மனிதன் உறங்குவதற்குக்கூட நேரமில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றான். உறங்க வேண்டிய நேரத்தில் உழைப்பும், உழைக்க வேண்டிய நேரத்தில் உறக்கமும் என்று மனிதனின் வாழ்க்கையில் ஒரு முறையில்லாமல் இருந்து கொண்டிருக் கின்றது.

இந்நிலையில், மனிதனுக்கு தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய நோய்கள் பல இருக்கின்றன. அதில், ஒன்று தான் இதய நோய் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஜெர்மனியின் போன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர் டேனியல் கியூட்டிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 24 மணி நேர சேவைப்பணியாளர்களில் குறைவான தூக்கத்தை வழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு, இதய நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று கண்டறிந்துள்ளார்.

மேலும், போதிய தூக்கமின்மையால் இதய நோயுடன், இரத்த அழுத்தமும் ஏற்பட வாய்ப்பிருப் பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனால், ஒரு மனிதன் தனக்கு தேவையான தூக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இல்லையென்றால், அவனுடைய இதயம் வெடிப்பதற்குண்டான வாய்ப்புக்கூட இருப்பதாக கூறப்படுகின்றது.

ஜெட் இயந்திரங்கள் பல ஆயிரம் உதிரி பாகங்களால் ஆன சிக்கலான இயந்திரங்கள். இவற்றை தினமும் சோதித்து, பராமரிப்பது அவசியம். ஆனால், மனிதப் பார்வையும், கைகளும் எட்ட முடியாத ஜெட் இயந்திரங்களின் உட்பகுதிகளை பராமரிப்பது சிக்கலான வேலை.

இதற்கு, இண்டு இடுக்குகளில் புகுந்து போய், பழுது இருக்கிறதா என்று காட்டுவதற்கு, ‘மைக்ரோ ரோபோ’க்கள் உதவும். எனவே, ஜெட் இயந்திரம் தயாரிக்கும் ரோல்ஸ் ராய்சும், ஹார்வர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகளும் சேர்ந்து, ‘ஹாம்ர் - இ’ என்ற நுண் ரோபோக்களை உருவாக்கி உள்ளனர்.

உள்ளங்கையில் அடங்கிவிடும் ஹாம்ர் - இ ரோபோவுக்கு நான்கு குட்டிக் கால்கள் உள்ளன.

இவற்றை வைத்து, சிறிய துளைகளுக்குள் நடந்து போவது, மேலே ஏறுவது, இறங்குவது, வளைந்த பகுதிகளில் தலைகீழாக நடப்பது போன்றவற்றை ஹாம்ர்- இ சரளமாகச் செய்கிறது. இந்த குட்டி ரோபோவால் நீரிலும் நீந்த முடியும் என, இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விமான இயந்திரங்களில் மட்டுமல்லாமல், சிக்கலான அறிவியல் கருவிகள், கப்பல் பராமரிப்பு, பெரும் கட்டடங்கள் பராமரிப்பு போன்ற பல துறைகளில் ஹாம்ர்- இ பயன்படும்.

 

 

உலகெங்கும் ஆண்டுக்கு, 20 லட்சம் பேரை கொல்லும் நிமோனியா கிருமியை எதிர்க்கும் புதிய தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு கொடுத்து சோதிக்கும் முயற்சி துவங்கியுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி, 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மரணத்தில், 16 சதவீதம், நிமோனியா தொற்றினால் ஏற்படுகிறது.

நிமோனியாவை உண்டாக்கும், ‘ஸ்ட்ரெப்டோ கோகஸ் நிமோனியே’ கிருமியில், 98 வகைகள் உள்ளன. ஆனால், தற்போதுள்ள நிமோனியா தடுப்பு மருந்துகள், 13 வகை கிருமிகளை மட்டுமே எதிர்க்கும் திறன் கொண்டவை.

ஆஸ்திரேலியாவிலுள்ள, ஜி.பி.என்., வேக்சின்ஸ் மற்றும் அடிலெய்டு பல்கலைக்கழக தொற்று நோய்கள் ஆய்வு மய்யமும் இணைந்து, இந்த சோதனையை நடத்துகின்றன.

Banner
Banner