புத்தம் புதிய பூமி பிராக்சிமா பி

பூமியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மாசுபடுத்திய பிறகு உலகின் மெகா தொழிலதிபர்களின் வேட்டையும் கனவும் எதை நோக்கியதாக இருக்கும்? இன்னொரு பூமியைத் தேடுவதுதானே!  அந்த தீவிர தேடுதலில் கிடைத்திருப்பதுதான் பிராக்ஸிமா பி எனும் புதிய பூவுலகு.

பூமியிலிருந்து 4.25 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பிராக்ஸிமா சென்டாரி எனும் நட்சத்திர மண்டலத்தில் அமைந்துள்ள கோள்தான், மனிதர்களால் வாழ முடிகிற இரண்டாவது உலகம் என ஆராய்ச்சி யாளர்கள் கூறும் பிராக்ஸிமா பி ஆகும்.

2003ஆம் ஆண்டிலிருந்து பின்தொடர்ந்தாலும் பிராக்ஸிமா அவ்வளவு எளிதாக வானியலாளர்களுக்கு பிடி கொடுத்துவிடவில்லை. நாங்கள் இதனைக் கண்டு பிடித்தது பெரும் பரவசத்தைத் தந்த தருணம் எனலாம்.

பேல் ரெட் டாட் எனும் இந்தத் திட்டம் தொடர்பான ஆராய்ச்சியில் ஏறத்தாழ 4 ஆண்டுகளை செலவழித்து பிராக்ஸிமாவின் சிக்னல்களைக் கண்டுபிடித்திருக்கிறோம் என குதூகல மனநிலை குறையாமல் உரையாடுகிறார், லண்டனின் குயின் மேரி  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர் கில்லம் அங்லாடா எஸ்க்யூட்.

பூமியைவிட 1.3 மடங்கு பெரியதாக உள்ள பிராக்ஸிமா பாறைக் கோளமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. தன் நட்சத்திரத்திலிருந்து 75 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

இதனை முழுமையாக சுற்றி முடிக்க 11.2 நாட்களை எடுத்துக்கொள்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தொலைவில் இது 5 சதவிகிதத்திற்கும் குறை வானதாகும். சூரியனிலிருந்து பல லட்சம் ஆண்டுகள் தள்ளியிருப்பதால் பிராக்ஸிமா குளுமையாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கோளின் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் ஆக இருப்பதால், திரவநிலையில் நீர் இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள்.

சூரியனிலிருந்து தொலைவில் அமைந்துள்ளதால் எக்ஸ்ரே மற்றும் புற ஊதாக்கதிர்கள் உள்ளிட்டவற்றின் தாக்கம் இருக்காது. செவ்வாய்க் கோளை விட சாதகமான சூழல் பிராக்ஸிமாவில் நிலவ வாய்ப்பு உள்ளது என தம்ஸ் அப் காட்டி பேசுகிறார்  நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இக்னஸ் ஸ்நெல்லன்.

2003 முதல் 2009ஆம் ஆண்டு வரை சிலியில் உள்ள பாரனால் ஆய்வு மய்யத்திலிருந்து பிராக்ஸிமா கோளை பின்தொடர்ந்து தகவல்களைத் திரட்டி வந்தாலும், அதனை புதிய கண்டுபிடிப்பாக உறுதிப்படுத்த முடியாமல் தவித்த ஆய்வாளர்கள், 2013ஆம் ஆண்டு தான் உறுதியான முடிவுக்கு வந்தனர்.

லா சில்லா ஆய்வு மய்யத்தில் 60 நாட்கள் இரவு முழுக்க பிராக்ஸிமா கோளை கண் துஞ்சாது கண்காணித்து, அதனை புதிய கண்டுபிடிப்பு என பேல் ரெட் டாட் திட்டத்தைச் செயல்படுத்திய டுயோமி குழுவினர் உறுதி படுத்தினர்.

பிராக்ஸிமா பி கண்டுபிடிப்பு,  கடந்த பத்தாண்டுகளில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக இருக்கும் என்கிறார் ஸ்நெல்லன்.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க், இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங், ரஷ்ய தொழி லதிபர் யூரி மில்னர் ஆகியோர் இணைந்து 130 மில்லியன் டாலர்கள் செலவில் ஆல்பா நட்சத்திர மண்டலத்திற்கு விண்கலம் அனுப்பும் ஸ்டார் ஷாட் திட்டத்தை அண்மையில் அறிவித்துள்ளனர்.

இந்த விண்கலம் ஆல்பா நட்சத்திர மண்டலத்தை சென்றடைய 20 ஆண்டுகளுக்கு மேலாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

ஸ்டார்ஷாட் திட்டத்தின் நோக்கம், மனிதர்கள் வாழும் சூழ்நிலை கொண்ட வேறு கோள்களைத் தேடிக் கண்டுபிடிப்பதாகும். அந்த வகையில் இன்னொரு பூமியான பிராக்ஸிமா பி கோளின் கண்டுபிடிப்பு முக்கியமானதாகிறது. இரண்டாம் உலகத்தின் கதவு திறந்தாச்சு!

பூமி அழியுமா?

மிகப்பெரிய மர்மமான கிரகம் ஒன்று, நம் கிரகத்தோடு மோதி தகர்க்கப்போவதால், இந்த ஆண்டு அக்டோபர் மாத்ததில் நம் உலகம் அழியப்போகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார். ‘பிளானட் எக்ஸ் - தி 2017 அரைவல்’ என்ற புத்தகத்தின் ஆசிரியரான டேவிட் மேட், பூமியை விட பலமடங்கு பெரிதாக உள்ள அந்தக் கோள் பூமியை நோக்கி பல ஆண்டுகளாக பயணித்து வருவதாகவும், வரும் அக்டோபர் மாதத்தில் பூமியின் மீது மோதும் என்றும் கூறுகிறார்.

மேலும் அவர், இந்த நட்சத்திரம், பிளானட் எக்ஸ் என்று அழைக் கக்கூடிய நிபிரு உட்பட ஏழு கோளப்பாதையில் சுற்றிக்கெண்டிருக்கும் கிரகங்கள் பெரிய மற்றும் நீல நிறத்தில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். நிபிருவை சில நேரங்களில் பிளானட் எக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது, அது நமது சூரிய மண்டலத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு கிரகம் ஆகும்.

முரட்டு கிரகமான நிபிரு, ஈர்ப்பு விசையின் ஆதிக்கத்தால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மற்ற கிரகங்களின் சுற்று வட்டப்  பாதைகளில் இடையூறுக்கு உள்ளாகியுள்ளது. ஈர்ப்பு விசையின் காரணமாக சுற்றுவட்டப் பாதைகளில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த பைனரி ஸ்டார், இந்த ஆண்டு அக்டோபர் மாத்ததில் நமது கிரகத்துடன் மோதும், ஆனால் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று டேவிட் மேட் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், இந்த நட்சத்திரத்தின் கோணங்கள் பூமியை நெருங்கிக் கொண்டிருப்பதால் இதை கண்டுபிடிக்க கடினமாக  உள்ளது என்கிறார்.

ஏனெனில் இந்த நட்சத்திரம், நம் சூரிய குடும்பத்தில் சூரியன் செல்லும் மார்க்கமாக செல்லவில்லை, ஆனால் ஒரு சாய்ந்த கோணத்தில் தென் துருவம் வழியாக நம் கிரகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது


சிவப்புக்கோள் செவ்வாய்!

*பூமியின் ஈர்ப்புவிசையில் 37 சதவிகிதம்தான் செவ்வாயில் இருப்பதால் பூமியில் எம்பிக் குதிப்பது போல் குதித்தால் 3 மடங்கு உயரத்தில் மிதப்பீர்கள்.

*செவ்வாயில் உள்ள உயரமான எரிமலைக்கு ஒலிம்பஸ் மோன்ஸ் என்று பெயர். 21 கி.மீ நீளம், 600 கி.மீ சுற்றளவில் இது பூமியின் எவரெஸ்ட் சிகரத்தையும் விட உயரமானது.

*செவ்வாய்க்கு போபோஸ், டெய்மோஸ் என 2 நிலவுகள் உண்டு.

*செவ்வாய் கோளின் மண் சிவப்பாகத் தெரிய, அதில் அதிகமுள்ள  இரும்பு ஆக்சைடே காரணம்.

*சூரியனிலிருந்து 4ஆவது கோளான செவ்வாயில், ஒரு நாள் என்பது 24 மணி நேரம் 39 நிமிடங்களாகும்.

*பூமியைப்போலவே எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பருவநிலை மாறுதல்களும் செவ்வாயில்(4 பருவங்கள்) உண்டு.

யாராவது தூக்கத்தில் நடப்பதை நம்மில் பலரும் பார்த்திருக்க வாய்ப்பு குறைவு. அதேநேரம், தூக்கத்தில் திடீரென்று ஒரு சிலர் முணுமுணுப்பதையும் உளறு வதையும் நிச்சயம் நீங்களும் கேட்டிருப்பீர்கள்.

தூக்கத்தின்போது இப்படிப் பேசுவதற்குக் காரணம் என்ன? தூக்கத்தின்போது நமது உடல் உறுப்புகள் எல்லாம் ஓய்வு எடுக்கின்றன என்றே பொதுவாக நம்பப் படுகிறது. பல உறுப்புகள் ஓய்வு எடுத்தாலும், மூளை முழுமையாக ஓய்வு எடுப்பதில்லை. விழிப்பு நிலையிலிருந்து கனவு காணும் நிலைக்குச் சென்றுவிடுகிறது.

