எழுத்துரு அளவு Larger Font Smaller Font

யாராவது தூக்கத்தில் நடப்பதை நம்மில் பலரும் பார்த்திருக்க வாய்ப்பு குறைவு. அதேநேரம், தூக்கத்தில் திடீரென்று ஒரு சிலர் முணுமுணுப்பதையும் உளறு வதையும் நிச்சயம் நீங்களும் கேட்டிருப்பீர்கள்.

தூக்கத்தின்போது இப்படிப் பேசுவதற்குக் காரணம் என்ன? தூக்கத்தின்போது நமது உடல் உறுப்புகள் எல்லாம் ஓய்வு எடுக்கின்றன என்றே பொதுவாக நம்பப் படுகிறது. பல உறுப்புகள் ஓய்வு எடுத்தாலும், மூளை முழுமையாக ஓய்வு எடுப்பதில்லை. விழிப்பு நிலையிலிருந்து கனவு காணும் நிலைக்குச் சென்றுவிடுகிறது.

இப்படித் தூக்கத்தில் கனவு காணும்போது, நரம்பு களுடன் உள்ள தொடர்பை மூளையின் இயங்கு முறை தற்காலிகமாகத் துண்டித்துவிடுகிறது. இதன் காரணமாகத் தான் தூங்கும்போது பேசுவது, உடல் அசைவுகள் போன்றவை தடுக்கப்படுகின்றன. ஆனால், இந்தத் துண்டிப்பு எல்லா நேரமும் கச்சிதமாக நடப்பதில்லை.

பெரும் பிரச்சினையா?

கனவிலிருந்து பெறப்படும் சமிக்ஞைகள் சில நேரம் நரம்புகள் வழியாகக் கசிந்து உடல் மூலம் வெளிப்படலாம். இதன் காரணமாகவே நாம் முணுமுணுக்கிறோம்; முனகு கிறோம். இன்னும் சிலரோ தெளிவாகவும் பேசுவார்கள்; அதிகபட்சமாக நடக்கவும் செய்வார்கள்.

தூக்கத்தில் ஒருவர் பேசுவது தொடர்பற்ற குழப்ப மான வாக்கியங்களாக இருக்கலாம். ஆனால், பெரும் பாலும் அது இலக்கணப் பிழையற்றே இருக்கும். தூங்குபவரின் வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த சம்பவத்தின் தாக்கமாக அந்தப் பேச்சு இருக்கலாம். அதேநேரம் சம்பந்தமற்று விசித்திரமாகவும் முட்டாள் தனமாகவும்கூட இருக்கலாம்.

தூக்கத்தில் பேசுவதை ஒரு பிரச்சினையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரம், ஒருவருக்கு உள்ள மன அழுத்தம், மற்ற உளவியல் பிரச்சினைகள் போன்றவை தூக்கத்தில் பேசுவதை அதிகரிப்பதற்கான சாத்தியம் நிறையவே இருக்கிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குருதிக் கொடையால் டி.என்.ஏ. பிரச்சினை ஏற்படுமா?

ஒரு துளி குருதியிலும் நம் மரபுப் பண்புகளை நிர்ணயிக்கும் டி.என்.ஏ. இருக்கிறது என்கிறோம்.

அப்படியென்றால் உடல்நலப் பிரச்சினைகளின்போது, மற்றவரிட மிருந்து ரத்தம் பெற்று நோயாளியின் உடலில் செலுத்துகிறார்கள்.

இப்படிச் செய்யும்போது இரு வேறு டி.என்.ஏ.க்கள் ஒரே உடலில் எப்படி உயிர்ப்புடன் இருக்கும்? அப்போது உடலுக்கு என்ன ஆகும்? இதற்கு எளி மையான விடை, நோயாளியின் உடலில் செலுத்தப்படும் குருதியில் டி.என்.ஏ.வே இருக்காது என்பதுதான். புரியவில்லையா?

ரத்த வெள்ளை அணுக்களில் மட்டுமே நியூக்ளியஸ் எனும் உட்கரு இருக்கிறது. ஒருவர் குருதி கொடை (ரத்தம்) செய்யும்போது, அந்த ரத்தத்தில் உள்ள ரத்தத் வெள்ளை அணுக்களில் மட்டுமே குருதிக் கொடை செய்பவரின் டி.என்.ஏ. இருக்கும். ரத்தச் சிவப்பணுக்களும் தட்டணுக் களும் (பிளேட்லெட்) எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி யாகும்போதே உட்கருவை இழந்து விடுகின்றன.

மீறிச் செலுத்தினால்...

அது மட்டுமில்லாமல் ஒருவரிடம் இருந்து பெறப் படும் ரத்தம், அப்படியே மற்றவருக்குச் செலுத்தப் படுவதில்லை. மையவிலக்கு விசை கருவி மூலம் ரத்தம் சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது.

இதில் பிளாஸ்மா, தட்டணுக்கள், சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் போன்றவை தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன. அதன் பிறகு, வெள்ளையணுக் களைத் தவிர்த்த மற்ற மூன்று அம்சங்கள் மட்டுமே குருதிக் கொடை பெறுபவரின் உடலில் செலுத்தப் படுகின்றன.

ஒரு வேளை பெறப்படும் ரத்தம் பிரிக்கப்படாமல், நோயாளிக்கு உடனடி யாகச் செலுத்த வேண்டிய அவசர நிலை இருந்தால்,  febrile என்ற வகை காய்ச்சல் நோயாளிக்கு ஏற்படும். ரத்தக் கொடை பெறுபவரின் குருதி வெள்ளையணுக்கள் அயல் டி.என்.ஏ.வை அழிக்கும் செயல்பாட்டால் உருவாகும் காய்ச்சல்தான் இது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner