியுமென்று பிரிட்டனி லுள்ள மில்லினியம் விதை வங்கியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக விதை வங்கியில் உலர்ந்த விதைகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப் படும் முறையை அனைத்து விதமான தாவர இனங்களிலும் மேற்கொள்ள முடியாது என்று மில்லினியம் விதை வங்கியை சேர்ந்த டேனியல் கூறுகிறார்.

உதாரணமாக, வேறுபட்ட விதைய மைப்பை கொண்ட ஓக், செஸ்நட் போன்ற வற்றை பதப்படுத்தி பாதுகாப்பதற்காக உலர வைத்தால் அவை இறந்துவிடும்.

இதுபோன்ற பாதுகாப்பதற்கு மிகவும் சவாலாக உள்ள விதைகளை பாதுகாப்பதற்கு கிரையோபிரிசர்வேஷன் போன்ற வேறுபட்ட உத்திகளை பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகிறார்கள். இந்த முறையை பயன்படுத்தியே காஃபி, சாக்லேட், அவ கோடா, ஓக் போன்றவற்றின் விதைகளை பாதுகாத்து வருகிறார்கள்.

Banner
Banner