இப்படித் தூக்கத்தில் கனவு காணும்போது, நரம்பு களுடன் உள்ள தொடர்பை மூளையின் இயங்கு முறை தற்காலிகமாகத் துண்டித்துவிடுகிறது. இதன் காரணமாகத் தான் தூங்கும்போது பேசுவது, உடல் அசைவுகள் போன்றவை தடுக்கப்படுகின்றன. ஆனால், இந்தத் துண்டிப்பு எல்லா நேரமும் கச்சிதமாக நடப்பதில்லை.

பெரும் பிரச்சினையா?

கனவிலிருந்து பெறப்படும் சமிக்ஞைகள் சில நேரம் நரம்புகள் வழியாகக் கசிந்து உடல் மூலம் வெளிப்படலாம். இதன் காரணமாகவே நாம் முணுமுணுக்கிறோம்; முனகு கிறோம். இன்னும் சிலரோ தெளிவாகவும் பேசுவார்கள்; அதிகபட்சமாக நடக்கவும் செய்வார்கள்.

தூக்கத்தில் ஒருவர் பேசுவது தொடர்பற்ற குழப்ப மான வாக்கியங்களாக இருக்கலாம். ஆனால், பெரும் பாலும் அது இலக்கணப் பிழையற்றே இருக்கும். தூங்குபவரின் வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த சம்பவத்தின் தாக்கமாக அந்தப் பேச்சு இருக்கலாம். அதேநேரம் சம்பந்தமற்று விசித்திரமாகவும் முட்டாள் தனமாகவும்கூட இருக்கலாம்.

தூக்கத்தில் பேசுவதை ஒரு பிரச்சினையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரம், ஒருவருக்கு உள்ள மன அழுத்தம், மற்ற உளவியல் பிரச்சினைகள் போன்றவை தூக்கத்தில் பேசுவதை அதிகரிப்பதற்கான சாத்தியம் நிறையவே இருக்கிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குருதிக் கொடையால் டி.என்.ஏ. பிரச்சினை ஏற்படுமா?

ஒரு துளி குருதியிலும் நம் மரபுப் பண்புகளை நிர்ணயிக்கும் டி.என்.ஏ. இருக்கிறது என்கிறோம்.

அப்படியென்றால் உடல்நலப் பிரச்சினைகளின்போது, மற்றவரிட மிருந்து ரத்தம் பெற்று நோயாளியின் உடலில் செலுத்துகிறார்கள்.

இப்படிச் செய்யும்போது இரு வேறு டி.என்.ஏ.க்கள் ஒரே உடலில் எப்படி உயிர்ப்புடன் இருக்கும்? அப்போது உடலுக்கு என்ன ஆகும்? இதற்கு எளி மையான விடை, நோயாளியின் உடலில் செலுத்தப்படும் குருதியில் டி.என்.ஏ.வே இருக்காது என்பதுதான். புரியவில்லையா?

ரத்த வெள்ளை அணுக்களில் மட்டுமே நியூக்ளியஸ் எனும் உட்கரு இருக்கிறது. ஒருவர் குருதி கொடை (ரத்தம்) செய்யும்போது, அந்த ரத்தத்தில் உள்ள ரத்தத் வெள்ளை அணுக்களில் மட்டுமே குருதிக் கொடை செய்பவரின் டி.என்.ஏ. இருக்கும். ரத்தச் சிவப்பணுக்களும் தட்டணுக் களும் (பிளேட்லெட்) எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி யாகும்போதே உட்கருவை இழந்து விடுகின்றன.

மீறிச் செலுத்தினால்...

அது மட்டுமில்லாமல் ஒருவரிடம் இருந்து பெறப் படும் ரத்தம், அப்படியே மற்றவருக்குச் செலுத்தப் படுவதில்லை. மையவிலக்கு விசை கருவி மூலம் ரத்தம் சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது.

இதில் பிளாஸ்மா, தட்டணுக்கள், சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் போன்றவை தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன. அதன் பிறகு, வெள்ளையணுக் களைத் தவிர்த்த மற்ற மூன்று அம்சங்கள் மட்டுமே குருதிக் கொடை பெறுபவரின் உடலில் செலுத்தப் படுகின்றன.

ஒரு வேளை பெறப்படும் ரத்தம் பிரிக்கப்படாமல், நோயாளிக்கு உடனடி யாகச் செலுத்த வேண்டிய அவசர நிலை இருந்தால்,  febrile என்ற வகை காய்ச்சல் நோயாளிக்கு ஏற்படும். ரத்தக் கொடை பெறுபவரின் குருதி வெள்ளையணுக்கள் அயல் டி.என்.ஏ.வை அழிக்கும் செயல்பாட்டால் உருவாகும் காய்ச்சல்தான் இது.

Banner
Banner