கடினமாக உழைப்பதற்கு அடையாளமாக எறும்புகளைச் சொல்வர். அதை, ஜெர்மனி யின் ரெகென்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

மிகவும் இனிப்பான உணவை சற்று தொலைவிலும், சற்றே இனிப்பும் தரமும் குறைவான உணவை அருகாமையில் வைத்தும் விஞ்ஞானிகள் சோதித்தனர்.

எறும்புகள் இரண்டு உணவையும் ருசித் துப் பார்த்தன. அருகே உள்ளது தரக்குறை வானது என்று தெரிந்ததும், சற்று தொலைவில் உள்ள உணவையே எல்லா எறும்புகளும் தேடிப்போய் உண்டு வந்தன. எனவே, எறும் புகள் தரமானதை சிரமப்பட்டாவது உண்ண வேண்டும் என்ற எண்ணம் கொண்டவை என்று விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தனர்.

விலங்குகளின் உடலமைப்பை அடிப் படையாக வைத்து ‘ரோபோ’க்களை உருவாக்க பல ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

சீனாவில் நுகர்வோருக்கான ரோபோக் களை தயாரிக்கும், ‘வின்கிராஸ்’ என்ற நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ‘ஹெக்சா’ என்ற சிலந்தி வடிவ ரோபோவை வடிவ மைத்துள்ளனர்.

தன்னை சுற்றியுள்ளவற்றை உணர ஹெக்சாவுக்குள் பல உணரிகளும், ஒரு கேமராவும் உள்ளன. கேமரா வழியே தெரியும் காட்சி உட்பட, ரோபோ சிலந் தியை கட்டுப்படுத்த ஒரு திறன்பேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

லினக்ஸ் மென்பொருளை வைத்து ஹெக்சாவுக்கென, ‘மைண்ட்’ என்ற இயங்கு தளத்தையும் வின்கிராஸ் விஞ்ஞானிகள் படைத்துள்ளனர்.

சமதளம், கரடு முரடான தரை, படிக்கட்டு என்று எந்தப் பரப்பிலும் தானே ஏறி முன்னேறும் திறன் படைத்தது இந்த சிலந்தி ரோபோ.
இதன் ஆறு கால்களை தனித்தனியே கட்டுப்படுத்தாமல், பொது வாக போகும் திசையை மட்டும் திறன் பேசி மூலம் கட்டுப்படுத்தினால் போதும்.

ஹெக்சாவை வாங்கி பயன்படுத்துபவர் களில் கணினி மென்பொருளை எழுதும் திறன் உள்ளவர்கள், ஹெக்சாவை இயக்கும் மென்பொருளை எழுதி, அதை மற்ற பய னாளிகளுடன் பயன்படுத்திக் கொள்ளவும் இணையத்தில் வசதிகளை செய்து கொடுத் துள்ளது வின்கிராஸ்.

உயிருள்ள ஒற்றை செல்லின் எடை எவ்வளவு இருக்கும்? அதன் எடை நேரமாக ஆக எவ்வளவு மாற்றமடையும்? இதை அறிய, உலகிலேயே முதல் நுண்ணிய எடை இயந்திரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் ஜுரிச்சில் உள்ள இ.டி.எச்., பல்கலைக்கழகம் மற்றும் பேசல் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த எடை பார்க்கும் கருவி, ஒளிர்வு நுண்ணோக்கியையும், லேசர் மற்றும் அகச்சிவப்புக் கருவியையும் பயன்படுத்துகிறது.

செல்லை உயிரோடு வைத்திருக்க உதவும் சிறு பெட்டிக்குள்ளிருந்து ஒரே ஒரு செல்லை மட்டும் எடுத்து ஒரு சிறு உலோக தகட்டில் வைக்கும்போது, அந்த தகட்டின் அசைவுகளை லேசர் மற்றும் அகச்சிவப்புக் கதிர்கள் மூலம் அளப்பதன் மூலம் செல்லின் எடையை நிர்ணயிக்க முடியும் என் கின்றனர் விஞ்ஞானிகள்.

அதாவது,  கிராமில், டிரில்லியன் பகுதியளவுக்கு எடையைப் பார்க்க முடியும். இந்த கருவியின் மூலம் செல்களைப் பற்றிய புதிய உண்மையையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உயிருள்ள ஒரு செல்லின் எடை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

அது சத்துக்களை உள்வாங்கி வெளியேற்று வதால்,  அதன் எடை மாறுபடுகிறது என்கிறார் இ.டி.எச்., பல்கலைக் கழகத்தின் டேவிட் மார்டினெஸ் மார்ட்டின்.

Banner
Banner